“வர்மா சூப்பர் டா.” என்று விக்ரமின் குரல் கேட்கவும் “விக்ரமா? அவனும் வந்துட்டானா?” என்று அதிர்ந்து, ஐஸ்வர்யா குரல் வந்த திசையில் பார்த்தாள். அவனது பார்வை முழுவதும் ஐஸ்வர்யாவின் பக்கம் தான் இருந்தது.
வர்மாவிடமிருந்து மைக்கை வாங்கி அடுத்த வரியை பாட ஆரம்பித்தான் விக்ரம்.
காந்தமாய் அவனது கண்கள் இழுக்க தன்னையும் அறியாமல் தனது பெண் மனதை அவனிடம் ‘சென்று வா’ என்று அனுப்பி வைத்தாள் ஐஸ்வர்யா.
“சொல்லித் தந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே தேகம் ஓ… உன் தேகம்….
வந்து சேரும் வாழ்த்து செண்டு
ரெண்டு பேரும் சேர்ந்திடும் நாளில் ஓ… பொன்னாளில்…”
விக்ரமின் குரலில் அவ்வரிகளைக் கேட்டதும் அவனுக்காக அவளது உடலின் ஒவ்வொரு செல்லும் ஏங்கித் தவித்திட அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்கும் திடம் இன்றி ஆடிட்டோரியத்திற்கு ஓட்டமாய் ஓடிப்போனாள் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா ஓடி ஒளிந்து கொண்டதை பார்த்தப்பிறகு மிச்சமீதிப் பாடலைப் பாடாமல் விக்ரமின் உதடுகள் அசைவற்று நின்றுவிட்டன. இதை அறிந்துகொண்ட வர்மா தனது நண்பனிடம் இருந்து மைக்கை வாங்கி தனது வசீகரிக்கும் குரலில் பாடலை பாடி முடித்தான்.
****
இரவு முழுதும் விக்ரம் பாடிய பாடல் வரிகள் காதில் கேட்க ஒரு பொட்டுத் தூக்கம் கூட ஐஸ்வர்யாவிற்கு கிடைக்கவில்லை.
மறுநாள் தனது தோழியின் குழப்பமான முகத்தைக் கண்டு, “என்னப்பா மூட் அவுட்டா இருக்கியா?” என்று கவி ஐஸ்வர்யாவிடம் கேட்டாள்.
“விக்ரம் பண்றது சரியில்ல கவி… என்னை டார்ச்சர் பண்றான். என் வீட்டுல ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை ஓடிட்டு இருக்கு… என் அக்காவோட வில்லங்கமான லவ் என் வீட்ல பெரிய பிரச்சனை உண்டுபண்ணுது….… இதுல காலேஜ் 1st யியர்லயே லவ் பண்றேன்னு என் அம்மாவுக்கு தெரிஞ்சா அவுங்க இடிஞ்சி போயிடுவாங்கப்பா…”
“அவன்கிட்ட தெளிவா ஒரு முடிவைச் சொல்லிடு ஐஸ்வர்யா…”
“ம்… சொல்லத்தான் போறேன்.” என்ற ஐஸ்வர்யா மனதில் ஒரு இறுதி முடிவை எடுத்திருந்தாள்.
***
இரு தினங்கள் கழித்து நூலகத்தில் விக்ரமை சந்தித்த ஐஸ்வர்யா அவனிடம் மீண்டும் அவனது காதல் துரத்தல்கள் குறித்து பேசுவதற்காக அவனிடம், “உங்க கூட ஒரு டூ மினிட்ஸ் பேசணுமே” என்றாள்.
அவள் கோடு போட்டாள் அவன் ரோடு போட மாட்டானா? எப்போதடா தனக்கு கான்ட்ராக்ட் கிடைக்கும் என்று அவன் தான் காத்துக்கொண்டிருக்கிறானே?
அவளுடன் தனிமையில் பேசுவதற்காக உடனே நூலகத்தில் ஒரு இடத்தை விக்ரமே தேர்ந்தெடுத்தான்.
இரு பக்கமும் புத்தக அலமாரிகள் இருக்க புத்தகங்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தார்கள் இருவரும்.
“பேசணும்னு சொல்லிட்டு பேசாமல் நிற்கிற?” சிரித்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்து வைத்தான் அவளது கள்வன்.
கள்வனின் சேட்டையை கண்டுகொள்ளாமல் முதல் வார்த்தையை உச்சரித்தாள் ஐஸ்வர்யா.
“அன்னிக்கி…”
“ம்… அன்னிக்கி??”
“கோயில்ல… பூ… விளக்கு பூஜை…”
“ம்… ஆமா… அதுக்கு என்ன?”
“விக்ரம்… டோன்ட் டீஸ் மீ… அன்னிக்கி கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டேன்… விளக்கு பூஜையில நடந்ததை மனசுல வச்சிக்கிட்டு திரும்பவும் நீங்க என்னையே ஃபாலோ பண்றீங்க… நேத்து நீங்க பாடும்போது நீங்க என்னைப் பார்த்து தான் பாடுனீங்க… ப்ளீஸ் விக்ரம். இது எல்லாம் வேணாமே? எங்க வீட்ல ஏற்கனவே நிறைய பிரச்சனை… இப்ப நீங்களும் என்னையே ஃபாலோ பண்றது சரியில்ல விக்ரம்.”
“சாரி ஐஸ்… உன்னை ஃபாலோ பண்றதை நிறுத்த முடியாது…”
அவன் ஐஸ் என்று முதல் முறையாக அவளைக் கூப்பிட்டபோது அவளது பெண் மனம் எவரெஸ்ட் பனிமலையில் பாய் தலையணை போட்டுப் படுத்துக்கொண்டது. எவரெஸ்ட் வரை ஓடிச்சென்ற மனதை கடிவாளம் போட்டு அடக்கி சென்னைக்கு இழுத்துக்கொண்டு வந்த ஐஸ்வர்யா,
“இல்ல… சாரி… நான் சும்மா தான் உங்களை பார்த்தேன். நீங்க அதை சீரியஸா எடுக்க வேணாம். ப்ளீஸ். நான் தான் அன்னிக்கே லைப்ரரியில இதைப் பற்றி பேசிட்டேனே?” என்றாள் விக்ரமிடம்.
“இப்பவும் என்னை சும்மா தான பார்க்கச் சொல்றேன் ஐஸ்…”
“அதான் வேணாம்ங்கறேன். உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியல விக்ரம். போன முறை லைப்ரரியில வச்சி சொன்னதை தான் நான் இப்பவும் சொல்றேன். இது எனக்கு மென்ட்டல் டார்ச்சரா இருக்கு…”
“இந்த லைப்ரரிக்கு வரும் பழக்கத்தை நீ நிறுத்திகிறது நமக்கு நல்லதுன்னு நினைக்கறேன். இந்த லைப்ரரி உன்னிடம் என்னைப் பற்றி தப்புத் தப்பா சொல்லிக்கொடுக்குது.” என்று அவளது புறக்கணிப்பை கேலியாக விலக்கிட நினைத்தான் விக்ரம்.
அவள் மறுக்க ஆரம்பிப்பதற்கு முன்,
“ஐ லவ் யூ ஐஸ். இனி இது உனக்கு மென்ட்ல் டார்ச்சரா இருந்தாலும் பரவாயில்ல… நான் உன்னை காதலிப்பதை நிறுத்தப் போறது இல்ல. விளக்கு பூஜையில உனக்கு பூ வாங்கிக்கொடுக்கும்போதே இதை நான் முடிவு பண்ணிட்டேன்… லவ் பண்ணிட்டு கல்யாணம் செய்யிறதானாலும் ஓகே. இல்ல கல்யாணம் செய்தப் பிறகு லவ் பண்றதுனாலும் எனக்கு ஓகே தான். ஆனா உன் லைஃப்ல லவ், கல்யாணம் ரெண்டுமே என்னோடு தான் ஐஸ்…” என்று கூறி அவளது நெஞ்சுக்குள் ஐஸ்கட்டிகளை அடுக்கினான் விக்ரம்.
தன் காதலை விக்ரம் சொல்லி முடித்த அடுத்த பத்தாவது நாளில் ஐஸ்வர்யாவும் அவனைப் பார்த்து “ஐ லவ் யூ விக்ரம்” என்றாள். தன் காதலைச் சொன்னப்பிறகு அவள் மனதை கவர்வதில் அவனுக்கு அப்படி ஒன்றும் கஷ்டம் இருக்கவில்லை. ஆம்… ஏற்கனவே அவன் பக்கமாய் பாதி தூரம் வந்துவிட்ட அவளது மனதிற்கு மீதி தூரமும் கடந்து வரும் தைரியத்தை அவனது விழிகள் கொடுத்தன.
வர்மாவின் தயவில் காதல் பறவைகள் அழகாக அடக்கஒடுக்கமாக காதலித்தன.
****
விக்ரமும் ஐஸ்வர்யாவும் காதலிக்க ஆரம்பித்து 3 வருடங்கள் ஆகிவிட்டன.
அப்போது கல்லூரியின் இறுதியாண்டு…
**************************
“இந்த வர்மா தொல்லை தாங்க முடியல..” விக்ரம்.
“வர்மா என்ன பண்ணான்? நாம லவ் பண்றோம்னு சொன்னதும் ஆரம்பத்தில் பயந்தாலும் இப்ப எல்லாம் அவன் தான் ரொம்ப ஹாப்பியா இருக்கான் தெரியுமா? உன்னை கல்யாணம் பண்ணா நான் எப்பவும் அவனோடு டச்ல இருக்க முடியும்னு நினைச்சி ஜாலியாகிட்டான்.” ஐஸ்வர்யா.
“ஆனா உன்னை மீட் பண்ற இடத்துக்கெல்லாம் நந்தி மாதிரி வந்து நின்னுடறான்.”
“அது உன் மேல இருக்கிற நம்பிக்கையை காட்டுது சார்…”
“அதான் நானும் ஒரு முடிவு எடுத்திருக்கேன் ஐஸ்… நம்பிக்கை இல்லாதவனை கூட வச்சிக்க வேணாம்னு முடிவு செய்திருக்கேன். இன்னிக்கி அவன் நம்மைத் தேடி லோ லோன்னு அலைஞ்சிட்டு இருப்பான் தெரியுமா?”
“என்ன டா பண்ணி வச்ச? வர்மா எங்கெல்லாம் தேடுறானோ… இரு வர்மாவுக்கு கால் பண்றேன்.” என்றவளது கைகளை மடக்கி அவளது கைபேசியை பிடுங்கிக்கொண்ட விக்ரம்,
“நாம ரெண்டு பேரும் கொஞ்சம் சில்மிஷம் செய்து முடிச்சிட்டு வர்மாவுக்கு கால் பண்ணலாம்… என்ன அவசரம்?” என்றான்.
“என்ன பேச்சு பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு? அடி வேணுமா?”
“இல்ல கிஸ் வேணும் ஐஸ்.”
“என்ன?” என்று அவனைவிட்டு பத்தடிகள் தள்ளி அமர்ந்தாள் ஐஸ்வர்யா.
“சின்னதா ஒரு கிஸ். பெருசா ஒரு ஹக் ஐஸ்…”
“வேணா விக்ரம்…”
“சரி… பெருசா ஒரு கிஸ் சிறுசா ஒரு ஹக் பண்ணிக்கலாமா?”
“ஆமா. என் கனவுல நமக்குத் தான் கல்யாணம் ஆயிடுச்சே? நமக்குள்ள சண்டை வந்தா நான் உன்னை டைவர்ஸ் தான பண்ணணும்?”
“டைவர்ஸ் பண்ணு நான் வேணாம்னு சொல்லலை…”
“ஆ… என்ன டா சொல்ற? டைவர்ஸ்க்கு ஒத்துக்குவியா?”
“நிச்சியமா… ஆனா ஒரே ஒரு கன்டிஷன். ஒரு புள்ள பெத்துட்டு என்னை டைவர்ஸ் பண்ணு ஐஸ்….”
ஐஸ்வர்யா அவனைப் பார்த்து சிரிக்கவா முறைக்கவா என்று தெரியாமல் விழிக்க…
“நான் ஒரு ஹக்கும் ஒரு கிஸ்ஸும் மட்டும் தான் கேட்டேன்… ஆனா நாம பேசப் பேச புள்ள பெத்துக்கிறது வரை வந்துட்டோம் பார்த்தியா? இதுக்குத் தான் அந்த வர்மா dog-ஐ நான் கூட வச்சிக்க வேணாம்னு சொல்றேன்.”
ஐஸ்வர்யா கலகலவென சிரித்துவிட்டாள்.
சிரிக்கும் தனது காதலியின் உதடுகளை தனது விரல்களால் சில நொடிகள் தடவிக்கொடுத்தப் பிறகே அதில் முத்தமிட்டான் விக்ரம்.
அதாவது தான் முத்தமிடப்போவதை அவளது உதடுகளுக்குத் தெரிவித்தப்பிறகே தனது காரியத்தில் இறங்கினான் விக்ரம்.
அவளிடம் இருந்து முத்தத்தடையும் பிறக்கவில்லை வேகத்தடையும் பிறக்கவில்லை.