ரஞ்சனிடன் பேசி விட்டு தீபா ஆபீஸுக்கு போக விருப்பம் இல்லாமல் வீடு திரும்பினாள். அங்கே வீட்டு வாசலில் பாக்கியா அமர்ந்து டீ குடித்து கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த தீபாவை பார்த்து “வா நிலா இன்னைக்கு வேலை என்ன சீக்கிரம் முடிஞ்சிருச்சு போல “
“ஆமா அக்கா கொஞ்சம் ஒர்க் தான் இருந்துச்சி அதா வந்துட்டேன் “ என சோர்வான குறளில் பேச அதை பார்த்து
“உள்ள வா நிலா வந்து டீ குடிச்சிட்டு போ பாக்க சோர்வா இருக்க “ என்று நிலாவை கையோடு அழைத்து வந்து ஷோபாவில் அமர செய்து டீயை சூடு பண்ண சென்று விட்டார் . தீபா மாஸ்க் உடன் வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருக்கும் போது கீதா பள்ளியில் இருந்து வந்து தீபாவை பார்த்து “ ஐ அக்கா வந்துட்டீங்களா எப்போ வந்தீங்க உங்க மாமா வீட்டில இருந்து “
“ காலைல தான் விட்டுக்கு வந்த கீதா, ஆமா நீ என்ன கிளாஸ் படிக்கிற “
“எவ்வளவு சீக்கரமா கேட்டுடிங்க சூப்பர் போங்க “
“அது வந்து, சரி இப்போ கேட்டுடன்ல சொல்லு “
“ நான் நயன்த் படிக்கிறன் அக்கா“
“அப்போ அடுத்த வருசம் டென்த் சூப்பர் போ நல்ல படிப்பிய கீதா “
“ அதெல்லா ஓரளவு நல்ல தான் படிப்பேன் அக்கா அன இந்த மேக்ஸ் தான் வருவனா-ன்னு இருக்கு “
“ஏன் டி டேய்லி சம் போட்டு பரு புரியலன டீச்சர் இல்ல உன் பிரன்ஸ் கிட்ட கேளு “
“ அது என்னமோ அக்கா மத்த எல்லாம் படிச்சிரன் இந்த மேக்ஸ்-அ பாத்தாலே யாரோ தாலாட்டு பாடி தூங்க வைக்குற பீல் வருது “
“அது சரி அமா உன் எய்ம் என்ன “
“ என்னோட எய்ம் நான் லாயரா ஆகனும் அக்கா “ என பேசும் போது அங்கு வந்த பாக்கிய “ உனக்கு இருக்க வாய்க்கு கரைட்டா தான் எய்ம் வச்சிருக்க “ என்று தீபாவிற்கு டீயை கொடுக்க . தீபாவும் தன் மாஸ்க்கை கலட்டிவிட அதன் பின் அங்கே தீபா மண்டையை மட்டுமே உருட்ட செய்தால் .
பின் தீபா சென்ற உடன் கீதா “ நான் நிலா அக்கா ஓட சீக்ரட்டை கண்டுபிடிச்சிட்டன் “
“என்ன சீக்கு ரட்டு டி” என ஆர்வமாக கேட்க “ அம்மா அது சீக்ரட், திரும்பி சொல்லு “
“ஏண்டீ நீ படிக்க தான் ஸ்கூல் சேத்து விட்டுருக்கன் எனக்கு பாடம் நடத்த இல்லை என்னன்னு மட்டும் சொல்லு “
“ச்சு.. அது அந்த அக்கா மாஸ்க் இல்லன பேச மாட்டாகன்னு“
இதை கேட்டு பாக்கிய இது தானா என்பது போல முகத்தை வைத்து “ இது எனக்கு எப்பயோ தெரியும் வந்துட்ட ஏதோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி “ என்று வேலையை பார்க்க சென்று விட்டார் பாக்கியா.
மேலே தன் வீட்டுக்கு சென்ற தீபா குளித்து விட்டு இரவு பாக்கியா கொடுத்த உணவை உண்டு விட்டு உறங்க முயல அவளால் முயற்ச்சி மட்டுமே செய்ய முடிந்தது கண் மூடும் போது ரஞ்சன் காப்பி ஷாப்பில் நடந்து கொண்டதே நினைவு வர தூக்கம் பறந்து போனது. தீபாவிற்கு ரஞ்சனை சென்னைக்கு வரும் முன்பே தெரியும் அவன் இதற்கு முன்பு முடித்த கேஸை செய்தியில் பார்த்து அவனையே இன்ஸ்பெரேசன் ஆக வைத்து இருந்தால். இப்போது அவனின் இப்படி பட்ட நடவடிக்கையை அவளால் ஏற்க முடிய வில்லை. தூங்க முயன்று அதில் தோற்று பின் எழுந்து அவளிடம் இருந்த புத்தகத்தில் ஒன்றான இன்சைட் தி கிருமினல் மைண்ட் என்ற ஆங்கில புத்தகத்தை எடுத்து தன் பால்கனிக்கு சென்று அங்கு பொருத்த பட்டு இருந்த சிரிய லைட் வெளிச்சத்தில் படித்து கொண்டு இருந்தால். நேரம் சென்றது தெரியாமல் படித்து கொண்டு இருந்தவள் காதில் திடீர் என்று இவள் வீட்டு கதவை யாரோ திறக்க முயர்ச்சிக்கும் சத்தம் கேட்க தீபா காதுகள் கூர்மை பெற்று என்ன சத்தம் என்று உன்னிப்பாக கேட்க அதே சத்தம் யாரோ கதவை திறந்து உள்ளே வருவது தெரிந்து உடனே எழுந்து கைகள் தன்னை போல விளக்கை அணைத்து தீபா அங்கு இருந்த கார்டன் பின் ஒழிந்து கொண்டு உள்ளே எட்டி பார்த்தால் இருவர் முகம்மூடி அணிந்து வருவது தெரிந்தது உடனே தன் கையில் இருந்த போனை எடுத்து போலிஸை அழைத்து இருவர் வீட்டை உடைத்து வந்து இருப்பதை கூறி அட்ரஸையும் சொல்லிய பின் மெதுவாக மீண்டும் எட்டி பார்த்தாள் அங்கே ஒருவன் கதவிடமே நிற்க மற்றொருவன் தீபாவின் அறைக்குள் சென்று பார்த்து விட்டு “இங்கயும் அவ இல்லைட இந்த நைட் எங்க போய்ருப்பா “ என்று பேசிய வாரு அந்த பால்கனியை தாண்டி செல்ல போக அந்த சமயம் தீபா பால்கனியில் வைத்து இருந்த பூந்தொட்டியை கையில் எடுக்க அந்த சத்தம் கேட்டு ஒருவன் பால்கனி அருகே திரும்பி பார்த்து மற்றோருவனுக்கு வாயில் கைவைத்த சைகை செய்து விட்டு பொறுமையாக செல்ல தீபா கண் இமைக்கும் நேரத்தில் அவன் தலையில் அந்த தொட்டியை போட்டு உடைத்து இருந்தால். உடைத்த வேகத்தில் அவன் மயங்கி சரிய அதை பார்த்த மற்றொருவன் தீபாவை தாக்க வர , தீபா தன் கால்களால் ஓங்கி உதைத்து அவல் வீட்டில் இருந்த மற்றொரு காலி அறையில் அவனை தள்ளி பூட்டி விட்டால். பின் அவள் அறையில் இருந்து தன் மாஸ்க்கை அணிந்த வாறு வேளியே வந்து காவலர்களுக்காக காத்திருந்தால்.
அவர்களும் 5 நிமிடங்களில் வர அந்த சத்தத்தில் அந்த தெருவில் இருக்கும் அனைவரும் வந்து எட்டி பார்க்க பாக்கியாவும் சத்தம் கேட்டு வந்து பார்த்தாள் அங்கு தீபா ஒரு போலிஸிடம் ஏதோ பேசிக்கோண்டு இருக்க அவள் வீட்டில் இருந்து ஒருவனை தூக்கி கொண்டும் இன்னோருவனை இழுத்து கொண்டு வருவதை பார்த்து. “ நிலாம்மா என்ன ஆச்சி போலிஸ்-லாம் வந்துருக்கு “ என கேட்க , அதற்கு அந்த பெலிஸே “இரண்டு பேறு வீட்டை உடச்சிட்டு வந்துருக்காங்க அவனுங்கள மேடமே புடிச்சி தந்துடாங்க “ இதை கேட்டு பாக்கியா “ நீ தனி ஆள சமாலிச்சியா “ என்று வாயை பிளக்க அந்த போலிஸோ “ ஒரு நேரம் மாதிரி இன்னொரு நேரம் வராதும்மா இப்படி ஏதாவதுனா போலிஸ் வரவரை வெயிட் பண்ணுங்க முடிஞ்ச அளவு இன்வால்வ் ஆகாதிங்க அண்ட் மார்னிங் வந்து ஒரு கம்புலேயின்ட் எழுதி கொடுங்க “ என்று அவர் பேசி முடிக்கவும் அங்கு ரஞ்சன் பைக்கில் வரவும் சரியாக இருந்தது.
ரஞ்சனை பார்த்து அங்கு இருந்த போலீஸ் சல்யுட் வைக்க அதை ஒரு தலை அசைப்புடன் ஏற்று கொண்டு “என்ன ஆச்சி இங்க “ என்று கேட்க அதற்கு அவர் நடந்ததை கூற அதை கேட்டு தீபாவை நோக்கி ஒரு மெச்சும் பார்வையை வீச அதை ஒரு அலட்சிய தலை அசைப்புடன் தள்ளிவிட்டு பாக்கியவை நோக்கி பார்க்க , அவர் பயந்து நிற்பதை பார்த்து “ அக்கா பயப்படாதிங்க நான் காரத்தே சிலம்பம் லாம் இந்த வேலைல சேரும் போதே கத்து வச்சிருக்கன் அப்பறம் லைசன்ஸ் கன் கூட இருக்கு “ என்று ரஞ்சனை நோக்கி கையை சுடுவது போல வைத்து காட்ட . ரஞ்சன் மனதில்” விசியம் தெரிஞ்சதும் என்னமோ எதோனு பதறி வந்தன்ல என்ன சொல்லனும்டி “ என்று தீபா அருகே வந்து “இன்னைக்கு ஒரு நாள் உன் வீட்டுல தனியா தங்காத இவங்க கூட ஸ்டே பண்ணிக்கோ “
“அதெல்லாம் நான் பாத்துக்கறேன் நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க “ என்று பாக்கியாவையும் அழைத்து சென்று விட்டாள் . இவள் போவதை பார்த்த ரஞ்சன் “திமிரு திமிரு உடம்பு ஃபுல்ல திமிரு “ என்று பின் “ என்ன இவ வீட்டுலையும் இப்படி மாஸ்க் ஓட தான் திரிவால என்ன, நில்லு ஒரு நாள் அந்த மாஸ்க் பின்னாடி என்ன இருக்குனு பாக்குறேன் , ஆன டிரஸ் நல்லாதான் போட்டு இருக்கா டிசர்ட் பேண்ட் னு என்ன கொண்ட வேற போட்டு இருக்கா “ என்று சிரித்த ரஞ்சன் தலையில் தட்டியபடி “ ரஞ்ச கண்ண கண்டமேனிக்கு மேய விடதட “ என்று தீபா சென்ற திசையையே பார்க்க அப்போது பார்த்து அவன் போன் சிணுங்க அதை அட்டன் செய்து பேசிக்கோண்டு இருந்தான்.
பாக்கியாவை அவர் வீட்டு வாசலில் விட்டு விட்டு படி ஏற சென்ற தீபாவை அழைத்த பாக்கியா “ எனக்கு என்னமோ அந்த போலிஸ் தம்பி சொன்னது தான் சரியா படுது இன்னைக்கு நைட் மட்டுமாவது எங்க கூட தங்கும்மா “
“நான் பாத்துக்கறேன் அக்கா நீங்க பயப்படாம போங்க “ என்று அனுப்பிவிட்டு தன் வீட்டுக்கு சென்று உடைந்த கதவை பார்த்து விட்டு உள்ளே சிதறி இருக்கும் பூந்தொட்டியை பார்த்து “சாரி …. நான் நாளைக்கு உனக்கு ஒரு புது தொட்டி வாங்கி தரேன் “ என்று கிச்சனில் இருந்து ஒரு பக்கேட்டில் செடியை வைத்துவிட்டு கை கழுவி வர கதவு தட்டும் சத்தம் கேட்டது அதனுடன் “நிலாம்மா…..” என்று பாக்கியாவின் குறளும் பதற்றத்துடன் கேட்டது. வேகமாக சென்று வெளியே பார்க்க அங்கே பாக்கிய முகம் முழுக்க வியர்த்து பதட்டத்துடன் “நிலா , நிலா.. நம்ம கீதா கீத்தாக்கு என்னமோ ஆகிடுச்சு “ என்று கண்கள் கலங்க பேசினார்.