திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது.
தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில் சொந்தங்கள் யாருமில்லை.
வசந்தி.. லதாவின் உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் கொஞ்சம் கலவையான உணர்வுகள்.. அவர்களின் கண்களுக்கு எப்போதும் திக்ஷி காட்சிப் பொருள்தான்.
சுந்தரம், வந்திருந்தவர்களை வரவேற்று.. பேசிக் கொண்டிருந்தார். தன் மனைவியும் உடன் நின்றால்.. நன்றாக இருக்குமே என.. கண்களால் அடிக்கடி மானையாளை பார்த்தார்.. ம்கூம்.. அவர் கணவன் பக்கமே திரும்பவில்லை.. தன் சொந்தங்களோடு அமர்ந்திருந்தார். சொந்தம் என்பது
ரமேஷின் உறவுகள் எல்லோருக்கும் குறுகுறுப்பு.. தாய்தந்தை இருக்கும் போது.. அவர்கள்தானே தட்டுமாற்ற வேண்டும் என ஒரு கேள்வி பரவலாக எழுந்தது. ரமேஷின் சித்தப்பாதான் பெரியவர்.. அவர், தன் அண்ணன் மகனிடம் “என்ன டா.. இது” என்றார்.
ரமேஷ் “இவர்கள்தான் வளர்த்தார்கள்.. அத்தோடு இதில் என்ன இருக்கு சித்தப்பா.. முன்பெல்லாம் பழக்கத்தில் இருந்த நடைமுறைதானே.. பெரியவர்கள்தான் சபையில் நிற்பார்கள்..” என்றார்.
ஆனால், பெரியவருக்கு இந்த பேச்சு சமாளிப்பாகவே இருந்தது “என்னமோ செய்ங்க..” என்றார்.
ஆனாலும் உறவுகளின் மத்தில் எதோ பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.
சந்துருவின் காதில் விழுகிறது.. என்னவென்று முன்போல எதிர்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை. குழப்பம்தான் இருக்கிறது. கோவமெல்லாம் ஷிவா மேல் திரும்பியது. எங்கே அவன் என கண்கள் தேடியது.
ஷிவாவினை காணோம். இன்னுமும் வரவில்லை அங்கே. ‘தங்கைக்காக அப்படி உருகிறான்.. அவளின் நிச்சம்.. இன்னும் காணோம் அவனை.. இந்த லேகு வேற.. வாசலையே பார்த்துகிட்டு நிக்குது’ என பொருமிக் கொண்டிருந்தான் தனக்குள்.
லேகா இருக்கும் போது சந்துருவிற்கு ஏன் திருமணம் என ரமேஷின் உறவுகள் கேள்வி கேட்கவும்… லேகாவிற்கு ஷிவாவிற்கும்.. அதாவது, திக்ஷியின் அண்ணனுக்கும் திருமணம் உறுதி செய்திருக்கிறோம் என சொல்லிவிட்டார் ரமேஷ்.. அதனால், நல்லவிதமாக பேச்சுகள் எழுந்தது அங்கே.
இப்போது விழா தொடங்கியது. தீக்ஷிதாவையும் சந்துருவையும் சேர்ந்து அமர வைத்தனர். மேடையில் ரமேஷ் லேகா.. பெரியவராக ரமேஷின் சித்தப்பா.. சித்தி, ரமேஷின் அக்கா மாமா.. என சந்துருவின் பக்கம் இருந்தனர்.
ஷிவா, வந்தான் இப்போதுதான். உறவுகளில் தெரிந்தவர்கள் எல்லோரும்.. வரவேற்றனர். தன் தாய்மாமா.. லதாவின் சொந்தங்கள் என எல்லோரிடமும் புன்னகைத்து பேசிக் கொண்டே வந்தான். எதோ விருந்தாளி போல.. முதல் வரிசையில் ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டான்.
லேகா வீட்டு ஆட்களுக்கு அவனை தெரியாதே.. ஏன்? ரமேஷ்.. சந்துரு.. லேகா என எல்லோரும் ஒருமுறை பார்த்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.. மாப்பிள்ளை என வரும் போது.. பேசி பழகியிருக்க வேண்டுமே.. அந்தவகையில் உறவாடவில்லை இன்னும் இங்கே. அதனால், அவன் வந்தது தெரியவில்லை.
வடிவேலுதான் “ரமேஷ் மாப்பிள்ள.. பாரு, உன் மாப்பிள்ளை வந்திருக்கான்” என்றார், சின்ன குரலில் சங்கடமாக.
ரமேஷ், சொன்னதை கேட்டு.. நிமிரும் போதுதான்.. ஷிவா இருப்பதை பார்த்து “வாங்க மாப்பிள்ளை..” என்றார் கைகூப்பினார்.
அப்போதும்.. ஷிவா எழுந்துக் கொள்ளவில்லை.. தானும் கைகூப்பி.. தலையசைத்து அமர்ந்துக் கொண்டான். அந்த அழுத்தம் அழகாகவே இருந்தது. மாடல் போல.. ஜம்மென இருந்தான்.
லேகாவின் முகம் வாடி போனது. பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டிருந்தாள். முதல்முறை.. ஷிவாவை பார்க்க போகிறோம், அதேநேரம்.. தம்பியின் நிச்சய விழா.. அதனால், அளவான அலங்காரம்.. மென்பட்டு.. கொஞ்சம் வெட்கம்.. நிறைய பொறுப்பு.. அதிலும் பரபரப்போடு.. எல்லா வேலையும் அவளே பார்த்தால்.. கொஞ்சம் டென்ஷனாக இருந்தால்.. இப்போது ஷிவா வந்திருக்கிறான் என நிமிரவும்.. கவனிக்கவில்லை அவன்.. எனவும் மனது அமைதியை இழந்தது.
இப்போதும் சந்துரு இதை உள்வாங்கிக் கொண்டான்.. தன்னிடம் பேசவில்லை.. முகமன் கூறவில்லை.. என்பதால், தானும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அத்தோடு லேகாவையும் பார்க்கவில்லை.. ஷிவா, என பதிந்தது.
தீக்ஷியும் அப்படியே எந்த உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். ஷிவாவை கவனிக்கவில்லை.. சந்துருவின் கண்களுக்கு இதெல்லாம் தப்பவில்லை.
ஐயர் லக்ன ஓரை வாசித்தனர். திருமண தேதி அடுத்த மாதத்தில் என முடிவானது.
இரு வீட்டாரும் சம்மதம் என தட்டுமாற்றிக் கொண்டனர். வடிவேலு தாம்பூல தட்டினை வாங்கி.. தன் தம்பி சுந்தரேசனிடம் கொடுத்தார்.. நிதானமாக வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு.. தட்டினை கீழே வைத்தார்.
மோதிரத்தினை எடுத்து.. சந்துருவின் கையில் கொடுத்தார்.. வேண்டதலோடு.. அப்படியே தன் மகளின் கையிலும் கொடுத்தார்.
சந்துரு, எந்த உணர்வினையும் முகத்தில் காட்டாமல் வாங்கிக் கொண்டான். பெண்ணவளும் அப்படியே. என்னமோ இருவரின் முகத்திலும் எந்த புன்னகையும் இல்லை.. வருத்தமும் இல்லை.. ஒருமாதிரி துடைத்து வைத்தது போன்று கலையே இல்லாமல் இருந்தது முகம்.
சந்துரு, தனக்கு சரியென பட்டதைதான் செய்வான். மனம் ஒத்துவரவில்லை என்றால்.. அவனால் அதை தொடர முடியாது. அதற்காக பிடிவாதமாக இருப்பான்.. உண்ணாமல்.. பேசாமல்.. என இருந்து தன் காரியத்தை சாதித்துக் கொள்வான்தான்.
ஆனால், தன் மனது ஒத்துக் கொள்ளாத.. தன் எதிர்காலத்தை முற்றிலும் முடக்க கூடிய இதனை.. செய்கிறான் இப்போது. ஒதுங்க முடியவில்லை.. லேகாவின் வாழ்க்கையும் இதில் இருக்கிறதே.. அதனால், ஒத்துக் கொண்டு.. இப்போது நிச்சயம் வரை வந்துவிட்டது.
வடிவேலு “எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்குங்க” என்றார் இருவரையும் பார்த்து.
சந்துருவும் தீக்ஷியும் அப்படியே செய்தனர். வடிவேலு வசந்தியிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள் தம்பதி.
அருகே ஷிவா நின்றிருந்தான்.. விரிந்த புன்னகியோடு கை நீட்டி “சந்துரு தீக்ஷி வாழ்த்துகள்” என்றான்.. மூன்றாம் மனிதன் போல.
தீக்ஷி அதே புன்னகையோடு “தேங்க்ஸ் அண்ணா..” என சொல்லி அண்ணைனை லேசாக அனைத்து சொந்தம் கொண்டாடினாள். பார்க்கவே கொஞ்சம் நாடகபாணியில் இருந்தது சந்துருவிற்கு. ஆண்கள் இருவரும்.. அமைதியாக தலையசைத்து நகர்ந்துக் கொண்டனர்.
அடுத்து தம்பதி, சுந்தரேசன் லதா காலில் விழ.. லதா, எந்த பாவனையும் காட்டவில்லை.. வாய்திறந்து ஆசீர்வாதம் செய்யவில்லை.. தீக்ஷி குனிந்து எழும் முன்.. நகர்ந்துவிட்டார், போனில் பேசுவது போல.. சந்துரு, குழம்பினான்.
சுந்தரன்.. தன் மாப்பிள்ளையின் கைபிடித்து “மாப்பிள்ளை.. யாருக்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எனக்கு நீங்க ஹம்சாவின் மகன் என்பதால்தான் என் பெண்ணை கொடுக்கிறேன், பிடிவாதமாக.” என்றவர் சுற்றிலும் லேசாக பார்வையை சுழற்றிவிட்டு.. “என்ன நடந்தாலும்.. என் பெண் உங்கள் பொறுப்பு மாப்பிள்ளை.. எனக்கிருந்த கவலையே இவள்தான். பார்த்துக்கோங்க. தீக்ஷி, குழந்தை மாப்பிள்ளை.. பாவம் என்னால்தான் இவ்வளவு கஷ்ட்ட்படிக்கிறாள்” என்றார் உணர்ச்சி மிகுதியில்.
தீக்ஷி “டாட்” என்றாள் சலித்தபடி.
சுந்தரன் சங்கடமாக ஒரு புன்னகையை சிந்தி “மாப்பிள்ளை.. போங்க.. பிரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க.. பாருங்க..” என்றவர் “தீக்ஷிம்மா, இனிதான் பொறுப்பா இருக்கணும். உனக்கு இனி இவர்தான் கார்டியன்.. மாப்பிள்ளையிடம் எதிர்த்து பேசாத.. அவர் சொன்னால் கேட்கனும் டா” என்றார், இனிமையான குரலில்.
தீக்ஷி “அப்பாதான் எப்போதும் எனக்கு கார்டியன்..” என அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டு.. “இது என்னோட பார்ட்னர்..” என்றாள்.. சந்துருவை பார்த்து.
சுந்தரன் அதிர்ந்து “தீக்ஷிம்மா.. கவனமாக பேசுடா.. நீ பொறுப்பா இருக்கனும்ன்னு இப்போதானே சொன்னேன்” என்றார்.
சந்துரு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. எதோ குழந்தையை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பும் தந்தையின் நிலையைத்தான் சொல்லியது.. சுந்தரனின் முகம்.
ஆனால், பாவம் அவனுக்கு குழப்பமே தீரவில்லை.. வேடிக்கைதான் பார்த்தான். இது என்னவிதமான பேச்சுகள்.. என ஆராய்ச்சியோடு நின்றான்.
இந்த குழப்பங்கள் எல்லாம் தவிர்த்து பார்த்தால்.. தந்தை மகள் இருவரையும் பார்ப்பதற்கு.. ஹைக்கூ கவிதை போல.. சின்ன சந்தோஷத்தை தந்தது, அவனுக்கு. மனது இதமாக இருந்தது.. இவர் ஒருவராவது என் அன்னையின் மகன் என என்னை நம்பிகிறாரே.. நான் நல்லதுதான் செய்திருக்கிறேன் என இதமானது மனது.
நண்பர்கள் பரிசுகள் கொடுத்துனர்.. கேக் கட் செய்து.. என மேடையில் இளையவர்கள் எதோ பேசி விளையாடி கொண்டிருந்தனர். ஆனால், சந்துரு அமைதியாக லேகாவை தேடிக் கொண்டிருந்தான். அவன் நண்பர்களை அழைக்கவில்லை அடுத்தமாதம் திருமணம் அதனால், அப்போது கூப்பிட்டுகொள்ளலாம் என இருந்தான்.