விடியல் – 7

இருளில்  மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது,  அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தான் ரஞ்சன், அவன் அறையை மெல்ல திறந்து அவன் உறங்குவதை பார்த்து விட்டு மெதுவாகவே கதவை மூடிவிட்டு சென்றார், ரஞ்சனின் தாய்  சக்திய வள்ளி , அங்கு  இருந்து சென்றவரை ரஞ்சனின் தந்தை ராகவ் மூர்த்தி பிடித்து கொண்டார் “ என்னம்மா தம்பி ரூம் கிட்ட இருந்து வர, அவன் நைட் லேட்-ஆ தான் வந்தான் தூங்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாதனு சொன்னதான “ என்று மூர்த்தி கேட்டார் ,

“ நான் அவன டிஸ்டர்ப் பண்ணமா பெருமையா தான் போய் பார்த்தங்க “

“ எத்தன வாட்டி சோல்றதுமா அவ  முன்னாடி இருந்த சத்தியா இல்லை உன்னோட சின்ன அசைவுக்கே சத்தம் கேட்டு முளிச்சிருவானு “ என மூர்த்தி கடிய

“என்னங்க மெல்ல தான் போய் பார்த்தன் சத்திய முளிச்சிருவான ?  “

“கண்டிப்பா,  ஆமா நீ என் அங்க போன “ என்று கேட்ட வாரு கைகளில் கொண்டு வந்த பேப்பரை பார்த்த படி கேட்டார் ,

“அது சத்திய தான் காலைலயே  ஓட போவான்ல ஆதான் இன்னைக்கும் போறனானு பார்த்தன் , போனான ப்ரூட் ஜூஸ் கேட்பான் அதன் போட்டு வைக்கலாம்னு “ என தலையை சொரிய

“ அது சரி , போ போய் அந்த ஜூஸ் போட்டு வை கொஞ்சம் நேரத்துல வந்துடுவான் பாரு ,  அப்படியே எனக்கு ஒரு காப்பி “என பேப்பரில் மூழ்கி போனார்.

மூர்த்தி சொன்னது போலா ரஞ்சன் ட்ரக் மற்றும் டிசர்ட் அணிந்து ஜாக்கிங் செய்ய தயாராக வந்தான், அதை பார்த்த மூர்த்தி” நீ பேசாம கவர்மென்ட் குவட்டர்ஸ்-ல தங்கிக்கோப்பா இங்க இருந்த உங்க அம்மா உன்னை நிம்மதியா தூங்க கூட விட மாட்டா “ அதை கேட்ட வள்ளி “ நீங்களே நம்ம பையன வீட்டை விட்டு துரத்திடுவிங்க போல உங்களுக்கு நானும் என் பையனும் இருக்குறது கண்ண உறுத்துச்சின்ன சொல்லிருங்க நாங்க தனியா பொய்டுறோம் “ என கோபமாக சொல்லி விட்டு ரஞ்சன் பக்கம் திரும்பி அவன் கையில் பாட்டிலை திணித்து விட்டு “ உங்க அப்பா தான் புத்தி இல்லாம பேசுறாரு-ன பார்த்த நீயும் ,நான் அம்மா கூடதான் இருப்பனு  சொல்லாம பல்ல காட்டுற , அப்பாவும் பிள்ளையும் லீவ் அப்போ வருவிங்கள இத சமை அத சமைனு அப்போ பாத்துக்கறேன் “ என பட பட வேன வெடித்து விட்டு உள்ளே சென்று விட்டார் , ரஞ்சன் அம்மா சென்ற பின்னே “ஏன் ப்பா அம்மாவ  மார்னிங்கே டென்ஷன்  ஆக்குறிங்க, பாவம் அம்மா “ அதற்க்கு மூர்த்தி “ சும்மாதான் ப்பா , நீ என்னும் கொஞ்சம் நேரம் தூங்கிருக்கலாம்ல தம்பி “

“அப்பா உங்களுக்கு தெரியாத எனக்கு இந்த டைம் எழுந்து பழக்கம் ஆகிருச்சினு,  ஆமா எங்க அந்த வாலு என்னும் முலிக்கலயா ப்பா” அதற்க்கு மூர்த்தி சிரித்து கொண்டே கல்யாணம் முடிவு ஆன நாள்-ல இருந்து அவல பாக்க முடியிறது  இல்லை போனும் கையுமா தான் சுத்துறாப்பா  “ என்று பேப்பர் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அப்போது ரூம் குல் இருந்து “ அப்பா… நான் எப்பவாது தானே பேசுறேன் ஏன் அண்ணா கிட்ட மாத்தி சொல்றிங்க “ என்று சினிங்கியவாரு  வந்து அமர்ந்தாள் ரஞ்சனி தேவி ,ரஞ்சனின் தங்கை .

அப்போது சமையல் அறை உள்ளே இருந்து “ எந்திறிக்குற  நேரத்த பாரு நைட் லேட்-ஆ வந்து தூங்குன சத்தியாவே  முலிச்சிட்டன்  சரியான தூங்கு மூஞ்சி போய் பல் விளக்கிட்டு வாடி இல்லன்னா உன்ன இப்படியே போட்டோ புடிச்சி மாப்பிள்ளைக்கு மோத அனுப்பிடுவேன் “என அவர் பேசிக்கொண்டே காப்பியை கணவர் கையில் கொடுத்து விட்டு போக , அதற்கு தேவி “ அனுப்பு அனுப்பு எப்படியிருந்தாலும் மேரேஜ் அப்பறம் இந்த முகத்தை தானா பாக்கணும் அதை இப்பவே பாத்து பயப்படட்டும் “ என சொல்லி அம்மாவை நோக்கி அலகு காட்டி விட்டு “ இதுக்கு மேல இங்க இருந்த புலி பிராண்டிடும் ஐ யம் எஸ்கேப் “ என்று ரூம் நோக்கி ஓடி விட்டால் தேவி .

“ பாத்திங்களா வாயா இங்கயே இப்படி பேசுற  அங்க போய் எல்லாரையும் என்ன பாடு படுத்த போறாலோ  “ என முகத்தில் இருந்த மகிழ்ச்சியுடன் கூறினார், இவர்களை பார்த்த வாரு முகத்தில் தழுவிய புண்ணகையோடு” நான் ஜாக்கிங் போயிட்டு வர என சென்றுவிட்டான் . இதை பார்த்த வள்ளி “எவளோ சேட்டை பண்ணுவான் இவன் நம்ம தேவிய  விட, எப்போ இந்த காக்கிய பொட்டானோ அந்த ட்ரஸ் மாதிரி வெறப்ப ஆகிட்டான்,  எங்க கேட்டான் வேண்டாம்னு சொன்னா, எதோ லவ்வு போலிஸ்-ன உசுருனு சொல்லியெ சமலிச்சிட்டான் என்னவோ பத்தரமா இருந்த சரி “ என சோக குரலில் கூறி விட்டு போக ,அதை தான் மூர்த்தியும் நினைத்தார் மனதில் மட்டும் “ இந்த வேலைக்கு சிரிச்ச வேலை ஆகது கொஞ்சம் விறப்பதா இருக்கணும்  “ என வெளியே மனைவிக்கு சமதானமே செய்தார்.

 சத்திய ரஞ்சன் எஸ்.பி , வயது 29 மாநிறம், முகத்தில் எப்போதும் ஒரு கடுமை போலிஸ்க்கே இருக்கும் ஒரு கம்பீரம் என அசல் தமிழ்நாட்டு ஈரோ  மெட்டிரியல், பார்க்க ஒரு முறைப்புடனே சுத்துவான், ரஞ்சன் முன்பு  இப்படி இல்லை கல்லூரி பயிலும் போது இவனை அனைவரும் செல்லமாக காமெடி போலீஸ் என்றே கூப்பிடுவர் அந்த அளவு குறும்பு கண்ணாக இருந்தவன், பின் போலிஸ் டிரைனிங் முடிந்து முற்றிலும் வேறு ஒருவணாகவே வீடு திரும்பினான் , அதன் பின் அவன் நண்பர்களால் கூட அவனிடம் சகஜமாக பேச முடியவில்லை.

 சிறு வயதில் இருந்தே போலிஸ் வேலை மீது காதல் ஆம் காதல் தான், தாய் தந்தை இந்த வேலை வேண்டாம் ரிஸ்க் அதிகம் என்று சொல்லியும் தானாக முயற்ச்சி  செய்து இரண்டாம்  முறை அட்டம்ட்-ல் பாஸ் ஆகி விட்டு பின் போலிஸ் ஆகவும் மாறிவிட்டான் . பின் என்ன செய்ய என்று விட்டுவிட்டனர்.

 ஜாக்கிங் சென்று கொண்டு இருக்கும் போது துரை காலிங் என போன் வைபரேட் ஆக அதை உடனே எடுத்த ரஞ்சன் “ ம்ம் சொல்லுங்க என்ன மர்டருனு எப்படி சோல்றிங்க …ஓ ,தோ வந்துறன் ஃபாரன்சிக்கை கூப்டாச்சா அன்ட் இப்போதைக்கு பிரஸ் வேண “ என வைத்து விட்டு வேகமாக வீட்டுக்கு விரைந்து கிளம்பி” அம்மா நான் எப்போ வருவனு  தெரியாது சோ வெயிட் பண்ணாதீங்க பாய் “ என சென்றே  விட்டான். இதை பார்த்த மூர்த்திக்கும், வள்ளிக்கும், இது பழக்கம் போல அமைதியாகவே இருந்தன .

   காலை வேக வேகமாக கிளம்பி கொண்டு இருந்தாள் தீபா எப்பவும் கிளம்பும் நேரம் முன்பே கிளம்பி கீழே வந்து கதவை தட்டி “ அக்கா அக்கா ….” என கையை பார்பதும் போனை பார்பதும் என கதவை தட்ட , கதவை திறந்ததும் வேக வேகமாக “ அக்கா டைம் ஆச்சி மார்னிங் ஃபுட் வேன நான் மதியமா கால் பன்ற நம்ம ஏறிய ஷ்டேசன்-க்கு வந்துருங்க “ என சொல்லி விட்டு போக பார்த்தவளின், கைகளை பிடித்து , பாக்கிய “ கீதா உள்ள ஃபிரிட்ஜ் -ல இருக்க மாதுளை ஜூஸ் எடுத்துவாம்மா “ என கத்தி சொல்ல “ இல்லை வேன” என மறுக்க வந்தவள் கைகளில் ஜூசை திணித்து அவளை குடிக்க வைத்தே அனுப்பினால் பாக்கிய.

“என்ன மம் அக்காவுக்கு பலத்த கவனிப்பு, நடத்து நடத்து”

“ அடியே  அது அப்படி இல்லை டி “

“இட்ஸ் ஓகே மாம் யு கன்டினியூ “

“அடியே இங்க பாரு எனக்கு அந்த புள்ளைய பாத்த பயம் டி , முன்னாடியும் இப்படி நைட் பகல்னு போகும் சாப்பிடாம இதே போலத்தான் ஓடும் அப்போ கை பிடிச்சி சாப்பிட்டு போமானு சொல்ல தோனும் , அன எங்க கைய நீட்டு அடிச்சிருமோனு கேக்க மாட்டன் “

“ ஓ ….. அப்போ இப்போ பயம் இல்லனு சொல்ற “

“அதான் நேத்து பாத்தனே.”

“ என்ன பார்த்த ம்மா அப்படி… “

“ அது நிலா அய்யர் ஆத்து பொண்ணு-ன்னு “ என எதையோ சாதித்த பெருமை பொங்க..சொல்ல

“பிண்ணிட்ட போ ம்மா, நீ இங்க இருக்க வேண்டிய அம்மாவே இல்லை “ என கேலி செய்ய அது புரியாமல் பாக்கியாவும் “அப்படியா கீதா “ என ஆர்வமாக கேட்க , அதற்க்கு கீதா

“ அச்சோ அறிவுகொலுந்து, அக்கா அய்யர்னா டூ டேஸ் முன்னாடி நீ கொடுத்த மீன் கோளம்பு நல்ல இருக்குனு மார்னிங்-ம் அதையே எப்படி வாங்கி சாப்பிடுவாங்க “ என கேட்க , அப்போது தான் பல்ப் எரிந்தது பாக்கியவிற்க்கு “ஆமால  எப்படி மறந்தன், அப்பறம் ஏன் இப்படி மூஞ்சை மறச்சி சுத்தனும்  “

“ அது தெரியல ம்மா அன அந்த அக்கா தனியா கஸ்டபடுறாங்க,  யாரும் இல்லை போல நேத்து நம்மல பாத்து பீல் பண்ணாங்க “

“அப்படியா நல்ல தங்கமான பொண்ணு இனிமே அந்த பெண்ணுக்கு நம்ம இருப்போம் சரியா “ என போஸ் கொடுத்த அம்மாவை பார்த்த கீதா “ நம்மல பார்த்துக்கவே நேத்து வர நாலு பேரு பீல் பண்ணாங்கள “ சத்தம் இல்லாமல் சொல்லி விட்டு , சத்தாமாக “ ஆமா நாங்க இருக்கோம் “ என அவளும் போஸ் கொடுத்தால்.

தீபா , ரஞ்சன் இருவரும் ஓரே நேரத்தில் அந்த காட்டு பகுதிக்குள் இருந்த க்ரைஸ்பாட் குள் நுழைந்தன.