விடியல் 36

“அன்புள்ள நிலா அப்பாவிற்கு …

என்னை மன்னிச்சிருங்க நிலா அப்பா ,நீங்க வரவரை என்னால காத்திருக்க முடியல உங்கள பார்க்காமலே போறேன். நீங்க வந்து என்ன தேடும் போது அட்லீஸ்ட் இந்த கடிதம் ஆவது  இருக்கட்டும்னு தான் எழுதுறேன். நீங்க வந்து இதை படிக்கும் போது நான் உங்க கூட நான் அங்க இருக்க மாட்டேன். என்ன நினைச்சி ரொம்ப கஷ்டப்படாதீங்க எனக்கு புரியுது என் கூட நீங்க லைப் புள்ள இருக்கனும்னு  அசை பட்டீங்கனு எனக்கு ஆசையா  தான் இருக்கு உங்க கூட நம்ம வீட்டுல அமைதியா உங்க கைய பிடிச்சிட்டே ரொம்ப வருஷம் வாழனும்னு தோணுது வயசாகி என் கடைசி நாள்ல உங்க பக்கத்துல என் உயிர் போகனும் உங்கள பார்த்துட்டேன்னு நிறைய ஆசை ஆனா எதுவும் இப்போ நடக்காது உங்கள பார்க்காமலே போறேன். நான் இல்லனு என் பின்னாடி சீக்கிரமா வந்திராதீங்க நம்ம பொண்ணுங்க கல்யாணம் அப்புறம் குமரன் கல்யாணம் அவங்க பசங்கனு எல்லாரையும் பார்த்துட்டு பொறுமையா வாங்க நான் காத்திருப்பேன். நிலா அப்பா உங்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும்னு நினைப்பேன் ஆனா சொன்னது இல்லை இப்போ தான் டைம் கிடைச்சிருக்கு போல. நன்றி நிலா அப்பா, எதுக்குன்னு தெரியுமா என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்ததுக்கு எனக்கு ஒரு நிறைவான குடும்பத்த கோடுத்ததுக்கு.  நீங்க எங்க இருந்து வந்தீங்கனு தெரியல ஆனா எனக்காக வந்ததுக்கு நன்றி. என் வாழ்க்கையில தெரிஞ்சோ தெரியாமலோ என்ன பெத்தவங்க எனக்காக பண்ண ஒரே நல்லது நீங்க தான். உங்க காதல் தான் நான் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தேன் அந்த சந்தோஷம் மட்டும் போதும்னு தான் போறேன் உங்க காதலை மட்டும் எடுத்துட்டு போறேன் உங்க மனைவி குழலி..” என்று அந்தக் கடிதம் முடிந்திருந்தது அந்தக் காகிதத்தை திரும்பி பார்த்தான் குமரன் அங்கும் ஒரு கடிதம் இருந்தது.

“அன்புள்ள என் தம்பி குமரனுக்கு…

என்னை மன்னிச்சிடுடா உன்னை இப்படி தனியே விட்டுப் போறதுக்கு. எனக்குத் தெரியும் நீ எவ்வளவு கஷ்டப்படுவன்னு. ஆனா நீ கொஞ்சம் இந்த அக்காவ புரிஞ்சிக்கோடா. ஓடிப் போன அம்மா ஓடா பையனாகக் கூட இருந்துடலாம், ஆனா அவுங்க பெண்ணை இந்த உலகம் இருக்க விடாதுடா. என்னையும் இருக்க விடல, சின்ன வயசுல இருந்தே. அப்போவே உன் கிட்ட இதை சொல்ல முடியாது. நீ சின்ன பையன். அதான் இப்போ சொல்றேன். இப்போ உனக்கு  புரிஞ்சிருக்கும் ஏன் இந்த முடிவை நான் எடுத்தேன் என்று. நம்மல பெத்தவுங்க விட்டுப் போனதுக்கு. நாமா என்ன பண்ணினோம் எனக்கு தெரியல்ல. இந்த உலகம் நம்மளைத் தவறா பேசுறதுக்கு. அதிலும் நானும் அப்போ சின்னப் பெண்ணு  தானே. என் கிட்ட போய் , பேசக்கூடாத வார்த்தைலாம்  பேசி, நான் சிரிச்சா போதும் யாரை மயக்க இப்படிச் சிரிக்கிறாளோ, அப்படியே அம்மா குணம்னு  சொல்லுவாங்க . சரின்னு சிரிப்பதை விட்டேன். சிரிக்கத்தான் கூடாதுன்னு அழுதால் யாரை அழுது மயக்குகிறானு சொல்றாங்க.

நீ கூட என்னை விளையாட கூப்பிடுவ. ஆனால் நான் வர மாட்டேன்னு சொல்லுவேன். ஏன் தெரியுமா? உன் கூட விளையாட வந்தா கூட தப்பாதான் பேசுவாங்க. ஏன்னு இப்போ வர தெரியலடா . நான் எங்க போனாலும் நம்மல பெத்தவுங்க விட்டுப்போன பட்டமும் பின்னாடியே துரத்துது. அதான் உங்க மாமா ஊருக்கு கூப்பிட்டப்ப கூட சரின்னு சொல்லி கிளம்பினேன். சந்தோஷமா தான் இருந்தன் அங்கே இங்கே இருக்க வசதி இல்லை நாளும் நான் நிம்மதியா தான் இருந்தேன். ஏன்னா அங்கே இருக்கிற யாருக்கும் என்னை தெரியாது இல்லை? எனக்கு இப்போ எடுத்த முடிவுக்கு கூட இதுதான் காரணம். எது என் பொண்ணுகளுக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சனோ, அது எல்லாம் தெரிஞ்சிருச்சி. அப்போ கூட என் பொண்ணுங்க பற்றி எனக்கு தெரியும் என்று நான் அமைதியா தான் இருந்தேன். ஆனால் இவங்க எல்லாம் என் பொண்ணுங்க முன்னாடி திரும்பி திரும்பி இதையே சொல்லி என் பொண்ணுங்க கலங்கி நிற்பதை பார்க்க முடியல. அதுவும் இல்லாமல் என் புருஷன் இடத்தை இன்னொருத்தனுக்கு தர சொல்றாங்க. என்னால அது எப்பவுமே முடியாதுன்னு சொன்ன என் பொண்ணுங்களை வைச்சி பேசுறாங்க. நீ பண்ணினால்தான் அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்றாங்க.

அதன் முடிவு எடுத்துட்டேன். நம்மல பெத்தவுங்க  விட்டுப் போன கறை என்னோடு போகட்டும். என் பொண்ணுங்களுக்கு வேண்டாம். ஆனா ஒன்னு குமரா, இந்த உலகம் தப்பு பண்ணவங்களைக்கூட ஈஸியா ஏத்துக்குதுடா. எப்படி நம்ம அம்மாவை அவங்க குடும்பம் ஏத்துக்கிச்சோ அப்படி.

சாரிடா, உனக்கு ஒரு குடும்பத்தை அமைச்சி தராமலே போறேன். ஆனால் அதை உங்க மாமா பாத்துபாங்கடா , உனக்கு ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துத் தருவேன்னு சொன்னாங்கடா. உங்க மாமா சொன்னா செஞ்சிருவாங்க. அப்புறம், தீபா, சுடர் படிப்புச் செலவுக்கு அவங்க அப்பா நிறைய காசு விட்டுட்டுப் போயிருக்காங்க. அதைப்பத்தி இந்த பேப்பர் இருந்த புக்ல வச்சிருகேன். என் பொண்ணுங்களைப் பார்த்துக்கோ. நீயும் பத்திரமாக இருக்கணும்.” என்று அந்தக் கடிதமும் முடிந்திருந்தது. அதனுடன் இன்னொரு காகிதம் இருந்தது. அதையும் கண்ணில் வலியும் கண்கள்  ஓடப் படிக்கத் தொடங்கினான்.

“என் அன்பு மகள்களுக்கு,

”எனக்குத் தெரியும் என் பொண்ணுங்க ஸ்ட்ராங் கேர்ள்ஸ்னு. அதனால எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைத் தாண்டி சந்தோஷமா இருக்கணும். இந்த அம்மா உங்க கூட இல்லனாலும் என் ஆசிர்வாதம் உங்க கூடத்தான் எப்பவும் இருக்கும். அடுத்த ஜென்மம் இருந்தா உங்க கூட கடைசி வரை இருக்கணும் என்னோட கடைசி ஆசை இது.” என்று பாதியில் முடிந்திருந்தது அந்தக் கடிதம். இதைக் கேட்டு சுடர் சத்தம் போட்டு அழுக, தீபாவோ மனதில் “எல்லாம் என்னாலதான் எங்க அம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு நான் தான் காரணம். நான் அன்னைக்கு எதையும் கேட்டிருக்கக் கூடாது. அதான் அம்மா போயிட்டாங்க” என்று முனங்கியபடியே இருந்தாள்.

ஒரு வாரம் ஆயிற்று குழலி இறந்து குமரன் போலீஸ் ஸ்டேஷனில் மாதவனைப் பற்றி கம்ப்ளைன்ட் ஒன்று கொடுத்து வந்தான். சுடர் மற்றும் தீபா குமரன் உடன் வந்துவிட்டனர். சுடர் தன் அன்னையின் கடைசி வார்த்தைகளையே படித்தபடி இருந்தால், தீபா ஒரு துளிக் கண்ணீர் விடவில்லை. அதைக் கவனிக்கவும் யாரும் இல்லை. எதையோ வெறித்தபடி கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறுவாள். இப்படியே நாட்கள் செல்ல, நீட் தேர்வு முடிவும் வந்தது. தீபா தமிழ்நாட்டில் இவளே முதல் இடம் வந்தாள். இதை முதலில் பார்த்த புனிதா தீபாவை பார்க்க வந்துவிட்டாள். குமரனுக்கு போனில் அழைத்துச் சொல்லி வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு, இவளும் வந்து பார்க்க அங்கே இதைப்பற்றி எதுவும் தெரியாமல் தீபா சுவரை வெறித்தபடி இருக்க, சுடரோ கையில் கடிதத்தை வைத்தபடி இருந்தாள்.

அப்போதுதான் அங்கு குமரனும் வந்தான். வந்தவன் இவர்களைப் பார்த்து, பின் புனிதாவைப் பார்த்து, “அது அக்கா இல்லல, அதான்” என்று கரகரத்த குரலில் பேச, இவர்களைப் பார்த்து வருந்திய புனிதா, பின் “இவங்களை இப்படியே விட்டால் சரி வராது” என்று தீபாவை நோக்கி, “தீபா, நீட் பாஸ் ஆகிட்ட பாரு” என்று அவள் இடம் மார்க்கைக் காட்ட, அப்போதும் அவளிடம் அசைவில்லை. மீண்டும் “இங்க பாருடி, தமிழ்நாட்டில் ஃபர்ஸ்ட் வந்திருக்க பாரு” அதற்கும் அசைவில்லை. அதைப் பார்த்துக் கோபம் கொண்ட புனிதா, குமரனிடம் திரும்பி, “எல்லாம் உன்னால. பெரியவன் நீயே அக்கா அக்கான்னு இருந்தா, சின்னவங்கள  யார் பார்த்துப்பா?” என்றுவிட்டு மீண்டும் தீபாவிடம் சென்று, “தீபாமா, இப்படியே இருந்தால் எப்படிம்மா? நீங்க ஹாப்பியா இருக்கணும்னுதானே அம்மா சொல்லுவாங்க? அதுவும் இல்லாம நீங்க டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டீங்களே, அதை நிறைவேத்த வேண்டாமா?” என்று சொன்னதுதான் தாமதம், தீபா உடனே எழுந்து, “இல்லை, நான் ஆக மாட்டேன். டாக்டர் வேண்டாம். எங்க அப்பாவுக்காக ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ வேணா எனக்கு. அப்பா வேணா. டாக்டர் வேணா. அப்பா வேணா…” என்று திரும்பத் திரும்ப அதையே சொல்ல, பயந்த அனைவரும் தீபா அருகே போக, அவள் தன் காதுகளில் கை வைத்தபடி, “எங்க அம்மாவைத் தேடி வராத அப்பா எனக்கு வேண்டாம்…” என்று கத்திவிட்டு கீழே மயங்கி விழுந்தாள்.

அனைவரும் தண்ணீர் தெளித்து அவளை எழுப்ப விழித்த தீபா மீண்டும் இதையே சொன்னாள், “நான் டாக்டர் ஆக மாட்டேன்“ என்று உறுதியாகச் சொல்பவளை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின் புனிதா தான் இவர்களைப் பேசிப் பேசி ஓரளவு இயல்புக்குக் கொண்டுவந்தாள். அப்போதும் தீபா டாக்டர் ஆக ஒத்துக்கொள்ளவில்லை.

அவள் தன் தந்தைக்கு டாக்டர் என்றால் பிடிக்கும் என்று தான் ஆசையை வளர்த்துக்கொண்டாள். பின் அன்னைக்காக ஆஸ்பிட்டல் கட்டவேண்டும் என்று இருவருக்காக ஆசைப்பட்டாள். ஆனால் அதற்குச் சம்பந்தப்பட்ட இருவருமே இப்போது இல்லை. அதுவும் தன் தந்தை இவளையும் தாயையும் ஏமாற்றியதாகவே முடிவு செய்ததால் அந்தப் படிப்பை எடுத்துப் படிக்க இவளுக்கு பிடிக்கவில்லை. பின் தீபாவிடம் பேசிப் பேசி எப்படியோ காலேஜில் சேர்க்கச் சம்மதம் வாங்க, அவள் தேர்ந்தெடுத்த படிப்புதான் பி.எஸ்.சி கிரிமினல் அன்ட் ஃபாரன்சிக் சயின்ஸ். தீபா சொன்ன படிப்பையே ஒரு நல்ல கல்லூரியில் தேர்ந்தெடுத்துப் படித்தாள். அதே கல்லூரியில்தான் நளினியும் வேறு ஒரு குரூப்பில் சேர்ந்திருந்தாள். அவளின் இருண்ட பக்கங்கள் உருவாகப் போகும் இடமும் இதுதான் என்று அறியாமல் அமைதி தேடி நுழைந்தாள் நரகம் என்று அறியாமல் நரகத்தின் உள்ளே.