ஹர்ஷா காதில் புகை வராத குறையாக நின்றிருக்க, அவன் எதிரில் ஹாசியும் கார்த்திக்கும் பேசி சிரித்து கொண்டிருந்தனர்.
‘இவளுக்கு என்கிட்ட பேசுனா மட்டும்தான் சண்டை போட தோணும் போல, மத்தவங்ககிட்ட எல்லாம் நல்லாதான் பேசுறா’ என்று புகைந்தவன் தன் போனை எடுத்து அவளுக்கு அழைக்க, அவளோ போனை எடுத்து பார்த்து உதட்டை சுழித்தவள் கட் செய்து வைத்துவிட்டாள்.
அதை பார்த்து கொண்டிருந்தவனுக்கு சுறு சுறு என்று கோபம் ஏறியது.’உடம்பு முழுக்க கொழுப்பு. ஒருத்தன் கூப்பிடறானே என்னனு கேட்போம்னாவது தோணுதா, உதட்டை சுழிக்கறா ஒரு நாள் அந்த உதட்டை…..,’
“நீ ஹாசிகூட வாழ முடிவு பண்ணிட்டியா’ என்ற கேள்வியில் திடுகிட்டவன்,
‘இல்ல காதல் இல்லாம என்னால அவக்கூட சந்தோஷமா சேர்ந்து வாழ முடியாது’
‘அப்புறம் என்ன டேஷ்க்கு டா இப்போ அப்படி நினைச்ச’
‘இது என்ன வம்பா போச்சு வாழதான் டைம் வேணும். நினைக்க இல்ல. என் பொண்டாட்டி நான் எப்படி வேணா நினைப்பேன். ஏன் அன்னைக்கு அங்க ஊர்ல பார்க்கும் போது ஒரு மச்சம் பார்த்தேன். அது செம்மையா இருந்துச்சு. பார்க்க ஏன் இப்போ யோசிக்க டெம்டிங்கா இருக்கு. அது எல்லாம் நான் நினைப்பேன். ஏன்னா அவ என் பொண்டாட்டி.
வேற பொண்ணுங்கள அப்படி பார்த்து, தப்பு தப்பா யோசிச்சாதான் தப்பு. போடா பண்ணடா’ என்று திட்டியவனை நக்கலாக பார்த்த அவன் மனசாட்சி “ பாஸ் இன்னும் ஒரு கேள்வி கேட்கலாமா”
“வேண்டாம்னா விடவா போற”
“இல்ல”
“அப்புறம் என்ன கேட்டு தொலை”
“இல்ல….. இப்போ ஹாசி அந்த பையன்கூட பேசுறது பார்த்து காண்டு ஆகுறீங்களேஅது எதனால”
“எதனாலனா இது என்ன கேள்வி? என் பொண்டாட்டி என் கிட்ட பேசமா மத்தவங்க கிட்ட எல்லாம் நல்லா பேசுனா. அதுவும் சிரிச்சு சிரிச்சு பேசுனா பொறாமை வரதானே செய்யும்” என்றவன் சொல்ல,
“ஓஹோ அப்ப இன்னொரு பையன் உங்க பொண்டாட்டி பக்கத்துல நிக்கறதுனால, பேசுறதுனால உங்களுக்கு அந்த பொறாமை வரல. உங்க கிட்ட பேசறது இல்லைங்கறதால தான் அந்த பொறாமை அப்படித்தானே” என்று கேட்க,
அவனோ “ரெண்டும் ஒன்னு தானே” என்று குத்துமதிப்பாக தலையாட்டி வைக்க,
“சரி உங்க பொண்டாட்டி உங்ககூட நல்லா பேசுனா நீங்க பொறாமை பட மாட்டிங்க அப்படிதானே”
“ஆமா”
“ஓஹோ…. சரி அது இருக்கட்டும். இதே மாதிரி அர்ச்சனா ஒரு பையன் கிட்ட பேசிட்டு இருக்கும்போது உங்களுக்கு கோவம் வந்துச்சா, பொறாமை வந்துச்சா. அவளும்தானே உன்கூட நல்லா பேச மாட்டா.
நீதான் பொமேரியன் நாய் மாதிரி அவ பின்னாடி சுத்தி சுத்தி பேசுவ. அப்போ எல்லாம் வராத கோவம் இப்ப மட்டும் ஏன் ஹாசி விஷயத்துல வருது”
“அது….. அது……” என்று விழித்தவன் “ஹான் அவ என் பொண்டாட்டி அதனால கோபம் வருது” என்க,
அவனை கேவலமாக பார்த்தஅவன் மனசாட்சி “நீயெல்லாம் பொறந்ததே வேஸ்ட். பூமிக்கு பாரமா எதுக்கு இருக்க, போய் செத்து தொலைடா. வாழை பழ சோம்பேறிய நான் இப்போதான் பார்க்குறேன்.
ஒரு மனுஷனுக்கு வாழை பழத்தை குடுக்கலாம். இல்ல உரிச்சு கூட குடுக்கலாம். மென்னா அவன் வாயில துப்ப முடியும். லவ் பண்ற நாயி லவ் வந்ததுக்கு அப்புறம் வாழுவேன்னு சொல்லிட்டு திரியுது. இந்த பைத்தியத்துக்கு ஒரு வைத்தியம் பாருங்க ரைட்டரே” என்று புலம்ப,
(அவனுக்கு இப்போ புரிஞ்சிருந்திருந்தா இந்த கதைக்கு ஒரு எண்ட் கார்ட் போட்டு முடிச்சிருப்பனே. இவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கும் போல அதான் பையன் இப்படியே அரை மெண்டலா சுத்தறான். பார்த்துக்கலாம் விடு)
மனசாட்சி, “அதுவும் சரிதான் என்னை இப்படி மண்டைய பிச்சுக்க வச்சிருக்கான்ல அதுக்காகவே அவனை நல்லா வச்சு செய்ங்க. காதலுக்கும் நட்புக்கும் வித்தியாசம் தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு லூசு, உன்னை எல்லாம் வச்சு எங்க….” என்று நினைத்த மனசாட்சி,
மேலும் “சரி…..அப்புறம் அர்ச்சனா…..” என்று இழுக்க,
அதை பார்த்து முறைத்தவன் “அர்ச்சனாக்கு என்ன? நல்ல ஜாலியாதான் இருக்காங்க. அவங்க அம்மா,அவங்க அப்பா அவங்க பேமிலின்னு சந்தோஷமா இருக்குறாங்க. மூணாவது பர்சனபத்தி நம்ம எதுக்கு பேசணும்” என்றவன் உடனே கேட்க,
அவனை ஆச்சரியமாக பார்த்த மனசாட்சி அப்ப அர்ச்சனாவை உண்மையாகவே நீ விளக்கி வச்சுட்டியா” என்று கேட்க,
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் “ஹாசி கழுத்துல தாலி கட்டும்போதே அவளுக்கு உண்மையா இருக்கணும்னு முடிவு பண்ணி தான் கட்டுனேன். சோ…. உண்மையா இருப்பேன். எனக்கு என் ஹாசி மட்டும்தான்” என்றவன் உறுதியாக சொல்ல,
உடனே அவன் “அப்போ இது காதல்தானே…….” என்று கடைசியா புரிய வைக்க முயற்சிக்க,
இல்லை என்று மறுப்பாக தலையசைத்தவன் “காதலிக்கல கட்டுன தாலிக்கு உண்மையா இருக்கேன்” என்று சொல்ல,
மனசாட்சிக்கோ எங்கையாவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது “என்னமோ பண்ணி தொலைங்கடா, இனி உன்கிட்ட பேசுனா ஏன்டா நாயேன்னு கேளுடா. நான் இமய மழைக்கு போறேன்” என்று விட்டு செல்ல,
இவனோ “எங்கேயோ போய் தொலை. சும்மா வந்து நை…. நைன்னு பேசிகிட்டு” என்றுவிட்டு ஹாசியை பார்க்க,
அவளோ முதலில் நின்ற இடத்தில் இல்லை. எங்க போனா என்றவாறு திரும்பியவன் அவள் ஆபிஸ் வாயிலுக்கு செல்வதை பார்த்து “ச்ச ஓரமா நின்னதுல அவ நம்மை பார்க்கல போல, சரி எப்படியும் ஓலா புக் பண்ணி போகலாம்னு பார்ப்பா. நாமளே போய் வண்டிய பக்கத்துல நிப்பாட்டுவோம் என்ன ரியாக்ஷன் குடுக்கறான்னு பார்க்கலாம்’ என்று நினைத்தவன் வண்டியை எடுத்து கொண்டு திரும்ப மீண்டும் பார்த்த காட்சியில் கோபம் சுறு சுறுவென்று ஏற ஆக்சிலேட்டரை கோவமாக முறுக்கி வண்டியை எடுத்தான்.
கார்த்திக் தானும் சில பொருட்களை வாங்க வேண்டும் என்று சொன்னதால் இருவரும் சேர்ந்து போகலாம் என்று முடிவெடுத்து ஹாசி அவனுக்காக வெயிட் பண்ணி கொண்டிருந்தாள். கார்த்திக் வண்டியை நிப்பாட்டவும் அதில் ஏற செல்ல,
நொடி நேரத்தில் இருவருக்கும் இடையில் பைக்கை நிறுத்திய ஹர்ஷா ஆக்சிலேட்டரை முறுக்கியவாறு ஹாசியை பார்க்க,
அவளோ அவனை அலட்சியமாக பார்த்து “என்ன இங்க எதுக்கு வந்திருக்க?”
“ம்ம்…. என் பொண்டாட்டிய கூப்பிட்டு போக வந்துருக்கேன்” என்றவன் கார்த்திக்கை பார்த்தவாறு அழுத்தமாக சொல்ல,
“தேவையில்ல. கார்த்திக் மால்க்கு….”
ஹர்ஷா,“வண்டில ஏறு”
“நான்தான் சொல்றேன்ல. நான் கா……” என்றவள் சொல்ல, அவளை திரும்பி அவன் பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடி கொண்டவள் எதுவும் சொல்லாமல் வண்டியில் அமர்ந்து கொள்ள,
கார்த்திக்கை திரும்பி பார்த்த ஹர்ஷா “உன் அக்காவை கூட்டிட்டு வரணும்னு நினைச்சது தப்பில்ல மச்சான். அதான் மாமா நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன். சரியா பாய்….” என்றுவிட்டு விருட்டென்று அங்கிருந்து செல்ல,
“எதே….. அக்காவா…..” என்று இருவரும் சேர்ந்தார் போல் அதிர்ந்ததை எல்லாம் ஆணவன் கண்டுகொள்ளவே இல்லை.
ஹாசி, “ஹர்ஷா யாரை கேட்டு என்னை அவனுக்கு அக்கான்னு சொன்ன”
“யாரை கேட்கணும். அவன் உன் தம்பிதானே”
“இல்ல….அவனை நான் அப்படி எல்லாம் நினைக்கல” என்றவள் பட்டென்று சொல்ல,
“இது வரை நினைக்காட்டி பரவால்ல. இனி நினைச்சுக்கோ”
“முடியாது”
“ஏன் முடியாது”
“நீ அர்ச்சனாவை அக்காவா நினைப்பியா” என்றவள் ஆர்வமாக அவன் பதிலுக்கு காத்திருக்க,
அவனோ டக்கென்று “முடியாது” என்று சொல்லிவிட, ஹாசிக்கு கண்கள் கலங்கி விட்டது.
‘அப்போ இன்னும் அவ நினைப்புலதான் இருக்க. இந்த தாலிக்கு மதிப்பு குடுத்து எனக்கு வாழ்க்கை பிச்சை போட பாக்குற’ என்று கடுப்பாக நினைத்தவள் “உன்னால முடியாது இல்ல அப்போ என்னாலயும் கார்த்திக்கை தம்பியா பார்க்க முடியாது”
“இங்க பாரு ஹாசி……” என்றவன் ஏதோ கூற வர,
“என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு கேட்க விருப்பம் இல்ல” என்று முகத்திலடித்தார் போல் சொல்ல,
என்கிட்ட மட்டும் சிடு சிடுன்னேதான் பேசுவா. அவ கூட நான் பேசறதே இல்ல. அப்புறம் எதுக்கு அக்கான்னு கூப்பிட போறேன். அதை சொல்ல வந்தா காது குடுத்துக்கூட கேட்கமாட்டிக்கிறா’ என்று முணகி கொண்டே ஹர்ஷாவும் வண்டியை செலுத்தினான்.
இருவரும் மாலிற்குள் சென்று ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்க, சற்று நேரத்திலேயே மித்ராவும் ரஞ்சனும் வந்துவிட்டனர். நால்வரும் ஒன்றாக சேர்ந்து சுற்றி கொண்டிருந்தனர்.
ஹர்ஷா போனிட்டேயில் அசைய நடந்து செல்லும் தன்னவளை ரசித்து கொண்டு வந்தானே தவிர, அதிகம் பேசவில்லை.
ரஞ்சனும் மனைவிக்காக அவனை பார்த்து மென்மையாக சிரித்ததோடு சரி அதன் பின் தங்கையோடு பேசி கொண்டு வர, மித்ரா தனக்கு தேவையானது அனைத்தையும் தேடி தேடி வாங்கினாள்.
இரவு பத்து மணிக்குதான் அவர்களது பார்ச்சேஸ் முடிந்தது. சோர்ந்து போனவர்கள் இரவு உணவை ஹாட்டலில் முடித்து கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அன்றைய இரவு அலைந்த களைப்பினாலோ என்னவோ ஹாசி ஹர்ஷாவுடன் எந்த வம்பும் இழுக்காமல் படுத்துவிட்டாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, ரஞ்சனும் மித்ராவும் அமெரிக்கா கிளம்ப வேண்டிய நாளும் வந்து சேர்ந்தது.
மித்ரா தாய், தந்தையிடம் கண்ணீருடன் விடை பெற, ரஞ்சனோ தங்கை தலையில் கை வைத்தவன் “உன் மனசுக்கு என்ன தோணுதோ செய். நான் இருக்கேன். அதே சமயம் உன்னோட சந்தோஷமும் எனக்கு முக்கியம். முடிஞ்ச விஷயத்தை யோசிச்சு இப்போ நிகழ் கால அழகான வாழ்க்கையை இழக்க மாட்டேன்னு நம்பறேன். பாத்து பத்திரம்” என்றவன் சொல்ல,
அவனுக்கு வலி நிறைந்த சிரிப்பை குடுத்தவள் “நீயும் என்னோட வலிய முடிஞ்சு போனதுன்னு சொல்ற இல்ல” என்க,
அவள் கையை அழுத்தி பிடித்தவன் “அப்போ அந்த வலி உனக்கு வேண்டாம். இன்னும் அஞ்சு மாசத்துல இப்போ போயிக்கிட்டு இருக்க பிராஜெக்ட் முடிஞ்ச உடனே அங்க வந்துரு. உனக்கு புது லைப்….”
“கண்டிப்பா வருவேன். ஆனா உன் தங்கச்சியா மட்டும்தான் இருப்பேன். இன்னொரு லைப் அவன் இல்லாம இன்னொரு ஆள் கூட என்னால முடியாது”
“அப்போ அவனோட……”
“முடியல….. தெரியல. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். உடனே எல்லாம் சரி ஆகாது. என்னோட கோபம் போகணும். அப்போதான் உறுத்தல் இல்லாம என்னால அவனோட இருக்க முடியும். அதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு ஒன்னும் புரியல பார்ப்போம். ஆனா கண்டிப்பா அஞ்சு மாசம் கழிச்சு அங்க வருவேன்” என்றவள் சொல்ல,
தங்கையின் குழப்ப மனநிலையை புரிந்து கொண்ட ரஞ்சனும் “யோசிச்சு முடிவெடு” என்க,
“ம்ம்ம்……” என்றவளும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவை எடுத்துவிட்டாள்.
ஹர்ஷா,“மித்து இது நீ ஆசைப்பட்ட வாழ்க்கை. சந்தோஷமா இரு. அந்த பாரின் பன்னு எதுவும் பிரச்சனை பண்ணுனா ஒரு கால் பண்ணு. நான் வந்து ஜாம் தடவி பிரட்டி எடுத்துடறேன்.
தனியா ரொம்ப தூரம் போற, தெளிவா இருக்கணும். தைரியமா இருக்கணும் சரியா”
“ம்ம்ம்…. ம்ம்ம்….” என்று கண்ணீரோடு அண்ணன் சொன்னதுக்கு எல்லாம் தலையசைத்தவள் கிளம்பும் சமயம் “ஹர்ஷு……” என்று அணைத்து கொள்ள, அவனும் கண்ணீரோடு தங்கயை அணைத்து கொண்டான்.
மித்ரா ஆறு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லி வேலை விஷயமாக அமெரிக்கா சென்ற போதும் இப்படிதான் அண்ணன் தங்கை இருவரும் அழுது ஏர்போர்ட் வாசலை கண்ணீரால் நினைத்தனர். இப்போது தங்கை எப்போது வருவாள் என்றே தெரியாத நிலையில் என்ன முயன்றும் அவனுக்கும் கண்கள் கலங்கி கொண்டே இருந்தது.
ஒருவழியாக இருவரும் செல்வதற்கான விமான அழைப்பு வர அனைவரிடமும் சொல்லி கொண்டு கண்ணீரோடு கிளம்பினாள் மித்ரா.
தங்கை கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்து கொண்டிருந்த ஹர்ஷாவிற்கு மனது பாரமாக இருந்தது.
கையை கட்டியவாறு இறுக்கமான முகத்தோடு நின்றவன் அருகில் வந்த ஹாசி “ஹர்ஷா….” என்று அழைக்க,
அவளை வேகமாக இழுத்து அணைத்து கொண்டவன் “ ஹாசி மித்து எவ்ளோ வளர்ந்துட்டா இல்ல. இப்போதான் பிறந்து இங்க பாருப்பா குட்டி பாப்பா பிறந்திருக்குன்னு, பாட்டி என் கைல அவளை குடுத்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள கல்யாணம் ஆகி புருஷன் கூட போறா. நேத்து மாதிரி இருக்கு. தனியா போய் எப்படி சமாளிக்க போறாளோ தெரியல. கூடவே உன் நொண்ணன் அந்த பட்டர் பன்னு இருக்கானே சரியான சோம்பேறி.
ஒருவேளை கூட செய்யமாட்டான். அவனை எப்படி சமைளிச்சு வீடு ஆபிஸ்ன்னு இருக்க போறாளோ தெரியல” என்று தங்கையை பிரிந்த சோகத்தோடு சொல்ல,
ஹாசியோ அவனை தன்னில் இருந்து பிரித்து மேலும் கீழும் பார்த்தாள்.
மனைவி பார்ப்பது புரியாமல் விழித்த ஹர்ஷா “என்ன ஹாசி ஏன் அப்படி பாக்குற. ஓ…. தங்கச்சி மேல அம்புட்டு பாசமடா உனக்குன்னு பாக்குறியா?
யாருக்குதான் தங்கச்சி மேல பாசம் இருக்காது. ஏன் அண்ணன் தங்கச்சி பாசம் எல்லாம் உங்க குடும்பத்துக்குதான்னு மொத்த குத்தகை எடுத்து வச்சிருக்கீங்களா என்ன? எங்களுக்கும் பாசம் இருக்கும்மா” என்றவன் கூற,
அவளோ அசால்ட்டாக தோளை குலுக்கியவள் “நான் அதுக்காக எல்லாம் பார்க்கல. உன் தங்கச்சி நேத்துதான் பிறந்தான்னு சொன்னியே அப்போ எந்த கேப்புல என் அண்ணனை சைட் அடிச்சு ரெண்டும் ஜோடியா அமெரிக்காவ சுத்துனுச்சுங்கன்னு யோசிச்சேன் அதுமட்டும் இல்லாம……” என்றவள் கிண்டலாக அவனை பார்க்க,
அவனோ காண்டாக அவளை பார்த்து “என்னடி இப்படி சொல்லிட்ட….. எவ்ளோ எமோஷனல் ஆனா சீன் இது. என் தங்கச்சி என்னைவிட்டு போறான்னு நானே பீல் பண்ணிட்டு இருக்கேன் நீ காமெடி பண்ணிட்டு இருக்க” ,
“டேய் யாருடா காமெடி பண்ணுனது. கல்யாணம் ஆனா புருஷன் கூட பொண்டாட்டி போகதான் செய்வா. அதுக்காக பீல் பண்ண முடியுமா. அதுவும் நீ சொன்ன டைலாக் இருக்கு பாரு அதை தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுல பதிச்சுட்டு நீயும் பக்கத்துலயே உட்கார்ந்துக்கோ,
அங்க வர்றவங்க எல்லாம் அதை படிச்சு உங்க குடும்ப எமோஷன தெரிஞ்சுக்கட்டும். ஆள பாரு. நேத்துதான் பொறந்தாளாம் இன்னைக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்களாம்.
இல்ல நான் தெரியாமதான் கேட்குறேன் அவ பிறக்கும்போது உனக்கு எத்தன வயசு. என்ன படுச்சுட்டு இருந்த…. ஹான்…. நியாபகம் வந்துருச்சு ரெண்டாவது படிச்சுட்டு இருந்த.
இப்போவும் நீ என்ன ரெண்டாவதா படிக்கற. வளர்ந்த மாடாகி கல்யாணம் பண்ணிட்டல்ல, உனக்கே கல்யாணம் ஆகும்போது அவளுக்கு ஆகாதா என்ன? இப்போதான் எமோஷனல பிழிஞ்சி எடுக்கறானுங்க அண்ணனாம் ஆட்டு குட்டியாம் மூடிட்டு வந்து வண்டிய எடு. எனக்கு பசிக்குது. ஹோட்டலுக்கு போய் முதல்ல சாப்பிடணும்.” என்றவள் முன்னால் செல்ல,
அவனோ’இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசிட்டு போறா. எல்லாரும் வீட்ல இருக்க பொண்ணு கல்யாணம் ஆகி போனா இப்படிதானே சொல்லுவாங்க. அதைதானே நானும் சொன்னேன். இதை போய் உலகமகா குத்தம் போல சொல்றா’ என்று புலம்பி கொண்டே செல்ல,
“தலப்பாக்கட்டி பிரியாணி கடைல நிப்பாட்டு. சாப்பிட்டு நான் அப்படியே ஆபிஸ் போகணும் கொஞ்சம் ஒர்க் இருக்கு” என்றவள் சொல்லிவிட்டு அவ்வளவுதான் பேச்சுவார்த்தை என்பது போல் போனை நோண்ட துவங்க,
அவனோ ‘எல்லாம் என் தலையெழுத்து என்று புலம்பி கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான்.
இன்னும் ஹார்ஷா என்ன என்ன பாடு பட போகிறான் என்பதை அடுத்த அடுத்த எபியில் பார்க்கலாம்.