மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான், மகிழன் சரவணன் சொல்லபோகும் விசியத்துகாக ஆவலாக காத்திருந்தான் . சரவணனோ “ அதுக்க இருக்காது , ஒருவேள இதுக்கா இருக்குமோ , இல்லை இருக்காது “ என புலம்பிகொண்டே மகிழனை பார்த்து “ மச்சான் மகி அதுக்கு இல்லை தானே “ என கேட்க
பொருமை இழந்த மகிழன் “ டேய் சரா என்னை ரொம்ப சோதிக்குறடா நீ , ஒழுங்க என்னன்னு சொல்லுடா “ என்று ஒற்றை விரலை நீட்டி சொல்ல , இதை பார்த்த சரவணன்
“மச்சான் சுடாயிட்டான் போல , சொல்லிர வேண்டியதுதான் “ என முனுமுனுத்துவிட்டு
“ அது மச்சான் இது செட் ஆகதுடா உனக்கு அந்த சுடர்க்கு மேரேஜ் ஆகி ஒரு பைய்யன் இருக்காண்டா, ஆனா பாவம்-ட அந்த பொண்ணு “ இதை கேட்ட மகிழன் வாடிய முகத்துடன் “ ஏன் பாவம்னு சொல்ற “ என சோர்ந்த முகத்துடன் கேட்க ,அதற்கு சரவணன் “ அந்த சுடர் அஸ்பண்ட்க்கு ஏஜ் அதிகம்டா , 40 வயசு ஆகுதா அன பாக்க நல்லாதான் இருக்கான் “
இதை கேட்ட மகிழனோ எதையோ யோசித்து பின் முகம் மகிழ்ந்து இருக்கையில் இருந்து முன் வந்து “ டேய் அவன் நேம் என்னடா “
“நேம்… ஆ குமரன் ஏன் மச்சான் “ என கேட்டு முடிக்கும் முன் மகிழன் “ மச்சான் சரா …” என கத்தி அவன் கைகளை பிடித்தவாறு “ சுடர் பையன் வயசு என்னடா “ உடனே சரவணன்
“டேய் உன் குவஸ்டிங்லா எங்கயோ லீட் பண்ணுதுடா, பயந்து வருதுடா…” என அவன் பதற “ டேய் விளையாடாம சொல்லுடா “
“ அது 5 வயசு அகுதுடா” என சொன்னது தான் தாமதம் கைகளால் கண்களை மூடி “ நான் நினைச்சது கரைட், ஈ இஸ் மை சன் “ என சொல்லி, இங்கு ஒருவன் ஷாக் ஆகி இருப்பதை கண்டுக்காமல் தலையை கோதி மீசை நீவி என வேட்க சிரிப்புடன் “ பையன் பேறு என்னடா “
இதை கேட்ட சரவணன் எழுந்தே விட்டான் “டேய் நீ பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு வெட்கம் ஒன்னு தான் கேடு “ என அவன் கழுத்தை பிடித்து “ நான் அப்பவே கெஸ் பண்ண இருந்தாலும் நம்ம நண்பன் அப்படி பண்ணிருக்க மாட்டான் அப்படினு நம்புனடா “ என்று கத்த அதற்கு மகிழன் அவன் கைகளை விளக்கியபடி
“நாங்க லவ் பண்ணோம்டா, நடுவுல ஒரு பிரச்சன “ என தயங்கி நிறுத்த, சரவணன் மீண்டும் அமர்ந்தவாறு “ மைனர் பொண்ண ப்ரெக்னன்ட் ஆக்கி விட்டு போணது உனக்கு சின்ன பிரச்சனல “ என்று நக்கலாக கேட்டான்.
இதை கேட்டு முகம் கசங்கிய மகிழன் “ அது அவ அபாட் பண்ணிருவானு நினச்சேன்டா “
“இப்படி பிட்டு பிட்டா சொல்லாத அரம்பத்துல இருந்து சொல்லு “
“நானும் சுடரும் 1 இயரா லவ் பண்ணோம்டா அப்போ என் பர்த்டே பார்ட்டில நடந்த தப்புடா, என் தப்புதான் “
“தப்புன்னு தெரியுதே அதுவரை பரவால “ இதை கேட்டு சரவணனை முறைத்தவாறு “ என் நன்பன் ஒருத்தன் ஜூஸ்ல சரக்கு மிக்ஸ் பண்ணிடான்ட “
“சரி நீ தான் லவ் பண்ணியேடா அப்புறம் ஏன் பிரிஞ்சி வந்த “
“ அவ ப்ரெக்னன்ட்னு வந்தாடா, அண்ட் அந்த டைம் தான் அப்பாக்கு மினிஸ்டர் சீட் கிடைச்சுது “
“ஓ…அதவது அந்த பொண்ணு மைனர் ஆக இருக்கும் போது , ஸோ எங்க வெளிய தெரிஞ்ச அப்பாக்கும் சேத்து பிரச்சனனு ஆபாட் பண்ண சொண்ண, கரைட்டா “
“கரைட் தான் அனா அதுக்கு மட்டும் இல்லை அப்போ அவ காலேஜ் கூட படிசிருக்கல, இந்த குழந்தை காக அவ ஃபுட்சர் போகனுமானு யோசிச்சன் அதான் அப்படி சொன்ன”.
“ஓ அப்படி, சரி பிண்ணாடி அவளபோய் பாத்தியா”
“ போணன்டா அன அவ வீடு மாத்தி பொயிட்டா அவ ரிலேட்டியுஸ்க்கும் ஒன்னும் தெரியளா” என முகத்தை தொங்க போட
“சரி இப்போ என்ன பண்ண போற “
“சுடர் கிட்ட பேசி அவள மேரேஜ் பண்ணிக்கணும்டா “ என்று தீவிரமாக சொல்ல “ அப்ப ஓகே, சுடர் பையன் பேரு வேந்தன் , இப்போ இருக்க இடத்துல அண்ட் வேலை பாக்குற இடத்துல எல்லாம் அவலுக்கு மேரேஜ் அகிருச்சினு சொல்லிருக்க, அவுங்க மாமாதான் அவள இப்போ வரை பாத்துட்டு இருக்காங்க “ என முழு தகவலும் கூறி முடிக்க
“ என் பையன் நேம் வேந்தனா, மகிழ் வேந்தன் “ நல்ல இருக்குல மச்சான்
“ஆமா ஆமா நல்லா தான் இருக்கும், சரி நெஸ்ட் எண்ண பண்ண போற “
“அது சுடர் கிட்ட பேசணும் , அவ வீட்டுக்கு போக முடியாது , ஸ்கூல்லயும் முடியாது கூட்டத்த கூட்டிடுவாங்க இந்த பிரஸ், சரா சுடர் நம்பர் இருக்காடா , அப்படியே சுடர், வேந்தன் போட்டோ அனுப்பு மச்சான் “
“ வாட நான் அலாவுதீன் பூதம் நீ ஒன்னு ஒன்னா சொல்லுவியா நான் உடனே, சொல்லுங்கள் நான் உங்கள் அடிமைனு நிக்கனுமோ போடா “ என எழுந்திருக்க, அவனை பிடித்த மகிழன் “சரா மச்சான் “ என பாவமாக பார்த்தே சுடரின் நம்பரையும் வேந்தனின் புகைப்படத்தையும் வாங்கிவிட்டே அவனை அனுப்பினான்.
மறுநாளே சுடரை அழைத்து விட்டான், சுடர் அப்போழுது வகுப்பில் இருந்தால் அதனால் போன் சைலன்ட்-ல் இருந்தது. சுடர் போன் எடுக்கவில்லை என்றதும் மெசேஜ்-ல் “ சுடர் நான் மகிழன் என் மேல கோபமா இருப்பனு தெரியும் அன ப்ளிஸ் ஒன் டைம் நேர்ல பாக்கலாம், நீ ஃப்ரீ ஆகிட்டு கால் பண்ணு “ என்று அனுப்பி இருந்தான்.
இதை மதிய உணவு இடைவேளை அப்போ பார்த்த சுடர் கோபம் ஏறி அவன் நம்பரை ப்ளாக் செய்து விட்டு அன்று முழுவதும் அவனை மனதில் திட்டியவாறே சுற்றினாள்.
பள்ளி முடிந்த பின் அட்டனன்ஸ் சப்மீட் பண்ண பிரின்சுப்பல் ரூம் நோக்கி வாணியுடன் சென்றால் சுடர். போகும் வழியில் வாணி “ என்ன மேம் டுடே மூட் அப்சட் போல “ அதற்கு சுடர் “ ஆமா மேம் ஒரு வெள்ளை பன்னி என் கிட்ட வந்து என்ன திட்டு திட்டுனு ஒத்த காலுல நிக்குது நானும் அதுக்கு நானும் என்ன பண்ணலாம்னு பாக்குறேன் “
“ பண்ணி ஒத்த காலுல நிக்குமா மேம் “
“ நான் என்ன சொல்ல வர நீங்க என்ன கேக்குற, இந்த கேள்வி நாட்டுக்கு ரெம்ப முக்கியம்ல மேம்” என்று இருவரும் ஆபீஸ் குள் நுழைந்த உடன் மேசையின் மீது இருந்த போனில் இருந்து “ அடிடா.. அவள….ஒதடா..அவள… வேட்றா..அவள..அவ தேவையே இல்ல “
என்று பாட்டு ஓட பொங்கி எழுந்து விட்டால் சுடர் “ எவன்டா அவன், பாட்டை போட்டுருக்கான் பாரு அடிடா, வெட்றானு ஏன் பொண்ணுங்க மட்டும்தான் பசங்கள ஏமத்துறாங்க பாரு , பசங்க எல்லாம் அப்படியே உத்தமனுங்க “ என சத்தமாக பேச , வாணி மேம் அவளை பார்த்து “ மேம் அமைதி” என எதோ சொல்லவற, அதற்குள் சுடரே “ நீங்க அமைதியா இருக்க மேம் பசங்களுக்கும் இப்படி பாட்டு எழுதுன இந்நேரம் கேடி தாண்டி போய்ருக்கும் ஏதோ போண போதுனு விட்ட “ என பேச மீண்டும் போன் அடிடா என அறம்பிக்க , சுடர் வேகமாக “ எவன் போனுடா அது என ஏதோ சொல்ல வர அதற்குள் ஒலித்து கொண்டு இருந்த போனை அனைத்தான் ஆதி .
அப்பொழுது தான் அவள் நினைவுக்கு வந்தது அவள் இருக்கும் அறை எல்லாம் , ஆதி இவளையே கை கட்டி பார்க்க, சுடர் என்ன செய்வதென்று தெரியாமல் “ சார்…, அது…வந்து “ என கண்களை உருட்டி ஏதோ யோசித்து பின் “ யார் போனா இருந்த என்ன நான் கரைட்டா தான சொன்ன, அண்ட் ஸ்கூல் பிரின்சுப்பலா இருந்துட்டு பாட்ட பாரு அடிடா ஒதடானு” என ஆதியை பார்த்தாள் அவன் அசையாமல் அப்படியே இருக்க , பயந்த சுடர் மனதில் “உசுரு முக்கியம் கைப்பிள்ளை “ என நினைத்து “ எனக்கு லேட் ஆகுது நான் நாளைக்கு சப்மீட் பண்ற என்று வாணி கையை பிடித்து கொண்டு வெளியே சென்று படியில் நின்றவாரு எட்டி ஆதி வராததை உறுதி படுத்திவிட்டே நெஞ்சில் கை வைத்து “சப்பா எப்படியோ தப்பிச்சிட்டோம் “ என மூச்சி வாங்க, அவளை பார்த்து இருந்த வாணி “ வேரலெவல் மேம் நீங்க பிரின்ஸ்சுப்பல்லே ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டாரு “ என கைகொடுக்க,
“அட போங்க மேம் நீங்க வேற இன்னைக்கு என் வாய்க்கு வாஸ்த்து சரி இல்லை போல , இன்னும் ஒரு மாசத்துக்கு அவர் கிட்ட மாட்டாம்ம தப்பிச்சிரனும் கடவுளே “ என புலம்பிய படி சென்றனர்.
அங்கே ஆபிஸ் அறையில் ஆதியோ தன் போனை எடுத்து பார்த்து” சைலன்ட்-ல தன போட்டிருந்தன் , சரி முதல பாட்டை மாத்தணும் “ என சொல்லி சிரித்தபடி “என்னாம்மா பேசுறா “ என்று போனை பாக்கெட்டில் போட்டவாரு மேலிருந்து சுடர் செல்வதை இதழில் தோன்றும் புன்னகையுடன் பார்த்திருந்தான்.