சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான் சுடரிடம் இல்லை . அதற்கு காரணம் ஆனவனோ அருகில் அமர்ந்த படி சிரித்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தான் அதில் மேலும் கடுப்பாகிய சுடர் வாயை சுளித்த வாரு முகத்தை திருப்பி கொண்டாள்.
சற்று நேரம் முன், தான் பிடித்த நண்டை தவற விட்ட கோபத்தில் ஏதோ சொல்லி திட்ட வர அதற்குள் அவர்களை நோக்கி நிர்மளவின் காதலன் வருண் வந்து “ சீனியர் எப்படி இருக்கிங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சி “ என பேச அதற்கு மகிழன் “ நல்ல இருக்கன், ஆமா நீ இங்க என்ன பன்ற “ என கேள்வியுடன் பார்த்து விட்டு சுடரை , உனக்கு இவனை தெரியுமா என்பது போல திரும்பி பார்க்க, சுடர் அவனை கண்டுகொள்ளவே இல்லை . அதற்குள் இவர்கள் பேசுவதை பார்த்து அங்கே அனைவரும் வர, வருண் அனைவரையும் அறிமுகம் படுத்தி வைத்தான் .
பின்பே மகிழன் ஆஸ்வாசம் அடைந்தான் , வருண் மகிழனை பார்த்து “ தனியா-வா வந்திங்க சீனியர் “ இதை கேட்ட மகிழன் பின் திரும்பி சற்று தொலைவில் இருந்து அவனையே பார்த்து கொண்டு இருக்கும் அவன் நண்பர்களை ஒரு முறை பார்த்து விட்டு “ இல்லை தனியா தான் வந்த சும்மா கடல்ல கால் நனைச்சிட்டு போலாம்னு “ என வாய் கூசாமல் பொய் கூறி பின் அவனே “ மே ஐ ஜாயின் வித் யூ “ என கேட்க அனைவரும் “எஸ் வாங்க “ என அவனையும் அமர்ந்து பேச அழைக்க ,அவன் சுடர் அருகே போய் அமர்ந்து அடி கடி அவளை திரும்பி திரும்பி பார்க்க சுடராள் அங்கே அமர முடிய வில்லை .
சுடரை தவிர அங்கே அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தன. பின் அனைவரும் சேர்ந்து அருகில் இருக்கும் ஹோட்டல் சென்று உணவு உண்டு விட்டு அருகில் இருக்கும் தேட்டர்க்கு சென்று வீட்டுக்கு கிளம்பலாம் என பேசி கொண்டனர்.
அங்கு இருந்த ஒரு வரும் சுடரிடம் ஒரு பேச்சுக்கு கூட போகலாமா என்று கேட்க வில்லை . ஏன் நேகா இவள் பக்கமே திரும்ப வில்லை அதிலேயே சோர்ந்து போனால்.
இவர்களுடன் மகிழனும் வருவதாக ஒத்துக்கொள்ள வருணை கையில் பிடிக்க முடியவில்லை ஏன் என்றால் மகிழன் குடும்பம் வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியில் சேரும் பொருட்டு அவனிடம் நட்பாக பழகி ஆக வேண்டும் அவனுக்கு. அதை புரிந்து கொண்டது போலவே மகிழனும் அதில் தற்போது அவன் பணி புரிவதாக பேசி கொண்டு இருந்தான் .
அனைவரும் பீச்சை விட்டு சாலை நோக்கி நடந்து செல்ல அப்பொழுதும் நேகா அவள் அருகே வர வில்லை . இதை பார்த்து சுடர் முகம் வாடி தனியே அவர்கள் பின்னே பொருமையாக தள்ளி நடந்து வந்தாள் . இதை கவனித்த மகிழன் வாய் ஓயாமல் பேசி கொண்டு வந்த வருணிடம் கண் காட்டி விட்டு சுடர் உடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான் . மகிழன் உடன் நடப்பதையும் கவனிக்காமல் நேகாவை பார்த்தபடி நடந்தால் . இதை பார்த்த மகிழன் ரொம்ப குளோஸ் போல என முனங்கியவாறு வந்தான்.
பின் அனைவரும் மெயின்ட் ரோட் அருகே வந்தனர் எப்பவும் போல சுடர் நேகா கைகளை பிடிக்க செல்ல அதற்குள் அனைவரும் ரேட் க்ராஸ் பண்ண சுடர் திகைத்து நின்று விட்டால் .
மனதில் போராட்டம் நேகாவும் தன்னை விட்டு சென்றது போல ஒரு வின்பம். இந்த பெரிய உலகில் தான் மட்டும் தனியே நிற்பது போல தோற்றம் அந்த சாலையை பார்த்த படி மனம் தந்தையையும், தாயையும் தேடியது .
மூளைக்கு புரிந்தது இருவரும் இல்லை என்று ஆனாலும் மனதில் ஒரு வலி, கத்தி அப்பா என்று கூப்பிட தோன்றியது . பின் தைரியத்தை வர வழைத்து ரோட் க்ராஸ் செய்ய போக திடீர் என்று அவளை நோக்கி பைக் ஒன்று வர அதை பார்த்து கால்கள் நகர வில்லை அப்படியே நின்று விட்டால்.
அப்பொழுது ஒரு கை வந்து இவளை பிடித்து இழுக்க ஒரு நிமிடம் கண்கள் கலங்க “அப்பா …” ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அங்கே நின்றதோ மகிழன், ரோட்டின் ஓரம் சாலையை கடக்காமல் சாலையை வெறித்த படி தன் நண்பர்கள் அழைப்பதையும் கண்டுக்காமல் நிற்கும் இவளையே பார்த்த படி அருகில் நின்று இருந்த மகிழன் பின் இவளே ரோட்டை க்ராஸ் பண்ணும் போது வண்டி வருவதை பார்த்து அசையாமல் நிற்பதை கண்டு வேகமாக அவளை பிடித்து இழுத்தான்.
சுடர் கண்கள் கலங்க இவனை பார்த்து ஏதோ சொன்னால் அது என்ன வென்று புரியாத போதும் , தானாக அவன் கை உயர்ந்து அவள் தலை வருடி “ஒன்னும் இல்லைட பயப்படாத சரியா” என்று சொல்லி அவல் கைகளை பிடித்து ரோட் க்ராஸ் செய்தான் . பின் அவல் கைகளை விட்டு தள்ளி நிற்க நேகா சுடர் அருகே வந்து அவள் கைகளை பிடித்த வாரு “ சாரி டி , ஏதோ நியாபகம் அதான் உன்னை கவனிக்கல “ என மண்ணிப்பு கேட்க சுடர் ஒரு சிரிப்புடன் தலையை அசைத்தாலே தவிர வேரு எதுவும் பேச வில்லை .
பின் அனைவரும் ஹோட்டல் நோக்கி நடக்க சுடர் மகிழனை அடிக்கடி திருப்பு பார்த்து கொண்டே நடந்தால் . அவளை பார்த்த மகிழன் என்ன என்று தலை ஆட்டி கேட்க ,அதற்கு சுடர் அவன் அருகே சென்று “ உங்க பேர் என்ன “ என கேட்க அதை கேட்டு ஒரு விரிந்த புன்னகையுடன் “மகிழன் “ என்று கூறி பின் “ ஆமா நீ என்ன க்ளாஸ் படிக்கிற “ என இருவரும் பேசிய வாரு மகிழ்ச்சியுடன் நடந்து சென்றன.
பாசனத்திற்காக ஏங்கி அதை பிறரிடம் தேடுவது தவர் இல்லை, அந்த பாசத்தை தகுதி இல்லாதவர்களிடம் கேட்டு நிற்பது தான் தவறு, இதை அரிய சுடர் கொடுக்க போகும் விலை .