சந்துரு, காரினை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கவனித்தான்.. எல்லோரின் கார்களும் வந்துவிட்டதை.. இரண்டு பெரிய அலுவகங்கள்.. ஒன்று ஷிவாவுடையது.. இல்லை.. தாத்தாவின் அலுவகலம். இன்னொன்று மற்றுமொரு கம்பெனி. அதனால், விசாலமான பார்க்கிங் ஏரியா கீழே. தீக்ஷி காரிலிருந்து இறங்க.. சந்துரு.. ஆராய்ந்து முடித்திருந்தான்.
சந்துரு “உன் அப்பாவிற்கு கூப்பிடு” என்றான்.
பெண்ணவள் அழைத்தாள். சுந்தரம் லிப்டின் அருகே நின்றார்.. பெண் மாப்பிள்ளையை பார்த்து புன்னகைத்தார். பின் மாப்பிள்ளையின் பக்கமாக நடந்தார்.. உள்ளே செல்லும் போது.. “மாப்பிள்ளை.. எதுவாக இருந்தாலும் பொறுமையாக பேசுங்கள்.. நான் எப்போதும் உங்கள்பக்கம்” என்றார் சின்ன குறிப்பாக. அவ்வளவுதான் சந்துரு நிமிர்ந்துக் கொண்டான். ஆராய்ச்சியாக சந்தேகத்திலேயே வந்தவன்.. கவனமானான்.
ஷிவா தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.. சந்துரு உள்ளே இருப்பதை பார்த்து “வாங்க சேகர்.. வா தீக்ஷி” என்றான் ஒட்டவைத்த புன்னகையோடு.
பெரியவர்கள் எல்லோரும் நலம் விசாரித்தனர், சந்துரு எல்லோருக்கும் பொறுமையாக பதில் சொன்னான். லேகா தீக்ஷி பேச தொடங்கிவிட்டனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் மீட்டிங் தொடங்கியது. முதலில் GM எல்லோரையும் வரவேற்று.. ஆனுவல் ரிப்போர்ட் வாசித்தார்.
சந்துரு, எதிர்பார்த்திருக்கவில்லை.. 260கோடி டர்ன்நோவர் செய்யும் கம்பெனி என. ஷிவா வந்த பிறகு.. இந்த வளர்ச்சி என அவன் கையில் கொடுக்கப்பட்டிருந்த அந்த கையேடு மூலம் தெரிந்தது. அருகில் க்ரிஷ் அமர்ந்து.. அவ்வபோது.. எப்படி விளம்பரம் செய்தான்.. மார்கெடிங் டீம் எப்படி என.. விவரித்துக் கொண்டிருந்தான்.
பெற்றவர்களின் முகம் கர்வமானது. லேகாவின் முகமும் மினுமினுத்து. கணவனை தவிர வேறு எங்கும் அவளின் பார்வை திரும்பவில்லை.
அடுத்து க்ரிஷ் வந்து பேச தொடங்கினான்.. இந்த பங்குதார்களின் மீட்டிங்கில்.. அடுத்த சேர்பர்சன்.. அதாவது அதிக பங்குகள் கொண்ட.. தங்கள் கம்பெனியின் டைரக்டர் நியமிக்க வேண்டும்.. அது குறித்து.. உங்கள் அருகில் வைக்கப்பட்டுள்ள.. குறிப்புகளை படித்து.. கையொப்பமிடுங்கள்.. என முடித்தான்.
இப்போது ஷிவா அமர்ந்த இடத்திலிருந்து மனையாளைதான் பார்த்தான்.. கண்களில் லேசான அதிர்வோடு புன்னகைத்தான், லேகாவும் புன்னகைத்தாள்.
ஷிவா “சேகர்.. ஜஸ்ட் எ மினிட்” என அழைத்தான். யாரும் நிமிரவில்லை.. சந்துரு மட்டும் நிமிர்ந்து பார்க்க.. ஷிவா “பையில் எடுத்து வாங்க” என்றான்.
சந்துரு அப்படியே சென்றான்.
ஷிவா, தன் அலுவலக அறைக்கு அழைத்து சென்றான். சந்துருவும் வந்து சேர்ந்தான். ஷிவா “நீங்க இதில் சைன் பண்ணுங்க” என சொல்லி ஒரு டாகுமென்ட் எடுத்து வைத்தான் டேபிளில். அத்தோடு அவனின் எதிரில் தன் இருக்கையில் அமர்ந்தான் ஷிவா.
நீண்டநேரமாகிற்று இருவரும் வெளிவரவில்லை. க்ரிஷ்.. எல்லோருக்கும் உண்பத்ற்கு ஸ்வீட் காரம் டீ என கொடுத்துக் கொண்டிருந்தான்.
லேகா எழுந்து என்ன ஆகிற்று என வெளியே வந்தாள்.. ஷிவாவின் அறையின் கதவை தட்டிவிட்டு.. உள்ளே வர.. இருவரும் நின்றுக் கொண்டே முறைத்துக் கொண்டிருந்தனர்.
சந்துரு திரும்பி பார்க்க அக்கா வந்தாள்.. சந்துரு அமர்ந்தான்.. ஷிவா இன்றும் அங்கும் நடக்க தொடங்கினான். இருவருக்கும் என்னவென தொடங்குவது என தெரியவில்லை.. சந்துருவிற்கு இப்போது ஒரு வாய்ஸ் நோட் வந்தது. “யெஸ்.. சந்துரு.. நீ அனுப்பினதை படித்தவரை.. உனக்கு அந்த வேலன் சிட்பண்ட்டில்.. 30 சதவீத பங்கினை உன் பெயரில் எழுதியிருக்கிறார்.. வெங்கடாசலம். அத்தோட.. அவரின் உயில் காப்பி அனுப்புங்க.. விவரம் முழுதாக தெரியும். வேறொரு டாகுமென்ட்.. பெரிய சொத்தினை உங்கள் பெயருக்கு மாற்றியிருக்கிறார் ஷிவா. தொடர்ந்து நேரில்தான் பேசணும்.. ப்ராசஸ் போயிகிட்டு இருக்கு..” என ஒரு செய்தி வந்தது.
சந்துரு ஸ்பீக்கரில் போட்டு கேட்டான்.. லேகாவிற்கு ஏதும் புரியவில்லை. அதிர்ந்து நின்றாள்.
சந்துரு அந்த டாகுமென்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.. கான்ப்ரன்ஸ் ஹால் வந்தான்.. கதவை திறக்க.. லாயெர், ஆடிட்டர்.. க்ரிஷ்.. வடிவேல்.. சுந்தரம்.. என எல்லோரும் நின்றிருந்தனர்.
சந்துரு தன் மாமனாரின் அருகில் வந்தான்.. சற்று அமைதி அங்கே “ம்.. என்ன மாமா நடக்குது இங்க..” என்றான் அமைதியான குரலில்.
வடிவேல் “என்ன சந்துரு” என்றார்.
சந்துரு “ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்க்குறீங்க” என்றான்.
வசந்தி லதா இருவருமே விழித்தனர்.
வடிவேல் “வாங்க மாப்பிள்ளை வாங்க.. பேசலாம்.” என சொல்லி.. சந்துருவின் கைபிடித்து அழைத்தனர்.. கிட்ட தட்ட இழுத்து சென்றார் எனலாம்.
சந்துரு வெளியே வந்தான்..
லேகா கணவனிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தாள்.. ஷிவா “இல்லடி, தாத்தா எழுதினார் சரி, அதுக்காக.. எங்கள் சொத்தினை.. அதைவிட கௌரவம்.. மரியாதை.. இதை விடமுடியுமா. சொல்லு? உனக்கு அதுக்கு ஈடாக.. இங்கே பார்.. பெரிய இடம், மாதம் வாடகை வரும் இடம்.. சென்னையில் மெயின் இடத்தில்.. இப்போ என்ன ஆகிட போகுது.. அவனுக்கு. முடியாது! கொடுக்க முடியாது!..” என்றான்.
மனையாள் அதிர்ந்து.. இங்கும் அங்கும் நிற்காமல் நடக்கும் கணவனை வெறித்துக் கொண்டிருந்தாள். என்ன கேட்பது.. என்ன சொல்லுவது.. என புரியவில்லை.
மீண்டும் ஷிவா “இந்த கம்பெனி எனக்கு வேணும்.. அவ்வளவுதான். இது என்னுடைய ப்ரைட். எல்லாம் எழுதிட்டா.. அப்படியே நடந்திடனுமா.. முடியாது!. அவனை கையெழுத்து போட சொல்லு.. என்னோட பங்கு சொத்தினையும் கொடுக்கிறேன்.. வேற என்ன வேணும்.. அவனுக்கு” என சொல்லி விரல்களில் சொடகிட்டவன்.. “ம் கேட்க்க சொல்லு கொடுக்கிறேன்.. ம்.. சொல்லு.. எனக்கு வேலன் சிட்பண்ட் முக்கியம்..” என கண்களில் வெறி.. தோள்களில் தினவு.. நெஞ்சில் உரம் கொண்டு.. உக்ரமாக நடந்துக் கொண்டிருந்தான் ஷிவபாலன்.
லேகாவிற்கு தலை சுற்றியது. கணவனின் உக்ரமுகத்தை பார்க்க முடியவில்லை. கைகள் நடுங்க.. அமர்ந்திருந்தாள் பெண்.
அப்போதுதான்.. வடிவேலு, சந்துரு இருவரும் உள்ளே வந்தனர்.
லேகா விழி விரித்தாள்.
வடிவேலு “மருமகளே லேகா.. இங்க பாரும்மா.. இந்த டாகுமென்ட் பாரும்மா.. எவ்வளவு பெரிய சொத்துன்னு பாரும்மா.. தம்பிகிட்ட சொல்லும்மா.. ஷிவா இதற்கெனவே படித்தான்.. இதற்காகவே அவனை வளர்த்தோம்ன்னு வைச்சிக்கவேன். இது எங்களோட மரியாதை ம்மா.. இல்ல, நம்மோட மரியாதைம்மா. இதை நாங்க எப்படி பங்கு போட முடியும். சொல்லு.. தீக்ஷிகே இதில் உரிமையில்லை. ஷிவாவின் வாழ்க்கையே இதுதான்.. நீ சொல்லும்மா.. ரமேஷ்கிட்ட பேசு.. அவர் எல்லாம் எடுத்து சொல்லுவார்.. யோசிச்சு முடிவெடுங்க.. ரெஜிஸ்டர் ஆபீசில் வந்து உடனே வேலையை முடித்து கொடுப்பாங்க.. சந்துரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும்” என.. விவரித்துக் கொண்டிருந்தார்.
லேகா ‘256 கோடி.. அதில் 30% பங்கு.. சந்துருவிற்கு. தாத்தா..’ என எண்ணிக் கொண்டே.. சேரில் அமர்ந்து பின்புறம் தலைசாய்த்தாள் பெண்.
ஆனால், தங்களின் உறவு சங்கலி இப்போது நினைவில் ஆடியது அவளுக்கு ‘அப்போ எல்லாம் ஒன்றுக்கொன்று.. பின்னட்டது. சந்துருவின் பெயரில்.. பங்கு இருக்கு, அதனால்.. அவனை தீக்ஷிக்கு கல்யாணம் செய்தாகிற்று. அப்போது என்னை எதுக்கு கல்யாணம் செய்துகிட்டார்.. சந்துருவை சம்மதிக்க வைக்க.. நான் அவரோடு சேர்ந்திருக்கணும்.. அதற்காக சந்துரு கையெழுத்திடுவான்.. அப்படியா! அப்போ எல்லாம் திட்டமிட்டு நடந்திருக்கு.. என் தம்பியை சரிகட்ட.. முன்பிருந்தே பிளான்.. இதில் ஷிவாவிற்கு என்னை.. திருமணம்.. பிடிச்சு இல்லை..’ என எண்ணிய நொடி தலை தெரித்தது பெண்ணுக்கு. கண்கள் ததும்ப ததும்ப கண்ணீர்.. எழுந்தாள்.. லேசாக தள்ளாடியது உடல்.. சந்துரு “லேகு..” என சொல்லி பிடித்தான்.
“சுடரி இருளில் மூழ்காதே..
வெளிதான் கதவை மூடாதே..
ஆறுகாலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே..”
ஷிவா ஏதும் உணராமல் அப்படியே அமர்ந்திருந்தான். கண்கள் மனையாளிடம்தான் இருந்தது. ஆனால், பேசவில்லை.