அர்ச்சனாவிற்கு இந்த இரண்டு நாட்களும், அத்தனை மெதுவாய் நகர்வது போலவே இருந்தது. எந்த வேலையும் இல்லை. அவளை மீறி உறங்கும் நேரத்தில் உறங்கினாள். ரோஜா அவளுக்கு பிடித்த உணவுகளையே சமைக்க, அதை நன்றாகவே உண்டாள்.
மனது அமைதியாய் இல்லை என்றலும், உணவில் அதை காட்டினால், நிச்சயம் அம்மாவிற்கு தெரிந்துவிடும். மகள் சும்மா இருந்து போக என்று இங்கே வரவில்லை என்று.
தன்னை முன்னிட்டு இத்தனை நாட்களாய் எத்தனை கலக்கம் கொண்டிருந்தார்கள். அந்தளவே போதும் என்று எண்ணிவிட்டாள்.
அச்சுதன் பற்றிய யோசனை தான் மனது முழுக்க.
‘உன்னை யோசிச்சதுனால தான் நம்ம கல்யாணமே நடந்தது…’ என்று அவன் பேசியது இப்போதும் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான்.
அப்.. அப்போ இவன்னுக்கென்று எந்த உணர்வுகளும் இல்லையா?!
இந்த கேள்வி எழாமலும் இல்லை.
ஆனாலும் கூட, அவன் சொன்ன விசயங்களை சரியான கோணத்தில் நினைத்துப் பார்த்தாள். எந்தவொரு விசயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கும் தானே. நாம் நம் வாழ்வு என்று எண்ணுகிறோம். ஆனால் மற்றவர்களுக்கு அது வேடிக்கை விசயமாகவும் இருக்கலாம் இல்லையா?
அந்த பெண்மணிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து, பேசியது தேவையில்லையோ என்று நினைக்க, இப்போது அதெல்லாம் மறந்து, இந்த இரண்டு நாட்களாய் அச்சுதன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்பது தான் அவளுக்கு பெரிதாய் இருந்தது.
‘நீ இல்லாம இருக்கவே முடியலை டி…’ என்று எத்தனை தடவை சொல்லியிருப்பான்.
இதோ மனது வருத்தத்தில் வந்திருப்பது தெரியும். ஆனாலும் அழைத்துக் கூட ஒரு வார்த்தை பேசவில்லை என்கையில் அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.
அர்ச்சனாவிற்கு, இந்த காதல், இந்த திருமணம் இதெல்லாம் அஸ்திவாரமே இல்லாத ஒன்றாய் தானே இருந்தது. அச்சுதன் சரி என்று சொல்லாமல் விட்டிருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருப்போம் என்று அவளுக்குமே தெரியவில்லை தானே.
ஊரவிட்டே செல்லும் எண்ணத்தில் அல்லவா இருந்தாள்.
அப்படி இருந்தவளுக்கு, அவளது நேசத்தின் நாயகனோடு இணைந்து வாழும் வாழ்வமைந்து, அதுவும் நல்லமுறையாய் சென்றுகொண்டு இருக்கையில், அவனது கடந்த காலத்தை நினைவு படுத்தும் விதமாய் எதுவும் நடத்தால், அவளுக்கு அது கஷ்டமாய் தானே இருக்கும்.
இதுவொரு சிறு விஷயம் தான்.
ஆனால், அச்சுதன் இதனை அர்ச்சனாவின் கோணத்தில் புரிந்துகொள்ளவில்லை.
‘இது இப்படித்தான் இருக்கும். எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ண. அப்போ இதெல்லாம் நீ முன்னவே எதிர்பார்த்து தான் இருந்திருக்கணும்…’ என்று அச்சுதன் சொல்லாமல் சொல்ல,
அர்ச்சனவிற்கோ இதெல்லாம் ஒன்றுமே இல்லாத விஷயங்கள் தான்.
எப்போது என்றால் ‘இதெல்லாம் விட்டுத் தள்ளு அர்ச்சு.. இதுக்கு போய் நீ அப்சட் ஆகலாமா?’ என்று அவன் அனுசரணையாய் பேசி இருந்தால், அர்ச்சனாவிற்கும் மனது இதை ஏற்றுக்கொண்டு இருந்திருக்கும்.
அவனே கோபித்து கத்த, அவளுக்கு சின்ன சின்ன விசயங்களும் கூட இப்போது பெரிதாகி போனது.
இதோ பிறந்தகம் வந்தும் இரண்டு நாட்கள் ஆகிற்று.
இரவு உணவு உண்ணும்போது ரோஜா கேட்டார் தான் “ஏன் அர்ச்சு, அச்சுதன் போன் கூட பண்ணல போல…” என்று.
அவனது இந்த வாரத்திற்கான வேலைகளின் திட்டமிடல் அவளுக்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது. எப்போதும் ஒரு வாரத்திற்கான வேலைகளை அவன் முன்னரே திட்டமிட்டுக் கொள்வான்.
அதன்படி, அவன் தஞ்சை சென்றிருப்பான் என்பது அவளும் நினைவில் வைத்திருக்க “தஞ்சாவூர் போயிருப்பார் ம்மா…” என்றாள்.
அனிதாவும் இதையே சொல்லியிருக்க “ஓ! சரிடி..” என்றவருக்கு மகளிடம் ‘நீ எப்போது கிளம்புவாய்?’ என்று கேட்க முடியுமா.
ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் பார்க்க “உங்க வெட்டிங் ஆனிவர்சரி பார்ட்டி இருக்குல்ல ம்மா.. முடியவும் போவேன்…” என்று அர்ச்சனாவே புரிந்து பதில் சொல்ல,
“நான் நீ போறதுக்காக பார்க்கல அர்ச்சு…” என்றார் ரோஜா.
அர்ச்சனா கேள்வியாய் நோக்க “காதலிக்கிறப்போ நம்ம கண்ணு தெரியுற எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் வேற மாதிரி தெரியும்…” என்று மகளின் கரம் பற்றி லேசாய் தட்டிக் கொடுத்தவர்,
“எப்பவுமே நமக்கு பிடிச்ச மாதிரி தான் எல்லாமே நடக்கும்னு நினைக்கக் கூடாது. மாத்தி நடந்தா, அதுல எது நமக்கு சாதகமா இருக்கோ அதை எடுத்துக்கணும்..” என்று சொல்ல,
“ம்மா…!” என்றாள் அயர்வாய்.
“ஏன்னா அனிதா குணமும் உன் குணமும் வேற வேற.. ரெண்டு பேரும் நான் பெத்த பிள்ளைங்க தான். உனக்கு எதையும் ஹேண்டில் பண்ற தைரியம் இருக்கு. ஆனா கொஞ்சம் முன்கோபம். யாரும் உன்னை ஒருவார்த்தை சொல்லிடக் கூடாதுன்னு இருப்ப. இப்போ இல்ல, சின்னதுல இருந்தே அப்படித்தான். நீ போயிருக்கிறது கூட்டுக் குடும்பம். அதுனால எல்லாமே மனசுல வச்சு யோசிச்சு எப்பவும் நடந்துக்கோ…” என்று பொதுவாய் தான் மகளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு செல்ல,
இதோ இப்போதும் கூட அர்ச்சனா ‘நான் வந்தது தப்போ…’ என்று எண்ணினாள்.
அவள் கிளம்பி நிற்கையில் நீலவேணி எத்தனை கவலையாய் பார்த்தார் என்பது இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
அவளுக்கும் அச்சுதனுக்கும் சண்டையெனில், பாவம் அவரும் தானே இப்போது வருத்தம் கொண்டு இருப்பார் என்று தோன்ற “ம்ம்ச்…” என்று தன்னை எண்ணியே சலித்துக்கொண்டாள்.
அச்சுதன் ஒருமுறை அழைத்து “இப்போ வர்றியா இல்லையா?!” என்று சத்தம் போட்டிருந்தால் கூட , உடனே சென்று இருப்பாள்.
ஆனால் அவன் ஒன்றுமே சொல்லாமல் இருந்ததும், அடுத்து பேசாமல் இருந்ததும் தான் மிகவும் கஷ்டமாய் போனது.
காதல் கொண்ட மனது அல்லாவா?!
என்னென்னவோ யோசித்துக்கொண்டு இருக்க, வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்க, கார்மேகம் தான் வந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டாள். இந்த நேரத்தில் இங்கே அமர்ந்திருப்பதை அப்பா பார்த்தால் எதுவும் கேட்பார் என்று எண்ணியவள், வேகமாய் அவளது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள,
அச்சுதன் சரியாய் உள்ளே வந்து கார் நிறுத்தும்போதே கார்மேகமும் வந்துவிட்டார் தான்.
“எப்படி இருக்கீங்க மாமா?” என்று அச்சுதன் கேட்க,
“நல்லா இருக்கேன்… என்ன இத்தனை நேரம்…” என்று அவர் சகஜமாய் கேட்க,
“தஞ்சை போயிட்டு வந்தேன் மாமா.. கொஞ்சம் வேலையும் அதிகம்…” என்றபடியே இருவரும் வீட்டினுள் வர, ரோஜாவிற்கு மருமகனை கண்டதுமே ஒரு நிம்மதி மனதில்.
“வாங்க வாங்க…” என்று முகமலர்ந்து சொன்னவர் “இத்தனை நேரம் எதோ புக் படுச்சிட்டு இருந்தா. இப்போதான் ரூமுக்கு போனா…” என்று சொல்ல,
“இட்ஸ் ஓகே அத்தை…” என்றவன் “சரி நீங்க போய் தூங்குங்க…“ என்று இருவரிடமும் சொன்னவன், அர்ச்சனாவின் அறைக்கு முன்னே வந்து நின்று மெதுவாய் கதவினை தட்ட,
முதலில் கதவு திறக்கப்படவில்லை.
பின் அடுத்த சில நொடிகளில் “என்னம்மா?!” என்று கேட்டபடி அர்ச்சனா கதவு திறக்க, அங்கே அச்சுதனைப் பார்த்ததும் கண்கள் அகல விரித்து, முகத்தில் சட்டென்று வந்துபோன ஒரு மலர்ச்சியோடு
“அச்.. அச்சத்தான்…” என்று சொல்ல, அச்சுதனும் எதுவும் சொல்லவில்லை.
அவனது வழக்கமான ஒரு புன்னகை மட்டுமே பதிலாய் கொடுக்க, கார்மேகமும் ரோஜாவும் இவர்களை பார்த்துவிட்டே இப்போது நகர்ந்து செல்வது தெரிய,
“வ.. வாங்க…” என்று அர்ச்சனா கதவினை நன்றாய் திறக்க, அவளுக்கோ அவனைக் காண ஒருப்பக்கம் சிரிப்பாய் இருந்தது.
இருந்தும் அடக்கிக்கொள, இப்போது அச்சுதனுக்கு தான் அவளைப் பார்த்து கண்கள் விரிந்தது.
அர்ச்சனா எப்போதும் யாரது கண்ணும் உறுத்தாத வகையில் தான் உடையணிவாள். மாடர்ன் உடைகள் என்றாலும் கூட அதில் நேர்த்தி இருக்கும். அதிலும் திருமணத்திற்கு பிறகு அங்கே அவர்களின் வீட்டினில் இன்னும் கூட உடை விசயத்தில் கொஞ்சம் அவள் மாறியிருப்பதாய் இருந்தது.
அனிதா ஏற்கனவே சொல்லியிருந்தாள் “பசங்க நிறைய இருக்கிற வீடு டி.. நீ நம்ம வீட்ல போட்டது போல ஸ்லீவ் லெஸ் இப்படி எல்லாம் போடாத…” என்று.
இரவு உறங்கத்தானே போகிறோம் என்று, அவளுக்கு மிகவும் பிடித்த இளம் மஞ்சள் வர்ண ஸ்லீவ் லெஸ் கவுன் போல ஒன்று அணிந்திருந்தாள். முழங்கால் வரைக்குமே இருக்க, அவள் அணிந்திருந்த அந்த உடை கொஞ்சம் தாராளமாகவே அவளது அழகை எடுத்துக்காட்ட, அச்சுதன் அர்ச்சனாவை இப்படி பார்த்தது முதல் முறை.
கூடல் பொழுதில், ஆடைகளற்று இருந்திருந்தாலும், இதோ இந்த அழகு தனியாய் தான் தெரிந்தது அவனுக்கு.
கணவனது பார்வையை புரிந்தவள், வேகமாய் வேறு உடை எடுத்துக்கொண்டு செல்லப் போக “அர்ச்சனா…” என்றான் மெல்லிய குரலில்.
அர்ச்சனவோ சிரிப்பை அடக்கி, அவன் பார்வை கொடுத்த லஜ்ஜையில் இருந்து தப்பிக்கப் பார்க்க, அச்சுதனோ ஒன்றும் பேசினான் இல்லை. அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து, அணைத்துக்கொண்டான் எப்போதும் போல.
“ம்ம்ச் என்ன இது?!” என்று அவள் வீம்பு போலவே பேச,
“கொஞ்ச நேரம் இப்படியே இரு…” என்றவனின் அணைப்பு இறுக, அவளோ அசையவே இல்லை.
தனக்காக வந்திருக்கிறான் என்பது அவனது முகத்தைப் பார்த்ததுமே அவளுக்குப் புரிந்துபோனது. பின்னே, அவள் அடிக்கடி கேட்பது போல ‘கிளீன் ஷேவ்..’ என்று வந்திருந்தான்.
என்னவொன்று மீசை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்யப்பட்டு வந்திருக்க ‘நல்ல வேளை அதையும் முழுசா எடுக்கல.. இல்லை பார்க்கவே முடியாது…’ என்று எண்ணிக்கொண்டவள்
“ம்ம்…” என்றவன், விரிந்திருக்கும் அவளது கேசத்தை எல்லாம் ஓரம்தள்ள, அந்த ஆடையே அவளது வெற்று முதுகை தரிசனம் காட்ட, அதில் முகம் வைத்து அச்சுதன் அழுத்திக்கொள்ள, அவளுக்கோ கூச்சமாய் இருந்தது.
“எ.. என்ன பண்றீங்க?!” என்று நெளிய,
“என்ன பண்ணிட்டேன்…” என்றவன் முகத்தை இன்னும் அழுத்தி வைத்து, மெதுவாய் இதழ் பதிக்க,
“அச்சோ..!” என்றவள், வேகமாய் எழுந்துவிட்டாள்.
அவள் முகம் காட்டிய பதற்றம், அவளது நிலையை அவனுக்கு சொல்லாமல் சொல்ல, தன்னை கண்டும் இன்னும் வாய் திறவாமல் இருக்கிறாளே என்று எண்ணியவன் “என்ன அர்ச்சனா?!” என்றான்.
அவனது குரலில் என்ன இருந்ததோ, ஆனாலும் தடுமாறத் தொடங்கிய மனதை கட்டுப்படுதியவள் “என்ன இது?!” என்று அவன் கொண்டு வந்திருக்கும் பை காட்டி கேட்க,
“இதுவா..?!” என்று இழுத்தவன் “உன்னோட ட்ரெஸ் அண்ட் ஜ்வல் தான்…” என்றவன், பேசியபடி உடை மாற்ற,
“உங்கக்கிட்ட நிறைய தடவ சொல்லிட்டேன், என்முன்னடி ட்ரெஸ் மாத்தாதீங்க அப்படின்னு…” என்று அர்ச்சனா கடிய,
“ஏன்?! உனக்கு எதுவும் பீல் ஆகுதா..?” என்று அவன் கேட்டவிததில், அவளுக்கு கும்மென்று உடலும், முகமும் சிவந்துவிட, அச்சுதன் முகத்தில் இன்னும் அந்த புன்னகை மறையவில்லை.
அர்ச்சனாவோ அப்படியே நிற்க “என்ன ட்ரெஸ் டி இது.. அங்க இப்படிஎல்லாம் போடவே இல்லை..” என்று அவளை ஒருமுறை சுற்றி வர,
“ஷ்!“ என்று கண்களை மூடிக்கொண்டவள் “இப்போ என்ன திடீர்னு வந்திருக்கீங்க?” என்றாள்.
அவன் வருவான் என்று தெரிந்திருந்தால், இந்த உடையை அவள் உடுத்தியே இருக்கமாட்டாளே. இது அப்படியே அவள் முகத்திலும் தெரிய “நான் கால் பண்ணிட்டு தான் வரலாம்னு கால் பண்ணேன். நீ எடுக்கவே இல்லை…” என்றவனது விரல்கள், அவளது தோள்பட்டையில் இருக்கும் அந்த உடையின் முடிச்சின் மீது இருக்க,
இதழ்கள் நடங்க “எ.. என்ன பண்றீங்க?!“ என்றாள் திரும்ப, அவளது கரமோ, அவன் கரம் மீது அழுத்தி படிந்திருந்தது.
எங்கே முடிச்சினை அவிழ்த்துவிட்டாலும் விடுவான் என்று அவள் பயந்து பார்க்க “டோன்ட் வொர்ரி அதுக்கெல்லாம் இன்னும் நேரமிருக்கு…“ என்றவன்
“ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற?” என்றான் கண்களில் சிறு ஆவலை தேக்கி.
அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்தமையால், அவனை அழைத்துக்கொண்டு போய் அந்த ஆளுயரக் கண்ணாடி முன்னே நிற்க வைத்தவள் “என்ன சொல்லணும்?” என்று கிண்டலாய் கேட்க,
“ஏய்.. என்ன டி நீ? சரி பொண்டாட்டி கோவிச்சுட்டு போயிட்டாளே. அவளை சமாதானம் பண்ண, அவளுக்கு பிடிச்ச மாதிரி போவோமேன்னு வந்தா…” என்று அச்சுதன் பாவம் போல சொல்ல, அவளுக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
“நிஜமா இது நீங்களான்னே தெரியலை..” என்று சொல்லி சிரிக்க,
“போ டி.. எல்லாம் என்னை எதுவும் சொல்லலை. ஆனா ஒருமாதிரி பார்த்தாங்க…” என்று அச்சுதன் சொல்ல,
“யாரும் எதுவும் சொல்லாம இருக்கும்போதே தெரியலையா, சொல்றமாதிரி ஒன்னும் இல்லைன்னு…” என்று திரும்ப அர்ச்சனா கேலி பேச,
“என்னது சொல்றமாதிரி ஒன்னுமில்லையா?” என்றவன், அவளை வேகமாய் தனக்கு நெருக்கமாய் இழுத்து நிறுத்தி, அவள் கன்னத்தில் தன் முகம் வைத்து அலுத்தியவன் “தாடி வச்சிருந்தா, குத்துது கூசுதுன்னு சொல்றது. உனக்காக இப்படி வந்தா, சொல்றமாதிரி இல்லைன்னு சொல்றது…” என்றவன், மெதுவாய் அவளது செவி மடலை கடித்து வைக்க, அவளோ நெளியத் தொடங்க,
“நிஜமா பிடிக்கலையா?!” என்றான் அவள் முகம் பார்த்து,
தனக்காக இப்படி வந்திருக்கிறான் என்பதே அவளுக்கு மற்றது எல்லாம் மறக்க வைத்து, அவன் முகம் பார்த்து “நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்…” என்று சொல்ல,
“இனி இப்படி எல்லாம் கிளம்பி வராத அர்ச்சு…” என்றவனுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை.
“ம்ம்…” என்று அவள் தலை அசைக்க,
“நான் பொறந்து வளர்ந்த வீடு தான். ஆனா இப்போ நீ இல்லாம அங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு…” என்று அவளை அணைத்தபடி தான் சொன்னான்.
அவனது இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு எப்படியானதொரு உணர்வைத் தரும் என்பது சொல்லித் தெரியத் தேவையில்லை.
“ம்ம்…” என்று அதற்கும் பதில் சொன்னவளின் கண்கள் மூடியிருக்க, மெதுவாய் அவன்மீதே சாய்ந்துகொண்டாள்.
அச்சுதனுக்கு இதுவே சொன்னது, அவள் மனது இப்போது இயல்பில் இருக்கிறது என்று. அதனால் வெளிப்படையாகவே “நீ எப்பவுமே சரியா தான் யோசிப்ப. அன்னிக்கு நான் கோபத்துல பேசினதுன்னு உனக்கே தெரியும். அதையும் தாண்டி அந்த லேடி பேச்சுக்கு எல்லாம் நீ இத்தனை இம்பார்டன்ஸ் கொடுக்கலாமா?” என்று தன்மையகவே கேட்க,
அவனை தள்ளிக்கொண்டு போய் அமர வைத்தவள், தானும் அவனருகே அமர்ந்து, அந்த பவஸ்ரீ தனுஜாவை அண்ணி என்று குறிப்பிட்டதில் இருந்து, பின் நடந்தது எல்லாம் சொல்லி
“ஏற்கனவே நான் கொஞ்சம் டிஸ்டர்பா இருந்தேன் அச்சத்தான். இதுல அந்த லேடி பேசவும் எனக்கு ரொம்ப ஒருமாதிரி இருந்தது. உங்களுக்கு எப்படின்னு தெரியலை.. ஆனா நீங்க எனக்கு அத்தனை ஸ்பெசல். உங்களை எதுக்காக எனக்கு பிடிக்கும்னு எல்லாம் இப்போ வரைக்கும் எனக்கு காரணம் தெரியலை. ஆனா உங்களை பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும்..” எனும்போதே அவளின் கண்கள் கலங்கிவிட,
“ஏய்! என்ன நீ..“ என்றவன், அவளை தன் மார்பில் சாய்த்துக்கொள்ள,
“நீங்க கோபமா பேசாம, கொஞ்சம் தன்மையா எடுத்து என்கிட்டே பேசிருந்தா நான் அன்னிக்கே ஓகே ஆகிருப்பேன். நீங்களும் கோபமா பேசவும் எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆகிருச்சு. எல்லாருமே சொன்னாங்க உன்னோட லவ் ஹோப்லெஸ் அப்படின்னு… அந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு எத்தனை வலி கொடுத்ததுன்னு எனக்குத்தான் தெரியும்…” என,
“இப்போ ஏன் அதெல்லாம் பேசுற…” என்றான் ஆதுரமாய்.
“தெரியலை.. அப்படி இருக்கப்போ, நம்மளோட இந்த கல்யாணத்தை அவங்க கொச்சை படுத்துறதுபோல பேசவும் எனக்கு கோவம் வந்துடுச்சு…” என,
“ம்ம் அடுத்து நானும் பேசிட்டேன்.. ஆனா ஒன்னு சொல்லட்டுமா, நிஜமா நீ இல்லாம என்னால அங்க இருக்கவே முடியலை. ரூமுக்கு வந்தாலும் தூக்கமே இல்லை டி எனக்கு..” என்றவனின் அணைப்பு இறுக, ஒவ்வொருவர் தங்களின் விருப்பத்தை ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்துவர்.
இது அச்சுதனின் விதம்போல.
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை எல்லாம் தாண்டி, நீ இல்லாமல் என்னால இருக்க முடியவில்லை என்று சொல்வதும் ஒருவித வெளிப்பாடு தானே.
எல்லாம் புரிந்தது அவளுக்கு. ஆனாலும் “ஒருதடவை கூட நீங்க எனக்கு கால் பண்ணல…” என்று கேட்க,
“பண்ணனும்னு நினைப்பேன். ஆனாலும் நீ கொஞ்சம் காம் டவுன் ஆகட்டும்னு விட்டுடுவேன்.. பேசி பேசி சண்டை பெருசாச்சுனா என்ன செய்ய?” என்றவனோ “இனி இப்படி வராத என்ன?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க,
அவன் முகத்தையும், கண்களையும் ஆழ்ந்துப் பார்த்தவள், மெதுவாய் எம்பி அவனது நெற்றி தழும்பில் முத்தம் வைக்க, அப்படியே அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
அவன் தன்னை எத்தனை தேடுகிறான் என்பது அவனது இந்த அணைப்பே உணர்த்த “என்ன அச்சத்தான்…” என்றாள் மெதுவாய்.
“எனக்கு ரொம்ப எதுவும் சொல்லத் தெரியலை. ஆனா இப்படி நீ வராத..” என்று திரும்ப அதையே சொல்ல
“வர விடுவீங்களா நீங்க?” என்றாள் அவளும்.
“ம்ம்ஹும்…” என்றவனுக்கு குரல் கம்மியது.
அவன் மிகவும் உணர்ச்சிவசப் பட்டு இருக்கிறான் என்பது புரிய “அச்சத்தான்…” என்றாள்.
“என்னோட வாழ்க்கை, என்னோட சந்தோசம் எல்லாம் கானல் நீர்னு நினைச்சுட்டு இருந்தேன் அர்ச்சு. ஆனா நீ வந்த… தேவதைப் போல.. உன்மேல எனக்கு எந்த பீலும் இல்லைன்னு எல்லாம் நீ நினைக்க வேண்டாம். நிறைய தடவ என்னைமீறி உன்னை நான் பார்த்திருக்கேன் அர்ச்சனா…” என, அவளோ அதிர்ந்து போய் பார்த்தாள்.
“என்னோட எல்லா உறுதியையும் நீதான் ஒன்னும் இல்லாம பண்ணின.. அன்னிக்கு நீ ஹாஸ்பிட்டல்ல வச்சு அழுத பாரு.. என்னால தாங்கவே முடியலை…” என்றவன் “நமக்குள்ள சண்டைகள் எல்லாம் வராம இருக்காது.. ஆனா நீ இப்படி வராத…” என்று திரும்பவும் சொல்ல,
“நீங்களும் இப்படி இனிமே கிளீன் ஷேவ் எல்லாம் பண்ணாதீங்க…” என்று சொன்னவள், அவனிடம் இருந்து ஓடப் பார்க்க
“நான் எத்தனை பீல் பண்ணி பேசினா, நீ கிண்டல் பண்ற…” என்று அவளை அவளை தன்னருகே வேகமாய் இழுத்தவன், அவளது அந்த ஆடையின் முடிச்சையும் இழுத்துவிட்டான்.