சுடரின் பதினெட்டாவது பிறந்தநாள் முடிந்து ஒரு மாதத்தில் வேந்தனுக்கு தாயாக மாறியிருந்தாள். குழந்தை பிறந்ததும் அருகில் இருந்து தாயாக தீபாவே தாங்கி கொண்டாள். சுடருக்கு டேட் கொடுத்த நாட்களில் இருந்து குழந்தை பேரு சொந்தமான புத்தகம் அனைத்தையும் தேடி தேடி படித்திருந்தாள் அதுவும் இன்றி டாக்டர் கமலாவும் அவளுக்கு உதவி செய்தார்.
குழந்தை பிறந்து நேராக இப்போது இருக்கும் அப்பார்ட்மெண்ட்கே சென்றன தீபாவும் சுடருடன் ஆறு மாதங்கள் தங்கி இருந்து பார்த்து கொண்டால் பின் குமரன் சொல்ல சொல்ல கேட்காமல் எதேதோ காரணங்கள் கூறி ஆஸ்டலுக்கே சென்று விட்டால்.
பின் சுடர் இங்கு இருப்பவர்களும் மாமாவை தப்பாக பேச கூடாது என்று எண்ணி புடவை கட்டி தன் தந்தை அன்னைக்கு பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்திருந்த இரு இதயங்கள் ஒன்றாய் இணைந்த வடிவம் கொண்ட டாலர் இருக்கும் தங்க செயினை தன் கழுத்தில் இருவரின் நியாபகமாக அணிந்து கொண்டாள். அந்த செயின் சுடர் அணிந்ததுக்கு தீபாவிடம் பல திட்டுக்கள் இலவசமாக பெற்றுகொண்டால் . அதை கண்டுக்காமல் குமரனிடம் சென்று “இங்கே இருக்கிற யார் நம்மல பத்தி என்ன கேட்டாலும் நீங்க எதுவும் சொல்ல கூடாது “ என்று சத்தியம் வாங்கி விட்டால் . பின் வீட்டில் இருந்தபடியே கல்லூரி படிப்பையும் முடித்தாள். பின் குமரனிடம் வந்து டீச்சராக பணிபுரிய போவதாக கூறி வேலைக்கும் சேர்ந்து விட்டால்.
தீபாவிடம் பேசிக்கொண்டே அவள் மடியில் படுத்து தூங்கி போனால் சுடர் , அவள் தலையை வருடியபடி “ நான் உன்னை நல்ல பார்த்திருக்கனும் சுடர் அப்பா அம்மா போய்ட பிறகு நான் உன்னை பார்த்திருக்கனும் எல்லாம் என் தப்பு நீ இப்படி ஆனது என்னால ,என்னால மட்டும் தான் . கடவுளே ஏன் எங்களை இப்படி சோதிக்கிறே நாங்க மட்டும் உனக்கு என்ன தப்பு பண்ணோம். இதுக்கு மேலயாவது எங்கள நிம்மதியா இருக்க விடுங்களேன் “ என்று கண்களில் கண்ணீருடன் “ மகிழன் உன்னை எப்படியாவது தேடி கண்டுபிடிப்பன் என் தங்கச்சிய இப்படி பண்ணதுக்கு உன்னை சும்மா விடவே மாட்டேன்” என்று தன் மன தோடு பேசிய வாரு அமர்ந்தபடி தூங்கி போனால்.
இவனை பார்கவே கூடாது என்றும் , உன்னை சந்தித்தே தீருவேன் என்றும் இருவேறு எண்ணங்கள் கொண்ட இருவரையும் தேடி மகிழனே நாளை வர போவது தெரியாமல் நிம்மதியாக உறங்கினார்கள்.
வானில் ஒளிர்ந்து கொண்டு இருக்கும் பௌர்ணமி நிலவின் ஒலி யாருக்கு வேண்டும் என்பது போல அதை விட பிரகாசமாய் இருளில் ஒளிர்ந்து கொண்டு இருந்தது அந்த கெஸ்ட் அவுஸ். அதன் தோட்டத்தில் கன்னத்தில் கை வைத்தவாறு சரவணனும் நெற்றியை பிடித்தபடி மகிழனும் அமர்ந்திருந்தன.
“ என்ன சரா இப்படி ஆயிடுச்சி” என சோகமாக கூறிய மகிழனை பார்த்து
“வட போச்சே மச்சான் “ என்று வாய்விட்டு சிரித்தான் சரவணன்
“இப்போ என்ன தான் பண்றது “
“அ.. அதுவா நாளைக்கு சுடர் வீட்டுக்கே போய் கண்ணை முடுனாலும் கனவுல நீதான்-னு கவிதை சொல்லு “
“மச்சான் சரா விளையாட தட “
“சரி சிரியஸ் மோட் அந்த கவிதைய விடு அன நீ ஏன் சுடரை அவ வீட்டுல வச்சி பார்த்து பேச கூடாது “
“ நல்ல ஐடியாதான் அன யாராவது பார்த்த பிரச்சனையா போய்டும் அதன் யோசிக்கிறேன் “
“பார்த்த எதாவது சொல்லி சமாலிச்சிடலாம், இதுவே நீ வீட்டுக்கு போனா சுடர் மாமா கிட்டையும் பேசலாம் ஒரு வேலை சுடர் ஒத்துக்கலன கூட அவுங்க மாமா கிட்ட பொண்ணு வாழ்க்கை குழந்தையோட எதிர்காலம்னு பேசி ஒத்துக்க வச்சிடலாம்”
“நல்ல ஜடியா தான் , சரி நாளைக்கே நானும் நீயும் போகலாம் “ என்று எழுந்த மகிழனை பார்த்து ஜெர்க் ஆன சரவணன் “யு கோ மேன் ஒய் மீ “ என பேசியதை காதில் வாங்காமல் “ சரா நீ இங்கயே படுத்துக்கோ அப்போ தான் நாளைக்கு மார்னிங் சீக்கரம் கிளம்ப முடியும் “ என சொல்லிவிட்டு போன மகிழனை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது.
பாலில் டீத்தூள் இஞ்சி ஏலக்காய் தட்டி போட்டு மனக்க மனக்க டீ போட்டவாரு நின்று கொண்டு இருந்த தீபாவின் பின்னால் டீயின் மணத்தை நுகர்ந்த வாரு “டீ போடுறதுல என் அக்கா தான் பெஸ்ட் , ஆமா பக்கத்துல என்ன பால் ,மாமாவுக்கா “
“ஆமா , டாக்டர் டீ கப்பி குடிக்க கூடாதுனு சொல்லி இருக்காங்க “
“பாவம் மாமா உன் டீ னா ரொம்ப பிடிக்குமே “ என்று சொன்ன சுடர் கய்களில் டீயை கொடுத்து “ரொம்ப ஐஸ் வைக்காத போய் டீ குடி” என்று கையில் பாலை எடுத்து குமரன் அறைக்கு செல்ல அங்கே குமரன் பாத்ரூம்-ல் இருக்க வேந்தன் மட்டும் படுக்கையில் உறங்கி கொண்டு இருந்தான். அவனை எழுப்பாமல் பாலை அருகில் இருந்த டேபிளில் வைக்க காலிங் பெல் சத்தம் கேட்டது .
ஹாலில் அப்போது தான் டீயை ரசித்து குடித்து கொண்டு இருந்தா சுடரும் சத்தம் கேட்டு “ யாருடா அது இவ்வளவு காலைல கதவ தட்டுறது “ என்றபடி எழுந்து கதவை திறக்க அங்கு வந்தவனை கண்டு கண்கள் விரிய அதிர்ந்து நின்று விட்டாள் சுடர் .
சத்தம் கேட்டு வெளியே வந்த தீபா அதிர்ந்து நிற்க்கும் சுடரை பார்த்து “ யாரு சுடர் “ என கேட்க பின்பே நினைவு வந்து ஆதியை உள்ளே அழைத்தால் “ சாரி சாரி சார் உள்ள வாங்க “ என்று சோபாவில் அமர வைத்தால் . உள்ளே வந்த ஆதி சுடரை தலையில் இருந்து கால் நுனி வரை பார்த்து “ சுடிதார்ல ரொம்ப சின்ன பொண்ண இருக்கா , அவ சொல்லல நாளும் அவ சின்ன பொண்ணு தானே “ என்று மனதில் பேசியபடி சுற்றி பார்க்க . அதற்குள் தீபா சுடரை அருகே இழுத்து மிக பொருமையாக “ யாருடி இது “
“இவரா எங்க ஸ்கூல் பிரின்சிபல் ஆதி சார் “
“ஓ.. ஆமா அவருக்கு இங்க என்ன வேலை “
“ ஓ.. நீ அத கேக்கிறியா… சாரி எனக்கு தெரியாது “
“ அத ஏன் தெரியும்னு சொல்ல வர மாதிரி சொல்ற “ என்று அக்காவும் தங்கையும் குசு குசு என பேசுவதை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் ஆதி. அப்போது குமரன் கையில் பாலுடன் “தீபாமா எனக்கு உடம்பு இப்போ ஓகே தான் கொஞ்சம் அந்த டீய குடுமா “
“உடம்ப கெடுத்து வச்சிட்டு டீ கேக்குறிங்க அண்ணா “ என்ற ஆதியின் குறல் கேட்டு அப்போது தான் திரும்பி பார்த்தான் குமரன்.
“ ஏ… ஆதி வாட் ய சப்பிரைஸ் இங்க என்ன பண்ற “ என்று ஆதியின் அருகில் அமர்ந்து அங்கு அதிர்ந்து நிற்கும் தீபாவையும் சுடரையும் பார்த்து “ விட்டுக்கு வந்தவனுக்கு டீ கூட குடுக்காம என்ன பண்றீங்க போய் எடுத்துட்டு வாங்க “ என விரட்ட, அதை கேட்டு இருவரும் ஒன்றாக “இதோ மாமா “ என்ற படி சமையல் அறைக்குள் சென்று விட்டன.
இவற்றை புன்னகை முகத்துடன் பார்த்த ஆதி பின் “ ஏன் அண்ணா உடம்ப கெடுத்து வச்சிருக்கிங்க, வெளில சாப்டாதிங்கனு சொண்ண கேக்குறிங்கள அதுவும் அந்த ரோட்டு கடை காலான விடுங்க-னு சொன்ன அத தான் சாப்பிடுறீங்க “
“எனக்கு உடம்பு சரியில்லனு யார் சொன்ன “
“வேற யாரு சுடர் தான் சொன்ன, அவ லீவுக்கு ரீசன் கேட்டப்ப சொன்ன“ என இருவரும் பேசுவதை பார்த்த தீபா டீ எடுத்து வந்த சுடரின் காதில்” உங்க பிரின்ஸிக்கும் மாமாக்கும் முன்னாடியே தெரியுமா “
“தெரியலையே அக்கா “
“அப்போ மாமா கிட்ட எப்படி தெரியும்னு கேலு சுடர், போ “ என்று தீபா உஷாராக நகர்ந்து கொள்ள. டீயை ஆதியிடம் கொடுத்து விட்டு சுடர் “ மாமா இவங்கள உங்களுக்கு முன்னாடியே தெரியுமா “
“ உனக்கு நியாபகம் இல்லையா சுடர் நீ மயங்கி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கும் போது என் நண்பன் ஒருத்தன் ஹெல்ப் பண்ணால அது யாரு இவன் தான் “ இதை கேட்டு முகம் வாடிய சுடர் “ ஏன் மாமா இதை முன்னாடியே சொல்லல “
“உனக்கு நியாபகம் இருக்கும் நினைச்சேன்” என குமரன் பேசிக்கொண்டே போனான். சுடரின் முகத்தையே பார்த்திருந்த ஆதி அவள் முக மாற்றத்தை பார்த்து மனதில் “ இவ்வளவு நேரம் நல்ல தானே இருந்தா இப்போ என்ன திடீர் சோகம் “ என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே மீண்டும் காலிங் பெல் அடிக்க, திரும்பி பார்த்த சுடர் கதவை நோக்கி நடந்த வாரு “ இன்னைக்கு நம்ம ராசில வில்லங்கம் வீடு தேடி வந்து காலிங்பெல் அடிக்கும்னு போட்டுருக்கும் போல , இப்போ எந்த வில்லங்கம்னு தெரியலயே “ என்று புலம்பியபடி கதவை திறக்க அங்கே சரவணனும் அவன் பின்னால் தலையில் தொப்பி ஒன்று அணிந்தவாறு பின்னால் திரும்பி நின்று இருந்தது மகிழன் என்று தெரிந்திருந்தால் உள்ளே அழைத்திருக்க மாட்டாள்.