ஒருகட்டத்தில் லேகாவின் புலம்பலும் அழுகையும் அதிகமாக சந்துரு “லேகு.. எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற எங்க போய்ட போறாங்க.. உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா” என சொல்லி.. நடந்தவைகளை சொன்னான்..
லேகா “டேய்.. நீ எழுதி கொடுக்கலையா? ஏன் டா” என்றாள் அதிர்ந்து. தொண்டை அடைத்துக் கொண்டது.. பேச்சுகள் கரகரப்பாகதான் வந்தது. இப்போது தம்பியின் முடிவுகள் கேட்டதும் அதிர்ந்ததில்.. இன்னமும் குரல் உள்ளே சென்றுவிட்டது.
சந்துரு சீறினான் “அப்படிதானே நினைச்சாங்க.. சொத்திற்கு ஆசைபடுபவர்கள் நாமென்றுதானே நினைத்தார்கள். அவர்களிடம் கொடுக்க முடியாது. கல்யாணம் செய்துவைத்தால்.. உன்னை காரணம் காட்டி நாம அவங்க கூடவே இருப்போம்.. எப்படியாவது.. பங்குகளை வாங்கிடலாம்ன்னுதானே யோசித்தார்கள்.. அப்படியே செய்வோம்.. முழுதாகவே வாங்குகிறேன்..” என்றான் வெறித்த பார்வையோடு.
லேகா ஓய்ந்து போனாள்.. “டேய்.. இன்னமும் பிரச்சனைதானே டா..” என்றாள்.
சந்துரு எழுந்து நின்றான் அக்காவிடமிருந்து.. “இங்கபாரு.. ஷிவா உனக்கு வேணுமா வேண்டாமா?. அவன், நீ நினைப்பது போலன்னு இன்னமும் நினைக்கிறியா” என்றான்.
லேகா சாய்ந்துக் கொண்டாள் சோபாவின் விளிம்பில் “டேய்.. இப்படி பயப்படுத்தி.. அவர் என்னிடம் வந்திடுவாரா.. அப்படிதான் நான் வாழனுமா” என்றாள்.
லேகா உணர்விழந்தாள்.. உடலிலும் மனதிலும் தெம்பில்லையே.. இரவு முழுவதும் அழுகை.. காலையில் எழுந்தது முதல்.. அழுகை. ஒன்றும் குடிக்கவில்லை.. பேசிபேசி.. அழுது அழுது.. மயக்கம் வந்துவிட்டது.
சந்துரு அவளுக்கு முகத்தில் தண்ணீர் விட்டு துடைத்து எழுப்பினான்.. பெரிய டம்ப்ளரில் பால் எடுத்து வந்து கொடுத்தான்.
லேகாவிற்கு கணவன் நினைவுதான்.. சந்துரு இப்படி சண்டையிட்டு வந்தது.. இன்னமும் அவளுக்கு பயத்தினைதான் கொடுத்து. ஷிவா, இதுவரை பேசவில்லை இதனால்தானோ.. என எண்ணம்.
‘என்னமோ இப்படி பிடிக்கிறதே எனக்கு ஷிவாவை’ என அதற்கும் தன்னையே நொந்துக் கொண்டாள் பெண். இப்போது ஏதும் தன்னால் செய்ய முடியாது.. இனி நடப்பது நடக்கட்டும் என எண்ணி.. தம்பி கொடுத்த பால் பருகினாள். அப்படியே சோபாவில் சாய்ந்து உறங்க தொடங்கினாள்.
சற்று நேரத்தில்.. வீட்டருகே இருக்கும் நர்ஸ் வந்து பார்த்தார்.. ‘ஒரு ட்ரிப்ஸ் போடுகிறேன்’ என சொல்லி போட்டுவிட்டு சென்றார்.
சுந்தரம் “எப்படி பா, இருக்கீங்க..” என தொடங்கினார்.
சந்துரு மனமேயில்லாமல்தான் பேசினான். முதலில் பின் அவரேதான் “லேகா எப்படிப்பா இருக்கு.. அண்ணன் அண்ணி ஷிவா யாராவது கூப்பிட்டார்களா” என்றார்.
சந்துரு “நான் வைக்கிறேன்” என்றான். யாருமே அழைக்கவில்லையே.. என்ன சொல்லுவது என.
சுந்தரம் “சரிப்பா.. சந்துரு, நீ ஒன்னும் கவலை படாத, ஷிவா லேகாவை விடமாட்டான். லேகாவிடம் சொல்லுப்பா.. லேகாவின் அன்பினை உணர்ந்திருக்கிறான் ஷிவா, அவனுக்கு தெரியும்.. யார் எப்படின்னு. இப்படிதான் முரட்டுத்தனமாக இருப்பான்.. ஆனால், லேகாவை விடமாட்டான்.. பாரு பேசுவான். நீ சொல்லுப்பா..” என்றார்.
சுந்தரம் “இல்ல ப்பா, இருங்க.. அப்புறம் என்ன செய்ய போவதாக இருக்கீங்க..” என்றார்.
சந்துரு “எதுக்கு..” என்றான்.
சுந்தரம் “மூணு மாசத்தில்” என்றார்.
சந்துரு “ம்..” என அமைதியானான். உறங்கவேயில்லையே இரவு முழுவதும். தங்களிடம் ஒருபைசா இல்லை என தெரியுமே.. இதில் ஐம்பது கோடி.. தன் நெஞ்சினை நீவிக் கொண்டே விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். இப்போது மாமனார் கேட்கவும் அதே பயம்.. நெஞ்சை அடைக்க.. மீண்டும் நெஞ்சில் கை வைத்து.. நீவிக் கொண்டான்.
சுந்தரம் பாவம்.. பணிந்து செல்லவே பழக்கப்பட்டுவிட்டார் போல.. “இல்ல ப்பா, சந்துருன்னே கூப்பிடுறேன்.. சொல்லுங்க என்ன செய்ய போறீங்க” என்றார்.
சந்துரு இரண்டுநிமிடம் யோசித்து “தினமும் அங்கே சிட்பண்ட் போக போறேன்.. அதுதான் இப்போது இருக்கும் ஒரே யோசனை.. பார்க்கிறேன்” என்றான்.
சுந்தரம் “ம்.. சரிப்பா, நான் நமக்கு தெரிந்த நபர் அங்கே இருக்கிறார் அவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.. நீங்க நாளை வரும் போது சொல்லுங்க” என்றார்.
“ம்..” என்றான், சந்துருவிற்கு இவரை நம்புவதா வேண்டாமா என இன்னமும் புரியவில்லை.
மாமனார் “சந்துரு, அப்புறம், நம்ம டெக்ஸ்டைல்ஸ், அதை.. தீக்ஷி பேரிலும் லேகா பேரிலும்தான் அப்பா எழுதியிருக்கார். அதற்கான ரிஜிட்ரேஷன் வெள்ளிகிழமை. லேகாவிடம் சொல்லிவிடுப்பா.. அமைதியாக வந்து கையெழுத்து போட்டு அதை வாங்கிக்க சொல்லுப்பா.. கோவத்தில் ஏதாவது முடிவெடுத்திட போகிறாள்” என்றார்.
சந்துருவிற்கும் உண்மையென தோன்ற.. “ம்.. நான் சொல்லி வைக்கிறேன்” என்றான்.
இவர்களின் தந்தைரமேஷூக்கு இதுவரை யாரும் ஏதும் சொல்லவில்லை. அவர் இப்போது காலையில் மகளுக்கு அழைத்தார்.. எடுக்கவில்லை லேகா.
சந்துருவிற்கு அழைத்தார்.. எந்த உணர்வும் இல்லாமல் தந்தையிடம் ஏதும் நடந்தவைகளை சொல்லாமல் பேசி தன் அழைப்பினை துண்டித்தான் சந்துரு. அவனுக்கு அவரிடம் எதையும் சொல்ல தோன்றவில்லை. அப்படியே நேரம் பார்த்து நின்றான்.
“இல்ல உன் அண்ணனுக்கு பங்கு நான் கொடுக்கலைன்னு.. நீ.. நீ என்னதான் நினைக்கிற” என்றான்.
தீக்ஷி இப்போது திடமான குரலில் “ம்.. ரூல் படி.. உங்களுக்கு பங்கு தாத்தா கொடுத்திருக்கார். அதை மறைத்து தவறு.. அந்த வக்கீல் யாருன்னு பார்த்து.. அவங்க மேலேயும் கேஸ் போடலாம். அப்புறம் இது உங்களுடைய பங்கு.. இதை நீங்க இப்போது லீகலாக என்னவேனா செய்யலாம். ஆனால், நீங்க 50% பங்கு கேட்டது தவறு.. அது எங்க அப்போவோட.. அத்தையோடு பங்கு.. எங்க அப்பா பங்கினை கேட்டிருக்கலாம். அதனால, நீங்க உங்க பங்குக்கு.. நியாயமா நடந்துக்கோங்க. அப்புறம், எதுக்கு இந்த சவால் எல்லாம்.. இது அண்ணைனை இன்னமும் கோவமாக்கும்.. அதுதான் கஷ்ட்டமா இருக்கு. அண்ணி பாவம்.. “ என்றாள்.
சந்துரு “அஹ.. ம்.. எல்லாம் தெரியுது. தேங்க்ஸ்..” என்றான்.