துரையைப் பார்த்த ரஞ்சன் “போய் நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வாங்க சிங்கம்“ என்று அனுப்பி வைத்துவிட்டு அவன் சென்றதையும் உறுதி செய்துவிட்டு அவன் ஹெட்செட்டில் கனெக்ட் ஆகி இருக்கும் வெவ்வேறு போலிஸ் குழுக்களிடம் “நீங்க எல்லாம் பிடிச்சவங்களை ட்ரக்கர்ஸ் இருக்கானு செக் பண்ணி நம்ம பிலேஸ்க்கு கொண்டு போய்ருங்க நான் பின்னாடியே வந்துறேன், ஆஜூன் நீ அவனை இன்னும் பிடிக்கலல ரைட்?“
“எஸ் சார் ஜஸ்ட் ஃபாலோவ் தான் பண்றேன் நீங்க தான் வெயிட்னு சொல்லிடீங்களே.“
“ஓகே அவனை அப்படியே ஃபாலோவ் பண்ணு. ஏதாவது லேப் மாதிரி எங்கயாவது போறானான்னு வாட்ச் பண்ணு“ என்று ரஞ்சன் வைத்திருந்த இன்னொரு போனை எடுத்து அதில் ஏதோ மெசேஜ் அனுப்பிவிட்டு மீண்டும் அவன் பழைய போனை எடுத்து பாட்டு கேட்பது போல படுத்தபடி இருந்தான்.
துரை கையில் பார்சலுடன் ஏதோ முனுமுனுத்தபடி வர அவனைப் பார்த்து “உள்ள வாங்க சிங்கம்“ என்று அழைத்து இருவரும் உண்டனர் . ரஞ்சன் உண்டவாறு “சிங்கம் தீபாவை எங்க அம்மா அப்பாக்கு இன்ட்ரோ பண்ணலாம்னு இருக்கேன்.
“அதைக்கேட்டு புரையேறிய துரை அவன் தலையை அவனே தட்டிக்கொண்டு “என்ன சார் சொல்றீங்க? அப்போ தீபா மேம உண்மையா லவ் பண்றீங்களா?” என்று வாயைப் பிளக்க, அதை கேட்டு முறைத்த ரஞ்சன் “ சோ இப்போ இந்த மேரேஜ்ல எங்க அம்மா கிட்ட இன்ட்ரோ பண்ணனும். அதுக்காக தான் நான் இப்போ தீபாவை பார்க்க அவ ஆபீஸ் போறேன். நீயும் வரியா சிங்கம்?” அதற்கு துரை, “இவர் கூடவா அச்சோ வேணாம்” என்று எண்ணியபடி வேகமாகத் தலையாட்டியபடி “சார் நான் வரல நீங்க போங்க நானும் வந்துட்டா யார் பாட்ரோல் போறது ”
“சரி சரி உங்களைக் கூப்பிடல சிங்கம். அப்போ நீங்களே நான் வரவரை இந்த ஏரியாவில் பாட்ரோல் போங்க” என்றபடி அவன் கைகளைக் கழுவிவிட்டு அங்கு வந்த ஒரு இரு சக்கர வண்டிக்காரனிடம் லிஃப்ட் கேட்டுச் சென்றுவிட்டான். ரஞ்சன் சென்ற வேகத்தைப் பார்த்த துரை, “ நம்மளை இந்த வெயிலில் சுத்த வச்சுட்டு போறத பாரு ” என்று புலம்பியபடி இருந்தான்.
இங்கு குமரன் வீட்டில் புனிதா “இந்த குழலி அக்கா ஹஸ்பண்ட் ஊருக்கு போயிருக்காங்க. அதுவரை இருக்கணும்னு சொல்லி தான் வந்தாங்க. ஆனா அவங்ககிட்ட அவுங்க அஸ்பண்ட் எந்த ஊருக்கு போயிருக்காங்க, எப்போ வருவாங்கன்னு கேட்டா பதில் இருக்காது. இதெல்லாம் யோசிச்சு எல்லாரும் பயந்திருந்தாங்க. ஒருவேளை குழலிதான் கோச்சுக்கிட்டு வந்துட்டாளோன்னு உன்கிட்ட பெரியம்மாவை விட்டு குழலிய போக சொல்லி பேச சோண்ணாங்க அப்படி பேசினவாது மாதவனுக்கு கிட்ட போய்டுவானு நினச்சாங்க . அப்போகூட வேற வீட்டுக்கு போனாளே தவிர, அவ புருஷனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லல அழுத்தக்காரி.”
“அது சித்தி, எனக்கும் சரியா தெரியாது. அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு அப்பா எங்கன்னு கேட்டா ஊருக்கு போயிருக்காங்கன்னு முடிச்சிருவாங்க. சரி, இந்த நிலாக்கு தெரியுமான்னு கேட்டா அவ வாயவே திறக்க மாட்டா. அம்மா போயிட்ட பிறகும்கூட அப்பாதான் தப்புன்னு சொன்னாளே தவிர, முழுசா சொல்லல” என்று சுடர் பேசி முடித்து தீபாவை பார்க்க, அவளோ புனிதாவின் மடியில் படுத்திருப்பதை பார்த்து
“தூங்கிட்டாளா…நைட் சாப்பாடு சாப்பிடாம தூங்குகிறாளே எழுப்புங்க சித்தி “ என எழுப்பப் பார்க்க அவள் விழிக்கவில்லை. பின் புனிதா” விடுடி நிறைய வேலை இருந்திருக்கும்” என்று குமரனைப் பார்க்க அவன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி“ நீ இன்னும் முழுசா சொல்லி முடிக்கல்லை புனிதா “ என்று கூற புனிதா மீண்டும் தொடர்ந்தாள்
“ குழலி வேறு வீட்டுக்குப் போய்ட்ட பிறகுதான் எல்லாருக்கும் கன்ஃபார்ம் ஆச்சு மாதவன் வர மாட்டான் என்று. அப்போதான் குழலி பற்றி யோசித்து ரொம்ப ஃபீல் பண்ணாங்க. மாதவன் சொந்தக்காரங்க கிட்ட கேட்கலாம் என்று பார்த்தால் அவனுக்கு யாரும் இல்லைன்னு உங்கள் அம்மா சொன்னாங்க. அவனுக்குன்னு இருந்த அம்மா அப்பாவும் விபத்தில் இறந்துட்டாங்க-ன்னு சொன்னாங்க இதைக் கேட்டு எல்லோரும் பெரியம்மாவை நல்லா திட்டினாங்க. அதற்கு அப்புறம் தான் இந்த சந்தனம் குழலி இவங்களைப் பற்றி தப்புப் தப்ப புரளி வர நம்ம வீட்டிலிருந்து அவனைத் திட்டலாம்னு கிளம்பும் போது தான் உங்க அம்மா சந்தனம் நல்லவன் சோந்த வீடு இருக்கு, கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு பேசினாங்க. முதல்ல எல்லாம் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா அதற்கு அப்புறம் குழலி இப்படித் தனியாவே இருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு உங்க அம்மா ஏதேதோ பேசி சம்மதிக்க வச்சி எல்லாரும் பேசப் போனாங்க. அந்த சந்தனம் கூட ஓகே சொல்லிட்டான். ஆனால் குழலி சொல்லல. அப்போ தான் உன்னை வளர்த்த நாங்க கேட்டா பண்ண மாட்டியான்னு சொல்லியிருக்காங்க. அதை சொண்ண பிறகு குழலி அக்கா ஒரு வார்த்தை பேசல்லையாம். இவங்களும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்க. வந்தவங்களை தீபா சண்டை போட்டு திட்டி இருக்கா. அதுக்கு அப்பறமா தான் யோசிச்சி இருக்காங்க குழலிக்கு விருப்பம் இல்லாம பண்ண கூடாதுனு. சரி, நாளைக்கு பேசுவோம் இதை பத்தின்னு முடிவு எடுத்திருக்காங்க. அதுதான் அவங்க செய்த தப்பா போயிருச்சி. குழலியும் போய்டா. உனக்குத் தெரியுமா குமரா? அக்காவுக்கு சின்ன வயசுல இப்படி நடந்தது யாருக்குமே தெரியாதாம். தெரிந்திருந்தால் விட்டிருக்க மாட்டாங்களாம். இந்த அக்கா எல்லாத்தையும் மனசுலயே பூட்டி வச்சி இப்படிப் பண்ணிட்டா” என்று அழுதுகொண்டே பேசி முடித்தாள் புனிதா.
இதை கேட்ட குமரனும் கண்கலங்க இருந்தான். இத்தனை வருடப் பிரிவில் ஏங்கிப் போயிருந்தான் குமரன் அவன் குடும்பத்திற்காக. குமரனுக்கு தன் அக்காவுக்கு அடுத்தது அவன் குடும்பம் தான். குழலி இல்லை என்றதும் அவர்கள் மீது தவறு இருக்குமோ என்று தான் தள்ளி இருந்தான். இப்போது அதற்குக் காரணம் தெரிந்தவுடன் அனைவரையும் பார்க்க வேண்டும் போல் இருக்க, புனிதாவை பார்த்து “நாமா எல்லாரையும் போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்க,
அதற்கு புனிதா “பார்க்கலாமா இல்லை நாளைக்கு வர கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்துற” என்று சொல்லவும், குழம்பிய குமரன் “கல்யாணமா? யாருக்கு?” என கேட்க
“வேற யாரு? உன் மருமகன் மானோக்கு தான்.” என்று புனிதா சொண்ணதை கேட்டு “என்ன? மானோ அண்ணாவுக்கு கல்யாணமா?” என்று சுடர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் கேட்டாள், “ஆமாம், மறுநாள் அவனுக்குக் கல்யாணம். அவன் தான் பாவம், நீங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வரணும்னு புலம்பிட்டே இருப்பான். இப்போ உங்களை அவன் முன்னாடி சர்ப்ரைஸா கொண்டு போய் நிறுத்தணும்.” என்று புனிதா ப்லான் போட தொடங்கினாள்
“பொண்ணு யாரு புனிதா?” என்று குமரன் கேட்க, “பொண்ணு பிகாம் முடிச்சு அவங்க அப்பா வேலை பார்க்கிற வங்கியில் தான் வேலை பார்க்கிறாள். அவளுக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான்.”
“ஓ…. சரி அப்போ நாளைக்கு மார்னிங்கே கிளம்பிடலாம்” என்று குமரன் சொல்லிவிட்டுப் பின் புனிதா முகம் பார்த்துத் தயங்கி “ உனக்கு என்ன குழந்தை பிறந்திருக்கு “
“ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டப்பா, நாளைக்கு வருவல அப்போ நீயே பார்த்துக்கோ “ என்று விட்டுச் செல்லும் தன் தங்கையைப் பார்த்துப் பெருமூச்சு ஒன்று விட அதைப் பார்த்த சுடர்
“ பையன் மாமா நம்ம வேந்தன் வயசு தான் நேம் வந்து கதிர் அரசன் “ “உனக்கு எப்படிம்மா தெரியும் “ என்று மகிழ்ந்த முகத்துடன் கேட்க “அது நான் இன்ஸ்டால ஃபாலோவ் பண்ற மாமா ஆனா நான் யாருன்னு தெரியாது” என்று சொல்லி சைகையில் போனை காட்டிவிட்டுச் சென்றாள்.
போனில் மெசேஜில் புனிதாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இருக்க அதைப் பார்த்துச் சிரித்தபடி “ அப்படியே புனிதா தான் “ என்று கொஞ்சிவிட்டுப் படுக்கச் சென்றான்.
தீபா அவளின் , காலச்சூழலில் இருந்து பதறி அடித்து எழுந்தாள். நேரம் 2 என்றது. தலை வெடித்துவிடும் போல் இருக்க எழுந்து அவள் கைப்பையில் எப்போதும் போடும் மாத்திரை ஒன்றை எடுத்துப் போட்டுவிட்டு மீண்டும் படுத்தாள். மாத்திரையின் உபயோகத்தில் மீண்டும் தூங்கி போனால்.
மறுநாள் அனைவரும் கார் ஒன்றை புக் செய்து கிளம்பினர். செல்லும் வழியில் குமரன், வேந்தன், சுடர், தீபா என்று அனைவருக்கும் கல்யாணத்திற்கு உடை எடுத்துக் கொடுத்தாள் புனிதா. பின் குமரன், தீபா, சுடர் மூவரும் ஒரு நகைக்கடைக்குள் சென்று மானோவிற்கு தங்கத்தில் கைசெயின், மோதிரம் என்று எடுத்துக் கொண்டு பின் புனிதா மகன் கதிரிக்கும் செயின் ஒன்று எடுத்துவிட்டு மண்டபம் செல்ல மணி 5 ஆகி இருந்தது.
மண்டபத்தை நெருங்கவும் குமரனின் சொந்தங்கள் அனைவரும் கண்களில் ஏக்கத்துடன் வெளியேவே காத்திருந்தனர். இவர்களைப் பார்த்ததும் குமரன் அனைவரையும் கட்டித் தழுவியும் காலில் விழுந்தும் பின் அழுகை, சிரிப்பு, சில திட்டுக்கள் என்று குமரனை விடவில்லை. சுடர் மற்றும் அவள் குழந்தையைப் பார்த்து பின் மகிழனை பற்றித் தெரிந்து அந்தக் குடும்பமே அவன் கட்சிக்கு எதிராளிகள் ஆனார்கள். இவ்வாறு அனைவரும் நால்வரையும் மீண்டும் அவர்கள் கூட்டுக்குள் ஏற்றுக்கொண்டார்கள்.
அங்கே வந்த மனோ, சுடர் மற்றும் தீபா காதைப் பிடித்தபடி “அண்ணன்னு ஒருத்தன் இருந்தானே, பிரச்சனைன்னா அவன் கிட்ட வரணும்னு ஒரு அக்கறை இருக்கா உங்களுக்கு? மாமா மட்டும் போதும்ல?” என்று குரல் பொறுமையாக உள்ளே சென்று அவர்கள் காதுகளையும் விட “அண்ணா சாரிண்ணா” என்று சுடரும், முகத்தைப் பாவமாக வைத்து தீபாவும் பார்க்க “இன்னொரு வாட்டி ஏதாவதுன்னா இந்த அண்ணா கிட்ட தான் வரணும் சரியா?” என்று மிரட்டிய மனோவை பார்த்து “ம்ம்ம் அண்ணா” என்று இருவரும் மண்டையை ஆட்ட “சரி வாங்க உங்க அன்னியை இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்” என்று அழைக்க.
இதை கேட்டபடி அங்கு வந்த புனிதா அவன் மண்டையில் கொட்டியபடி “புது மாப்பிள்ளை அடிக்கக் கூடாதுன்னு விட்டா, சும்மா இருக்கியாடா? டைம் ஆச்சு பாரு, போய் கிளம்புற வேளைய பாரு நான் போய் இன்ட்ரோ பண்ணி வச்சுக்கிறேன்”
என்று அனுப்பி வைத்தாள். குமரன், கதிர் மற்றும் வேந்தன் இருவரையும் கையில் பிடித்தபடி அனைவரிடமும் பேசிக்கொண்டு மிக மகிழ்ச்சியாக இருக்க. இதை பார்த்த சுடர் மற்றும் தீபா சிரிப்புடன் நின்றார்கள். பின் ரிசப்ஷனுக்கு நேரம் ஆவதை உணர்ந்து புனிதா, சுடர், தீபாவை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கிளம்பத் தொடங்கினர்.
புனிதா மூவருக்கும் ஒன்று போல லேகாங்கா மாடலில் கற்கள் பதித்த உடை எடுத்திருந்தாள். அதைப் பார்த்து சுடரும் தீபாவும் முழுக்க “ என்னடி கிளம்பாம அக்காவும் தங்கச்சியும் முழுச்சிட்டு இருக்கீங்க “ என்று கேட்க அதற்கு சுடர் “ இந்த மாதிரி டிரஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு அதான் “ அதற்கு தீபாவும் “ ம்ம்ம் சித்தி என மண்டையை உருட்ட இவர்களைப் பார்த்த புனிதா தலையில் அடித்தபடி
“ நானே போடுறேன் உங்களுக்கு என்னடி “ என்று உருட்டி மிரட்டி போடவைத்தாள். பின் இருவரும் மேக்கப் செய்யவும் அடம்பிடிக்க டென்ஷன் ஆன புனிதா “ அடியே இப்பல்லாம் குழந்தையிலிருந்து கிழவிங்க வரை இதைப் போட்டு தான் சுத்துறாங்கடி நீங்க குமரிங்களா இருந்துட்டு இப்படி பண்றீங்களேடி “ என்று இவளே இருவரையும் பார்த்து பார்த்து அலங்கரிக்க சுடர் கண்மை மட்டும் வைக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்க விட்டுவிட்டாள். அலங்காரம் முடிந்து இருவரையும் பார்க்க தீபா நீல நிற தாவணி அணிந்து அதற்கு ஏற்ப வெள்ளை நிற பாவாடையில் நீல நிற எம்ப்ராய்டரி மற்றும் ஆங்காங்கே கற்கள் பதித்து அவள் உடலுக்குப் பாந்தமாகப் பொருந்தியிருந்தது. அந்த உடைக்கு ஏற்ப சிறு ஒப்பனையுடன் அவள் தலையை பிரென்ச் ப்ளாக் போட்டு பூ வைத்து அழகாக இருந்தாள். சுடர் சிவப்பு வண்ண தாவணி அணிந்து தீபாவை போல் வெள்ளை வண்ண பாவாடையில் எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் பதித்த கண்ணுக்கு மட்டும் மையிடாமல் அழகாக இருந்தாள். இவர்கள் போலவே புனிதாவும் மயில் வண்ண தாவணி அணிந்திருந்தாள்.
புனிதா இருவரையும் பார்த்து நெட்டி முறித்து “என் கண்ணே பட்டுரும் போல” என்று மூவரும் போனில் புகைப்படம் எடுத்தபடி கல்யாணப் பெண்ணைப் பார்க்கச் சென்றனர். அங்கே அறையில் கல்யாணப் பெண்ணிற்கு அலங்காரம் செய்துகொண்டிருக்க சுடரும் தீபாவும் முதலில் பயந்தபடியே சென்றனர். ஆனால் அந்தப் பயம் அர்த்தமில்லாதது போலத்தான் நடந்துகொண்டாள் திருமணப் பெண் தேவி. அங்கே அறையில் மூவருடனும் பேசியபடி இருக்க தீபா தலையை ஆட்டி ஆம் இல்லை என்று பதில் கொடுத்துக்கொண்டிருக்க அப்போது பார்த்து கதவு தட்டப்பட தீபா சென்று கதவைத் திறந்தாள். அங்கு வெளியே நின்றவனை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து நின்றுவிட்டாள். அதேபோல் தீபாவை பார்த்து தன் கண்கள் விரிய அதிர்ந்து “நீங்க இங்க எப்படி” என்று திணறிப் பேசியபடி நின்றான்.