விடியல் 11

குமரன் தீபாவை பார்த்து” இனிமேல் ஆவது இங்கேயே எங்க கூட இருப்பியா-ம்மா எனக்கு என்னமோ உன்னை மட்டும் தனியா விட்டுட்ட மாதிரி இருக்குமா “ என கலங்கி பேசினான்.  தீபா “ இல்லை மாமா அது உங்களுக்கு தெரியும்ல நான் இருக்க வீட்டு ஓணர் ரோட சூழ்நிலை ,அது சரி ஆகுர வர அங்க இருக்கனே மாமா ப்ளீஸ் “ இதை கேட்ட குமரன்” இந்த மாசம் மட்டும் தான் டைம் அது குள்ள எல்லாம் முடிச்சிடனும், ஓகே” என்று சொல்லி விட்டு  உறங்கி விட்டான்.

  சுடர் தீபாவிடம் கதை பேசிக்கொண்டே சமைக்க தொடங்க அவளுக்கு காய்கறி நறுக்கிய வாரு இவள் மீண்டும் முகம் கவசத்தை அணிய அதை பார்த்த சுடர் “ ஏன் அக்கா அதை போட்டுடே இருக்க “

“அது வேலைல போட்டு பலகிடிச்சி, என்ன செய்ய “என சமாலித்து வைத்தாள் .

பின் மூவரும் உண்டு விட்டு, குமரன் உறங்க, சுடர் மற்றும் தீபா ஹாலில் அமர்ந்த வாரு “ அக்கா நீயே போய் வேந்தன கூட்டிட்டு வரியா ,அவன் உன்னை பார்த்தா ஷாக் ஆகிருவான் “

“ஆன எனக்கு வழி தெரியாதே நீயும் வாயேன் “

“ போன்ல மேப் போட்ட வந்துறோம்,  இங்க தான் பக்கத்துல  இருக்கு போய் கூட்டிட்டு வந்துரு “

 தீபா தலையை ஆட்டிய படி எழுந்து தன் முக கவசத்தை அணிய போக , சுடர் அதை பிடுங்காத குறையாக வாங்கி “எதோ கர்ணன் கவச குண்டலம் மாதிரி இத போட்டுட்டே சுத்துற,  இதை போட்டுட்டு போன பூச்சாண்டினு உள்ள விடாம போய்ட போறாங்க,  சரி டைம் ஆச்சி நீ கிளம்பு க்கா நான் அவுங்க மிஸ் கிட்ட இன்பார்ம் பண்ணிறன்” என சொல்ல அதற்கும் தலையை உருட்டிய படி சென்றாள்.

போன் பார்த்து நடந்த தீபா மனதில் “ இங்க இருக்க யாருக்கும் என்னை தெரியாது , பயப்படாத,  பீ ஸ்டாங் தீபா “

 என்று மந்திரம் போல் சொல்லிக்கொண்டு  வேந்தன் க்ளாஸ்  வரை சென்று விட்டால் ஆனால் எப்படி மாஸ்க் இல்லாமல் ஆசிரியர் இடம் பேசுவது என பயத்துடன் உள்ளே செல்ல , அவள் பயம் அவசியம் இல்லை என்பது போல இவளை பார்த்த வேந்தன் “ பெரியம்மா ….” என கத்தியவாரு  ஒடி வந்து அனைத்து கொண்டான். அப்போதே தீபாவிற்க்கு தேம்பு வந்தது,இருவரும் பின் வீட்டை நோக்கி  சென்றார்கள். வழியில் இவளுக்காக காத்திருப்பதை பற்றி அறியாமல்.

அந்த அமைதியான தெருவில் ஒரு காருக்குள் அமர்ந்திருந்தான் மகிழன்  அந்த காருக்கு எதிரே தள்ளி நாலு அடி ஆட்களை நிறுத்தி அவர்கள் கையில் வேந்தனின் புகைப்படத்தை கொடுத்து, “இந்த பையன் கூட வர பொண்ண தான் நீங்க மிரட்டனும் “ என்று சொல்லி காருக்குள் பல கனவுகள் உடன் அமர்ந்து சுடருக்காக காத்திருந்தான் ,பாவம் அவன் மறந்தது, அந்த அடி ஆட்கள் இடம் சுடரின் புகைப்படத்தை கொடுக்காமல் விட்டதை.

வேந்தனுடன் வருவது தீபா என்று தெரியாமல் மகிழன் காத்து இருக்க , அப்போது தான் தீபா கொஞ்சம் இளகு வாகி வேந்தனுடன் சிரித்த படி தலையை உறிட்டி கொண்டு வர , இவளை பார்த்த மகிழன் இது யாரு என திகைத்து நிற்க , அதற்குள் தீபாவை அவர்கள் சுற்றி வம்பு செய்து கொண்டு இருந்தனர்.

ஒரு நிமிடம் என்ன செய்ய என்று முழித்து நின்றான் மகிழன், அங்கே அதற்குள் தீபா வின் நிலைமை மோசமாகி கொண்டு இருந்தது.

இவர்களை முதலில் பார்த்த தீபா கடந்து போக நினைக்க ஆனால் அவர்களோ இவள் அருகே வர தீபா பயந்து போனால் மனதில் “ யாரு இவங்க அம்மாவ திட்ட வந்த மாதிரி என்ன திட்ட போறாங்கள அம்மா மாதிரி எனக்கும் ஆகிடுமா “ என்று  பல்வேறு எண்ணங்கள் ஓட தொடங்கியது.

 தீபாவிற்கு வேர்க்க  தொடங்கி மூச்சு விட முடியாதது  போல , தான் இருள் நிறைந்த  கடலுக்குள் இழு பட்டு செல்வது போல இருந்தது, அவர்கள் பேசுவது ஒன்றும் அவள் செவிகளுக்கு எட்ட வில்லை அவர்கள் அனைவரும் பூதம் போல் காட்சி அளித்தனர், வேந்தனின் கைகளை பிடித்தபடி கால்களுக்குள்  முகம் புதைத்து அந்த முடிவில்லா கடலுக்குள் அழம் சென்றவளை நோக்கி “ ஏய் பொண்ணே இங்க பாரு அவனுங்கள துறத்திட்டேன் இங்க பாரு “ என்று அவள் காதுகளில் கேட்டது அவனின்  சத்தம் “ அவன் குறள இது ? “ என மனதில் நினைத்த படி பெருமையாக நினைவு திரும்பி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனே தான் அது “ஹாலே பொண்ணே உனக்கு இப்போ ஓகே வா” என்று கை கொடுத்து தூக்க அருகில் இருந்த வேந்தன் தீபாவை அனைத்து  கொண்டு”  பெரியம்மா என்ன ஆச்சி” என அழுக , அதை பார்த்த தீபா “ ஒன்னும் இல்லைட செல்லம் அழாதீங்க என்று அவன் கண்களை துடைத்து விட்டு அருகே நின்று கொண்டு இருந்த ரஞ்சனை பார்த்தாள்.

ரஞ்சனுக்கு இவள் யார் என்று சரியாக தெரிய வில்லை நம் தீபா தான் மாஸ்க்கை கலட்டவே மாட்டாலே அதனால் அவள் முகத்தை இவன் பார்த்தது இல்லை, ஆனால் அந்த கண்கள் அதை பார்தே குழம்பி ஒரு வேளை தீபாவ இருக்குமோ என்றே அவளை குரு குரு வேன பார்த்தான்.

இங்கே மாஸ்க் இல்லாமல் பேசா மடந்தை ஆனால் தீபா . ரஞ்சன் அவள் பயந்து பார்ப்பதை பார்த்து “நம்ம தீபா இவ்ளோ பயப்பட மாட்டாலே ஆன அவ ஹைட்டு அந்த கண்ணு வேர “என அவன் யோசித்து கொண்டே இருக்க அவள் இவனை பார்த்து திக்கி தினறி “தாங்யூ “ என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

பின் ரஞ்சன் தனக்கு தானே “ வாய்ப்பில்லை, இது தீபாவா இருக்க வாய்பே இல்லை , ஆனா மாஸ்க் இல்லனா இப்படி தான் அழக இருப்பா போல “ என நினைத்து பின் “ ரஞ்சா சரியே இல்லை யாருன்னு தெரியாத பொண்ண பாக்க கூடாது “ என்று தலையில் தட்டி கொன்று சென்றான் .

இங்கே அப்பார்ட்மெண்ட்  கீழே வேந்தனிடம் “ இன்னிக்கு நடந்ததா யார் கிட்டையும் சொல்ல கூடாது ஓகே “

“ அது ஓகே பெரியம்மா ஆன நீங்க ஏன் பயந்திங்க, நீங்க தான் கெட்டவுங்கள அடிப்பிங்களே , அவுங்கள அடிச்சிருக்களாம்ல “ என்று பாயிண்டை பிடிக்க அதற்கு தீபா “ அது நான் மாஸ்க் போடாம அடிச்சா என்னை கூட்டிட்டு போய்டுவாங்க இந்த வில்லன்ஸ் அதான் பயந்த மாதிரி நடிச்சேன் “ என ஏதோ உப்பு பெறாத கதையை வச்சி தப்பித்தால்.

அன்று இரவு சுடரும் தீபாவும் படுத்து இருக்க அப்போது தீபா “ சுடர் நான் ஒன்னு கேட்டா கோபம் பாடமா சொல்லுவியா “

“ம்ம்ம் என்ன கேளு க்கா “

“அது நான் ரொம்ப நாள கேட்கனும் நினைப்ப ஆன எங்க உன்னை கஷ்ட படுத்திருவனோனு கேட்க மாட்டேன் “

என தயங்கி பின் தீபா “ யாரு அது உன்னை இந்த நிலைக்கு ஆக்குனது,  என்ன தான் ஆச்சி , அப்போவே எனக்கு கோபம் எவண்டா என் தங்கச்சிய இப்படி ஆக்குனதுனு ஆன இந்த மாமா தான் என்ன ஆஸ்டல் சேத்துடாங்களே “ என்று சுடர் முகம் காண  சுடர் சற்று தயங்கி “ என்னை தப்ப நினைக்காதக்கா  அது எதோ வயசு கோளாறு என தயங்க “

“சுடர் இங்க பாருமா இங்க யாரும் தப்பு பண்ணாம இல்லை, தப்புன்னு தெரிஞ்சும் சிலர் திரும்பி திரும்பி பண்றவனே வெட்க படமா சுத்துறான் நீ ஏன் தலை குனியிர” அப்போதும் சுடர் முகம் தெளியாமல் இருக்க, தீபா  “ சுடர், நான் உனக்கு யாரு தெரியுமா “

“ம்ம்ம் தெரியும், என் அக்கா “

“ம்ம்ம் கரைட்  என் தங்கச்சி தப்பு பண்ண அது தப்புன்னு சொல்லி சரியாக்க தான் நினைப்பேனே தவிர உன்னை விட்டு போகனும்-னு நினைக்க மாட்டேன் , நீ என்ன பண்ணி இருந்தாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன் நம்பு மா “ இதை கேட்ட பின்னே சுடர் சொல்ல தொடங்கினால்.