விடியல் 26

தீபாவை அனுப்பி விட்டு பாக்கிய  அறைக்கு செல்ல அங்கே கீதா பாக்கியா செல்லும் போது எப்படி படுத்து இருந்தாளோ அப்படியே அசையாமல் இருக்க “என்ன இந்த பொண்ணு அசையாம தூங்குறா எப்பவும் சின்ன சத்தம் கேட்டாலும் எழுந்திரிச்சுருவா இப்ப என்னென்ன முழிக்கவும் காணோம் ஒரே இடத்துல வேற படுத்துருக்க “ என்று ஏதோ தோன்ற கீதாவை உலுக்கிய வாரு “அடியே கீதா எழுந்திரு டி இங்க என்ன ஆச்சி தெரியுமா “ என்று ஏதேதோ சொல்லி எழுப்பியும் எழுந்திரிக்க வில்லை பயந்த போன  பாக்கியா வேக வேகமாக தீபா வீட்டை நோக்கி சென்று தீபாவிடம் நடந்ததை கூற “ பதறாதீங்க க்கா என்னன்னு பாக்கலாம் “ என்று கீழே இறங்கி கீதாவிடம் சென்றன அங்கே கீதா பாக்கியா விட்டு சென்ற இடத்திலேயே எப்படி இருந்தாளோ அப்படியே வெறும் மூச்சு விடும் பொம்மை போல் இருக்க அதை பார்த்து பாக்கியா “ கீதா கீதாம்மா எழுந்திரு டி “ என எழுப்ப கீதாவிடம் அசைவே இல்லை பின் தீபா தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்து பின் கன்னத்தில் அறைந்தும் பார்த்து விட்டால் ஒரு பலனும் இல்லை பாக்கிய கீதாவை மடியில் போட்டு அழ தொடங்க தீபா “அக்கா நான் போய் ஆட்டோவ கூப்பிட்டு வரன் நம்ம ஆஸ்பிட்டல் போய்டலாம் “ என்று வேகமாக வெளியே ஓடி சென்றால்.

வெளியே ரஞ்சன் போன் பேசியவாரு பாக்கியா தீபாவை கூட்டி கொண்டு அவர் வீட்டுக்கு செல்வதை பார்த்தபடி எதாவது பிரச்சனையா இருக்குமோ என்று வெளியில் நின்ற வாரு “என்னன்னு கதவ தட்டி கேப்போமா “ என்று யோசிக்கும் போதே தீபா மீண்டும் கதவை திறந்து கொண்டு  வந்து பதற்றத்துடன் சாலையை இருபுறமும் பார்த்தவாறு நிர்க்க பின் ரஞ்சன் அங்கு நிற்பதை பார்த்து அவனிடம் சென்று “ரஞ்சன் கீதாக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பிட்டல் போகனும் எமர்ஜென்சி கொஞ்சம் ஆட்டோ கூட்டிட்டு வரிங்கள “ என்று பதற்றத்துடன் பேச

“யாரு கீதா என்ன ஆச்சு அவுங்களுக்கு தெளிவா சொல்லு”

“அச்சோ கீதா பாக்கிய அக்கா பொண்ணு நைட் நல்லா என் கூட பேசிட்டு தான் தூங்குனா அன இப்போ அவலை என்ன பண்ணாலும் முழிக்க மாட்டிக்குற ப்ளீஸ் ரஞ்சன் பேச டைம் இல்லை போய் ஆட்டோ புடிச்சிட்டு வாங்களேன் “ என கைகள் நடுங்க பேசியவளை பார்த்து “ நைட் நல்ல தான் இருந்த இப்போ எழுபுன முழிக்கலயா “ என்று ஏதோ யோசித்து பின் “ கீதாவ நான் பாக்கணும் “ என்று அவன் பாட்டுக்கு பாக்கியா வீட்டுக்குல் செல்ல தீபாவிற்கு ஒன்றும் புரியாமல் அவன் பின்னே சென்றான்.  உள்ளே சென்ற ரஞ்சன் கீதாவை பார்த்து ஒரு நிமிடம் ஷாக் ஆகி நின்று விட்டான் பின் விரைவாக அவள் அருகே சென்று அவள் கண்களை திறந்து பார்த்து நாடி துடிப்பையும் பார்த்து விட்டு தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்து “ டாக்டர் எமர்ஜென்சி நான் சென்ட் பண்ற லொகேசன்க்கு வாங்க….. “ என்று சிறிது இடைவேளை விட்டு “ ஆமா அதே கேஸ் தான் ஆனா ஏஜ் 15 குள்ள தான் இருக்கு சீக்கிரம் வாங்க “என்று போனை வைத்து விட்டு பாக்கியாவை நோக்கி “ பயப்படாதிங்க டாக்டர் வந்துட்டே இருக்காரு கீதாக்கு ஒன்னும் ஆகாது “ என்ற படி தன் கையில் இருக்கும் போனில் ஏதோ செய்தவாறு நிற்க இவை அனைத்தையும் பார்த்த தீபாவுக்கு தோன்றியது இதுவே “ இங்க எதோ பெருசா நடக்குது அது என்னன்னு இவனுக்கு தெரிஞ்சிருக்கு “ என்று எண்ணிய வாரு நின்றாள். டாக்டர் வந்து சேர இருபது நிமிடம் ஆனது அந்த இருபது நிமிடமும் பாக்கியா கீதாவின் தலையை தடவிய வாரு கீதாம்மா… என்று முனங்கி கொண்டே இருந்தார்.

ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் பெட்டியுடன் உள்ளே நுழைந்தார்.  வந்தவர் நேராக கீதாவிடம் சென்று முதலில் அவள் கண்ணில் வெளிச்சம் அடித்து பார்த்தார்,  பின் அவள் கையில் ஒரு  ஊசியை வைத்து குத்தி பார்த்தார் அப்போதும் அசைவில்லாமல் இருப்பதை பார்த்த அவர் ரஞ்சனை நோக்கி தலையை ஆம் என்பது போல ஆட்டி பின் அவர் கொண்டு வந்த பெட்டியில் இருந்து ஒரு மருந்தை எடுத்து அவள் கைகளில் போட்டு விட்டு பாக்கியாவை நோக்கி “ என்னும்  10 நிமிஷத்துல முழிச்சிருவாங்க “ என்று சொன்னதும் பாக்கியா அந்த டாக்டரை கை எடுத்து கும்பிட்டபடி “நன்றி ஐயா ரொம்ப நன்றி எனக்குன்னு என் பொண்ணு மட்டும் தான் அவள காப்பாத்தி கொடுத்திட்டிங்க ரொம்ப நன்றி ஐயா” என்று சொல்ல அவர் சிரித்த படி “ என் கடமைய  தான் செஞ்சேன் இதுக்கு ஏன் நன்றி , அப்புறம் உங்க பொண்ண கூட்டிட்டு வாங்க நாளைக்கு ஒரு சின்ன செக்கப் பண்ணிடலாம் மத்த விசியம் சார் சொல்லுவாங்க “ என்று கிளம்பி விட்டார்.

அந்த டாக்டர் சொன்னது போலவே சிறிது நேரத்தில் தன் தலையை பிடித்தபடி கண் திறந்தாள் கீதா . அவள் கண் திறந்ததும் கீதாவை பாக்கியா கட்டி கொண்டு அழுக அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை ஏன் தன்னை சுற்றி அனைவரும் நின்று கொண்டு இருக்கின்றன இந்த போலிஸ் இங்க என்ன பண்றாரு என்று குழப்பத்துடன் பார்க்க.

ரஞ்சன் பாக்கியாவை நோக்கி “உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும் “

உடனே பாக்கியா “சரி தம்பி “ என்ற படி வெளியில் இருந்து இரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு விட்டு இவர் கீதா அருகே போய் அவள் கைகளை பிடித்த படி அமர்ந்து விட்டார். ரஞ்சன் அங்கு இருக்கும் தீபாவை ஒரு கணம் பார்த்து விட்டு கீதாவை நோக்கி “உங்க நேம் என்ன “ என கேட்க இங்கு நடப்பதை பார்த்து பயந்த கீதா அருகில் இருந்த தீபாவை பார்க்க உடனே தீபா “கீதா இவர் என்னோட ஃபிரண்டு தான் நமக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க பயப்படாம அவர் கேக்குறதுக்கு பதில் சொல்லு “

அதற்கு தலையை ஆட்டிய படி ரஞ்சன் பக்கம் திரும்பி “ என் நேம் கீதா லட்சுமி எல்லாரும் கீதானு கூப்பிடு வாங்க நான் 9-த் படிக்கிறேன் அந்த ஸ்கூல்ல “ என்று வேகமாக ஒப்பித்து போதுமா என்பது போல ரஞ்சன் முகம் பார்க்க .

ரஞ்சன் இவள் சொன்னதில் தன் இருக்கம் தளர்ந்து சிரித்த படி “குட் கேர்ள்,  சரி நேத்து நைட் எதாவது மாத்திரை உன் ஃபிரண்ஸ் தந்தாங்கனு போட்டு தூங்குனியா “

“மாத்திரையா அதெல்லாம் போடல அன ..” என்று அவள் தயங்கி நிருத்த பாக்கிய கீதா முதுகில் ஒன்று போட்டபடி யார் எத கொடுத்தாலும் முழுங்கிருவியா டி “ என்ற பாக்கியாவை  தடுத்த தீபா அக்கா நீங்க அப்பறமா கூட அடிங்க இப்போ அவர் கீதா கிட்ட விசாரிக்கட்டும் அமைதிய இருங்க என்று அவள் அருகே நிறுத்தி வைத்து கொண்டால்.  ரஞ்சன் மீண்டும் “ கீதா மாத்திரை சாப்டலன வேற என்ன சாப்ட “

“அது சாக்லேட் கீரை சாக்லேட் அது சாப்டா  நல்ல படிப்பு வரும்னு சொன்னாங்க “

“யாரு அப்படி சொன்ன “

“ என் ஃபிரண்ஸ் தான் அது சாப்டு தான் அவுங்க நல்ல மார்க் வாங்குனாங்க நான் கூட அது சாப்டு போன டெஸ்ட்ல 80 மார்க் மேக்ஸ்ல வாங்குன நீங்க பயப்படற மாதிரி ஒன்னும் இல்ல சார் அது மூலிகை கீரை சாக்குலேட்டாம் மூளைக்கு நல்லது “ என பாடம் எடுத்த கீதாவின் தலையை பெரும்மூச்சி ஒன்று விட்ட படி வருடினான்

“ நீ சொன்ன மாதிரி அது நல்ல சாக்குலேட்டா இருந்தா நீ தூங்கும் போது உன் கையில ஒரு ஊசியை வச்சி குத்துனது கூட உன்னை உனற  விடாம தூங்க வைக்குதுனா அது எப்படி நல்ல விசியமா இருக்கும் “ என்று ரஞ்சன் சோன்ன உடன் தன் கைகளை தொட்டு பார்த்து பின்னறே அதன் வலி கண்டு முகத்தை சுருக்கி பின் அதிர்ந்து “அச்சோ  சார் அப்போ அது நல்ல சாக்கலேட் இல்லையா அது சாப்ட எனக்கு எதவது அகிடுமா “ என்று பயந்து கேட்க “ அது நீ இப்போ சொல்ல போர விஷியத்துல தான் சொல்ல முடியும்,  சொல்லுவியா “

“ம்ம்ம் சொல்றன் சார் “ என்று பயந்து வேகமாக தலையை ஆட்ட ரஞ்சன்

“இந்த சாக்லேட் எத்தனை நாளா நீ எடுத்துக்குற “

“போன  மேக்ஸ் எஸ்சாம் அப்போ சாப்டன் அது அப்பறம் இப்போ தான் ஒன்னு சாப்டறேன்”

“ஓ.. சரி இந்த சாக்லேட் உங்க க்ளேஸ்ல யார்லாம் சாப்புடுறா “

“எனக்கு தெரிஞ்சி ஒரு 30 பேர் இருக்கும் இதை முதல மதுனு ஒரு பொண்ணு தான் சொன்ன”

“அந்த பொண்ணுக்கு யார் சொன்ன “

“அது அவுங்க அண்ணானு சொன்ன “

“இந்த சாக்லேட் எங்க போய் வாங்குவிங்க “

“அது எங்க ஸ்கூல் தள்ளி போன ஒரு பேன்சி ஸ்டோர் இருக்கும் அங்க தான் ஒரு சாக்லேட் 100 ரூபாய்,  கீரை சாக்கலேட் கேட்ட தருவாங்க தெரியாதவங்க போன இல்லைனு சொல்லுவாங்க முதல அங்க வாங்குறவுங்க போய் இவலுக்கும் குடுங்கனு சொன்ன தான் தரு வாங்க “

ரஞ்சன் அதிர்ந்து “என்ன வெறும் 100ரூபா தானா “

“ஆமா சார் நானும் நிரைய சாக்லேட் வாங்கனும்னு காசு சேத்து வச்சி 10 வாங்கிருக்கேன் “

“மிச்ச சாக்கலேட் எங்க வச்சிருக்கிங்க”

“பேக் ல இருக்கு , அம்மா பேக் கொஞ்சம் எடுத்து வாயேன் “ பாக்கியாவும் கீதாவின் பேகை எடுத்து கொடுக்க அதிலிருந்து பச்சை கவர் போட்டு ஏதோ இலை ஒன்று வரைய பட்ட ஒன்பது சாக்லேட்டை ரஞ்சன் இடம் நீட்டினால் , அதை வாங்கி பத்தரபடுத்திய ரஞ்சன் கீதாவிடம் அந்த பேன்சி ஸ்டோர் கடையின் முகவரியையும் வாங்கி விட்டு ஒரு ஆஸ்பிட்டல் முகவரியையும் கொடுத்து விட்டு நாளை சென்று செக்கப் செய்ய சொன்னான். பாக்கியா ரஞ்சன் கைகளை பிடித்தபடி “நன்றி தம்பி “ என்று கண்கள் கலங்க கூறினார். பின் அங்கு இருந்து கிளம்பியவனை கீதா “சார்… “ என்று அழைத்து நிறுத்தினாள்.

“சார் என் ஃபிரண்ஸ் அவுங்களுக்கு ஏதாவது ஆகிருமா “

“பயப்படாத அது ஒன்னும் ஆகாது இனிமே உன் ஃப்ரண்ஸ்க்கு இந்த சாக்லேட் கிடைக்காது , அப்பறம் இத நல்ல நினைவு வச்சிக்கோ ஈசியா கிடைக்கிற எதுக்கும் மதிப்பு கிடையாது மேக்ஸ்ல மார்க் வாங்கணுமா நல்ல படிக்க டிரை பண்ணு அத விட்டுட்டு, இப்படி  இது தப்பு “ என்று சொல்லி செல்லும் ரஞ்சன்  ஒரு நிமிடம் கண் எடுக்காமல் பார்த்த தீபா பின் அவன் பின்னே ஓடி  சென்று “ரஞ்சன் ரஞ்சன் நில்லுங்க “ என்று வேகமாக அவன் அருகே செல்ல , ரஞ்சன் அதற்குள் வெளியே தன் பைக்கின் அருகே சென்று “ சொல்லுங்க தீபா “ என்று கேட்டான்.

“இங்க என்ன நடக்குது சொல்லுங்க ரஞ்சன் எனக்கு தெரிஞ்சாகனும் “

“அதை தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறிங்க தீப்ஸ்” என்று தன் பைக்கில் அமர்ந்த வாரு நக்கலாக கேட்க , அதை கண்டுக்காமல் தீபா “ நீங்க சொல்லாம போனீங்கன்னா உங்க ஸ்டேஷன் வரை வந்து கேட்பேன் “

“ஏன் தீபா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை உங்களை கொலை பண்ண அவன் ஆள அனுப்பியும் அடங்க மாட்டிங்களா” என்று தீபாவின் கண்களை பார்க்க , அதற்கு “ அப்போ ரம்யா கேஸ்க்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு“ என்று தன் ஒற்றை புருவம் தூக்கி கேட்க , ஒரு நிமிடம் ரஞ்சன் முகம் அதிர்ந்து பின் பழைய நிலை திரும்பி “ தீபா உங்கள “ என்று தன் தலை கோதிய வாரு இவன் மொபைல் எண்ணை கொடுத்து “ எங்க மீட் பண்ணலாம்னு மெசேஜ் பண்ற “ என்று கூறி பைக்கில் சென்று விட்டான்.