மகிழனும்,சரவணனும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் கை வைத்தவாரு “ அவ பேசுனால மச்சான்”
“என் பேர கேட்டதும் ப்ளாக் பண்ணிட்டா “ அதற்கு சரவணனோ “ஓ…. இப்போ என்ன பண்ண போர “
“தெரியல சரா “
“ஓ….தெரியலையா”
“ஹெல்ப் பண்ணு சரா “
“ஓ… ஹெல்ப் வேற பண்ணணுமா “ இதை கேட்டு கடுப்பான மகிழன் அவனை உலுக்கிய வாரு “ டேய் என்னடா எல்லாத்துக்கும் ஓ போட்டு ட்டு இருக்க “
“ஓ போடமா என்னை போய் அம்மா தாயே என் நன்பன் பாவம்னு கெஞ்ச சொல்றிய “என்று கடுப்பாக கேட்டு “ நான் பாட்டுக்கு சிவனேனு என் கேஸ் பாத்து இருந்த, கால் பண்ணி எமர்ஜென்சி உயிர் போற விசியம்னு கூப்பிட்டு, இங்க வந்த கன்னத்தில் என்னடி காயம்னு உக்கார வச்சிட்ட “
“சரி இனிமே டிஸ்டர்ப் பண்ணல இந்த ஒரு வாட்டி மட்டும் ஹெல்ப் பண்ணு “
“ ஐடிய சொன்ன பீஸ் கொடுப்பியா “
“சரியான கஞ்சூஸ்டா நீ “
“ ஆமா அப்படியே கஞ்சனாவே இருக்கேன் நீ தான் தாராள பிரபு ஆச்சே “
“சரி, தரன் நீ சொல்லு “
“அது ஒரு நல்ல ஐடியா இருக்கு கேளு , நீ என்ன பன்ற ஒரு நாலு பேர புடிச்சி சுடர் ஸ்கூல் விட்டு வர இடத்துல அவல வம்பு பன்ன சொல்லு முடிஞ்ச அவ செயின் -அ அருக்க போக சொல்லு , அப்பொ நீ கரைட்டா எண்ட்ரி கொடுத்து அவள காப்பாத்துர மாதிரி காப்பாத்து,” என்று மகிழன் முகம் பார்க்க
“நான் போய் ஹெல்ப் பண்றது குள்ள அங்க இருக்கவுங்க வந்துட்டாங்கனா?”
“மச்சான் சுடர் வீடு டூ ஸ்கூல் பொர வழியா ஒரு சைலன்ட் ரோடு இருக்கு அங்க யாரும் அவ்லோவா வர மாட்டாங்க , அப்புறம் நீ பக்கத்துலயே கார்ல இரு , ஓகே”
மகிழன் மகிழ்ச்சியுடன் சரவணனை அனைத்து “தாங்யூ டா “ என்றான். பின் நாளை நடக்க போகாத ஒன்றை என்னி கனவில் மிதந்த படி சரவணன் அழைப்பதை கூட கவனிக்காமல் சென்றான். இதை பார்த்த சரவணன் “இரு டி திரும்பி என் கிட்ட தான் சரா னு வரனும் அப்ப வைச்சிக்கிரன் உன்ன “ என்று சென்று விட்டான்.
காலை எழுந்த தீபநிலா எப்பவும் போல கிளம்ப ஆரம்பிக்க அப்பொழுது போன் அடிக்கும் சத்தம் கேட்டு யாரென்று பார்க்க போனின் திரையில் “சுடர் “ பெயர் ஒளிர “ஸ்கூல்க்கு கிளம்பாம எனக்கு ஏன் கால் பண்ற” என்று நினைத்தபடி காதில் போனை வைக்க , அங்கே சுடர் “ அக்கா மாமாக்கு உடம்பு சரியில்ல நேத்து இருந்து ஜுரம் , இப்போ வாமிட் வேர பண்றாங்க என்ன பண்ணக்க “ என்று குழந்தை போல தேம்ப “அழத சுடர் நீ என்ன பன்ற வேந்தன ஸ்கூல்க்கு அனுப்பிட்டு மாமா ஓட ஆஸ்பிட்டல் போ நான் லீவ் சொல்லிட்டு வந்துறன்.” என்று போனை வைத்து விட்டு வேலை பாக்கும் இடத்தில் லீவ் சொல்லிவிட்டு கீழே இறங்கி பாக்கிய அக்கா கதவை தட்ட, அக்கா திறந்ததும் “ அக்கா எங்க மாமாக்கு உடம்பு சரியில்ல நான் அங்க போறேன் பத்திரமா இருங்க, எதாவது-னா கால் பண்ணுங்க “ என்று சொல்லி ஸ்கூட்டியை கிளப்ப அதுவோ இன்றைக்கு எனக்கும் உடம்பு சரியில்ல என்று சதிசெய்ய, உடனே அந்த பக்கம் வந்த ஆட்டோவில் கைகாட்டி ஏறி விட்டால்.
அவள் செல்வதை பார்த்த பாக்கிய “இந்த பிள்ளைக்கு மாமா இருக்காறா என்ன, இது நமக்கு தெரியாம பேச்சே “ என கன்னத்தில் கை வைத்து புலம்பிய படி போக , இதை கேட்ட கீதா “ இவங்க கிட்டயே இரண்டு நாளா தான் பேசுராங்களாம் அதுக்குள்ள குடும்ப எஸ்டிடி-லாம் சொல்லிறனுமா ஆசைய பாரு “ என இடித்து விட்டு போக,
“எஸ்டிடி னா என்னடி எதவது ஊறா” என ஆர்வமாக கேட்க , அதை கேட்டும் கேட்காதது போல் கீதா சென்று விட “ நீ இல்லனா என்ன என் நிலா கிட்ட கேட்டுபன் போடி “ முகத்தை தோழில் இடித்து சென்றார்.
இங்கு ஆட்டோவில் சென்று இரங்கிய தீபநிலா-வுக்கு அந்த அப்பார்ட்மண்ட் உள்ளே நுழைய ஒரே தடுமாற்றம் பின் மாமா நினைவு வந்து விட்டு பெல்லை அடித்தாள் கதவை திறந்த சுடர் “அக்கா மாமா ஒரே வாமிட்ட எடுக்குறாங்க அவுங்களல எழுந்திருக்க கூட முடியல “ என்று கண்கள் கலங்க கூறி உள்ளே அழைத்து செல்ல . அங்கே கண்களை திறக்க முடியாமல் இருந்த தன் மாமனை பார்த்து ஒரு நிமிடம் பயந்து தான் போனால் தீபா .
இது வரை குமரன் உடம்பு சரியில்லை என்று ஒருநாள் கூட சோர்ந்து இருந்தது இல்லை, தீபா உறைந்து இருந்தது எல்லாம் ஒரு நிமிடம் மட்டுமே பின் நிலமை புரிந்து குமரனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று பார்க்க.
“புட் பாய்சன் ஆகிருக்கு வெளி ஃபுட் எடுக்க கூடாது லைட் -ஆ கொடுங்க , இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சி என்னோன்னு போடுவாங்க அது முடிஞ்சதும் கிளம்பலாம்” என்று சொல்லி சென்றார். எல்லாம் முடிந்து வீடு திரும்ப மதியம் ஆகி விட்டது, அது வரை சுடர் வாய் ஓயாது குமரனை இனி வேளியே உன்னவே வைக்க கூடாது என்று மீண்டும் மீண்டும் கூறி கொண்டே வந்தாள். வீடு வந்ததும் தீபா “ சரி நான் கிளம்புறேன் “ என நிற்க, உடனே குமரன் “நிலா இங்க வந்து உட்கார்”
“இல்ல டைம் ஆச்சி மாமா “ அதை கேட்டு குமரன் அவளையே உற்று பார்க்க, தீபா தன்னை போல அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தால்.
குமரன் அவளை நோக்கி “ஏன் மா நிலா இப்படி பண்ற “ என சோகமாக கேட்க , இவர்களை பார்த்த படி அங்கயே அமர்ந்து கொண்டாள் சுடர், தீபா அதற்கு” என்ன மாமா சொல்றிங்க” குமரன் உடனே
“ நான் எதா பத்தி பேசுரனு உனக்கு தெரியாத மா , சரி உன்னோட வீட்டு அட்ரஸ் சொல்லு நாங்க அங்க வரோம் “ அதை கேட்டு ஷாக் ஆன தீபா” மாமா இல்லை நான் சொல்லமாட்டேன்”
“முதல அந்த மாஸ்க கலட்டு “ என்றதும் தெனறி பின் தயங்கி கலட்டினாள் , பின் குமரன்
“ ஏன் இந்த வீட்டுக்கும் வர மாட்டிக்கிற உன் வீட்டுக்கும் எங்களை வர விட மாட்டிக்கிற நிலா, இதை பத்தி பேசினாலே கோப படுற என்ன தான் நீ யோசிக்கிற, இல்லை நீயும் மத்தவுங்க மாதிரி இந்த மாமாவ “ என பேச வரும் முன் “ மாமா” என்று தீபா கண்கள் கலங்க அழைத்து இருந்தாள்.
“அந்த வார்த்தை கூட உங்க வாய்ல இருந்து வர கூடாது மாமா, “ என தீபா சொல்ல
“சரி சொல்லல,அப்போ ஏன் நீ எங்க கூட இருக்க மாட்டேனு சொல்ற “
“நீங்க தானே மாமா எங்க கூட நீ இருக்க கூடாதுன்னு சொன்னிங்க “
“நானா? எப்போ ,” என நெற்றி சுருங்க யோசித்தான்
“ஆமா நீங்களும் என்ன அதிர்ஷ்டம் இல்லதவனு நினைச்சி எங்க கூட இருக்காதனு, ஆஸ்டல் போணு சொன்னிங்க எனக்கு தெரியும் “
இதை கேட்டு அதிர்ந்த குமரன் “என்ன சொல்ற நிலா நான் ஏன் அப்படி யோசிக்க போறேன் “
“அப்படி யோசிச்சது நாளதான் என்னை ஆஸ்டல் சேத்து நீ இங்க வர கூடாது லீவ் விட்டா கூட எதுவா இருந்தாலும் போன் பண்ணு சொன்னிங்க “
“நிலா தங்கம் , அது நான்.. நான் அதுக்கு சொல்லலடா “ என திணற
“வேற எதுக்கு மாமா, பொய் சொல்லாதிங்க எனக்கு எல்லாரும் சொன்னாங்க “ என குழந்தை போல தேம்பிய வாரு கூற,
இதை கேட்ட சுடர் நீ இல்லை க்கா எல்லாம் என்னால, என்னால மட்டும் தான் ,மாமா மேல தப்பு இல்லை “ என சுடர் ஒரு பக்கம் அழுது கொண்டே பேசினாள்
“ஏன் மாமா உன்ன ஆஸ்டல் சேத்தாங்கனா, எல்லாரும் தப்பா பேசுநாங்க அக்கா, என்னைய மாமாவ மட்டும் இல்லாமா உண்னையும் அதன் மாமா உனக்கு எதும் தெரியவேன நம்ம வேற வீட்டுக்கு போய் தீபா வ கூப்டுக்கலாம் அப்படினு நினைச்சு “ என சுடர் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தீபா அருகே வந்தாள்.
அவளை அண்ணாந்து பார்த்த தீபா “அப்போ நான் அதிர்ஷ்டம் இல்லாதவனு நீங்க நினைக்கல தானே “ இதை கேட்ட சுடர் அவளை அணைத்த வாரு “ ஏன் ஒருத்தியாள எல்லாருக்கும் கஷ்டம் “ என தீபாவை கட்டி கொண்டு அல .
இவர்களை பார்த்த குமரன் “ ரெண்டு பேரும் சும்மா இருங்க யார் மேலயும் தப்பு இல்லை “ என இருவருக்கும் அதட்டல் ஒன்று போட்டு அமைதி ஆக்கினான்.
தீபாவின் மனதில் அழுத்திய ஒரு பாரம் இறங்கியது போல இருந்தது. பல நேரத்தில் யார் யாரோ சொல்வதை நம்புகிற நாம் நமக்கு நன்றாய் தெரிந்தவர்கள் சொல்வதை நம்ப தயாராக இருப்பது இல்லை.