நாட்கள் அதன் போக்கில் அடிதடி மட்டும்தான் இல்லை என்பது போல் ஹாசிக்கும் ஹர்ஷாவிற்கும் சென்றது.
அவன் ஒரு வார்த்தை பேசினாள் அவனை மீண்டும் நான்கு நாட்களுக்கு வாயை திறக்க முடியாத படி எதாவது சொல்லி வாயை அடைக்க வைத்துவிடுவாள், அல்லது வேண்டுமென்றே எதாவது ஆகாத விஷயங்கள் செய்வது போல் போக்கு காட்டி நான் வளர்ந்த ஊர் என்ன? என்னோட கல்ச்சர் என்ன? அப்போ நான் அப்படிதான் இருப்பேன்” என்று சொல்லி அவன் திரு திருவென விழிப்பதையும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் வெளியே சொல்லவும் முடியாமல் அவளையும் எதுவும் சொல்லமுடியாமல் திணறுவதையும் கண்டு ரசிப்பாள்.
‘என்னடா வாழ்க்கை இது……’ என்றவன் மண்டையை பிய்த்து கொண்டாலும் அவள் என் மனைவி என் காதலி என்னும் நிலைக்கு வேகமாக முன்னேறி இருந்தான்.
ஆம் காதல்தான். தன்னவள் தன்னைவிட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். தன்னிடம் தவிர மற்றவர்களிடம் நன்றாக பேசுகிறாள் பெரியவர்களுக்கு மதிப்பு அழிக்கிறாள் முக்கியமாக குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் வளர்ந்த இடத்திற்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் தமிழ் பெண்ணாக இருந்த பெண்ணவள் மேல் அவனுக்கு பேரன்பு எழுந்தது.
அவளின் ஒவ்வொரு செய்கையும் எப்போதும் அவனுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்குவது என்னமோ உண்மை தான். அவளின் சேட்டைகளும் பொறுப்பும் அவனை அவள் வசம் கட்டி இழுத்துவிட்டது.
‘அப்போ இது லவ்தானே ஜெசின்னு’ என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து பின் தன் காதலை உணர்ந்து, அப்போ ஹாசிய நான் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டனா என்று அவனுக்குள் அவனே கேட்டு கொண்ட சமயம் அவன் முன் வந்து நின்றது மனசாட்சி.
“என்னப்பா லவ் வராது. என் முதல் காதல்…..மூத்த காதல்…… கடமை…. மத்தவங்களுக்கான வாழ்க்கை அப்படி இப்படின்னு சொன்ன இப்போ முழுசா நாலு மாசம்தான் ஆகுது அதுக்குள்ள அவளை லவ் பண்றேன்னு சொல்ற அப்போ உன்னோட காதல்……….”
‘இவன் வேற….’ என்று முணகிய ஹர்ஷா “ஆமா எல்லா காதலும் கல்யாணத்தில் முடியறது இல்ல. நான் லவ் பெயிலியர்தான் ஒத்துக்கறேன். அதுக்காக மறுபடியும் என் வாழ்க்கைல காதல் வர கூடாதா. நான் என் பொண்டாட்டிய லவ் பண்றேன். அது ஒன்னும் உலகமகா தப்பு இல்லையே.
எனக்கு தெரிஞ்சு அடுத்தவன் பொண்டாட்டிய லவ் பண்ணுனாதான் தப்பு அவனவன் அவனவன் பொண்டாட்டிய லவ் பண்ணுனா தப்பே இல்ல.
இன்னும் சொல்ல போனா லவ் பெயிலியர் ஆனவனை கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுங்க எல்லாம் குடுத்து வச்சவங்க தெரியுமா”
“எப்புடி” என்று இடுப்பில் கைவைத்து அவனை உக்கிரமாக பார்த்து கேட்ட மனசாட்சியிடம், “, ஏற்கனவே ஒரு பொண்ணு விட்டுட்டு போனதுனால, வர்ற பொண்ணை நல்லா பார்த்துக்கணும்னு முடிவெடுத்து அதை கரெக்ட்டா பாலோ பண்ணுவான் தெரியுமா”
மனசாட்சி, “இது என்னடா புது புரளியா இருக்கு. எவன்டா சொன்னது இதை”
“ம்ம்ம்….. ஹர்ஷாநந்தா சாமிகள் சொன்னாரு”
“அப்படி ஒரு பேரை…….” என்று தலையை சொரிந்த மனசாட்சி “அடேய் பாவி அது நீதானே”
“ஆமா நானேதான். போ அங்கிட்டு. ஐயாக்கு ரொமான்ஸ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி பாரு என் பார்ப்பாமன்ஸ”என்று தலையை ஸ்டைலாக கோதி கொண்டவன் ‘அடியே பொண்டாட்டி. இவ்ளோ நாள் உன்னோட கேம் ஆடுன,இனி இந்த மாமனோட கேமா பாரு. இந்தா வரேன்’ என்று சொல்லி கொண்டே அவள் ஆபிசிற்கு செல்ல, அவளோ கார்த்திக்குடன் பேசி கொண்டு இருந்தாள்.
தூரத்தில் இருந்தே தன்னவளை பார்த்து கொண்டிருந்தவன் மனதில் மயிலிறககாக வருடினாள் பெண்ணவள்.
வேலை விஷயமாக ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருக்கிறாள் என்பது அவள் புருவம் சுருக்கி பைலை பார்த்து பேசி கொண்டிருப்பதிலேயே தெரிய, அங்கிருந்த தூணில் சாய்ந்தவன் அவள் நெற்றி வகுட்டில் வைத்திருக்கும் பொட்டில் இருந்து இன்ச் இன்ச்சாக பார்த்து ரசிக்க துவங்கினான்.
காட்டன் டாப்பும் ஜீன்ஸும் அணிந்து முகத்தில் எந்த அலங்காரமும் இல்லாமல் இருந்தவள், அழகிய ஓவியமாக அவன் மனதில் பதிந்தாள்.’அழகிடி நீ. இதுக்கு முன்னாடி உன்னை பார்க்கும்போது வராத பீலிங் எல்லாம் இப்போ வருதே. அந்த பேனாவ கடிக்கற உதட்ட……
மனசாட்சி, “ஐயோ….ஐயோ….. தப்பு….. தப்பு……டேய் ஹர்ஷா நீ லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுனா போதுமா அவ லவ் பண்ண வேண்டாமா அவளுக்கு டைம் குடு”
ஹர்ஷா,“ஏன்டா நீ எதுக்குடா இங்க வந்த.”
“நான்தானே வரணும் கேள்வி கேட்க. டேய் நீ போற போக்கு பார்வை எதுவும் சரியில்ல. இங்க இருந்தே அந்த புள்ளைய சாப்பிடற மாதிரி பாக்குற இது எல்லாம் நல்லதுக்கு இல்ல.
அவ பக்கத்துல நீ போனாளே, உன்னை தூக்கி போட்டு மிதிக்காத குறையா பார்த்தே தொரத்துறா, இந்த லட்சணத்துல தொரை ரொமான்ஸ் பண்ண போறாராம். ஆள பாரு. அவளுக்கு கொஞ்சம் டைம் குடு. அதுதான் உனக்கு பாதுகாப்பு. ஏன் சொல்றேன்னா அவளுக்கு காராத்தே தெரியுமாம் பார்த்துக்க”
“டேய் என்ன? என்னை பயமுறுத்த பாக்குறியா. என்ன செஞ்சாலும் அசைய மாட்டேன்டா. அவளுக்கு கராத்தே தெரிஞ்சா தெரியட்டுமே அதுல என்ன தப்பு. நாங்க ரெண்டு பேரும் வேற இடத்துல சண்டை போட்டுக்கறோம்”
“அடேய் என்னடா என்கிட்ட இதெல்லாம் சொல்ற. நீ என்னமோ கனவு காணு ஆனா எனக்கென்னமோ அவ குத்து சண்டைல உன்னை குமுற போறான்னுதான் தோணுது”.
“அடேய் அப்போ அவளுக்கு என்னை பிடிக்காதுனு சொல்றியா”
“அப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யூகமா சொல்லலாம்”
“என்ன**** யூகம்”
“டேய் என்னடா பொசுக்குன்னு பேட் வர்ட் பேசுற”.
“அப்படிதான்டா பேசுவேன். எனக்கு என் பொண்டாட்டி வேணும். நான் அவளை லவ் பண்றேன். இனி வாழ்வோ சாவோ அவக்கூடதான் “.
“டேய் அவதான் ஒரு வருஷம் கழிச்சி அமெரிக்கா போயிருவேன்னு சொல்றாளே”
“அதெல்லாம் போக மாட்டா. என்கூடதான் இருப்பா. இனி அவ என்னைவிட்டு போகணும்னா. தலை பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போனாதான் உண்டு. அதுக்கும் நான் அவகூடவே போயிவேன். என்னைவிட்டு அவ எங்கயும் போக நான் விட மாட்டேன்” என்று அழுத்தமாக சொல்ல,
“டேய் நீ போற ஸ்பீட் பயமா இருக்கு. எங்க போய் முட்டிக்கிட்டு விழ போறேன்னு தெரியல.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ உன் வேலைய பாரு” என்று சொன்னவன் மேலும் அவள் மேல் இருக்கும் பார்வையை அகட்டாமல் “யாருக்காவது ஒருத்தருக்கு லவ் வந்தா போதும். அந்த இன்னொருத்தரையும் ஈஸியா காதல் வலைல விழ வச்சிடலாம் மனசாட்சி. இப்போ பாரு நான் என் செல்லத்த லவ் பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல. ஆனா பண்ணிட்டேன்ல. அது மாதிரி அவளுக்கும் என் மேல லவ் வரும், வர வைப்பேன்.
நாங்க ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா ரொம்ப நாளைக்கு வாழுவோம். அவ என்னோட பிரண்டா இருக்கும்போது எப்படி இருந்தமோ இப்போ கணவன் மனைவியா அதைவிட சந்தோஷமா இருப்போம்.
நாங்க ரெண்டு பேரும் நண்பர்களா ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம். கணவன் மனைவியா வாழும்போது இன்னும் நல்லா புரிஞ்சுப்போம். சோ…..எங்க வாழ்க்கை ரொம்ப ஹேப்பியா இருக்கும்.
அதுமட்டும் இல்ல. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன?அவளை பார்க்கும்போது முதல்ல வராத எண்ணமெல்லாம் இப்போ வருது தெரியுமா?” என்று சொன்னவன் குரலிலேயே அது என்ன மாதிரி எண்ணம் என்பதை புரிந்து கொண்ட மனசாட்சி அலற துவங்கியது.
“எதே எண்ணம் வருதா….. என்…என்…. என்னா எண்ணம் வருது “
“அது…. அது…. நீ சின்ன பையன் உன்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன்”
”என்னடா சொல்ற போற போக்கை பார்த்தா சீக்கிரம் உன் அம்மாவை ஆயாவாக்கிடுவ போல”
“ஆமா இனி அடுத்து அதுதானே. அந்த பாரின் பட்டர் பன்னு என்னை மாமா ஆக்குன மாதிரி அவனை நானும் மாமா ஆக்க வேண்டாமா”
(அட ரஞ்சன் தீயா வேல செஞ்சுருக்கான் போலையே)
“டேய் அவன்…….”
“சூ……போ நொய் நொய்னு பேசிக்கிட்டு. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வேமாசூ எல்லாம் இருக்காதா. ஒவ்வொரு வாட்டியும் உன்னை எவ்ளோ கேவலமா பேசி அடிக்காத குறைய தொறத்துறேன். அப்புறமும் என் முன்னாடி வந்து நிக்கிறியே அசிங்காம இல்ல.
போடா போ போய் வேற பொழப்பு எதாவது இருந்தா பாரு. நான் என் பொண்டாட்டிகிட்ட போறேன். அவளை….. அவளை……. “
“ம்கூம்….. உன் பேச்சு எல்லாம் என்கிட்டதான். அவகிட்ட போய் எதாவது பேசு. நீ சொன்னதை வச்சே உன்னை வாயடைக்க வச்சிருவா. இவ்ளோ அடி… வாங்கியும் பொண்டாட்டிகிட்ட போய் நிக்கிறியே உனக்கு அசிங்கமா இல்ல” என்று ஆக்ரோஷமாக கேட்ட மனசாட்சியிடம் கூலாக தோளை உளுக்கியவன் “இல்லை “ என்றுவிட்டு போக,
“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட, சரி எப்படியும் அவகிட்ட அசிங்கப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு வருவ அதுக்காக வெயிட் பண்றேன் என்றுவிட்டு காத்திருக்க துவங்கியது.
அவனோ “துப்புனாலும் தொடச்சு போட்டுட்டு அவகிட்டயேதான் திரும்பி போவேன் போடா…போடா…” என்றுவிட்டு காதல் தந்த துள்ளலில் முகம் முழுதும் சிரிப்பாக ஹாசி முன் போய் நின்றான்.
தூரத்தில் அவன் வரும்போதே கவனித்த ஹாசி ‘வந்துட்டான் கடங்காரன். இப்போ எதுக்கு இங்க வந்துருக்கான் அங்கிருந்த கார்த்திக்கை பார்த்து “ஹாய் மச்சான் உன் அக்காட்ட பேசுனது போதும். நான் அவளை வெளிய கூட்டிட்டு போலாம்னு இருக்கேன். அதனால நீ என்ன பண்ற மீதி இருக்க வேலைய பார்த்துக்கற. மாமா அக்காக்கூட அவுட்டிங் போயிட்டு வரேன்” என்று ஹாசி கையில் இருந்த பைலை பிடிங்கி அவன் கையில் குடுத்த ஹர்ஷா “செல்லா குட்டி போலாமாடி” என்க,
ஹாசிக்கோ கோவத்தில் முகம் சிவந்தது “ஹர்ஷா என்ன பண்ற. என் வேலைய மத்தவங்க பண்ணுனா எனக்கு பிடிக்காது”
“ஆமாடி என் ஜீரா பேபி. பொண்டாட்டியா புருஷன்கூட வெளிய வர்றது. கடலை போடறதும் உன் வேலைதான். அதுவும் நீ மட்டும் பண்ண வேண்டிய வேலை. அந்த வேலைய பார்க்கதான் உன்னை கூட்டிட்டு போறேன் வா” என்றவனை விசித்திரமாக பார்த்த ஹாசி,
“ஹர்ஷா வண்டில வரும்போது எங்கயும் விழுந்து தலைல அடி பட்டுருச்சா ஏன் இப்படி பேசிட்டு இருக்க. முதல்ல நீ வீட்டுக்கு போ எனக்கு வேலை இருக்கு” என்றவள் காதோரம் குனிந்தவன் “ஹேய் ஸ்வீட் ஜீரா ஒழுங்கா நான் கூப்பிடும்போதே வந்திரு அப்புறம் நீதான் வருத்தப்படுவ”
“நான் எதுக்கு வருத்தப்பட போறேன். ஒழுங்கா நீ போ. வந்துட்டான் வேலைய கெடுக்கறதுக்குன்னே” என்றவள் திட்டிவிட்டு கார்த்திக் வா நாம போய் ஒரு காபி குடிச்சுட்டு வந்து அடுத்த வேலைய பார்க்கலாம்” என்றுவிட்டு அவனை இழுத்து செல்ல,
கோவமாக செல்லும் பெண்ணவளை பார்த்து கொண்டு நின்றவன் ‘வேலைன்னு வந்துட்டா ரொம்ப சின்சியரா இருக்க.
வீட்ல அம்மா அப்பாகிட்ட ஜாலியாவும் இருக்க அதே சமயம் பொறுப்பா நடந்துக்கற. பாட்டிகிட்ட சண்டை போட்டுட்டு சுத்துற.உங்க அப்பாட்ட செல்லம் கொஞ்சுற, உன் அம்மாட்ட நல்ல புள்ள மாதிரி பம்முற.
ஆனா என்கிட்ட மட்டும் ஏட்டிக்கு போட்டி பேசி நான் கடுப்பாகிட்டனா இல்லையான்னு செக் பண்ணிட்டு அப்புறம் நிம்மதியா இருக்க. உன்னை ஏனோ இப்போ ரொம்ப பிடிக்குதுடி பொண்டாட்டி. சரியான வாலுடி நீ.
உனக்கேத்த ஜோடியா நானும் மாறனும் இல்ல உன்னோட ஆக்க்ஷன காமிச்சுட்ட இப்போ ஐயா ரியாக்ஷன் பாரு’ என்றவன் இப்போ பாரு’ என்றவன் நேராக ஆபிஸ் வாயிலை நோக்கி சென்றான்.
ஹாசி காபி குடித்து கொண்டிருக்க கார்த்திக் அவளிடம் ஏதோ பேச வருவதும் பின் அமைதியாக இருப்பதையும் கவனித்தவள் “என்ன கார்த்திக் என்கிட்ட என்ன சொல்ல நினைக்கற?”
“அது ஹாசி ஹர்ஷாகூட போயிருக்கலாம்ல, எவ்ளோ ஆசையா வந்து கூப்பிட்டாரு”
“அப்போ வேலைய யார் பார்க்கறது. என்னை இப்படி அனுப்பிட்டு நீ அப்படி உன் ஆளுக்கூட அவுட்டிங் போலாம்னு நினைச்சியா. கொலை பண்ணிடுவேன் உன்னை ஒழுங்கா வேலைய…….”
“ஹேய் ஹாசி…..” என்று பதறி கொண்டு ஓடி வந்தாள் ஹாசியுடன் பணிபுரியும் மற்றொரு பெண்.
“என்னடி எதுக்கு இப்படி ஓடி வர்ற”
“ம்ம்….. உன் புருஷன் பண்ற அநியாயத்தை அங்க வந்து பாரு”
“அநியாயமா……என்ன அநியாயம்”
“அதை நீயே போய் பாரு. உன் நல்லதுக்கு சொல்றேன் சீக்கிரம் வா. இல்லை வருத்தப்படுவ”
“என்னடா ஆளாளுக்கு இதையே சொல்லறீங்க. அப்படி என்ன பண்றான்” என்றவள் வேகமாக வந்து பார்க்க அவளவனோ ஆபிஸ் மெயின் கேட்டை இழுத்து மூடிவிட்டு நடுவில் சேர் போட்டு அமர்ந்திருந்தான்.
அவன் அருகில் ஓரமாக வாட்ச் மேன் மூக்கில் ரத்தம் வர கையை தாங்கி பிடித்து கொண்டு பீதியாக ஆபிஸ் உள்ளேயும் அவனையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்.
அவன் அருகில் வேகமாக சென்றவள் “ஹர்ஷா என்ன இது? ஏன் இங்க உட்கார்ந்து இருக்க. வெளிய போறவங்க எல்லாம் எப்படி போவாங்க. முதல்ல எந்திரி”
“முடியாது. என் பொண்டாட்டிய நான் வெளிய கூப்பிட்டேன் வரல. நானே வெளிய போகல. மத்தவன் எப்படி வெளிய போலாம் அதான் கேட்ட லாக் பண்ணிட்டேன். இனி எவனும் வெளிய போக முடியாதுல்ல,
“ஹாசி பாரின் கிளையண்ட்ஸ் எல்லாரும் மீட்டிங் முடிஞ்சு கிளம்புற நேரம். ஏற்கனவே டைம் ஆச்சு அவங்க எல்லாரும் இப்போ வந்துருவாங்க. அவரை கேட்ட ஓபன் பண்ண சொல்லு “ என்று கார்த்திக் சொல்ல,
தலையில் கை வைத்த ஹாசி “ஹர்ஷா விளையாடாத. ஒழுங்கா எந்திரி கேட்டை திறந்துவிடு”
“முடியாது. நீ வராம நான் எந்திரிக்க மாட்டேன்”
கார்த்திக், “ஹாசி அவர்தான் பிடிவாதமா இருக்காருல்ல. ப்ளீஸ் கிளம்பு மேக்சிமம் ஒர்க் முடிஞ்சுது இன்னும் கொஞ்சம்தானே நான் பார்த்துக்கறேன்” என்றவன் சொல்ல,
மற்றவர்களும் அவளை பீதியாக பார்த்து கொண்டு ஆபிஸ் உள்ளே ஒரு கண்ணை வைத்து கொண்டு நிற்க, பெருமூச்சுவிட்டவள் அவனை எரித்து விடுவது போல் பார்த்து “சரி வரேன். வா போகலாம்” என்க,
“அது……இது என் பொண்டாட்டிக்கு அழகு” என்று அவள் கன்னத்தை கிள்ளியவன் கையை தட்டிவிட்டவள் “செம்ம காண்டுல இருக்கேன். வெறுப்பேத்தாத” என்றுவிட்டு பேக்கை எடுக்க செல்ல,
ஓரமாக நின்ற வாட்ச் மேனை அருகில் அழைத்த ஹர்ஷா “பாரு தம்பி இனி யாரு என்னன்னு தெரியாம மேல கை வைக்க கூடாது புரியுதா.இந்தா.…” என்று ஐநூறு ரூபாய் நோட்டு நான்கை எடுத்து அவன் கையில் கொண்டுத்தவன் “ஹாஸ்பிடலுக்கு போ. இனி நான் எப்போ வந்தாலும் சேட்டை பண்ணாம எனக்கு ஒத்துழைக்கணும் என்ன?”
“சரிங்க அண்ணன்”
“ம்ம்ம்….. அந்த பயம் இருக்கட்டும். சரி அண்ணி வற்ரா. நான் கிளம்பறேன்” என்றவன் தன் வண்டியை நோக்கி செல்ல,
ஹாசி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
இப்போ எங்க கூட்டிட்டு போறான்னு தெரியலையே. அவ இருக்க கடுப்ப பார்த்தா ஹர்ஷாக்கு ஹெவியா ஏதோ சம்பவம் இருக்கு போல, அது என்னன்னுதான் தெரியல.ம்ம்ம்…. காத்திருந்து அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.