ரஞ்சன் தன் அலுவலக அறையில் இருக்கையில் சாய்ந்தவாரு எதிரில் நிற்கும் துரையையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். துரையோ முகத்தில் ஒளிரும் கர்வத்துடன் கலந்த புன்னகையை சிந்தியவாரு நின்று கொண்டு இருந்தான் . ரஞ்சனோ துரையை பார்த்து “ சொல்லுங்க சிங்கம் அந்த பேட்டரி பொண்ணோட கேஸ்ச நல்ல படிய முடிச்சிட்டிங்க ,அப்புறம் என்ன புரமோசன் தான் ஹாப்பி தான் என்ஜாய் என்ஜாய்”.
“தாங்யூ சார்”
“ஆமா இவனுங்கள எங்க இருந்து புடிச்சிட்டு வந்திங்க சிங்கம் “
“அச்சோ சார் எங்கயோ இருந்துலா புடிச்சிட்டு வரல சார் கஷ்ட பட்டு இன்வெஸ்டிகேசன் பண்ணி கண்டு பிடிச்சன் சார் “ என்று பதறி சொல்ல
“ஓ… அப்படி கஷ்டபட்டு புடிச்சிங்க அதவாது நான் வேலை வட்டி இல்லாம எதோ பொண்ணு பிண்ணாடி சுத்துறான் நீ மட்டும் தான் வேலை செய்றனு குத்தி காமிக்குற ”
என்று துரை மனதில் நினைத்ததை அப்படியே சொல்லும் ரஞ்சனை வாய் பிளந்து ஆ… என்று பார்க்க
“வாய மூடுங்க சிங்கம் கொசு போயிட பொது” என்று தன் நாற்காலியில் சுழன்ற வாரு இருக்க பின் சுதாரித்த துரை “நான் அப்படி சொல்லல சார் நீங்க வேர வேலைல பிசியா இருந்தீங்க அதன் நான் ஹெல்ப் பண்ணலாம்னு பாத்தன் சார்”
“நீ இவனுங்கள மூனு மாசம் கழிச்சி பாத்தாலும் அங்கேயே தான் சுத்திட்டு இருப்பாங்க சிங்கம், இவனுங்கள புடிச்சி கோர்ட் கிட்ட கொடுத்தாலும் போதையில தப்பு பண்ணிடாங்கனு கொண்டுபோய் ட்ரக் அடிக்சன்ல தான் போய் சேக்க போறாங்க இதுக்கு ஏன் நான் கஷ்டப்படனும் சிங்கம் “ என்று தன் காதில் ப்ளூ டூத் ஹெட் செட்டை மாட்டிக்கோண்டு பாடல் ஒன்றை ஒலிக்க விட்ட வாரு “என்னை தாலாட்ட வருவாளா…. “ என்று பாடிய வாரு கைகளால் துரையை போக சொன்னான்.
துரையும் மனதில் “இவருக்கு பொறாமை எங்க நான் பெரிய ஆளா ஆகிருவானோனு “ என்று கதவை நோக்கி சென்ற துரையை “சிங்கம் அப்படியே அந்த பிரஸ்க்கும் நீங்களே இன்டரவியும் கொடுத்துடுங்க எனக்கு வேற வேலை இருக்கு “ என்ற ரஜ்சனை பார்த்து சல்யுட் வைத்து சென்றான் .
செல்லும் துரையை ஒரு நிமிடம் பார்த்த ரஞ்சன் மீண்டும் “ என்னை தாலாட்ட வருவாளோ “என பாட தொடங்கினான்.
இதை கேட்டு கடுப்பாகிய துரை தன் தலையில் அடித்த வாரு அருகில் இருந்த ஏட்டிடம் “ இவருக்கும் சேத்து நாம வேலை பாக்க வேண்டியத இருக்கு இதுக்கு தான் சொல்லு வாங்க சின்ன பசங்க கிட்டலாம் பொறுப்பை தூக்கி ஒப்படைக்காதிங்கனு “
“சார் உங்களுக்கு அவர விட ஒரு வயசு தானே அதிகம்”
“ஆமா அன நான் எவ்வளவு பொறுப்பா இருக்கேன், எதோ இவரு வந்த புதுசுல ஆகா ஓகோ ன்னு சொன்னிங்க இப்போ பாருங்க இரண்டு நாளா என் கிட்ட ஓரே புலம்பல் எதோ ரோட்டுல பாத்த பொண்ணு மாதிரி இருக்க ஆன அது அவ இல்லைனு ,அதுவும் இல்லாம அந்த பொண்ண பாக்க அடிக்கடி போய்றாரு இப்படியே போன நல்ல இருக்கும் ஸ்டேஷன் “ என சொல்லி முடிக்கும் முன் “சிங்கம் , நான் தீப்ஸ போய் பாத்துட்டு வர ஸ்டேஷன பாத்துக்கோ “ என்று போகும் ரஞ்சனை துரை “சொல்லி முடிக்கல இதுல செல்ல பேரு வேற இதிலெல்லாம் எங்க போய் முடிய போதோ காதல் வந்த பித்தனும் தெளிவானு சொல்லி பாத்துருக்கேன் இங்க என்னன ரிவர்ஸ்ல நடக்குது “ என்று சென்று விட்டான்.
இங்கோ தீபா அந்த எவிடன்சை போட்டோ எடுத்து பாலாவிடம் சொல்லலாம் என்று என்னும் போது தான் “இதை எப்படி பால மிஸ் பண்ணிருப்பாரு கார்த்திக் மிஸ் பண்ணி இருந்தாலும் பாலா சார் எப்படி பண்ணாரு, ஒரு வேலை அவர் மிஸ் பண்ணி இருக்கலன அந்த எவிடன்ஸ வேனும்னு மறைச்சிருந்தா “ என்று யோசித்த தீபா பின் தன் மோபையிலை எடுத்து ஆன்லைனில் இருந்து ரஞ்சனின் அலுவலக எண்ணை எடுத்து கால் செய்தால்.
அதன் விளைவாக ஒரு காப்பி ஷாப்பில் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து இருந்தன. “சொல்லுங்க தீபா இம்பார்டன்-அ பேசனும் தனிய வாங்கனு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்த எப்படி “ என்று முகத்தில் தோன்றிய புன்னகையுடன் பேச. அதற்கு தீபா தன் மாஸ்கை சரி செய்தவாரு “அந்த பேக்டரி ரேப் கேஸ் பத்தி பேசனும் “
“அந்த கேஸ் ரிப்போர்ட்ட தான் சப்மீட் பண்ணிடீங்களே அண்ட் தப்பு பண்ணவனையும் அரஸ்ட் பண்ணியாச்சு கேஸ் ஓவர் “ அதை கேட்டு சாக் ஆன தீபா “ யார் காரணம் “
“அது அங்கயே சுத்திட்டு இருந்த நாலு ட்ரக் அடிட்ஸ் போதையில பண்ணிடாங்கலாம் “ என்று நக்கலாக சொல்ல
“ ரஞ்சன் சார் இந்த கேஸ் பார்த்த இவனுங்க ட்ரக்ல தெரியாம பண்ண மாதிரி எனக்கு தோனல “ இதை கேட்டு தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “ என்ன சொல்ல வரிங்க தீபா “
தீபா கண்டுபிடித்த ஆதாரத்தை காட்ட அதை பார்த்து குறைந்த பட்சம் அதிர்ச்சி ஆவது அடைவான் என்று எதிர்பார்த்த தீபாவை ஏமாற்றமே அடைந்தது. “சரி இந்த மினிஸ்டர்-அ மட்டும் வச்சிட்டு என்ன செய்ய சொல்றீங்க தமிழ்நாட்டுல மொத்தம் எத்தன மினிஸ்டர்ஸ் பதவி இருக்குனு தெரியுமா தீபா “
“நீங்க தெரிஞ்சி பேசுறிங்கள இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி பேசுறிங்கள “
“தெரிஞ்சிக்க பேசுரன் தீபா, உங்களுக்கு தெரிஞ்ச கொஞ்சம் சொல்லுங்க கேட்போம் “
“இறந்து போன பொண்ணு பேரு ரம்ய இவங்க ஒரு ஜார்னலிஸ்ட் அண்ட் இவங்க கடைசியா பேட்டி எடுத்தது சீப் மினிஸ்டர் யசோகர , இப்பவுமா உங்களுக்கு புரியல” என்று ரஞ்சன் கண்களை பார்த்து பின் எதோ புரிய
“ வெயிட் உங்களுக்கு இந்த எவிடென்ஸ் எல்லாமே முன்னாடியே தெரியும் கரைட் “ அதற்கு ரஞ்சன் தன் கைகளை கட்டிய வாரு “ இப்போ தான் மூளை வேலை செய்யுது போல “ என்று சிரித்தவன் மீது கோபம் அதிகம் ஆக “ உங்க பழைய கேஸ் பாத்துட்டு நல்லவர இருப்பிங்கனு நினைச்சி வந்த பரு என்ன சொல்லனும் , கவர்மென்ட் மக்களுக்கு வேலை செய்ய தான் உங்களுக்கு சம்பளம் தருது இப்படி தப்பு பண்றவன் கூட நிக்க இல்லை “ என்று தன் கைகளை இறுக்கி பெரும்மூச்சி ஒன்று விட்டு பின் “ நீங்க இல்லன என்ன நான் கோட்க்கு போவேன் “ என்று எழுந்திரித்த தீபாவின் கையை பிடித்து “தீப்ஸ் என்ன எதும் சாம்டாம போறீங்க “ என்று ஒற்றை கண்ணை அடிக்க , அதை பார்த்து கோபம் ஆன தீபா கைகளை உருவ முயன்ற படி “ ரஞ்சன் கைய விடுங்க “ தீபா சொன்னதை கவனிக்காத வாரு “ தீப்ஸ் அட்லீஸ்ட் சாப்பிங் அவாது போலாமே “
“இப்போ கைய விடுறிங்கள இல்லையா “ என்று பற்களை கடித்தவாரு பேச பின்பே கையை விட்டான் ரஞ்சன் தீபா திருப்பி பார்க்காமல் செல்ல அப்போதும் “ நெஸ்ட் டைம் நான் சொல்ற ப்ளேஸ்ல மீட் பண்ணலாம் தீப்ஸ் “ என கத்தி சொல்ல அதை காதில் வாங்காத வாரு சென்று விட்டால் தீபா . அவள் செல்வதையே சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு பின் ஸ்டேஷன் சென்றான்.
ஸ்டேஷன் வந்த ரஞ்சனை பார்த்த துரை “ என்ன போகும் போது பிரகாசமா போண சார் வரும் போது வாடி வதங்கி வராங்க “ என்று அருகில் சென்று “சார் ..” என்று அழைக்க , உடனே ரஞ்சன் “உள்ள வாங்க சிங்கம் பேசனும் “ என்று தன் அலுவலக அறைக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்து “சிங்கம் நீங்க லவ் மேரேஜ் தான “ அதற்கு தன் பற்களை காட்டிய படி “ ஆமா சார் “
“ எப்படி சிங்கம் “
“எது எப்படி சார்”
“அந்த லவ் தான் அது என்னமோ லவ்க்கு எனக்கு செட் ஆகாது போல “ என சோகமாக முகத்தை வைக்க
“ ஏன் சார் இப்படி சொல்றிங்க என்ன ஆச்சினு சொல்லுங்க நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ற “ இதை கேட்டதும் ஒரு நிமிடம் துரையின் முகத்தை பார்த்து பின் காப்பி ஹாப்பில் நடந்ததை சொல்லி முடிக்க.
அதை கேட்டு அதிர்ந்த துரை “ நீங்கல சார் இப்படி நார்த் சைட் உங்கள அப்படி பறாட்டுறாங்க நீங்க என்னனா “
“க்கும்… பெரிய பாராட்டு அதை வச்சி என்ன பண்ண ஒரு காசுக்கு புரோஜினம் கிடையாது. நான் நார்த்ல நல்ல வர்க் பண்ண காரணமே சென்னைக்கு போஸ்டிங் வாங்கதான், இல்லன நான் என் அப்படி கஷ்டபட போறேன் “
இதை கேட்டு சாக் ஆகி நின்ற துரையை கண்டுக்காமல் மேலும் “ நமக்கு வளர்ந்த ஊர்ல போஸ்டிங் வேனும் மத்த படி இந்த என்கவுன்டர் சேசிங் அதுல தப்பு தப்பு “
“ சும்மா ஸ்டாட்டிங் வர்க் பண்ற மாதிரி சீன் போட்ட தானே மரியாதை இருக்கும் “
இதை கேட்டு தலை சுற்ற நின்ற துரையை பார்த்து “ உன்னை பாத்த லவ்க்கு ஐடிய தர மாதிரி இல்ல நானே கால்ல பேசி ஓகே பண்ணிறன் “ என்று தீபாவின் நம்பருக்கு ஏதோ மெசேஜ் அனுப்பி கொண்டு இருந்தான் . துரை ரஞ்சனை “ நீங்க நல்லவர இல்ல கெட்டவர “ என்று மனதில் கேட்டுக்கொண்டு சென்றான்.