டாக்டர் பேசியது கேட்டு மூவரும் அதிர்ந்து போயிருந்தனர். இவர்களைப் பார்த்து டாக்டர் “அதுவும் இல்லாம அவன் டார்கெட் பணம் கிடையாது“
“இல்லை பணம் மோட்டிவ் இல்லன்னா வேற என்ன எல்லாரையும் கொல்றதா?“ என்று தீபா கேட்க, அதற்கு டாக்டர் “இருக்கலாம். ஏன்னா இந்த ட்ரக் ஓட பாதி விலையில கூட இவன் அந்த சாக்லேட்டை விற்கவில்லை. அதை வச்சித்தான் சொன்னேன், பணம் இவன் டார்கெட் இல்லைன்னு.“
“டாக்டர், ஒருவேளை எல்லாரையும் நோயாளியா மாத்தி இவன் மருந்து கண்டு பிடிச்சி பெரிய ஆளாகப் போறானோ?“ என்று ஆஜூன் கேட்க,
“வாய்ப்பிள்ள ஆஜூன். ஏன்னா இதனால பாதிக்கப்பட்டவங்களை எந்த மருந்தினாலும் சரி செய்ய முடியாது. சோ ஏன் இப்படி பண்றான்னு இதை பண்ணினவனே வந்து சொன்னாதான் உண்டு.“
“அப்போ இதுக்கு டீரிட்மெண்டே இல்லையா டாக்டர்?“ என்று தீபா கேட்டதற்கு, “முழுசா சரி பண்ண முடியாது. ஆனா சாகாம காப்பாத்தாலம் ஆனாலும் இந்த அடிக்ஷன்ல இருந்து வெளிவரது கஷ்டம். வாழ்நாள் முழுக்க இந்த ட்ரக்கை எடுத்துக்கிட்டு தான் வாழ முடியும்.“
“ட்ரக் சாப்பிட்டா செத்துடுவாங்கனு சொன்னீங்க ஆனா இப்போ சாப்பிட்டாதான் உயிர் வாழ முடியும்னு சொல்றிங்க. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க டாக்டர்” என்று ஆஜூன் கேட்டான்.
“இந்த ட்ரக்கோட ஒரிஜினல் பார்முலவ டோசேஜ் கம்மியா எடுத்துக்குறது மூலமா இவங்க கண்டினியூவா வாழ முடியும். ஆனா இதை அந்த ட்ரக்கால ரொம்ப மோசமா பாதிக்க பட்டவுங்க லைஃப் முழுக்க எடுத்துக்கிட்டா மட்டும்தான் அவங்களால டே டு டே லைஃப் லீட் பண்ண முடியும். அன அதிலையும் ஒரு பிரச்சனை இருக்கு. என்னதான் டோசேஜ் கம்மியாக எடுத்துட்டு இவங்க வாழ்ந்தாலும் இவர்களால ஒரு நார்மல் குடும்ப வாழ்க்கையை வாழ முடியாது. அதாவது இவங்களால குழந்தை பெத்துக்க முடியாது. அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி.”
“இதை சீக்கிரம கண்டுபிடிக்கனும் ரஞ்சன்” என்று ரஞ்சன் தோள் தொட, அதுவரை எதையோ யோசித்துக்கொண்டிருந்த ரஞ்சன்
“அ… சொல்லுடா” என்று ஆஜூனைப் பார்க்க, “என்னடா சீரியஸா பேசிட்டு இருக்கும்போது கனவு கண்டுட்டு இருக்க?”
“இல்லை ஆஜூன், ஒன்னு யோசிச்சிட்டு இருந்தேன் . சரி” என்று டாக்டர் நோக்கி திரும்பி, “டாக்டர், ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” “என்னன்னு சொல்லுங்க ரஞ்சன்.” “அது நான் ஒரு டாக்டர் டீம் ரெடி பண்ணி தரேன். அந்த டீமோட நான் சொல்ற லொகேஷன்க்கு போய் அங்க இருக்கிற ஸ்கூல்க்குலாம் போய் கொஞ்சம் பசங்களை செக் பண்ண முடியுமா?”
“ஆனா ரஞ்சன் அதுக்கு பெர்மிஷன் வேணுமே ““அதல்லாம் நான் ரெடி பண்ணி தரேன் நீங்க பசங்க கிட்ட போய் அவங்கள எத்தனை பேர் இந்த ட்ரக் ஆல பாதிக்க பட்டுருக்காங்கனு செக் பண்ணி அவங்க பேரண்ட்ஸை எல்லாம் மட்டும் தனியா சேர்த்து ஒரு மீட்டிங் போட்டு இத பத்தி பொறுமையா சொல்லுங்க அதே சமயம் இது வெளிய தெரியாமலும் பார்த்துகொங்கா நமக்கு பசங்க தான் இப்போதைக்கு முக்கியம் டாக்டர்”
”சரி ரஞ்சன் நீங்க அரேஞ்ச் பண்ணுங்க நான் பார்த்துக்கிறேன் “
பின் ரஞ்சன் தீபாவை நோக்கி திரும்பியபடி “ நீ பண்ண ஹெல்ப் போதும் தீபா இதுக்கு அப்புறம் நாங்க பார்த்துக்கிறோம் நீ கேர்புல்லா இரு “
“அன அது யாருன்னே இன்னும் நீங்க கண்டு பிடிக்கலையே “
“தீபா நான் சொல்றத கேளு இத பண்றவன் சாதாரணமானவன் இல்லை நீ இன்வால் ஆகியிருக்கிறது தெரிஞ்சா உன்னை ஏதாவது பண்ண ட்ரை பண்ணுவான் அப்போ நான் உன்னை பார்க்கவா இல்லை கேஸ்சையா “
“சரி நான் இனிமே இங்க வரல “ என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு ரஞ்சனை பார்த்து
“பாத்து கேர்ஃபுல் ரஞ்சன் , “ என்று செல்லிப் சென்றவள் ஏதோ யோசித்தபடி ரஞ்சனிடம் வந்து “ அவன் யாருன்னு நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க தானே அது எனக்கு தெரியக் கூடாதுன்னு தானே இப்போ என்னை அனுப்புகிறீர்க “ என்று சரியாகக் கேட்க அதை கேட்டு என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்த ரஞ்சனை பார்த்து “ நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் அதன் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கே , எங்கே எனக்கு தெரிஞ்ச ஏதாவது பண்ணி வச்சிருவேன்னு என்னை துரத்துறிங்கள, உங்களை தீப்ஸ் கீப்ஸ்னு இனிமே என் பக்கம் வந்தீங்க அவ்ளோதான் “ என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு போனாள். அவள் சென்றதும் ஆஜூன் ரஞ்சனை பார்த்து “ இது உனக்கு தேவையாடா அவங்க இருந்தா தான் என்ன “
“டேய் நீயும் புரிஞ்சிக்காம பேசாத போடா “ என்று சொல்லி டாக்டரிடம் சென்று அவரை அனுப்பி வைத்துவிட்டு இவனுடைய டீமை போனில் அழைத்து இங்கே வரச் சொல்லிவிட்டு ஆஜூன் அருகே வந்தான். இவன் செய்வதைப் பார்த்த ஆஜூன் “அப்போ தீபா சொன்ன மாதிரி யாருன்னு கண்டுபிடிச்சிட்டியாடா “ அதற்கு ஒரு சிரிப்பையே பதிலாகக் கொடுத்தான் ரஞ்சன்.
ஞாயிறு காலை தாமதமாகவே கண் விழித்தாள் சுடர், அருகில் படுத்திருந்த வேந்தனைப் பார்த்துவிட்டு எழுந்து முகம் கழுவி வெளியே வந்தாள். அங்கு சோபாவில் குமரன் அமர்ந்து காப்பி குடித்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். அங்கு வந்த சுடரைப் பார்த்து “பால் சூடு பண்ணிட்டேன் காப்பி மட்டும் போட்டுக்கோ மார்னிங் நீ எதுவும் பண்ண வேண்டாம்மா மாவு இருக்கு சட்னியும் இருக்கு ஆதி கால் பண்ணி பிரேக் பாஸ்ட் அவ கூட தான் சாப்பிட போறீங்கனு சொல்லிட்டான் “இதை கேட்ட சுடர் சோர்வுடன் அவன் அருகே தொப்பென்று அமர்ந்தாள். அவள் முகத்தைப் பார்த்த குமரன்
“அது கொஞ்சம் பயமா இருக்கு மாமா நான் பார்த்தவரை ஆதி ஓகே தான் ஆனாலும் கல்யாணம்னு வரும்போது பயமா இருக்கு” இதைக் கேட்டு சிரித்த குமரன் “எங்க ஆதியும் அந்த மகிழன் மாதிரி இருப்பானோனம்மா “
“அது மாமா.. “ என அவள் இழுப்பதிலேயே அது தான் என்று புரிந்து விட குமரன் “ நான் சொல்லி தெரியுறதை விட நீயே தெரிஞ்சுகிட்டா கரெக்ட்டா இருக்கும் இன்னைக்கு ஃபுல்லா அவன் கூட தான இருக்க போற நீயே பாரு “ என்று அவள் தலையை ஆட்டி விட்டு எழுந்து
“லைஃப்ல நீ பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கும்மா அதுல நிறைய பேரை கடந்து வர வேண்டியது இருக்கும் கடந்து போறவங்க எல்லாம் ஒரே மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்கம்மா எல்லா வகையான மக்களையும் தாண்டி தான் வரனும் அதுக்கு பயந்து ஓடி ஒழிய கூடாது. ஒரு வாட்டி கீழ விழுந்துட்டா எப்பவும் விழணும்னு இல்லம்மா அதே சமயம் விழுந்த உனக்கு எழுந்து நடக்கவும் தெரியணும் யாராவது வந்து தூக்கி விடுவாங்களான்னு காத்து இருக்க கூடாது யார் வந்தாலும் வரலனாலும் நம்ம வாழ்க்கை அதை சந்தோஷமா வாழ்றதும் சோகமா வாழ்றதும் நம்ம கிட்ட தான் இருக்கு. உன் சந்தோஷத்தை நீ தான் தேடி போகணும் , போ சுடர் பயப்படாத “ என்று கிச்சன் சென்று சுடருக்கு காபி கலக்கி கொடுத்தான்.
அதை வாங்கி அருந்திய சுடர் பின் தைரியமாக ஒரு முடிவு எடுத்து அவள் அறை நோக்கி சென்றாள். அங்கு அவள் கப்போர்டை திறக்க அதில் முழுவதும் காட்டன் புடவைகள் பின் ஓர் இரு சாதாரண சுடிதார் இருந்தது அதை பார்த்த பின் தான் அவள் அவளுக்கு பிடித்த வகையில் ட்ரேஸ் எடுத்து பல வருடங்கள் ஆனதே நினைவு வந்தது. அதை நினைத்து ஒரு பெருமூச்சு ஒன்று விட்டபடி சுடிதார் ஒன்றை எடுத்து குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வந்து கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தாள். அம்மா அப்பா இருக்கும் போது மாதம் ஒரு முறை குடும்பத்துடன் வெளியே எங்கேயாவது அவள் அப்பா கூட்டி செல்வது வழக்கம் அப்போது குழலி தீபாவை காட்டிலும் சுடரே மிக அழகாக பார்த்து பார்த்து ரெடி ஆவாள். அவளுக்கு அவளை அழகாக அலங்கரித்துக் கொள்வது மிக பிடிக்கும் ஆனால் இப்போது அந்த கண்ணாடியில் அவள் முகத்தை ரசித்து பார்த்தே பல நாட்கள் ஆனது போல ஒரு தோற்றம்.
கண்ணாடி முன் நின்றபடி எப்போதும் போடும் கொண்டையைப் போடாமல் அழகாக தலையை முடி எடுத்து கிளிப் குத்திப் பின்னிருந்தாள். நெற்றியில் எப்போதும் வைக்கும் சாதாரண பொட்டை விட்டு கல் பொட்டு ஒன்று வைத்தபடி அவள் கண்களைப் பார்த்தாள். கண் மையைப் பார்க்கும்போது அந்த மகிழனின் நினைவு வர அதை தவிர்த்து விட்டு எப்போதும் காதை ஒட்டி போடும் கம்பலை போடாமல் ஜிமிக்கி கம்பலை அணிந்து கொண்டால் பின் கண்ணாடியில் அவள் முகம் பார்த்தாள். இப்போதுதான் அவளுடைய முகத்தைப் பார்ப்பது போல இருந்தது.
அதை எண்ணிச் சிரித்துக்கொண்டே வேந்தனை எழுப்ப, சிரித்தபடி அழகாக சுடிதாரில் தன் அம்மாவைப் பார்த்த வேந்தன் அவன் கண்களை நன்றாகக் கசக்கிப் பார்த்தபடி “என்னம்மா அதிசயமா இருக்கு நீ இந்த ட்ரெஸ் போட்டுருக்க?” அதைக் கேட்டு மேலும் சிரித்தபடி “டைம் ஆச்சு கிளம்பணும் வேந்தன், எழுந்திரு.” “இன்னைக்கு லீவுதானம்மா? ஏன் கிளம்பச் சொல்றீங்க? வெளிய போறோமா?”
“ஆமாடா, ஆதி சார் கூட போறோம்.”
“சார் வராங்களா? ஐ ஜாலி ஜாலி!” என்று கட்டிலில் குதித்தவனை நிறுத்தி, “உனக்கு அவ்வளவு பிடிக்குமா அந்த சாரை?”
“ஆமா, ரொம்பப் பிடிக்கும். சூப்பர் சார். விளையாடச் சொல்லித் தருவாரு, கதை சொல்லுவாரு, சிரிக்க வைப்பாரு, எல்லாம் பண்ணுவாரு. சூப்பர் சார் ஆதி சார்
” “ஓ… இவ்வளவு பண்ணுவாரா உங்க சார்?” “ஆமா. சரி, சார் வரதுக்குள்ள நான் போய்க் குளிச்சிட்டு வந்துறேன்” என்று குதித்துச் சென்ற மகனைப் பார்த்துச் சிரித்தபடி அமர்ந்திருந்தாள் சுடர்.