அத்தியாயம் – 34

அர்ச்சனாவிற்கு, இப்படி தனியே அறையில் தங்கப் போகிறோம் என்றதுமே, மனதினில் ஒரு இனிய படபடப்பு எழுந்தது தான். அதுவும் அச்சுதன் அவனின் நண்பர்களோடு பேசிய அரட்டை பேச்சுக்களை எல்லாம் காணவும், இன்னமும் மனதிற்குள் ஒரு வெம்மை படர்ந்தது தான்.

எதுவும் வாய் மொழியாய் சொல்லாமல், அவள் மெல்ல நகர அச்சுதனுக்கும் அப்படித்தானே இருக்கும். அதுவும் இதோ, அவன் அவளது கை பற்றி இழுத்து, அவன் மீதே மோதி நிற்க வைக்க, அர்ச்சனாவோ திடுக்கிட்டு பார்த்தாலும், அவள் முகத்தில் ஒரு மோகனப் புன்னகை எழாமல் இல்லை.

“எங்க போற நீ?!” என்று அச்சுதன் கேட்க,

“எ.. எங்கயும் இல்லை…” என்று சொல்வதற்குள்ளே அவளுக்கு அத்தனை திணறல்.

ஏற்கனவே மழையில் நனைந்து வந்ததிலும், அறையில் ஏசி ஜில்லிப்பிலும் அவளுக்கு குளிர் எடுத்திருக்க, இப்போது அச்சுதனின் அருகாமையோ அவளின் இமைகளை படபடக்கச் செய்து, இதழ்களை நடுங்கச் செய்ய,

“என்னோட இரு அர்ச்சு..” என்றவன், அவளை தன் மடியில் அமர்த்தி, இடையோடு கரம் சேர்த்தணைத்து, அர்ச்சனாவின் ஈர கூந்தலை வாசம் பிடித்து, அவளது முதுகில் முகம் வைத்துக்கொள்ள,    

“அ.. அச்ச்.. அச்சத்தான்..” என்றாள் திணறியே.

“ம்ம்..” என்றவனோ, அதற்குமேல் எதுவும் பேசாமல் அப்படியே இருக்க,

“எ.. என்ன பண்றீங்க?” என்று அவள் கேட்ட கேள்விக்கு, அவன் என்ன செய்கிறான் என்பதனை வார்த்தைகளால் சொல்ல,

“அச்சோ..!” என்று இரு செவிகளையும் மூடிக்கொண்டாள்.

அச்சுதனுக்கு அவளின் செயல்கள் எல்லாம், மேலும் அவளின்பால் இழுக்க “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்?” என்றான் உல்லாச குரலில்.

“ம்ம்ச் போங்க நீங்க…” என்று நெளிந்தவள் “இப்படித்தான் பேசுவாங்களா?” என்று கேட்டுக்கொண்டே, எழுந்துகொள்ளப் பார்க்க,

“நீ இப்படி எல்லாம் நெளிஞ்சா, நான் என்ன செய்றது?” என்று கிறக்கமாய் கேட்டபடி, அவளை தன் பக்கம் திருப்பி, அப்படியே மடியில் அமர்த்திக்கொள்ள,

“அச்சத்தான்…!” என்றாள் கண்கள் விரித்து.

“என்ன அர்ச்சனா?” என்று கேட்டவனின் முகத்தில் நேர்கொண்டு அவளால் பார்க்க முடியவில்லை.

கணவன் தான்.. அதுவும் காதலித்து மணந்தவன்.. அவனோடான கற்பனைகள் அவளுக்கு எத்தனையோ இருக்கிறது. ஆனாலும், இதோ அவனின் மீது இருபுறமும் கால் போட்டு, அவன் மடியில், அவன் முகம் பார்த்து அமர்ந்திருக்க, அவளால் தாளத்தான் முடியவில்லை.

இடையோடு கரம் சுற்றிப் போட்டிருந்தவனோ, மேலும் தன்னோடு இறுக்கி அவளை அமரச் செய்ய  “அச்சத்தான்…” என்று குரலே எழும்பாமல் சொன்னவள், கண்களை மூடிக்கொள்ள,

“ஓய்! என்னைப் பாரு…” என்றான்.

“ம்ம்ஹூம்…” என்று அவள் வேகமாய் தலையை ஆட்ட,

“நீ பார்க்கலன்னா, எத்தனை நேரமானாலும் இப்படித்தான் நீ இருப்ப…” என்றவனின் கரங்கள் அவளது ஆடைக்குள் அத்துமீற,

வேகமாய் கண் திறந்தவளுக்கு, பேசவும் தோன்றவில்லை. அவன் கரத்தில் உடல் குழைய, உள்ளமோ இன்னும் இன்னும் என்று எதிர்பார்க்க, மெதுவாய் அர்ச்சனாவின் கரம் அவன் கேசம் கோத, இதுவே அவனுக்கு அவளின் சம்மதத்தின் அறிகுறி தானே.

கண்களால் கேள்வி தொடுக்க, அர்ச்சனாவோ மெல்ல அவனின் நெற்றி தழும்பில் தன் இதழ் பதிக்க, அச்சுதனின் அணைப்பு இறுகி, அர்ச்சனாவின் கழுத்தில் முகம் பதித்து, வாசம் பிடிக்க, அர்ச்சனா மொத்தமாய் தன்னிலை இழக்க,

“அச்சத்தான்…” என்று அவள் கிறங்கி அழைத்த அந்த அழைப்பே, அவனும் இன்னும் மோகத்தீயை மூட்ட, இன்னுமென்ன தயக்கம் என்று இருவருமே எண்ணினாரோ என்னவோ, இருவருக்கும் மனதினில் இருந்த சிறு சிறு தயக்கங்களும் காணமல் போக, காதலா, காமமா என்று கண்டறியமுடியாத நிலை தான் இருவருக்கும்.

ஆனால் இந்த கூடலில் அர்ச்சனா ஒன்றும் மட்டும் உணர்ந்தாள்.

‘உன் அளவுக்கு காதல் எனக்கிருக்கா தெரியலை. ஆனாலும் உன்னை  எனக்கு பிடிச்சுத்தான் இந்த கல்யாணம் அர்ச்சனா..’ என்றவனுக்கு, மனதினில் காதல் இல்லாமல் இத்தனை அழகாய் தன்னோடு கூட முடியாது என்பது மட்டும் நன்கு புரிந்தது.

அவனது தீண்டல்களும், பார்வையும், மோகம் கூடி, காமம் மிஞ்சி, காதலாய்  அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாமே, அவளை அவனோடு அதிகமாய் ஒன்றச் செய்ய, எப்போது உறங்கினர் என்றுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.

நல்ல ஆழ்ந்த உறக்கம் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது இருவருமே மாறி மாறி முழித்துப் பார்த்தும் கொண்டனர் தான். ஆனால் ஒருவர் மாற்றி ஒருவர் கண் விழித்துப் பார்த்துக்கொள்ள, மற்றவரின் உறக்கத்தை கண்டு ரசித்தும்கொள்ள,

நள்ளிரவிற்கு மேல் அச்சுதனுக்கு உறக்கம் வரவில்லை.

பசி வேறு அப்போதுதான் தெரிந்தது.

இரவு உணவுதான் அவர்களுக்கு இல்லையே. அர்ச்சனாவோ, அப்போதுதான் புரண்டு படுத்திருக்க, போர்வையை நன்கு போர்த்திவிட்டவன், தானும் ஆடை உடுத்தி, ஜன்னல் பக்கம் வந்து பார்க்க, மழை விட்டிருந்தது.

அர்ச்சனாவை ஒருமுறை திரும்பிப் பார்த்தவனுக்கு அவனுக்கே தெரியாமல் இதழில் புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்க, தலையை கோதிக்கொண்டான். பின் என்ன நினைத்தானோ, கண்ணாடி முன்னே வந்து நின்று பார்க்க, அவள் அன்று சொன்னது நினைவில் வந்தது.

‘உங்க முகத்துல முக்காவாசி தாடியும், தலைமுடியும் தான்..’ என்று சொன்னது.

முகத்தை அப்படி இப்படித் திருப்பி, கண்ணாடியில் பார்த்தவன், கண்ணாடி வழியே தெரியும் அவளையும் பார்க்க, அர்ச்சனாவும் அப்போது தான் கண்விழித்திருந்தாள்.

அச்சுதனும் தன்னைப் பார்க்கிறான் என்றதுமே, வேகமாய் போர்வையை இழுத்து தன் முகத்தை மூடிக்கொள்ள, அச்சுதனுக்கு இன்னும் புன்னகை விரிந்து “இப்போ நீயா முகத்தை காட்டலன்னா, பெட்ஷீட் எடுத்து விட்ருவேன்..” என்று சொல்ல, வேகமாய் முகம் காட்டி அவனைப் பார்க்க

“இப்போ வெட்கப்பட்டு என்ன பிரயோஜனம்?” என்றவன் அவளின் பக்கமாய் வர, அவளது பார்வை எல்லாம் அவனிடம் தான் இருந்தது.

“என்ன அப்படி ஒரு பார்வை…” என்று கேட்டதுமே, மீண்டும் முகம் மூடிக்கொள்ளப் பார்க்க, அவனோ அதை தடுத்து, அவள் கரம் பற்றிக்கொள்ள, அர்ச்சனாவிற்கு நிஜமாய் இந்த நேரத்தில் என்ன பேச என்று தெரியவில்லை.

அச்சுதனுக்குமே மனதினில் ஒரு நிறைவு இருக்கத்தானே செய்தது. திருமணம், அதனோடான தன் வாழ்வு என்பதெல்லாம் கானல் நீர் என்று அவன் எண்ணியிருக்க, இதோ இப்போதோ அவன் மனம் அறிந்து, அவனை நேசிக்கும் ஒருத்தி அவனுக்கு வாழ்க்கைத் துணையாய்.

அச்சுதனின் பார்வை அவளை நிறைவாய் காண, அவளுக்கும் அவனது எண்ணவோட்டங்கள் புரியாமல் இல்லை. ஆனாலும் இந்த மௌனம் அவளுக்கு என்னவோ செய்ய, கண்களில் குரும்பைக் காட்டி “நீங்க என்கிட்டே கேட்கவே இல்லை..” என்றாள் விஷமமாய்.

அவள் முக பாவனைப் பார்த்தே, எதோ சீண்டுகிறாள் என்று கண்டுகொண்டவன், லேசாய் கண்களை சுறுக்கி “என்ன கேட்கலை?!” என்றான்.

“ஹ்ம்ம்.. அன்னிக்கு சொன்னீங்க தானே.. என்னால உன்னை செட்டிஸ்பை பண்ண முடியலைன்னா என்ன பண்றதுன்னு சொல்லித்தானே, மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க. இப்போ கேட்டிருக்கணும் தானே..?” என்று அவள் கேட்க,

அவள் என்ன கேட்க வருகிறாள் என்று அவனுக்கும் புரியாமல் இருக்குமா என்ன?!

அர்ச்சனாவை இழுத்து தன் மீது சாய்த்துக்கொண்டவன் “ம்ம்.. என்ன கேட்கணும்?” என்று திரும்பக் கேட்க,

“ம்ம்ச் அச்சத்தான்…” என்றாள் உதடு பிதுக்கி.

“சொல்லு அர்ச்சனா என்னகேட்கணும்…?” என்று திரும்பக் கேட்க,

“ஆர் யூ செட்டிஸ்பைட்ன்னு கேட்டு இருக்கணும் தானே..” என்றவளுக்கு திரும்ப குரலே எழும்பாமல் போக,

“ம்ம்ம் மறந்துட்டேன்…” என்றவனின் அணைப்பு இறுக “ஓய்..!” என்றாள்.

“நீதானே கேட்கலன்னு பீல் பண்ற அர்ச்சனா…” என்றவனை இதழ் அவளது செவியில் உரசிக் கொஞ்ச,

“அதுக்கு…” என்றாள் கொஞ்சம் விலகி.

“நெக்ஸ்ட் ஒன் டைம்..” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டி, அவளது காதில் ரகசியம் பேசியவன் “அப்போ கேட்கிறேன்…” என்று சொல்ல,

“அச்சோ..!” என்று வாயில் கை வைத்துக்கொண்டவளின் கரமும் அவனை அணைத்தே இருக்க, இதோ மீண்டும் ஒரு கூடல் அங்கே.

அடுத்து பொழுது விடிந்து போயிருக்க, இருவருமே நல்லதொரு உறக்கத்தில் இருக்க, அறையினுள் வெளிச்சம் பரவியது எல்லாம் அவர்களுக்குத் தெரியவே இல்லை.

அச்சுதனுக்கும், அர்ச்சனாவிற்கு அலைபேசி விடாமல் மாறி மாறி ஒலிக்க, இருவருமே அந்த சத்தத்தில் தான் எழுந்தனர்.

நீலவேணி தான் அழைத்திருந்தார். இரவு வீட்டிற்கு வரும் சூழ்நிலை இல்லை என்று சொல்லியிருக்க, இதோ விடிந்தும் கூட இத்தனை நேரமாகியும் இன்னும் அழைப்பு இல்லை என்றதும் மகனுக்குத் தான் முதலில் அழைக்க, அவன் எடுக்கவில்லை என்றதுமே, அர்ச்சனாவிற்கு அழைக்க என்று இருக்க, இருவருமே கண் விழித்துப் பார்க்க, மணி காலை எட்டு.

“ஷ்! லேட்டாகிருச்சு அச்சத்தான்…” என்று அவள் வேகமாய் எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்துகொள்ள,

அச்சுதனோ நீலவேணிக்கு அழைத்து “ம்மா கிளம்பிட்டு இருக்கோம். வந்திடுவோம்…” என்று சொல்லிவிட, அடுத்த சில நேரத்தில் இருவருமே கிளம்பிவிட்டனர்.

காரில் பயணம் செய்கையில், இருவர் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு.

வீடு வந்து சேரும் போது, அங்கே வீட்டிலோ சுரேந்திரனும் சுமிதாவும் இருக்க “வாங்க சித்தப்பா.. சித்தி..” என்று வரவேற்க,

அர்ச்சனாவும் அவர்களை வரவேற்றவள் “நேத்து போட்ட ட்ரெஸ் அத்தை.. ட்ரெஸ் மாத்திட்டு வந்திடுறேன்…” என்று நீலவேணியிடம் மெதுவாய் சொல்லிவிட்டு, அறைக்கு சென்றுவிட, அச்சுதன் சுறேந்திரனோடு பேசிக்கொண்டு இருக்க,

சுமிதா, டைனிங் டேபிளில் அனைவருக்கும் டிபன் எடுத்து வைத்துக்கொண்டு இருந்த நீலவேணியிடம் “அக்கா.. ரெண்டு பேரும் இன்னும் ஹனிமூன் போகலை தானே…” என்று கேட்க,

“அவங்களா கிளம்புவாங்கன்னு பார்த்தேன்..” என்றார் நீலவேணி.

பேச்சு இங்கே இருந்தாலும் பெண்கள் இருவரின் பார்வையும் அச்சுதன் மீது இருக்க, அவன் மலர்ந்த புன்னகையோடு சித்தப்பாவிடம் பேசுவதைப் பார்த்தே, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “அவங்களா கிளம்புற மாதிரி தெரியலை.. நீங்களே அனுப்பிவிடுங்க…” என்று சுமிதா சொல்லி சிரிக்க,

“அர்ச்சனா வரவும் நீயே தான் கேளேன்…“ என்றார் நீலவேணியும் எதோ புரிந்த சிரிப்பில்.

அர்ச்சனா உடைமாற்றி அவளும் டைனிங் டேபிள் வந்துவிட “அப்புறம் அர்ச்சனா எல்லாம் ஓகே தானே…” என்றார் சுமிதா.

“ம்ம்.. என்ன? என்ன அத்தை..” என்று கேட்டவளின் முகத்தில் ஆங்காங்கே லேசாய் சிவந்திருக்க,

“இல்ல.. நேத்து விசேசம் எல்லாம் ஓகே தானே? நல்லா கவனிச்சாங்களா?” என்று சுமிதா கேட்க,

“ம்ம்..” என்று தலையை உருட்டி வைத்தவளுக்கு, பெண்கள் இருவரின் பார்வை புரிந்துவிட்டது.

இதோ இப்போது உடைமாற்ற செல்லும் போது, இப்போதுதானே அவளும் தன்னை நன்றாய் பார்த்துக்கொண்டாள். எல்லாம் அவன் கொஞ்சலின் அடையாளங்கள் தான். இப்போதோ அவளுக்கு வெட்கத்தோடு சேர்ந்து, சங்கடமும் ஒட்டிக்கொள்ள “அ.. அர்ஜூன்.. பவஸ்ரீ… எல்லாம் கிளம்பிட்டாங்களா?” என்று பேச்சை மாற்ற,

“கிளம்பிட்டாங்க.. இங்கதான் சாப்பிட்டு போனாங்க.. இன்னிக்கு கோவில் போலாம்னு இருந்தோம். அக்காவையும் கூட்டிட்டு போலாம்னு தான் வந்தோம்..” என்று சொல்ல,

“ம்ம் சரிங்கத்தை…” என்று தலையை ஆட்டிக்கொண்டாள்.

“நீயும் அச்சுதனும் கூட வரலாம் தானே…” என்று நீலவேணி கேட்க,

“அது.. அவரோட ப்ளான் என்ன தெரியலையே அத்தை…” என்றிட,

“அக்கா ஹனிமூன் போகவேண்டிய நேரத்துல கோவிலுக்கு கூப்டிட்டு இருக்கோம்..” என்று சுமிதா கேலி பேச, அர்ச்சனாவிற்கும் வெட்கப் புன்னகை தான் விரிந்தது.

பேச்சுக்கள் இப்படியே நீண்டு, அடுத்து அனைவரும் உண்டுவிட்டு நீலவேணியும் அவர்களோடு கோவிலுக்கு கிளம்ப, அச்சுதனும் அர்ச்சனாவும் வீட்டினில் இருக்க, அர்ச்சனா கேள்வியாய் பார்த்தாள்.

“என்ன சொன்னாங்க, அம்மாவும் சித்தியும்?” என்று கேட்க,

“ஹனிமூன் போலையான்னு கேட்டாங்க…” என்றாள்.

“ஓ!” என்றவன் கண்களால் நகைத்து “சொல்லவேண்டியது தானே ஹனிமூன் தான் முடிச்சிட்டு வந்தோம்னு..” என,

“அடடா… அவங்க என்னைப் பார்த்தே தெரிஞ்சிருப்பாங்க…” என்றவள்,

“கடைக்கு போலையா?” என்றாள்.

“கிளம்பனும்.. பேங்க் போற வேலையும் இருக்கு…” என்றவன், அவளை திரும்ப அணைத்து, இதழ் பதித்தே செல்ல, வீட்டினில் அர்ச்சனா மட்டுமே இருந்தாள்.

என்னவோ அவளுக்கு எங்கும் செல்ல பிடிக்கவில்லை.

பிறந்தகம் அழைத்து அனைவரோடும் பேசியவள், வெறுமெனே வந்து கட்டிலில் விழுந்துகொண்டாள். மனதிற்குள் பல பல எண்ணங்கள். அனைத்துமே அவளுக்கு சந்தோசம் கொடுப்பதாகவே இருக்க, அடுத்த சில நேரத்திலேயே நீலவேணி வீடு வந்துவிட, மருமகள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பது பார்த்தவர்

“என்ன அர்ச்சு.. நீயும் வெளிய போயிருப்பன்னு நினைச்சேன்…” என்றார்.

“இல்ல அத்தை போகலை.. இன்னொரு ப்ராஜக்ட் எடுக்கணும். இந்த வீக் எண்ட்ல இருந்து வேலை ஸ்டார்ட் ஆகிரும்..” என,

“சரிம்மா…” என்றவர், மருமகளின் முகம் பார்த்து “சந்தோசமா இருக்கு அர்ச்சனா…” என்றார்.

“ஹா..! என்ன அத்தை..” என்று கேட்க,

“உன்னோட பொறுமை தான் இப்போ உங்க கல்யாணம் நடக்கக் காரணம்..” என்று பேச,

“பொறுமையா?! எனக்கா?!” என்றாள் அர்ச்சனா.

“பின்ன இல்லையா?!” என்று நீலவேணி கேட்க “உங்க மகன் மனசு மாறினதுனால மட்டும் தான் அத்தை எங்க கல்யாணம் நடந்திருக்கு. அவரும் எல்லா வித எண்ணங்களும் இருக்குதான். ஆனா தனுஜா சூழ்நிலை.. அடுத்து அவர் சந்திச்ச சில கசப்பான அனுபவங்கள் எல்லாம் தான் அவர் கல்யாணம் வேண்டாம்னு சொல்ல காரணம்…” என்று பேச,

“தனுஜான்னு சொல்லவும் தான் நியாபகம் வருது அர்ச்சு.. அவங்கப்பா அன்னிக்கு என்னவோ சொன்னார், தப்பெல்லாம் எங்க மேலதான் அப்படின்னு. ஆனா அச்சுதன் எதுவுமே சொல்லலை.. உனக்கு எதுவும் தெரியுமா?” என்று கேட்க,

“அதுவா அத்தை..” என்றவள் அன்று தனுஜாவின் அப்பா அவர்களின் ஜோசியர் சொன்னதை சொல்ல

“ஹ்ம்ம்…” என்று ஒரு பெரும்மூச்சு விட்டார் நீலவேணி.

“என்ன அத்தை?” என்று கேட்க,

“என்ன சொல்றதுன்னு தெரியலை.. இப்போ கூட, அனிதா மாமனார் உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கலாம்னு தான் சொன்னார். ஆனா அச்சுதன் தான் வேண்டாம்னு சொல்லிட்டான். மனசு பொருத்தம் இருக்கு போதும் சித்தப்பான்னு சொல்லிட்டான்…” என,

‘மனசு பொருத்தம்…’ என்ற வார்த்தைகள் அவளுக்கு அப்படியொரு மகிழ்வை கொடுத்தது.

காதலை இதைவிட வேறெப்படி சொல்ல முடியும்?!