மனம்கொள்ள காத்திருந்தேன்!

8

உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர்.

தீக்ஷி, முன்பே, சந்துரு.. அதாவது அவர்களது அறைக்கு சென்றுவிட்டாள். அஹ.. அவளிடம் வடிவேலு மட்டும் வந்து சொல்லிக் கொண்டு கிளம்பினார்.. மற்ற உறவுகள் எல்லாரும் நாசூக்காக.. அப்படியே விடைபெற்று கிளம்பினர்.

அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு.. பெண்ணை பார்க்க சுந்தரம் மேலே வந்தார்.. ஷிவா ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவாக செய்திருந்தான். சுந்தரத்திற்கு சந்தோஷம்.. ‘எந்த குறையும் வைக்காமல் ஷிவா இப்படி எல்லாம் எடுத்து செய்வதும்.. அவனின் அன்னை ஒதுங்கிக் கொண்டாலும்.. பொதுவில் சபையில் என் பெண்ணை விட்டுக் கொடுக்காமல்.. எல்லாம் செய்கிறானே ஷிவா’ என நிம்மதி வந்தது. இனி.. சந்துருவின் மூலம்.. அவளுக்கான மதிப்பு விந்துவிடும் என நிம்மதியானார் பெண்ணை பெற்றவர்.

தீக்ஷிதா, தந்தையை பார்த்ததும்.. ஒரமாக சேரில் அமர்ந்திருந்தவள் எழுந்து அவரின் அருகே வந்து நின்றாள். இப்போது தனியே இருக்கவும் கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்தது.. யாரின் பேச்சுகளும்.. பார்வையும் அவளின் மேல் விழாததால்.. கொஞ்சம் தெளிந்திருந்தாள் பெண்.

தீக்ஷி “ப்பா.. சாப்பிட்டீங்களா” என்றாள்.. 

சுந்தரம் “ம்.. லேகா, உனக்கு கொண்டுவந்து உணவு கொடுத்தாளா” என்றார்.

தீக்ஷி “ம்.. ப்பா..” என்றாள்.

தந்தைக்கு அலங்காரமில்லா மகளின் நிலை ஒரு கேள்வியை விதைத்தது அவருள்.. ‘மருமகன்.. ஏதாவது எண்ணிக் கொள்ள போகிறான்.. அவன் எதிர்பார்ப்போடு இருப்பானே..’ என எண்ணம் வந்தது. எப்படி மகளிடம் சொல்லுவது.. ‘என்னமா இது.. முதலிரவில் இப்படி புடைவை.. அலங்காரம் இல்லாமல் இருக்கிறாயே? என கேட்பது’ என தயங்கி அவளையே பார்த்துக் கொண்டு நின்றார்.

தீக்ஷி “நாளைக்கு காலையில் எத்தனை மணிக்கு நம்ம வீட்டுக்கு போகனும்ப்பா.. லேகா அண்ணி கேட்டு சொல்றேன்னு சொன்னாங்க” என வினவினாள்.

சுந்தரம்.. “ஒன்னும் அவசரமில்லம்மா.. காலையில் நல்ல நேரம் பார்த்து உனக்கு.. மெசேஜ் அனுப்புகிறேன்.” என்றவர்.. பெண்ணின் தலைகோதினார்.

பின் பெண்ணின் கண்களை பார்க்காமல் “மாப்பிள்ளைகிட்ட பார்த்து நடந்துக்கோ டா.. உனக்கு இனி அவரின் மேல்தான் அதிக அக்கறை இருக்கணும்.. க்கும்.. என்னை லதா, எப்படி கவனித்துக் கொள்ளுகிறாலோ அப்படி நீ இருக்கணும் டா.. புரியுதா..” என சொல்லி.. மகளின் முகத்தை லேசாக பார்த்தும் பார்க்காமல் பார்த்தார்.

ஏனோ அவளின் முகத்தில் புன்னகையில்லை.. ஒருமாதிரி டென்ஷனாக இருந்தது.. தந்தை “அப்பா இதெல்லாம் சொல்லகூடாதோ.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எல்லாம் புரியும்” என சொல்ல சொல்ல.. மகள் தன் மூக்குகண்ணாடியை கழற்றி கையில் எடுத்துக் கொண்டே.. அப்பாவின் தோள் சாய்ந்துக் கொண்டாள்.

இருவரும் ஏதும் பேசவில்லை.. சுந்தரம் 55வயது தோற்றம்.. நடுத்தர தேகம்.. மைபூசிய அடர் கேசம்.. குழப்பத்தினை மறைத்துக் கொள்ளும் கண்கள்.. உதடுகளில் மட்டும் வஞ்சனையில்லாமல் சிரித்து.. பேசி.. மனதை மறைத்துக் கொள்ளும் கலை கற்றவர் என்பதால்.. மகளிடம் மட்டும் சற்று.. உடைந்திடுவார், பலநேரம். என் தவறு.. இவளை பாதிக்கும்.. இப்படி வாட்டும்.. என தெரிந்திருந்தால்.. அப்போதே.. அவளை வேறு எங்கேனும் அடைகாத்திருப்பேனே என எண்ணாத நாளில்லை சுந்தரம்.

ஆனால், விதி எப்போதும் வலியதுதானே. அதுதானோ என்னமோ இந்த பதினான்கு வருடமாக வத்தைத்துவிட்டது அவரை, அதைவிட அவர் மகளை.

தீக்ஷி “அப்பா, நீங்க மட்டும்தானே எனக்கு சொல்லமுடியும்.. கேட்டுகிறேன். நெக்ஸ்ட்,  கவலையே படாதீங்க.. உங்க அக்கா பையனை.. கண்கலங்காமல் பார்த்துக்கிறேன்” என்றாள் புன்னகையோடு.

சுந்தரன் “ஷ்.. ஷ்.. என்ன டா இது பேச்சு, புதுசா இருக்கு” என்றார்.

தீக்ஷி புன்னகைத்தாள்.

தந்தை அந்த புன்னகையை பார்த்தவர் திருப்தியானார்.. “புடவை கட்டிக் கொள்ளவில்லையாடா.. பூ இன்னும் கொஞ்சம் வைச்சிக்க்லாமில்ல” என்றார் தயங்கிய குரலில்..

தீக்ஷி என்னதான் வளர்ந்தவள்.. எல்லாம் தெரியும் என்றாலும்.. சிலபல.. பழைய கோர்ட்வோர்ட்ஸ்’களுக்கு அர்த்தம் தெரியவில்லை. தன் சல்வாரை குனிந்து பார்த்துக் கொண்டு.. “அண்ணிதான், எல்லா சம்பர்தாயமும் முடிந்தது.. நீ ட்ரெஸ் மாற்றிக்கோ.. ப்ரீயா இருன்னு சொன்னாங்க..” என்றாள்.

சுந்தரம் தலையசைத்து கேட்டுக் கொண்டார்..

இப்போது ரமேஷ் வந்தார் “மோகன்.. அப்பா மோகன்.. வா ப்பா.. வெளியே” என்றார் கிண்டல்  குரலில், அறையின் வாசலில் நின்றுக் கொண்டு அழைத்தார்.

மோகன் மகளின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு.. விலக.. மகள் தன் பின்னோடு வரவும் சின்ன குரலில் “நீ இங்கேயே இரு..” என கைகாட்டி சொல்லிவிட்டுப் புன்னகையோடு வெளியே சென்றார்.. அறையின் கதவை சாற்றிக் கொண்டு.

சற்று நேரத்தில் சந்த்ரகேசர் வந்தான் அறையின் கதவினை திறந்துக் கொண்டு.. அவன் இன்னமும் போர்ம்ல் உடையில் இருந்தான்.. முழுக்கை சட்டை.. ப்பீச் நிற கார்கோ பேண்ட்.. கழுத்தில் செயின்.. கையில் பிரேஸ்லெட்.. வாட்ச்.. ஸ்ட்ரோங் பெர்ப்யூம் வாசத்தோடு.. கண்களில் மட்டும் ஜீவன் இருந்திருந்தால்.. புதுமாப்பிள்ளையாகவே.. தெரிந்திருப்பான் நம் கண்களுக்கு. பாவம் மனது, குழப்பத்திற்கும் தெளிவிற்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருக்க..  மனையாளை தனியறையில் சந்திக்க வந்துவிட்டான்.

ஆண், ஒரு குடும்பத்தினை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் இந்த.. திருமணத்தில் தொடங்குகிறது. நிறைய சம்பாத்தியம்.. அதைவிட அதிக அன்பு.. திட்டமிடல்.. குடும்ப ஒழுக்கம் என எல்லாம் ஆண்களால் கட்டமைக்கப்படுகிறது.. அப்படி அவர்கள் சரியாக கட்டமைத்துவிட்டால்.. எங்கும்.. அவர்கள் நிமிர்ந்து நிற்கலாம். பலர் இந்த பொறுப்புகளை உணர்வதேயில்லை.. ஆனால், சந்துருவிற்கு.. இது திருமணத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இப்போது, சம்பாத்தியம் ஓகே.. ஆனால், அன்பு. ‘தன்னோடு வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள.. வந்துவிட்டாள் ஒருத்தி.. அஹ..’ என ஒரு பெருமூச்சோடுதான் உள்ளே வந்தான். 

தீக்ஷி லாப்டோப் பார்த்துக் கொண்டிருந்தவள்.. கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவள்.. சந்துரு என தெரிந்து எழுந்து நின்றாள்.

சந்துரு “ஹாய்” என்றபடி உள்ளே வந்து கதவினை சாற்றினான்.

தீக்ஷி “ஹாய்..” என சொல்லி என்ன சொல்லுவது என தெரியாமல்.. எழுந்து  நின்றாள்.

சந்துரு அவளை பார்க்க.. சாதாரண ஒரு சல்வார்.. தலையில் கொஞ்சம் மல்லிபூ.. கழுத்தில்.. மஞ்சள்கயிறு.. சின்னதாக கழுத்தினை ஒட்டிய செயின் அவள் எப்போதும் அணிவது.. கையில் ப்பெர்ஸ்லெட்.. அவ்வளவுதான். இயல்பாக தன்னறையில் நின்றிருந்தாள். சந்துருவிற்கு, அஹ்ப்பாடா என திருப்தி.

“என்ன படம் பார்க்கிறீயா” என்றான்.. காலையிலிருந்து தன்னுடனேயே நிற்கிறாள்.. அவ்வபோது பேச்சுகள் இருந்ததே அவர்களுக்குள்.. சிலபல பார்வை பரிமாற்றங்களும் இருந்ததில் கொஞ்சம் பழகியிருந்தான். அதனால், இயல்பாக பேச முற்பட்டான்.

தீக்ஷி “இல்ல.. லேக்ட்சர் ஒன்னு பார்த்துட்டு இருக்கேன்” என்றாள்.

சந்துருவிற்கு முகம் இறுகியது ‘படிக்கிற பெண்’ என நினைவு வந்தது. “ம்.. இதோ வரேன்” என.. சொல்லி, தன் கப்போர்ட் திறந்து உடைகளை எடுத்துக் கொண்டு.. வெளியே சென்றான்.. தன் தந்தையின் அறையில் குளிக்க என.

இலகு உடையில் மீண்டும் அறைக்கு வந்தான் சந்துரு.. தீக்ஷி, இன்னமும் சேரில் அமர்ந்து டேபிளில்.. இருந்த லேப்டாப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் மீண்டும் அறிமுக புன்னகை செய்துக் கொண்டனர்.

சந்துரு  கண்ணாடி பார்த்து.. மீண்டும் ஒருமுறை.. சிகையை வாரிக் கொண்டு.. போனினை எடுத்துக் கொண்டு.. நின்றான். கட்டிலில் அமர தயக்கம்… முல்லை ரோஜா என மலர்களாக இருந்தது.. பார்க்க அழகாக.. ஏசியில் அதன் மணம்.. மனதை மயக்க.. சந்துரு  ரசனையான புன்னகையோடு தன் அறையை நோட்டமிட்டான்.. பொக்கே.. பஞ்ச்ஆப் பல்லூன்ஸ்.. பெட்டில் மலர் தூவி.. என ரொமாண்டிக் போர்மெட்டில் தன் அறை.. மனதில் ‘இன்று உன்கடன்.. இந்த பணி செய்ய அல்ல டா..’ என தனக்குள் அதே புன்னகையோடு சொல்லிக் கொண்டே போனினை அருகிலிருந்த சின்ன டேபிளில் வைத்தான்.

தன் மெத்தை விரிப்பினை அப்படியே மலர்களோடு கட்டி எடுத்து வைத்தான் கப்போர்டில். எதோ வெளியே வைக்க.. மனதில்லை.. அதனால் வைத்தான் கப்போர்ட்டில்.

தீக்ஷிதாவிற்கு என்ன நடக்கிறது என பார்க்க ஆசை.. ஆனால், எப்படி பார்ப்பது என ஒருமாதிரி இருந்தது. அதனால், நடப்பதை ஏதும் கண்டுக்கொள்ளலாமல் கண்டுக் கொண்டிருந்தாள்.

ஆனால், இப்படி விரிப்பினை எடுக்கவும்.. சத்தத்தில் திரும்பி பார்த்தாள் பெண்..

சந்துரு “அஹ.. இது.. தூங்க முடியாதில்ல.. அதான்” என சொல்லிக் கொண்டே காப்போர்ட்டில் வைத்தான். பின் வந்து கட்டிலில் அமர்ந்தான்.. “உனக்கு டைம் ஆகுமா..” என சொல்லிக் கொண்டே.. ப்ளாஸ்கில் இருந்த பால் எடுத்து இரண்டு கப்களில் உற்றினான்.

தான் ஒன்று எடுத்துக் கொண்டு.. தீக்ஷியிடம் கொண்டுவந்து கொடுத்தான்.

தீக்ஷி “தேங்க்ஸ்” என்றாள்.

இருவரும் பருகினர்.

பெண்ணவளுக்கு.. நெட் சரியாக வரவில்லை.. போல “வைப்வை.. இருக்கா” என்றாள்.. அவனை பார்த்து திரும்பி.

சந்துரு “ம்.. ” என சொல்லி. அவளின் லேப்டாப் நோக்கி குனிந்தான்.

தீக்ஷி சேரினை சற்று நகர்த்திக் கொண்டாள்.. அவனின் அருகாமையை எதிர்பார்க்கவில்லை.. “நான் மோடம் வைச்சிருக்கேன்.. ஆனாலும், ஏனோ சரியாகவே கனெக்ட் ஆகலை..” என சொல்ல சொல்ல..

சந்துரு “ இருக்கு.. சர்ச் பண்ணு.. சந்த்ருலேகா’ன்னு வரும்.. பாஸ்வோர்ட்..” என சொல்ல தொடங்கினான்.. படபடவென.. 

தீஷிக்கு, சட்டென ஸ்பெஷல் பான்ட்ஸ் எல்லாம் வரவில்லை.. வ்ரோங் பாஸ்வோர்ட் என வந்தது. சந்துரு இரண்டுமுறை சொன்னான்.. அப்போதும் அவளுக்கு சரியாக வரவில்லை.. படபடப்பானது.. பெண்ணவளின் விரல்கள்..  “ஸ்லொவ்.. வா சொல்லுங்க” என்றாள்.

சந்துரு அவளை புன்னகையோடு முறைத்துவிட்டு “மூவ்..” என சொல்லி.. சந்துரு அவளின் லேப்டாப்’பில் வேலையை பார்க்கத் தொடங்கினான்.. இரண்டு நொடிகள்தான்.. அவளின் பின்னிலிருந்து தன் கைகளை.. டேபிள் மேலிருந்த லாப்டாப்பில் கொண்டு வந்து பாஸ்வோர்ட் போட்டான். முதல்முறை அவனுக்கும் வ்ரோங் எனத்தான் வந்தது..

சந்துருவின் கவனம்தான் கீபோர்ட்டில் இல்லையே.. பெண்ணின் அருகாமை அவனை மயக்கியது.. அவளின் பிரத்யேக நறுமணம்.. மல்லிபூ.. சின்ன பொட்டு.. தான்கட்டிய தாலி என.. அவன் தன் கண்களை அவளிடம் வைத்திருந்தான்.

இப்போது தீக்ஷி நிமிர்ந்து முறைக்க.. இருவருக்கும் நெருக்கமான  பார்வைகள் பரிமாறிக் கொண்டது.. சந்துரு.. நிமிர்ந்திருக்கும் அவளை.. நெருக்கத்தில் பார்த்தான்.. செதுக்கியிருந்தது மூக்கும் உதடுகளும்.. மின்னியது கன்னங்கள்.. நீண்ட கழுத்தில்.. தன் தாலி.. கணவனாக.. காதல் கொண்டான் சந்துரு.. அவளிடம். பார்வையை நகர்த்த முடியவில்லை.. அவனுக்கு. பெண்ணவளுக்கும் அப்படியே.

தீக்ஷி சட்டென எழுந்தாள்.. சந்துருவும் சுதாரித்துக் கொண்டு.. வேலையில் கவனமானான்.. “சேவ் செய்துக்கோ.. இரு.. கனெக்ட் ஆகிடும்” என சொல்லி அவளுக்கு எல்லாம் செய்துக் கொடுத்து.. நின்றான் அங்கேயே.

வேலை முடியவும்.. “ஒகே.. பாரு..” என சொல்லி.. கட்டிலில் சென்று அமர்ந்துக் கொண்டான், அலட்டிக் கொள்ளாமல்.

தீக்ஷிக்குதான் அதன்பின் வேலையே ஓடவில்லை.. போராடிப் பார்த்தாள்.. மனம் திரையில் ஒன்றவில்லை.. முப்பது நிமிடத்தில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

சந்துரு.. ஹெட்செட்டோடு.. போனில் கவனமாகயிருக்க.. பெண்ணவள் வந்து கட்டிலில் அமர்ந்ததை கவனித்தவன்.. பார்த்தான் அவளை. என்ன சொல்லுவது என தெரியவில்லை.. அமைதியாக மீண்டும் போனில் கவனமானான்.

தீக்ஷி.. அமைதியாக தன்னிடத்தில், இழுத்து போர்த்திப் படுத்துக் கொண்டாள். இயல்பாக இருக்க முடியவில்லை இருவராலும். முயன்று.. பழகிக் கொள்ளலாம்.. இயல்பாகிக் கொள்ளலாம் என எண்ணினாலும்.. ஒரு தடுமாற்றம்.. திணறல்.. சட்டென நிரப்பமுடியவில்லை இந்த சூழ்நிலையை. ஆனால், உயிர்ப்பாக இருந்தது. பெண்ணவளின் மனது படபடவென அடித்துக் கொண்டது.. ஆண்மகனின், கண் அவளை ஆராய்ந்த்துக் கொண்டிருந்தது.. அவள்.. நெளியவும்.. லைட் ஆப் செய்தான் சந்துரு. எதிர்பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.. ‘இது போதும்.. இதே பிணைப்பு.. இதே இடைவெளி.. இதே புன்னகை.. போதும்.. எந்த பிரச்சனையும் இல்லாமல் அவள் படிப்பு முடியும் வரை.. இதுவே போதும்’ என எண்ணிக் கொண்டு.. புது மணமகன் மூச்சினை சீராக்கிக் கொண்டு உறங்க முற்பட்டான்.

மறுநாள் எல்லோரும் கிளம்பி தரமணி வந்தனர்.. பெரிதான வீடு.. இன்னமும் அடுக்கடுக்காக கட்டிக் கொண்டே போகலாம்.. இடம் நிறைய இருந்தது.. முன்னும் பின்னுமாக வீட்டை சுற்றிலும். 

அட்டானஸ் போட்டிருந்தனர்.. சுற்றிலும்.. அதைத்தவிர.. கார்டன் ஏரியாவில்.. டேபிள் போட்டிருந்தனர், உணவுக்கு என. மணமக்களுக்கு என விருந்தினர் அறை ஏற்பாடு செய்திருந்தனர். 

சந்துரு தீக்ஷியை பார்க்க எல்லோரும் வந்திருந்தனர். உறவுகள்                                        நண்பர்கள்.. அக்கம்பக்கம் என வந்திருந்தனர். விருந்தினை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர் வடிவேல் மற்றும் சுந்தரன் இருவரும்.

தீக்ஷி, ஏனோ வெளியே அதிகம் வரவில்லை.. அறையிலேயே இருந்தாள். சந்துரு.. வெளியேதான் இருந்தான்.. வந்தவர்கள் எல்லோரும் அவனிடம் வந்து நின்று பேசி.. அறிமுகமாகிக் கொண்டிருந்தனர். சிலரை நேற்று பார்த்த நினைவிருந்தது.. சிலரை தெரியவில்லை.. சந்துரு சுமூகமாக் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தான். லேகா, வந்து தம்பியின் அருகே அடிக்கடி நின்றுக் கொண்டாள்.

ஷிவா, அங்கே இல்லை. அவனுக்கு வேலைகள் இருக்க.. காலையில் அலுவலகம் கிளம்பிவிட்டான் என்றார் அவளின் வருங்கால மாமனார்.

லேகா, தீக்ஷியிடம் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.. ஆனால், தீக்ஷியால்.. முன்போல.. சிரித்து பேசமுடியவில்லை.. அண்ணியிடம். முதல் காரணம் இந்த வீடு.. அடுத்த காரணம் தன் பெரியம்மா.. அம்மா இருவரும்தான். அவளுக்கு இந்த வீடு இப்போது புதிது. நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது இந்தவீட்டிற்கு வந்து அவள். இப்போது திருமணம் என்பதால்.. அவளை இங்கே அனுமதித்திருக்கின்றனர். ம்.. சில எழுதப்படாத சட்டங்கள் அவளுக்கு இங்கே உண்டு. 

தீக்ஷிக்கு, எப்போதடா.. இந்த விருந்து முடியும்.. நான் என் வீட்டிற்கோ அல்லது.. அவர் வீட்டிற்கோ செல்லுவேன் என இருந்தது. அதிலும் அடிக்கடி லேகா, வந்து “வா. தீக்ஷி.. வெளிய வா..” என்பது ஒருமாதிரி சங்கடமாக இருந்தது பெண்ணுக்கு. அதனால், படிப்பது போல.. அறையில் அமர்ந்துக் கொண்டாள்.. பேசாமல்.

லேகாவிற்கும்.. புரிகிறது.. என்னமோ இருக்கிறது.. வீட்டு பெண்களுக்கும் இவளுக்கும் நடுவில் என. தன்னிடம் எல்லோரும் நன்றாக பேசுகிறார்கள்தானே.. ஏனோ தீக்ஷியிடம் மட்டும் என்னவாகிற்று என சந்தேகம் உண்டு இந்த நாட்களில். ஆனால், யாரிடம் கேட்பது என தெரியவில்லை. சின்ன பெண்ணிடம் ‘என்னவென’ கேட்க்க முடியவில்லை.. இன்னமும் நெருக்கம் வரவில்லை. அதனால், பேசிபார்க்க முற்பட்டாள் லேகா. தோல்விதான். 

ஷிவா, மதியம் உணவு நேரத்திற்கு வந்தான்.. சந்துரு தீக்ஷி இருவரையும் உண்பதற்கு அழைத்து வந்தான். ஏதும் பேசிக் கொள்ளவில்லை மூவரும். என்னமோ மௌனமாகவே உண்ணுமிடம் வந்தனர்.

சந்துருவிற்கு, ஷிவாவை தெரிந்துக் கொள்ள ஆசை. அவனுருகில் இயல்பாக அமர்ந்தான். ஷிவா, எந்த சந்தேகமும் கொள்ளவில்லை.. வீட்டு மாப்பிள்ளையை முறையாக கவனித்தான்.. இது நல்லா இருக்கு.. எத்தனை நாள் லீவ்.. என வினவினான்.. எப்படி அலுவலகம் செல்லுவீர்கள் என பொதுவான விஷயங்களை இயல்பாக பேசினான் ஷிவா. லேகாவிற்கு இதை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

உண்டு முடித்ததும்.. தீக்ஷி தன் தந்தையிடம் “அப்பா.. எப்போ கிளம்புவது இங்கிருந்து” என்றாள்.

சுந்தரன் “இரும்மா.. மாலையில்தானே செல்ல முடியும்.. ஓய்வெடுக்க வேண்டாமா மாப்பிள்ளை” என்றார்.

தீக்ஷிக்கு என்னமோ போலிருக்க.. சென்று படுத்துக் கொண்டாள். சந்துருவை கண்டுக் கொள்ளவில்லை. 

கிட்டத்தட்ட இரவுதான்.. தீக்ஷி சந்துரு இருவரும் கிளம்பினர், சந்துருவின் அப்பார்ட்மெண்ட்க்கு. சந்துரு காரில் வரும்போதுதான் மனையாளை திரும்பி பார்த்தான்.. அவனுக்கு அவளை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசை. ஆனால், கேட்க தயக்கமாக இருந்தது.

சந்துரு “என்ன ஆச்சு.. பேஸ் டல்லா இருக்கு.. தூக்கம் வருதா” என்றான்.

தீக்ஷி “ம்கூம்..” என்றாள்.

சந்துரு “சீட் ரெலீஸ் செய்து தூங்கு திக்க்ஷிதா” என்றான்..

பெண்ணவள் தன் பெயரினை அழுத்தி உச்சரிப்பவனை திரும்பி பார்த்தாள்.. “திக்க்ஷிதா..வா.. தீக்ஷிதா” என திருத்தினாள்.

சந்துரு “ம்கூம்.. திக் திக்.. திக்க்ஷிதா” என்றான் விளையாட்டாக.

புன்னகை வரும் போலிருந்தது பெண்ணுக்கு “அஹ.. அவ்வளோ பயப்படுத்துகிறேனா” என்றாள்.. தலைசாய்த்து.. கணவனையே இமைக்காமல் பார்த்து.

சந்துரு அவளை திரும்பி நொடிநேரம் பார்த்துவிட்டு.. பின் சாலையில் கவனமாகி.. “ம்கூம்..” என்றான் தலையசைத்து.

தீக்ஷிதா “ம்.. அந்த பயம் இருக்கணும்.. பாட்டு போடுங்க” என்றாள் விளையாட்டாக.

சந்துருவும் அப்படியே செய்தான்..

“உன் விழிகளில் 

விழுந்த நாட்களில்.. 

நான் தொலைந்தேனே..

அதுவே போதுமே.. 

வேர்றேதுவுமே வேண்டாமே அன்பே..”