குமரன் சொன்ன படி இரண்டு நாட்களில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு இவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே ஒரு சிறிய வீட்டில் குடிசென்றன . அங்கு சென்ற ஒரு வாரம் அனைத்தும் நன்றாக தான் போனது.
குமரன், தீபா சுடர் இருவரையும் கண்ணுக்குள் வைத்து தாங்கினான். முதலில் சுற்றி குடியிருப்பவர்கள் ஒன்றும் பெரிதாக கவனிக்கவில்லை எதோ தாய் தந்தை இல்லாமல் மாமன் தான் பார்த்து கொள்கிறேன் என்று குமரனை பார்த்து நல்ல பையன் என்று சொல்லிய அதே வாய், இரு மாதம் சென்று சுடருக்கு வயிறு நன்றாக தெரிய ஆரம்பித்ததும் இவர்கள் மூவரின் பெயரே அனைவர் வயிலும் வித விதமான கதைகளுடன் விமர்சிக்க பட்டது .
இது ஒரு முறை தெரியாமல் சுடரின் காதில் வில அதுவும் தங்கள் மூவரையும் இனைத்து பேச அவலால் சகித்து கொள்ள முடியவில்லை அன்று இரவே இதை பற்றி குமரனிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால்.
இரவு அனைவரும் உணவு உண்டதும் எப்போதும் போல தீபா “ நான் படிக்க போறேன் “ என்று சொல்லி விட்டு அவள் உலகில் மூழ்கி போனால். டாக்டரின் அறிவுரையால் சுடர் மனநிலையை மாற்ற முடிந்த குமரனால் தீபாவை மட்டும் மாற்ற முடிய வில்லை அவனும் அவளின் மாற்றத்திற்க்காக இரண்டாம் டிகிரி படிக்க வற்புறுத்தி ,அவள் படித்த அதே கல்லூரியில் சேர்த்து விட்டான்.
ஆனால் எடுத்த முயர்ச்சி அனைத்தும் வீனே பின் தீபாவின் இயல்பே இது தான் என்று எண்ணி விட்டு விட்டான் . தீபாவின் உண்மை நிலை அறியும் நேரம் மீண்டும் உடைந்து போவானோ இல்லை மீண்டு வருவானா.
சுடர் குமரனை வெளியே அழைத்து காலை அவள் காதில் விழுந்ததை கூற குமரன் முகம் ஒரு நிமிடம் சோர்ந்து பின் அதை மறைத்து இயல்புக்கு வந்து “ இங்க இருக்க பலர் அவ தப்பை பாக்கவும் மாட்டான் திருத்திக்கவும் மாட்டான் அன அவன சுத்தி யாரும் தப்பு பண்ணிட்டா பெரியா உத்தமனுங்க மாதிரி வந்துருவாங்க , நீ இதை கண்டுகாத மா “ என கோபத்துடன் பேசி முடிக்க சுடர் “ இல்லை மாமா நான் இதை எல்லாம் கண்டுக்க மாட்டேன் அன அக்கா அவள நினைச்சி தான் யோசிக்குறன் “ இதை கேட்ட குமரனும் ஒரு நிமிடம் நிதானமாக யோசித்த பின்“ சுடர், இப்போதைக்கு தீபாவ ஹாஸ்டல்ல இருக்க வைப்போம் அப்பறமா வேற வீடு பாத்து அவளை கூப்டுக்களாம் “
அதற்கு சுடரும் சம்மதம் என தலை ஆட்டி தூங்க சென்றாள். மறுநாள் தீபாவை அழைத்து “ தீபா மாமா சொல்றத கேக்கிரியாம “ என கேட்க அதற்கு தீபா “ சரி மாமா” என தலையை உருட்ட, குமரன் மனதில் “தீபாமா எல்லாம் உன் நன்மைக்காகா தான் கொஞ்சம் பொருத்துக்கோ “ என்று தனக்கு தானே சமதானம் படுத்தி கொண்டே தீபாவிடம் “ நீ நான் சொல்ற வரை ஆஸ்டலயே தங்கிக்கொமா எதவது எமர்ஜென்சி-னா கால் பண்ணு நான் நேர்ல வரன் நீயா இங்க வந்துர கூடாது “ என்று தீபா முகம் பார்த்தான்.
தீபா உள்ளுக்குள் ஆயிரம் துகள்களாக உடைந்து கொண்டு இருந்தால் குமரனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எது நடக்காது என நம்பினாலோ அதுவே நடந்து கொண்டு இருக்கிறது, “ நான் எங்கேயும் போக மாட்டேன், என்ன போக சொல்லாதீங்க” என்று குமரனை கட்டி கொண்டு அழுகா வேண்டும் போல் இருந்தது ஆனால் இவை அனைத்தையும் முகத்தில் சிறிது கூட காட்டாது “ சரி மாமா, இன்னைக்கே போய் பேசிட்டு வந்துடலாம், நான் வெயிட் பண்ற மாமா சீக்கரம் வாங்க “ என்று சலனமே இல்லாமல் செல்லும் தீபாவை பார்த்த சுடர் எதையோ யோசித்த படி “அக்காக்கு என்ன ஆச்சி, ஒரு மாதிரி பேசிட்டு போறா மாமா “ என்று குமரனை பார்த்து கேட்க, அதற்கு குமரன் “ எனக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியல, நான் போய் பஸ்ட் கிளம்புறேன்” என்று சென்று விட்டான்.
இருவரும் கிளம்பி காலேஜ் சென்று மதியம் போல வீடு வந்தனர் சுடர் இவர்களுக்காக எழும்பிச்சை சாதம் மற்றும் உருளை கிழங்கு வறுவல் செய்து வைத்து காத்திருந்தாள் . முன்பு எல்லாம் சமைக்க வேண்டும் என்று சொன்னாலே ஓடும் சுடர் இப்போதெல்லாம் சமைக்க கற்றுகொண்டு வருகிறாள் அதற்கு காரணம் வீட்டில் சும்மா இருப்பதால இல்லை அவல் வேற எதுவும் யெசிக்க கூடாது என்பதால என்று அவலுக்கே தெரியும்.
குமரனும் சமையல் தானே என்று விட்டுவிட்டான் . மூவரும் கீழே அமர்ந்து உண்டு கொண்டு இருக்க சுடர் “ மாமா அக்கா காலேஜ்ல எல்லாம் ஓகேவா “ என்று வாயில் உணவை மெற்றவாரு பேச அதற்கு குமரனும் “ ம்ம்.. ஓகே தான் இப்போதானே காலேஜ் இயர் ஸ்டார்ட் ஆச்சி சோ ரூம் இருந்துச்சி “ என்று பேசி கொண்டே உன்ன தீபா மட்டும் வாய் திறக்காமல் தட்டில் கவனத்தை வைத்து உண்டு முடித்ததும் எழுந்து சென்று விட்டால். தீபா செல்வதை பார்த்த குமரன் மற்றும் சுடர் “ பீல் பன்ற போல “ என சுடர் சொல்ல அதற்கு “ நாமளும் என்ன பண்ண எல்லாம் அவ நல்லதுக்கு தான் “ என்று குமரன் சொல்லி விட்டு சென்றான்.
தீபாவை ஹாஸ்டலில் சேர்த்து விட்டன சுடருக்கு அக்காவை பிரிவதில் கஷ்டம் தான் ஆனால் என்ன செய்ய. பின் நாட்கள் செல்ல செல்ல சுடர் தன் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என்ற முடிவில் உறுதி ஆனால் அதன் விளைவாக குமரனிடம் சண்டை போட்டு பின் சுடரே வென்றால் ஆனால் இரு நிபந்தனையுடன்.