ஷிவா, வீடு வந்தான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.
இந்த இரண்டு நாள் இரவுகளுமே.. அவனுக்கு நீண்டதாக இருந்தது. இரவு வீடு வரவும் பிடிக்கவில்லை.. அவள் இருக்கமாட்டாள் என எண்ணிக் கொண்டேதான் வந்தான். வேலை செய்பவர்.. இரவு உணவினை தாயார் செய்து வைத்துவிட்டு சென்றிந்தார்.
பேசுவதற்கு கூட ஆளில்லா நிலையில்தான் ஷிவா. அவளில்லா வீடு.. நடந்திருக்கிறது அடிக்கடி, அவள் சித்தூர் செல்வாள், தன் அன்னை தந்தையை பார்த்து வரச் செல்லுவாள்.. அடிக்கடி. அப்போதெல்லாம் இவன் வெளியூர் சென்றிடுவான்.. பெரும்பாலும். ஏதாவது ஒருசில நாட்கள் அவள் இல்லாமலும் இருப்பான், ஆனால், போனில் அழைத்திடுவான்.. மனையாளுக்கு. ஆனால், இப்போது அப்படி அழைக்க முடியவில்லை அவனால்.
அவனால் கணிக்க முடியும்.. சந்துருவின் நிலையை. அத்தோடு, இப்படி பங்குளை நான் கேட்பது தவறு என தெரியும்.. ஆனாலும் இது என்னுடையது என்ற எண்ணம் வேருன்றிவிட்டதில்.. ஏதும் யோசிக்கவில்லை அவன். அத்தோடு அழகான அத்தை பெண்ணினை திருமணம் செய்துக் கொள் எனவும்.. எல்லாம் சரியாக இருந்தது.
அதன் போக்கில் விட்டுவிட்டான். ஆனால், மனையாளிடம் சந்துருவிற்கு சொத்துகள் இருக்கிறது என சொல்லாலாததை தவறாகவே கருதினான்.. இப்போது.
அவனுக்கு தந்தை சித்தப்பாவின் அணுமுறை.. பொதுவாக குடும்ப விஷயத்தில் பிடிக்காது. அத்தோடு அதை கேட்டவும் இவனுக்கு வயதில்லை என்பதால் ஏதும் கேட்டதில்லை.. அப்படியே நானும் வருகிறேனோ என யோசனைகள் நேற்றுவரை இருந்தது. இன்று அதுதான் சரியென தோன்றியது. தளர்ந்து அமர்ந்திருந்தான்.. ஏதும் செய்ய தோன்றவில்லை.
ஷிவாவின் மனநிலை, தோற்றுவிட்டேன்.. என அழுத்தமாக இருந்தது. அவனுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லபட்ட ஒன்று வேலன் சிட்பண்ட்’ அதை இன்னமும் முன்னேற்றனும்.. விரிவுப்படுத்தனும்.. எனதான் சொல்லி வளர்க்கபட்டது. அதற்காகவே அவனின் பாதைகள் விரிந்தது.. நானே எல்லாம்.. என கர்வமாகவே அந்த நிறுவனத்தை கையாண்டான்.. தாத்தாவின் உயில் படிக்கும் வரை.
ம்.. தாத்தா சொல்லி சொல்லி வளர்த்ததெல்லாம்.. பொய் என்பது போல.. அவரே சந்துருவிற்கும் பங்கு கொடுத்துவிட்டார். அதனால் பொய் என ஷிவா எண்ணிக் கொண்டான்.
ஆண்கள் மட்டுமே தாத்தாவின் காரியம் முடிந்து, உயில் படித்தனர்.. தகுந்த சட்ட ஆலோசகர்களின் முன்.
தாத்தா ஒரு கடிதமும் வைத்திருந்தார், அதில் “விவசாயம் செய்துக் கொண்டிருந்தோம்.. நானாக தொடங்கியதுதான் இந்த வேலன் ஹம்சா நிறுவனம்.. இரண்டும். மகள் ஹம்சாவை நான் திருமணத்தினை காரணம் காட்டி ஒதுக்கு வைத்துவிட்டேன். அவள் அங்கே பட்ட சிரமங்களை உணர்ந்தும் தகப்பனாக நான் ஏதும் செய்யவில்லை. அவள் உடல்நலமில்லாத போதும் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. என் கடமையை இப்போதாவது செய்ய நினைக்கிறேன்.” என எழுதி.. “மகளின் பிள்ளைகளுக்கு பங்கு கொடுத்திருக்கிறேன்.. நீங்கள் ஒன்றாக இருங்கள்.. நமக்கு பின் ஷிவாவிற்கு உறவுகள் வேண்டும்..” என எழுதியிருந்தார்.. அதில் வடிவேலுவிற்கு சுந்தரத்திற்கும் ஒரு கொட்டு விழுந்திருந்தது மறைமுகமாக.
இறுதி வரியில் “ஹம்சா அவளின் மகளை.. ஷிவாவிற்கு திருமணம் செய்ய எண்ணினால்.. ஷிவா அப்படி திருமணம் செய்துக் கொண்டால்.. சந்தோஷம்” எனவும் எழுதியிருந்தார்.
ஷிவாவிற்கு, இந்த இறுதி வரி தனக்குத்தான் என புரிந்தது. ‘ஏன் தாத்த உயிரோடு இருக்கும் போதே இதெல்லாம் சொல்லவில்லை’ என இருந்தது. இதை படிக்கும் போது இயல்பாக ஷிவா, தந்தையின் முகத்தினை அப்போதுதான் பார்த்தான். வடிவேலு.. முகம் இறுகி.. கைகளை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். எதோ புரிகிறது.. மகனுக்கு.
ஆனால் ஷிவாவிற்கும்.. சந்துருவிற்கு சொத்து கொடுத்தது உவப்பாக இல்லை என்பதால்.. தந்தையின் கோவம்.. அவனையும் ஆட்கொண்டது.
அதன்பின் தந்தையின் பேச்சுகள் “இதெல்லாம் கொடுக்க முடியாது.. நம் உரிமை.. அவள் கஷ்ட்டபட்டது முன்பு.. இப்போது அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது.. அதெல்லாம் அவர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாது” என அப்போது மகனிடம் நிறைய பேசினார். காட்சிகள் மாறியது.. மூவரும் ஏதேதோ பேசி, என்னவெல்லாமோ செய்ய எண்ணி.. ஷிவாவிற்கு லேகாவை மணமுடிக்க திட்டமிட்டனர்.
சுந்தரம் ‘என் பெண் மட்டும் அப்படியே இருக்க வேண்டுமா’ என கேள்வி எழுப்ப.. தீஷயையும் சந்துருவிற்கு திருமணம் செய்தனர். எப்படி இருந்தாலும் ஷிவாவை வேலவனின் தலைவனாக்குவது.. என்பதுதான் வடிவேலுவின் எண்ணம். அதற்கு என்ன என்ன செய்ய முடியுமோ செய்தார்.
ஆனால், வடிவேலு இப்போது தோற்றுவிட்டதாக எண்ணி.. அமர்ந்துக் கொண்டார். ஷிவாவினை முழுதாக நம்பினார்.. மகன், லேகாவிடம் பேசியிருப்பான்.. சந்துரு முறைத்தாலும்.. லேகா பேசி சரி செய்திடுவாள் என.. மகனை நம்பினார். ஆனால், மகன் கொஞ்சம் லேகாவின் அன்பில் இடரிவிட்டான் என இப்போது எண்ணிக் கொண்டார் வடிவேலு. ம்.. லேகாவிடம் ஏன் பேசி முன்பே சந்துருவிடம் பேசவில்லை என மகன் மீது வருத்தம் வடிவேலுவிற்கு. ஒன்றுக்கொன்று.. பின்னிக் கொண்டிருந்தது சிக்கல்கள்.
‘கொஞ்சம் மகன் சுதாரித்திருக்கலாம். தலைவனாகியிருந்தால்.. எலெக்ஷன்னுக்கு அமௌன்ட்.. தாரளமாக கொடுத்திருக்கலாம்.. அடுத்து வரும் ஆளுங்கட்சியை வைத்து.. பல இடங்களை குறைந்தவிலைக்கு இப்போதே வாங்கியிருக்கலாம்.. இந்த எலெக்ட்ரிக் கார் சார்ஜ்ஜிங் பாயின்ட் இன்னமும் நிறைய இடங்களில் போட்டிருக்கலாம். நார்த்தில் ஒரு சிட்பண்ட் தொடங்கியிருக்கலாம்.. ம்..’ என பெரிய ஆசைகள் ஏதும் நிறைவேறாத எண்ணத்தில்.. கடுப்பில் இருந்தார் பண்ணை வீட்டில் வடிவேலு.
இப்போதும் வடிவேலுவிற்கு, எந்த சந்தேகமும் இல்லை.. தன் மகன் பங்குகளை சந்துவிடமிருந்து பெற்றிடுவான் என்பதில். ஆனால், தாமதமாகுமே என எண்ணம். இதில் சுந்தரம் வேறு.. தன் பெண்ணுக்கு சாதகமாக எதையோ செய்ய நினைக்கிறான்.. என எண்ணிக் கொண்டே நண்பர்களான பெரிய வக்கீளோடு அமர்ந்து மது அருந்திக் கொண்டே இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
அவர்களும் ‘இதெல்லாம் சகஜம்.. காசை பார்த்தா ஆசைவரதான் செய்யும்.. எனவும், அத்தோட மாப்பிள்ளைதானே விடுங்க.. சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுவிடுவார்..’ எனவும் ஆலோசனைகலோடு பேச்சுகள் சென்றுக் கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் சந்துரு பத்துமணிக்கு வேலவன் சிட்பண்ட் வந்தான். தன் மாமனாரிடம் ஏதும் சொல்லவில்லை.
க்ரிஷ் ஷிவா இருவரும்தான், முன்பே அலுவலகம் வந்தினர். ஷிவாவிற்கு, காலையில் மீட்டிங் இருந்தது, அங்கே சென்றுவிட்டான். க்ரிஷ் வரேவேற்பரையில் அமர்ந்திருந்தான்.
இப்போது சந்துரு வர.. க்ரிஷ் இருந்தான். வரவேற்றான். அவனோடு பேசிக் கொண்டே முதலில் மார்கெட்டிங் டீம் சென்றான்.
க்ரிஷ், சந்துருவை பார்த்து எந்த பாவனையும் காட்டவில்லை. முறையாக சந்துருவினை அறிமுகம் செய்து வைத்தான்.. மார்க்கெட்டிங் முதன்மை அலுவலருக்கு. பின் க்ரிஷ் கிளம்பிவிட்டான்.
சந்துரு முதலில் அந்த நிறுவனத்தை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். அவர்களோடு தன்னை இணைக்க முறைபட்டான். சற்று சிரமாம்தானே. எல்லோரிடமும் அறிமுகம் செய்துக் கொண்டான் இன்று.
ஷிவா, ஜெனரல் சிட் நடத்துவதற்குண்டான கலந்தாலோசனையில் இருந்தான். மீட்டிங் நல்லவிதமாகவே முடிந்தது.. அடுத்த மாதத்தில் இந்த அன்னௌஸ்மென்ட் கொடுக்கலாம் என பேசி முடிவெடுத்தனர். எல்லோரும் கிளம்பினர்.
இப்போது, க்ரிஷ் உள்ளே வந்தான்.. ஷிவா “வக்கீல் ஆபீஸ் போய் டாகுமென்ட் வாங்கிட்டு வந்திடு.. அப்படியே சேட்டா’வை பார்த்துட்டு வந்திடு க்ரிஷ்” என சொல்லிக் கொண்டே “ஹச்” என்ற பெரிய தும்பளோடு நிமிர்ந்தான் ஷிவா.
ஷிவாவின் கண்கள் உறங்கவில்லை என காட்டிக் கொடுத்தது.. சிவந்திருந்தது, மீண்டும் ஒரு தும்பல்.. கைக்குட்டையை எடுத்துக் கொண்டு.. “ம்.. கிளம்பு” என அதட்டினான்.
க்ரிஷ் “சந்துரு வந்திருக்கார்.. “ என்றான்.
அனிச்சையாய் புருவம் உயர்த்தினான்.. பாஸ்.
மீண்டும் க்ரிஷ் “மார்கெட்டிங் டிபார்ட்மென்ட்டில் இன்ட்ரோ கேட்டார் பாஸ்.. கொடுத்துவிட்டு வந்தேன்” என்றான்.
ஷிவாவிற்கு சந்துரு மறுநாளே அலுவலகம் வந்தது வியப்பாகவே இருந்தது ‘வேலையை விட்டுட்டனா.. ம்.. சொத்து கிடைக்கும்ன்னா.. வேலையை விட வேண்டியதுதான்.. கண்டிப்பாக இவனால் முடியாது.. தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறான்..’ என மனதுள் சின்னதாக கணக்கிட்டுக் கொண்டான்.
ஏதும் நடவாதது போல.. கோப்பினில் கவனம் செலுத்தியவன்.. யோசனையோடு நிம்ர்ந்தான் சட்டென ‘சித்தப்பா உதவினால் செய்திடுவான்.. இந்த சித்தாப்பா.. அன்றே… எதோ பேசிக் கொண்டிருந்தார்.. ம்..’ என யோசனைக்கு சென்றான்.
க்ரிஷ் “பாஸ்.. என்ன யோசனை” என்றான்.
ஷிவா “இல்ல.. மூணு மாசம்.. 50 கோடி ஈஸி டார்கெட்டா?” என்றான் யோசனையோடு.
“அஹ.. உங்களுக்கு ஈஸி பாஸ்.. அவருக்கு தலையால் தண்ணீர் குடிக்கனும்.. ஆனால், ட்ரை பண்ணட்டும்.. அப்போத்துதானே நம்ம கஷ்ட்டம் தெரியும்” என்றான்.
ஷிவா ஒரு தும்பளோடு.. பதிலை தலையாட்டி ரசித்தான்.
க்ரிஷ் புன்னகையோடு வேலையை பார்க்க கிளம்பினான்.
அங்கே சந்துருவிற்கு அதிகநேரம் இருக்க முடியவில்லை.. மதியத்திற்கு மேல் கிளம்பி தன் அலுவலகம் வந்தான். சந்துருவிற்கு வேலைகள் சரியாக இருந்தது.
லேகாவிற்கு அழைத்தான்.. ‘உண்டாளா’ என கேட்டு.. இரண்டு வார்த்தை பேசிவிட்டு வைத்தான் சந்துரு.
ஆனால், லேகாவிற்கு ஏதும் ஓடவில்லை.. கடைக்கும் செல்லவில்லை.. வீட்டில் அப்படியே அமர்ந்திருந்தாள். அஹ.. இரண்டு நாட்கள் ஆகிற்று, அவரை விட்டு வந்து.. என மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. வேறு எதிலும் பதியவில்லை.. கடைக்கு செல்லவில்லை.. சமையல் பற்றி யோசிக்கவில்லை.. உண்ணவில்லை அப்படியே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
சந்துருவிற்கு அதற்குமேல் தன் தமக்கைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தன் அலுவலகம் வந்தவனுக்கு, அவங்கே வேலை சரியாக இருந்தது. இரவு தாமதமானது வீடு வருவதற்கு.
மறுநாள் காலையில், கார் டிரைவரோடு வந்து நின்றிருந்தது லேகாவின் வீட்டின் முன்.
ஷிவா, மனையாளுக்கு கார் இன்று தேவைப்படும் என அனுப்பி வைத்தான்.
லேகா தயாராகி வெளியே வர.. ரமேஷ், டிரைவரோடு உண்டுக் கொண்டிருந்தார்.
லேகாவை பார்த்ததும் டிரைவர் “குட் மோர்னிங் மேம்” என முகமன் மொழிந்தார்.
லேகா புன்னகையோடு பதில் சொன்னாள்.
லேகாவிற்கு, சந்துரு அழைத்தான்.. ‘பதினோரு மணிக்கு.. நம் நேரம். சரியாக வந்துவிடுங்கள்’ என்றான். லேகா பதில் பேசி வைத்தாள்.
சரியான நேரத்திற்கு எல்லோரும் ரிஜிஸ்ட்டர் அலுவலகத்தில் இருந்தனர். வடிவேலு “வா மருமகளே” என லேகாவை மட்டுமே வரவேற்றார். தீக்ஷியை பார்த்து புன்னகைத்தார் அவ்வளவே. சந்துருவை கண்டுக் கொள்ளவில்லை.
சந்துருவும் ஏதும் பேசவில்லை.
லேகா, மாமனாரை பார்த்து புன்னகைத்தாள்.. அவளுக்கு யாரிடமும் பேசும் எண்ணமில்லை.. ‘மனமெல்லாம் கணவன் வருவானா’ எனத்தான் இருந்தது.
சுந்தரம் மருமகனோடு பேசிக் கொண்டிருந்தார்.. ‘ஏன் மாப்பிள்ளை நேற்று என்னை அழைக்கவில்லை’ என ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். சந்துருவும் ஏதேதோ விவரம் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஷிவா, வந்து சேர்ந்தான். வடிவேலு ‘வரவேண்டாம்’ எனதான் சொல்லியிருந்தார் மகனிடம்.. ஆனாலும் வந்து சேர்ந்தான். அவனுக்கு வேலையே இல்லை இங்கே.. அலுவலகத்தில் வேலையும் நிறைய இருந்தது.. அத்தோடு உடல்நலமில்லை.. ஆனாலும் வந்தான்.. மனையாளை பார்க்கலாம் என.
ஷிவா வரவும் ரமேஷ் “வாங்க மாப்பிள்ளை” என எழுந்து வரவேற்றார். வரிசையில்.. அமர்ந்திருந்த எல்லோரின் பார்வையும் ஷிவாவில் பதிந்தது. லேகாவின் பார்வையும் பதிந்தது.. அவனின் கலையாத சிகை கலைந்து.. மூன்றுநாட்கள் மழிக்காத தாடையோடு.. கண்கள் சிவந்திருக்க.. மனையாளை ஏறிட்டான். கையில் கைக்குட்டை.. அவளை பார்த்துக் கொண்டே “எப்படி இருக்கீங்க மாமா” என்றான்.. குரல் கரகரப்பாகவே வந்தது.
லேகா, கணவனை பார்த்ததும், பார்வையை முதலில் திருப்பிக் கொள்ள எண்ணி திருப்பினாலும்.. அவனின் தோற்றம் மனதை உறுத்த.. திரும்பி பார்த்தாள் கணவனையே.. இப்போது குரலும் கரகரப்பாக இருக்க.. பெண்ணவள் ‘உடம்பு சரியில்லையா’ என எண்ணிக் கொண்டாள். ஆனாலும், கல்லென நின்றாள்.
ஷிவா மனையாளின் அருகில் வந்து நின்றான்.. மிக நெருக்கமாக.. அவனின் சூடு பெண்ணவளை தாக்க.. சட்டென அவளின் தேகம் சிலிர்த்தது.. ‘என்னாச்சு’ என எண்ணி நிற்க.. கணவன் “எப்படி இருக்க டா” என்றான் கரகரப்பான குரலில்.
சந்துரு பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அவர்கள் பேசட்டும் என தள்ளி நிற்கத் தொடங்கினர். சந்துரு, அங்கேயே நின்றான்.. இப்போது அமர்ந்துக் கொண்டான்.. லேகாவின் அருகிலேயே. லேகாவிற்கு என்னமாதிரி உணர்விது என புரியவில்லை.. ஒரேநாளில் அன்னியமாகிவிட்டேனா.. என முயன்று முயன்று.. தேக்கி வைத்திருந்த கண்ணீர்.. உடைபெடுத்து கன்னத்தில் வழிந்தது.
ஷிவா “எப்போ வர” என்றான்.
இன்னும் கண்ணீரோடு.. லேகா நிமிர்ந்து பார்த்தாள்.
ஷிவா தவித்துதான் போனான்.. அவனின் வசமில்லா இந்த நொடிகளை சபித்துக் கொண்டே “க்கும்.. வா” என சொல்லி கைபற்றி அவளை அழைக்க.. அவனின் கைகள் சுட்டது பெண்ணவளை.
மனையாள் கணவனையே பார்த்தாள், நகரவில்லை.. இப்போது உள்ளிருந்து “சந்த்ரலேகா தீக்ஷிதா.. யாருங்க” என்ற குரலோடு ஒருவர் வந்து அழைக்க.. ஷிவா அப்படியே தளர்ந்து நின்றான். அவளின் கைபற்றிக் கொண்டே உள்ளே சென்றான். மனையாள் மறுக்காமல் சென்றாள் அவனோடு.. இதயம் அதை விரும்பியது.
தீக்ஷி சுந்தரம் இருவரும் வந்தனர்.
ஷிவா ரிஜிஸ்ட்டாரை பார்த்து முகமன் கூறினான்.. அருகிலிருந்தவர்கள் ஷிவாவின் கம்பெனி பற்றி சொல்ல.. அவரும் எழுந்து நின்று வணக்கம் என்றார்.. ஷிவாவை அமர வைத்தனர்.
இப்போது லேகா தீக்ஷி இருவரும் போட்டோ எடுத்து.. ரேகை பதிந்து என வேலைகள் நடந்து.. கையொப்பமிட வந்தனர்.
இருவரும் கையொப்பமிட்டு வெளியே வந்தனர். ஷிவா, அலுவலரிடம் விடைபெற்று வந்தான்.
லேகா “க்ரிஷ்.. என்னாச்சு அவருக்கு” என்றாள்.
ஷிவா அவளின் கைபற்றி வெளியே அழைத்து வந்தான்.. சந்துரு தள்ளி நின்று பார்த்திருந்தவன்.. என்னவென உற்று பார்த்தான். தீக்ஷி கணவனின் அருகே வந்து நின்றுக் கொண்டாள்.
ஷிவாவும், சந்துருவின் பார்வையை எதிர்கொண்டான்.. அந்த பார்வை.. உள்ளே குடைந்தது.. ‘அப்பா ஏன் இப்படி செய்கிறார்.. அதான் சந்துரு பேசிவிட்டானே.. அவள் என்ன செய்வாள்.. அவளுக்கு என்மீது கோவம்.. இதில் இவர் வேறு பேசி.. பெரிதாக்கிடுவார் போலவே’ என தந்தையை பார்க்க.. அவரோ.. தன் வண்டி நோக்கி சென்றுவிட்டார்.
லேகா, அருகில் நின்ற கணவனை சட்டென ஒருபார்வை பார்த்து கார் சென்றாள்.
ஷிவாவின் முகத்தில் லேசாக புன்னகை.. ‘நான் கொடுத்த காருடி’ என எண்ணிக் கொண்டே.. தன் கார் நோக்கி நடந்தான். அருகருகே கார்கள் நின்றிருந்தது.
சந்துருவிற்கு, அக்கா.. கணவனோடு பேசாமல் வந்தது, ஆச்சர்யம். ஷிவா, சமாதானம் செய்திடுவான் என எண்ணினான் சந்துரு. ஆனால், அதற்கு நேரம் வாய்க்கவில்லை.. ஏன் ஷிவா பேசவில்லை என யோசனைதான்.
இப்போது லேகாவின் அருகில் சென்றான் சந்துரு.. ஷிவாவின் காதில் விழும்படியே “ரொம்ப அழுது கரையாத.. எல்லாம் சரியாகிடும். எதைபற்றியும் வொர்ரி பண்ணாத. யார் என்ன சொன்னாலும்.. காதில் வாங்காத.. சாப்பிடு, நான் நாளை நைட் வரேன்..” என்றான்.. வேண்டுமென்ற ஷிவாவின் காதில் அவளின் நிலை விழவேண்டும் என எண்ணி பேசினான்.
ஷிவா காரில் அமர்ந்து இந்த பேச்சினை கேட்டான்.. டிரைவரிடம் சத்தமாக “பார்த்து போ..” என்றான்.. சந்துருவின் வார்த்தையை காதில் வாங்கிவிட்டேன் என்பதாக இருந்தது அப்போது.