சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது அருகில் இருக்கும் எதுவும் தெரியவில்லை கால்கள் எதிலோ மாட்டியது போல இருக்க குனிந்து கீழே பார்த்தால் தீபா. கருப்பாக தண்ணீரும் இல்லாமல் சேறும் இல்லாமல் குட்டை போல இருந்தது அதில் தீபாவின் கால்கள் நன்றாக மாட்டியிருந்தது எவ்வளவு முயன்றும் அவளால் நகர முடியவில்லை இவள் நகர நகர அந்த குழியின் ஆழம் சென்று கொண்டு இருந்தாள்.
அப்போது எங்கு இருந்தோ “அக்கா … அக்கா காப்பாத்து அக்கா இவன் கிட்ட இருந்து என்னை காப்பாத்து “ என்று தூரத்தில் இருந்து சுடர் இவளை நோக்கி ஓடி வர , தீபா அந்த குழியில் இருந்து வெளி ஏற முயற்ச்சி செய்தவாறு “சுடர் இங்க குழி இருக்கு வராத “ என்று கத்த எங்கிருந்தோ வந்த மகிழன் ஓடி வந்து சுடரை வாய் மூடி தூக்கி செல்ல. தீபா அந்த குழியில் மாட்டிய படி “ சுடர்.. சுடர் அவள விடுடா… சுடர் …” என்று கத்தி கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
தீபா மயங்கி சரிந்தபின் மூவரும் சேர்ந்து அவளை எழுப்ப பார்க்க தீபா அசைய கூட இல்லை முகத்தில் தண்ணீர் தெளிக்க அப்போதும் பயன் இல்லை இதை பார்த்து பயந்த சுடர் தீபாவை மடியில் வைத்த படி “அக்கா அக்கா….” என்று அழுக பின்பே தீபா லேசாக அசைந்து எதையோ முனங்க சுடர் உடனே “அக்கா அக்கா நான் பேசுறது கேட்குதா “ என்று அவள் கன்னம் தட்ட “சுடர் …” என்று கத்திய வாரு எழுந்து அமர்ந்தாள். பின் சுற்றி பார்த்து சுடரை பார்த்ததும் அவளை அனைத்து “ சுடர் உனக்கு ஒன்னும் இல்லல, எங்க அந்த மகிழன் அவன விட மாட்டன் “ என புலம்பி சுடரின் முகம் கை கால் என்று பார்க்க சொன்னதயே திருப்பி திருப்பி சொல்ல அங்கு இருந்த அனைவருக்கும் தீபாவை அமைதி படுத்தவே வெகு நேரம் ஆனது பின் தீபா இயல்புக்கு வந்ததும்.
குமரன் “ தீபா நீ அவன அறையும் போது நீ சொன்னது…”
“எல்லாம் உண்மை தான் “ என்று சுடர் கூறியதை சொல்ல அதை கேட்டு அதிர்ந்த குமரன் “ இத ஏன் சுடர் எங்க கிட்ட முன்னாடியே சொல்லல “
“அது மாமா… அப்போ எனக்கு எப்படி சொல்ல தெரியல “
“சரி உங்க மாமா கிட்ட சொல்லல அந்த டாக்டர் கிட்டையாவது சொல்லிருக்களாம் ஏன் அவுங்க கிட்டையும் சொல்லல “ என்று ஆதி கோபத்துடன் “நீ அப்போவே சொல்லிருந்த அவன் இந்நேரம் ஜெயில்ல இருந்திருப்பான் “
“அது அவன் மாமா அக்காவ எதாவது பண்ணிருவனு மிரட்டுனா “ என்று தலை குனிந்த சுடரை பார்த்து
“உடனே நி பயந்து அமைதிய இருந்துட்ட “ குமரன் சுடர் தீபா இருவரையும் பார்த்து “நடந்ததை மாத்த முடியாது ஆன அதை மறந்துட்டு அதை விட்டு தள்ளி போகலாம் அதுவும் இல்லாம அவ யூத் மினிஸ்டர் நம்ம எட்டாத தூரம் அவனா திருப்பி வந்த கோட்ல கேஸ் போடலாம் அத விட்டுட்டு தீபா நீ இன்னைக்கு அவன அடிச்ச மாதிரி எதாவது பண்ணி வைக்காத “
இதை கேட்ட ஆதி “ அண்ணா என்ன சொல்றிங்க இவ்ளோ பண்ண அவன மண்ணிக்க சொல்றிங்கள “
“மறக்க சொல்றன் எனக்கு என் குடும்பம் முக்கியம் “
“ஏதோ பண்ணுங்க எனக்கு ஸ்கூல்க்கு டைம் ஆச்சி நான் போறேன் உடம்ப பாத்துக்கோங்க, சுடர் நாளைக்கு ஸ்கூல்ல பாக்கலாம், தீபா நீங்க அவன அடிச்ச அடி சூப்பர், “ என்று கிளம்பியவனின் முதுகை வெரித்து இருந்த சுடரை தீபா உலுக்க “அ.. சொல்லுக்க “ என சுறத்தே இல்லாமல் பேச
“போய் வேந்தன எழுப்பு டைம் ஆகுது பாரு “ என்றதும் எழுந்திருக்க போனவளை பார்த்து “ அவன் உன்ன திருப்பி மீட் பண்ண வந்த போய் தனித பேசாத சுடர் என் கிட்ட சொல்லு “
“ம்ம்ம்..” என எதையோ யோசித்து கொண்டே சென்று விட்டால்.
அன்று மதியமே தீபாவும் வேலை இருப்பதாக கூறி அவள் வீட்டிற்கு ஆட்டோ வில் சென்றால்.
மகிழனை எதாவது பண்ண வேண்டும் எப்படி என்று யோசித்த படியே ஆட்டோவில் இருந்து இறங்கி வழியில் இவளையே அதிர்ந்து பார்த்து நிற்க்கும் பாக்கியாவையும் ஒரு தலை அசைப்புடன் கடந்து சென்று விட்டாள்.
கீழே பாக்கியா “ இது நம்ம நிலாவ என்ன மாஸ்க் இல்லாம ஆட்டோல வந்து இறங்குறா “ என வாயை பிளந்து பார்த்தார். மகிழனின் சிந்தனையில் தான் மாஸ்க் போடவில்லை என்பதை மறந்தாள் நம் தீப நிலா.
மாடி ஏறிய நிலா அங்கும் இங்கும் நடந்த வாரு இருக்க அப்போது தெரியாமல் மேசையின் மீது மோதி அதில் இருந்த ஃபைல் கீழே சிதறி விழுந்தது.
அது அந்த பெண்ணின் கொலை சம்பவ இடத்தில் சேகரித்த ஆதாரங்களின் ஒரு காப்பி செல்லும் அவசரத்தில் மெயிலில் ஒரு காப்பியை அனுப்பி விட்டு இதை மேசையில் விட்டு சென்று விட்டால் . இதை பார்த்து “ச்சே..என்ன தீபா “ என போட்டேக்கள் அனைத்தையும் திரும்ப எடுத்து அடுக்க அதில் ஒரு போட்டோவில் பார்வை கூர்மை ஆனது அது இறந்த பெண்ணின் கிழிந்த துனிகளின் புகைப்படம் அந்த பெண் உடல் கிடந்த இடத்தில் அருகேயே இவை கண்டெடுக்கப்பட்டது அதில் ஏதோ தவறு இருப்பது போல தெரிய அதை உற்று நோக்கினால் தீபா கண்ணீல் ஒரு பிராகாசம், உடனே தன் போனை எடுத்து கார்த்திக்கை அழைத்தாள்.
கார்த்திக் அப்போது தான் உணவு உண்டு விட்டு புகை பிடிக்க டீக்கடை வாசலில் நின்று கொண்டு இருந்தான் “ அஹா இது அல்லவா வேலை தீபா மேம் இல்லன இப்படி தான் ஜாலிய இருக்கலாம் போல “ என்று
“அடியே மனம் நில்லுன நிக்காதடி “ என்ற பாடலை ராகமே இல்லமல் படிப்பது போல பாடி கொண்டு இருந்தான். அப்போது அவன் போன் “ என்ன சத்தம் இந்த நேரம்” என்ற பாட்டை பாட அதை யார் என்றும் பாராமல் அட்டன் செய்து காதில் வைத்தான் “ஹாலோ நான் கார்த்திக் பேசுர “ என்று அவன் சொல்லி முடிக்கும் முன் தீபா “ நாம இப்போ பாக்குற மர்டர் கேஸ் ஓட எவிடென்ஸ் பாக்ஸ் என்னும் சப்மீட் பண்ணல தானே “ என பேசியது தீபா வென்று மூளை கண்டுகொள்ளும் முன் “ சப்மீட் பண்ணல மேம் “ என்று இவன் பதில் சொல்லி இருந்தான் அதை சொன்னதும் தீபா போனை கட் செய்து இருந்தாள்.
கார்த்திக் இப்போ தீபா மேம் கால் பண்ணாங்க தான என்று குளம்பி அங்கேயே நின்று விட்டான்.
அங்கோ தீபா வேக வேகமாக கிளம்பி எவிடன்ஸ் ரூம் சென்று கையுறை போட்டு அந்த கிழிந்த ஆடையை எடுத்து பார்க்க ஆங்கில எழுத்து எம் மட்டும் தெரிந்தது மற்ற எழுத்துக்களில் ரத்தம் பட்டு என்ன வென்று சரியாக தெரியவில்லை . உடனே அந்த உடையை யூவி லேப் எடுத்து சென்று யூவி கதிர்கள் அடியில் வைத்து பார்த்தாள் தீபா முகத்தில் அதிர்ச்சி அதில் எழுதி இருந்த எழுத்துகளை ஒன்று ஒன்றாக படித்தால் “ எம் ஐ என் ஐ எஸ் டி இ ஆர், மினிஸ்டர் “. என்று வாய்க்குள்ளே முணுமுணுத்தாள்.