விடியல் 29

ஆள் உயரம் உடைய அந்த  பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை திறக்கும் நொடி நேரம் தாமதத்தை கூட பொருக்க பொருமையும் இல்லாமல்.

கேட் திறந்ததும் அந்த கார்கள் வருசையாக யாசோகர் மாளிகை என்று பெயர் பொறிக்க பட்டு இருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தது.  அந்த வீடு பெயருக்கு ஏற்ப மாளிகை போல் தான் வடிவமைத்திருந்தன.  கேட்டில் இருந்து அந்த வீட்டை காரில் அடைய 5நிமிடகள் ஆனது . வீட்டின் முன் நின்ற காரில் இருந்து யாசோகர் இறக்கி பக்கவாட்டாக பார்க்க அங்கே மற்றொரு கார் நிருத்த பட்டு இருந்தது. அதை பார்த்து தன் பீயே விடம் “தம்பி ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு வந்துருக்காங்க, இவனுங்கள எல்லாம் அப்பறமா வந்து பாக்க சொல்லு “ என்று மனு தர வந்திருப்பவர்களை அனுப்பி விட்டு தன் வீட்டுக்குள்  சிரித்த படி”சந்திர வாடா எப்படி இருக்க இப்போ தான் இந்த அப்பன் நியாபகம் வந்துச்சா “ என்று வர அங்கு மகிழனோ ஹோபாவில் தன் இரு பக்கமும் கைகள் வைத்து தலையை பின் பக்கமாக தோங்க போட்டு இருந்தான். அவனை பார்த்தவர் “ சந்திர என்ன ஆச்சி ஏன் இப்படி தலைய தொங்க போட்டு இருக்க “ என்றவாறு அருகில் அமர்ந்தவரை பார்த்து மகிழன் தன் முகத்தை சாதாரணமாக மாற்றி “ஒன்னும் இல்ல ப்பா கொஞ்சம் வேலை அதிகம் அதான் டயட் “

“நான் அப்பவே சொன்ன உனக்கு பதில வேலைய பாக்க ஒருத்தன போட்டுறலம் நீ வெறும் சைன் போட்டா போதும்னு  எங்க கேக்குற“

“அப்பா நானும் எத்தன வாட்டி சொல்ல எனக்கு ஏமாந்து போறதுனா  பிடிக்காதுனு இப்படி எவனையாவது வச்சி அவன் ஏமாத்தி சைன் வாங்கிடுவானோனு  என்னால பயந்தே இருக்க முடியாது ப்பா “

“டேய் உன்னை ஏமத்துறவன உயிரோட விட்டுறுவேனாடா “

“ஏமாத்திட்ட அப்பறம் அவன் எப்படி போனா என்ன எனக்கு நான் ஏமாற மாட்டன் அதுக்கு நான் எவனுக்கும்  வாய்ப்பு கொடுக்க போரதும் இல்லை “

“சரி என்னம்மோ சொல்ற விடு ,சரி வா சாப்டிட்டே பேசலாம் “

இருவரும் எதிர் எதிரே அமர்ந்து உண்டு கொண்டு இருக்க யசோகர் மகிழனை பார்த்து “ வயசு போகுதுடா எப்போ கல்யாணம் பண்ணிக்க போர “

அதற்கு தட்டை பார்த்து உண்ட படியே” சீக்கிரமாவே பண்ணிக்கிறன் ,என்னும் கொஞ்ச நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க “

என்று சொல்லி எழுந்து செல்லும் தன் மகனை பார்த்து “யாரையோ பாத்து வச்சிருக்கான் போல “ என்று மகிழ்ச்சியுடன் உண்டார்.

மேலே தன் அறைக்கு சென்ற மகிழன் கோபமாக அறையில் நடந்த படி “சுடர் நீ எனக்கு மட்டும் தான் “ என்று எப்படி சுடரை திருமண‌ம் செய்ய வேண்டும் என்று  யோசிக்க தொடங்கினான்.

மறு நாள் தீபா காலை 5 மணிக்கு எழுந்து வேலைக்கு கிளம்பி கீழே பாக்கியாவின் வீட்டு முன் நின்றால் நேற்று ரஞ்சனை பார்த்து விட்டு நேராக அவல் அலுவலகம் சென்று விட்டால் . அங்கு வேலை முடிந்து வீடு திரும்பினாள். இரவு நேரமாகியே வந்த தீபாவிற்க்கு பாக்கியாவை பார்த்து பேச இப்போதே நேரம் கிடைத்தது .

கதவை திறந்த பாக்கியா “என்ன நிலா இவ்வளோ சீக்கரமா கிளம்பிட்ட நான் சமையல் என்னும் செய்யலையே “

“அது பரவால க்கா  கீதா எப்படி இருக்க டாக்டர் என்ன சொன்னாங்க “

“டாக்டர் ஒன்னும் சொல்லலம்மா செக் பண்ணி பாத்துட்டு ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிடாங்க “

“கீதாவ இங்க வீட்டுல நடந்தது  ரஞ்சனை பத்தி யார் கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்லுங்க அக்கா “

“அதெல்லாம் சொல்ல மாட்டா ம்மா நீ காப்பி ஆவது குடிச்சிட்டு போயேன் ம்மா “

“இல்லை வேன அக்கா டைம் ஆச்சி , நீங்க கீதாவ பத்தரமா பாத்துகோங்க நான் பொய்டு வரேன் “ என்று ஸ்கூட்டியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

இங்கு குமரனுக்கு மகிழன் வந்து சென்றதில் இருந்தே  தூக்கமே இல்லை . குமரன் நினைவு எல்லாம் தீபா சுடர் இருவருக்கும்  ஒரு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து வைப்பது பற்றியே சுழன்றது. அதே யெசனையில் கட்டிலில் படுத்திருந்தான்.  அப்போது குமரனின் போன் ஒலிக்க எடுத்து பார்த்தான் ஆதி என்று பெயர் வர குமரன் ஒரு சிரிப்புடன் எடுத்து பேச தொடங்கினான்.

“ஹாலோ குமரன் அண்ணா உடம்பு இப்போ ஓகே வா”

“ம்ம்ம் இப்போ ஓகேடா நாளைள இருந்து வேலைக்கு போக ஸ்டார்ட் பண்ணிருவேன் , ஆமா நீ என்ன பண்ற ஸ்கூல்க்கு ரெடி ஆகல “

“என்னும் இல்லைன உங்க கிட்ட பேசிட்டு தான் கிளம்ப ஸ்டாட் பண்ணணும் “

“ என் மேல கோபமா இருக்கியாடா ஆதி “

“இல்லை ஹாப்பியா இருக்கேன் “

“டேய் ஆதி நீயே என்ன புரிஞ்சிகலனா எப்படிடா , அந்த மகிழன் எவ்ளோ பெரிய ஆளு அவன சாதரண இடத்துல வேலை பாக்குற என்னால என்னடா பண்ண முடியும் “

“அப்போ சுடர அவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்க போறிங்கள”

“ஆதி என்ன பேசுற , போயும் போயும் அவனுக்கு எங்க சுடர் கேக்குதா “

“நீங்க தான் மறப்போம் மண்ணிபோம்னு சொல்லிட்டு திரியிறீங்க “

“எனக்கும் அவனை எதாவது பண்ணணும் தான் இருக்கு ஆனா இப்போ இல்லை , மொதல தீபா சுடர் ரெண்டு பேருக்கும் நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டனா போதும்டா   அது அப்பறம் என்ன சீ.எம்மே வந்தாலும் அந்த மகிழன காப்பத்த முடியாதுடா “

“என்னது கல்யாணமா , அன இதுக்கு சுடர் ஒத்துகனுமே “

“அதெல்லாம் அவ எப்பவோ ஒத்துகிட்டா “

“என்ன சொல்றிங்க அண்ணா “ அதற்கு குமரன் சுடர் செய்து கொடுத்த சத்தியத்தை பற்றி சொல்ல ஷாக் ஆகி நின்று விட்டான் ஆதி .

“அதான் ஆதி ரெண்டு பேருக்கும் ஒன்னா முடிச்சிட்டா நல்லா இருக்கும்னு பாக்குறன்,  உனக்கு தெரிஞ்ச பையன் இருந்தா சொல்லுடா “

“ம்ம்ம் “ என்று ஆதிக்கு குறளே எழும்ப வில்லை , பின் குமரனே “ஆமா ஆதி நீ எப்போ மேரேஜ் பண்ணிக்க போர ,என்னும் நீ அவளையே நினைச்சிட்டு இருக்கியா”

“சீச்சீ  இல்லை அண்ணா “ என்று உடனே பதில் வந்தது

“அப்புறம் ஏன்டா இப்படி தணியாவே இருக்க போரியா “

“உக்கும் என்ன பத்தி எல்லாம் தெரிஞ்ச நீங்களே உங்க பொண்ண கட்டிகிரியானு கேக்காம நல்ல பையனா பாருன்னு சொல்றிங்க , அப்போ தெரியாதவன் என்ன சொல்லுவானோ“ இதை கேட்டு அதிர்ந்த குமரன்

“டேய் ஆதி உன்மையாவாடா “

“என்ன உன்மையாவா “

“இல்ல நீ இப்படி சொல்லுவனு எதிர் பாக்கலடா “

“சரி இப்போ சொல்லிட்டன்ல சொல்லுங்க எனக்கு பொண்ணு தருவீங்களா “

“கண்டிப்பாடா உன்ன மாதிரி கணவன் கிடைக்க எங்க தீபா தான் குடுத்து வைச்சிருக்கனும் “

“அய்யோ அண்ணா நிறுத்துங்க நான் பொண்ணு கேட்டது சுடர தீபாவ இல்லை “ என்று வேகமாக சொல்ல குமரன் பேச்சற்று இருந்தான் .

“அண்ணா , அண்ணா லைன்ல இருக்கீங்கள “ என்று பல முறை கத்திய பிண்ணேயே குமரன் “ஆ.. சொல்லு ஆதி “

“ என்ன சொல்ல நீங்க தான் சொல்லனும்,  எனக்கு சுடர கட்டி தருவீங்களா  மாட்டீங்களா“

“எனக்கு சந்தோஷம் தான் அன உனக்கு ஓகேவா ஆதி “

“என்ன ஓகேவா சுடருக்கு என்ன “

“இல்லை அவளுக்கு நடந்தத பக்கத்துல இருந்து பாத்தவன் நீ அதான் கேட்டேன் “

“பக்கத்துல இருந்து பாத்தது நாளா தான் சொல்றன் , சுடர் மாதிரி ஸ்டாங்கான பொண்ணு தான் எனக்கு வேணும்னு  , உங்களுக்கு விருப்பமானுலா கேட்க மாட்டேன் சுடர எனக்கு தான் கட்டி தரிங்க இது ஆடர் “ அதற்கு சிரித்த குமரன் “ சரிங்க பிரின்ஸ்சுப்பல் அன சுடர் இதுக்கு ஓகே சொல்றது கஷ்டம்டா “

“ ஏன் அண்ணா இப்படி சொல்றிங்க “

“அது சுடர்க்கு அவுங்க ஸ்கூல் பிரின்ஸ்சுப்பல்னா பயம் “

“ஓ… சரி அதுக்கு ஏன் என்னை கல்யாணம் பண்றது கஷ்டம் சொல்றிங்க “

“டேய் கிறுக்கா சுடர்க்கு இப்போ அவ வேலை பாக்குற ஸ்கூல் பிரின்ஸ்சுப்பல் ஆதினா பயம் , புரியுதாடா “

“ஓ…. புரியுது அண்ணா , அது சின்ன விசியம் நான் பாத்துக்குறன் , நீங்க பயப்படாதிங்க” அதற்கு சிரித்த குமரன் திடீர் என்று அமைதியாகி விட்டு “ஆதி வேந்தன் வந்து “ என பேச போக அதற்கு ஆதி “ அவன் எங்க பையன் ரொம்ப யோசிக்காதீங்க “ இதை கேட்டு மகிழ்ந்த குமரன் “ என்னும் கல்யாணம் முடியலடா “

“ நாளைக்கே முடிக்கலாம்னு சொன்னலும் எனக்கு ஓகே தான் “

“ஆதி ஸ்பீட கோரை சுடர் முன்னாடி தீபா இருக்க “

“சரி அண்ணா குறச்சிறேன், அப்புறம் அண்ணா இதை பத்தி நீங்க சுடர் கிட்ட சொல்லாதிங்க நானே சொல்லி ஓகே பண்ணிட்டு  உங்க கிட்ட சொல்றன் “

“சரிடா எதோ பண்ணு “

“அப்போ ஓகே அண்ணா பாய் “ என்று போனை வைத்த ஆதி சுடரை நினைத்து சிரித்த படி தன் தந்தை மற்றும் தாயின் புகைப்படம் பார்த்து “சீக்கிரமாவே இந்த வீட்டுக்கு உங்க பேரனையும் உங்க மருமகளையும் கூட்டிட்டு வரணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா அப்பா “ என்று படத்தின் கீழே விழுந்து எள புகைப்படத்தில் இருந்து ஆசிர்வதிப்பது போல பூக்கள் அவன் தலையில் விழ “தாங்யூ அம்மா அப்பா “ என்று பள்ளி செல்ல கிளம்பினான் .அங்கே இது எதுவும் தெரியாமல் சுடர் பள்ளி கிளம்பி சென்று கொண்டு இருந்தாள்.