படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள். வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை பற்றி பேசும் ஆர்வத்தில் சுடரை கண்டுகொள்ள வில்லை . எப்பொழுதும் நேகா கைகளை பிடித்து பேசிக்கொண்டே வரும் சுடர் ,இன்று அமைதியாக பாய் சொல்லி விட்டு தனியே நடந்து வீடு சென்று விட்டால். சாலை கடக்கும் போதும் நேகாவை எதிர் பார்க்காமல் எப்படியோ கடந்து விட்டால். இவை எதையும் கவனிக்க வில்லை நேகா . வீடு சென்று பெட்டில் அமர்ந்து தான் வைத்திருந்த குடும்ப புகை படத்தில் விரல்களால் தன் தந்தை மற்றும் தாயை வருடி “ அப்பா எங்க இருக்கிங்க, எப்போ வருவிங்க ரொம்ப மிஸ் பண்ற ப்பா , அம்மா கூட இல்லை-ப்பா “ என்று அந்த புகை படத்தை கட்டி பிடித்து கொண்டு தூங்கி போனால்.
இரு நாள் விடுமுறை பின் பள்ளி சென்றாள் சுடர் , பள்ளியில் எப்பொழுதும் நண்பர்களிடம் வாய் ஓயாது பேசும் சுடர் இன்று மிகவும் அமைதியாக இருந்தால். நேகா வாக சென்று பேசிய போதும் , ஒரு புன்னகையுடன் அமைதியாகவே இருந்தால் , அதன் பின்னேயே நேகா-விற்கு அன்று பீச்சை விட்டு வந்தது இருந்தே சுடர் சரியாக பேச வில்லை என்று நினைவுக்கு வந்தது .
பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் பூங்காவிற்கு வரவில்லை என்று சொல்லி ,சென்று விட்டாள் . அதில் சோகமான நேகாவை நிர்மள, மற்றும் காவியவே சரி செய்தன “ விடு டி நேத்து அவ கூட இருந்த எதவது சொல்லிட்டே இருப்பானு தான ஆவய்ட் பண்ண,அதுக்கு தான் சாரி கேட்டுடல அப்பறம் என்னவா, ரொம்ப தான் பன்றா “ என்று பேசி இவர்கள் அனைவரும் பூங்கா விற்க்கு சென்றன.
சுடரோ தான் வரவில்லை என்று சொன்னால் நேகா நம் பின்னால் வந்து சமாதானம் படுத்துவால் என்று எண்ணியது தவறாகி போனது, சோர்ந்த முகத்துடன் அந்த சாலையை கடக்க நின்ற படி யாராவது வருவார்கள என்று பார்த்த சுடருக்கு ஒரே அதிர்ச்சி அங்கு நின்றவனை கண்டு.
மகிழன் அங்கு இருந்த ஒரு காப்பி ஷாப்பில் இருந்து வெளியே வர அவனை பார்த்த சுடர் முகம் மகிழ்ந்து அவனையே பார்க்க , முதலி்ல் கனாதது போல இருந்த மகிழன் பின் யதார்த்தமாக பார்ப்பது போல சுடரை பார்த்தான் .
சுடர் இவனை நோக்கி கைகளை ஆட்டி “ஹாய்…” என சொல்ல மகிழனும் சிரித்த படி சாலை கடந்து இவள் அருகில் வந்தான்.
“ ஹாய் சுடர் இங்க என்ன பண்றிங்க அதுவும் ஸ்கூல் போக் ஓடா , வெயிட் நீங்க இங்கயா ஸ்கூல்ல படிக்கிறீங்க “ என மகிழ்ச்சி பொங்க கேட்டான்
“ ஆமா இங்க தான் படிக்கிறன் , ஆமா நீங்க இங்கே என்ன பண்றீங்க “
“அது நான் இங்கே தான் ஒரு ப்ராஜெக்ட் காக ஃபிரண்டு கூட ஸ்டே பண்ற “
“ஓ… ஓகே “ என்று சொல்லி மனதில் “ இப்ப இருக்கவ இல்ல போகவ தெரியலயே “ என எண்ணியவாறு முழிக்க, அவள் முகத்தை பார்த்த மகிழன் “ ரோட் க்ராஸ் பண்ணலாமா “ என்றபடி அவள் கை பிடித்து உதவ ,சுடரும் ஒன்றும் சொல்லவில்லை .
பின் இருவரும் பேசிய படியே நடக்க , மகிழன் “ உங்க வீடு எங்கே சுடர் “
“ பக்கத்துல தான் இருக்கு நான் போய்க்கிறன், நீங்க போங்க மகிழன் “
“ சரி பாத்து போங்க சுடர் , பாய் “ என சென்று விட்டான் . இவ்வாறு மகிழன் தினமும் சுடரை பார்த்து பேச ஆரம்பித்தான் . பின் தொலைபேசி மூலம் வீட்டிலும் பேச தொடங்கினால், பள்ளியில் அனைவரிடமும் பேசுவதை குறைத்தால், அவல் அறியாமலே முதலில் அவல் வெறுத்த தனிமை என்னும் இருளில் விரும்பியே போனால். சில நேரம் நள்ளிரவு வரை போனில் பேசுவாள்.
இவ்வாறு மகிழன் மற்றும் சுடரின் உறவு காதல் என்ற படிக்கு மூன்று மாதங்களில் சென்றது. மகிழன் ஒரு நாள் சுடரை அருகில் இருக்கும் பூங்கா விற்கு அழைத்து கையில் ரோஜா பூ ஒன்றை வைத்து“ சுடர் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் எவ்வளவு-னா, நீ உங்க அம்மா, அப்பாவை நினைச்சி அழுகும் போதுலா எங்கேயாவது போய் எப்படியாவது அந்த கடவுள பாத்து ஏன் சுடர் அப்பா , அம்மாவை திருப்பி கொடுத்துருங்களேன்-னு கெஞ்சுர அளவு , உன் கண் கலங்கும் போதுலா உயிர் வாழ்றதே வேஸ்ட்-னு நினைக்கிற அளவு , அன என்ன பண்ண சுடர் நான் சாதாரண மனுஷன் ஆச்சே கடவுள பாக்க முடியல “ என சோகமாக கைகளால் கண்களை மூடி பெரும்மூச்சி ஒன்று விட்டு , மீண்டும் தொடர்ந்தான் “ ஆன என்னால ஒன்னு பண்ண முடியும் உனக்கு அம்மா ஓட பாசத்தை கொடுக்க முடியும் அப்பா ஓட பாதுகாப்ப தர முடியும் “ என சொல்லி அவள் கண்களை பார்த்த வாரு “ ஆன இது எல்லாம் பண்ண நான் உன் கூட இருக்கனும், என்னை ஊன் கூட ஒரு அம்மாவ, அப்பாவ, ஒரு நண்பனா அப்பறம்….. ஒரு கனவன இருக்க விடுவியா சுடர் “
இதை கேட்ட சுடர் கண்கள் கலங்க தலையை ஆட்டினால், அப்போது அவள் மனதில் ஒடியது “ என் கூடவே என் அப்பா மாதிரி கடைசி வரை இருப்பான் “ என்று எண்ணினால். அதன் பின் மகிழன் சொன்ன படி தான் சுடரை பார்த்து கொண்டான் . சுடரை மகிழ்ச்சியாக வைத்து கொண்டான் , என்ன தான் இருவரும் காதலித்தாலும் மகிழன் சுடர் கைகளை பிடிப்பதோடு சரி, மிஞ்சி போனால் கன்னத்தில் முத்தம் அவ்வளவு தான் அவன் எல்லை மீறியது இல்லை . ஏன் பேசும் போதும் பார்த்து தான் பேசுவான் அந்த பூங்காவை தவிற வேறு எங்கேயும் சென்றதும் இல்லை , ஏன் என்று கேட்டால் முதலில் படி பின் பார்த்துக்கலாம் என்று கூறுவான். இதை எல்லாம் பார்த்தா சுடருக்கு மகிழனின் மேல் நம்பிக்கையே கூடியது. ஆனால் இந்த நம்பிக்கை உடையும் நாளும் வந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு வர மூன்று மாதங்களே இருந்தது அந்த நேரம் தான் மகிழனின் பிறந்த நாளும் வந்தது. போன பிறந்த நாளுக்கு சுடர் வெள்ளியில் மகிழனுக்கு காப்பு ஒன்று வாங்கிக் கொடுத்தால். இந்த பிறந்த நாளுக்கு என்ன கொடுக்க என்று யோசித்தபடி இருக்க, மகிழனே வந்து, நண்பர்கள் என் பிறந்தநாள் பார்ட்டி க்கு உன்னையும் அழைக்கிறார்கள் என்று சுடர் முன் வந்து நின்றான். அதற்கு சுடர் “ பார்ட்டி-யா அது வந்து, எனக்கு உங்க ஃபிரண்ஸ் யாரையும் தெரியாதே , வீட்டுலயும் விட மாட்டாங்களே “
“ சுடர் ப்ளீஸ், என் ஃபிரண்ஸ் ரொம்ப நாளா கேக்குறாங்க உன்னை பாக்கணும்னு என் பர்த்டே விஸ் ஆ வச்சிக்கோ“
“ஆனா வீட்டுல என்னனு சொல்லிட்டு வர “
“நேகா பர்த்டே இவினிங் குள்ள வந்துருவனு சொல்லு , நான் இது வர எங்கயாவது வெளிய கூப்பிட்டு இருக்கன சொல்லுமா “ என முகத்தை சோகமாக வைத்தபடி கேட்க, அதை பார்த்த சுடர்
“பார்ட்டி எங்க “ என கேட்க, அதை கேட்டு மகிழ்ந்த முகத்துடன் “ நம்ம வீட்டுல தான் “ என மகிழன் கூற
“அச்சோ உங்க அப்பா இருப்பாங்கள “
“ அப்பா மெயின் அவுஸ்ல தான் இருப்பாங்க இது பீச் அவுஸ் அப்பா வர மாட்டாங்க “ என வித விதமாக பேசி சுடரை சம்மதிக்க வைத்தான்.
சுடர் மகிழன் பிறந்தநாள் முன்தினம் உறங்கா முடியாமல் ஏதோ மனதில் உருத்தி கொண்டு இருந்தது. பின் மகிழன் மேல் இருந்த நம்பிக்கையால் ஒன்றும் ஆகாது என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு உறங்க சென்றால்.
அடுத்த நாள் மகிழன் சொண்ணது போல குமரனிடம் பொய் சொல்லிவிட்டு , மகிழனின் காரில் கிளம்பினாள். காரில் வேடிக்கை பார்த்தபடி மகிழ்ச்சியாகவே இருந்தால் இது இவளின் முதல் கார் பயணம். காரில் ஒரு மணி நேரம் பயணம் பின்னே அந்த வீட்டின் முன் வந்து நின்றது .
வீடு இல்லை பங்கள என்று சொன்னால் கரைட்டா இருக்கும். அந்த வீட்டின் முன் புறம் முழுக்க வண்ண பூக்களால் தோட்டம் போல் அமைந்திருந்தது, வீட்டின் பின் புறம் கடல் இருந்தது கடலின் இரைச்சல் அந்த உப்பு காற்று என ரசித்த படி இருந்த சுடரை பார்த்த மகிழன் “ அப்பறம பெருமையா கூட ரசிச்சிக்கோ இப்போ டைம் ஆச்சி எல்லாரும் வெயிட் பண்றாங்க” என்று வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
பெண்கள் ஆண்கள் என இருபது பேர் இருந்துருப்பார்கள் அதை பார்த்தே சிறிது நிம்மதி அடைந்தாள் சுடர் .
பின் கேக் வெட்டி உணவு உண்டு எல்லாம் அவசர அவசரமாக நடந்தது. ஏன் என்று மகிழன் இடம் கேட்டால் “ எல்லாருக்கும் வர்க் இருக்குமா சீக்கரம் போனுமா“ என கூற, பின் சுடர் ஒன்றும் கேட்டுக்கொள்ள வில்லை பின் அனைவரும் கடைசியாக ஜுஸ் குடித்தது மட்டுமே நினைவு இருந்தது .