விடியல்-6

மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது.

“என்ன ஒரு அருமையான நாள் ம்ம்ம்….” என டீ கடையில் இருந்து டீயை ரசித்து , ருசித்து கூடித்து கொண்டு இருந்தார் கான்ஸ்டபிள்  துரைராஜ்,  அப்பொழுது திடீரென கேட்ட அலறல் சத்தத்தில் டீயை பதறி கீழே ஊற்றி விட்டார், இதை பார்த்த டீ கடை பையன் கைகளை வாயில் வைத்து சிரிக்க, அதை பார்த்த துரை “நல்ல சிரி உனக்கு என்ன ஜாலிய இருக்க நான் தான் இவர்கிட்ட மாட்டிகிட்ட “

உடனே அந்த கடை ஓனர் “நம்ம எஸ்.பி சார் பத்தியா சொல்றிங்க “

“ஆமா , அவரே தான், எனக்கு இன்னொரு டீ அண்ணா” என மீண்டும் ஆங்கேயே அமர்ந்தான்

“ ஏன் அப்படி சொல்றிங்க சார் அவர் இங்க வந்த பிறகு தான் நிம்மதிய லேட் நைட் கூட தனிய பொண்ணுங்கள வெளிய அனுப்ப முடியுதுனு சொல்றாங்க நிங்க  என்னென்ன இப்படி மாட்டிகிட்டனு சொல்றிங்க “ என்று கடைக்கார அண்ணா கேட்க

“அது தான் பிரச்சன அண்ணா இவர் ரொம்ப போலீஸ்-அ இருக்காரு, டெய்லி  மார்னிங் டீ என் பொண்டாட்டி கையால குடிச்சா தான் எனக்கு நாள் நல்ல போகும் அன இப்போ, ரொம்ப நல்லா போது போங்கண்ணா , நல்ல தூங்கிட்டு இருந்த என்ன டெய்லி  இம்பார்டன் கேஸ்னு 4 மணிக்கே வர வச்சிட்டாரு “ அதற்கு கடை ஓனர்

“ முக்கியமான கேஸ்-ஆ இருக்கும் சார் “

“ஆம, உங்க சாருக்கு மட்டும் தான் டெய்லி இம்பார்டன் கேஸ் வரும் போங்க அண்ணா “ என பெரும்மூச்சி விட்ட படி தொடர்ந்தார் “இப்பாலம் கண்ண முடுனா கூட கேஸ் ஸீட் ரெடியானு அவர் முகம் தான் வருது “ என சலித்தவாறு டீ குடித்து முடித்து காசு கொடுத்து விட்டு அருகே இருந்த ஸ்டேஷன் குள் நுழைந்தான் துரை . உள்ளே வந்த துரையை பார்த்து

“ என்ன சிங்கம் என்ன பத்தி பொலம்பி முடிச்சாச்ச “ என கேட்டவாரு வேளியே கிளம்பினான்  எஸ்.பி சத்திய ரஞ்சன். இதை கேட்ட துரைக்கு ஒன்றும் புரியாமல் அங்கேயே நிற்க, திரும்பி வந்த ரஞ்சன்  “நிதானமா வீட்டுக்கு போய் ஷாக் அகிக்கோ இப்போ நமக்கு டைம் இல்லை வா “ என இருவரும் காரி்ல் ஸ்பாட் நோக்கி சென்றன .

காரில் செல்லும் போது துரை, ரஞ்சனை பார்ப்பதும் பின் ரோட்டை பார்பதும் என்று இருந்தான், “என்ன சொல்லனும் சிங்கம் சொல்லுங்க “

“சார் பஸ்ட் சிங்கம்-னு கூப்டாதிங்க சார் ஸ்டேசன்ல கிண்டல் பண்றாங்க ,என் நேம் சொல்லி கூப்பிடுங்க சார் “

“ ஏன் சிங்கம், நீங்க தான நம்ம துரைசிங்கத்த ரொம்ப… பிடிக்கும்,  அவர பாத்துதான் போலிஸ் ஆனனு சொன்னிங்க “

“சார் பிடிக்கும்னு சொன்னது ஒரு குத்தமா சார் , போறபோக்குள சிங்கத்தையே வேருத்துருவன்  போல “ என பெரும்மூச்சி விட , அதை பார்த்த ரஞ்சன் “ சரி உனக்கும் வேணா எனக்கும் வேணா இப்போ பாக்குற திருட்டு கேஸ் ஓட கல்ப்ரிட்-அ 3 டேஸ் குல்ல பிடிச்சிட்டினா,  உன்ன முடிஞ்ச அளவு இயர்லி மார்னிங் டிஸ்டர்ப் பண்ண மாட்டன் அப்புறம் சிங்கம்னு கூப்பிடவும் மாட்டான், ஓ.கே “

“டபுள் ஓ.கே சார் “ என சிரித்த முகமாக கார் ஓட்டிக்கொண்டு மனதில் “ எப்படியாவது உருண்டு பிறன்டாவது கண்டு பிடிச்சிறனும் இவர் தொல்லை அப்பறம் இருக்காது “ என எண்ணியவாறு வண்டி ஒட்டினான்,  துரையை பார்த்த ரஞ்சன் நமட்டு சிரிப்பொடு போன் பார்க்க தொடங்கினான்.

தீபா, விடுமுறை என்பதால் காலை எழுந்து அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு தன் ரூம் பால்க்கனியில்  அமர்ந்தவாறு போனில் பாடல்களை கேட்டகொண்டு திரில்லர் நாவல் ஒன்றை படித்தவாறு இருக்க, அப்பொழுது  அவள் செலக்ட் பண்ண ரண்டம் ப்ளே லிஸ்ட்-ல் இருந்து அந்த பாடல் ஒலித்தது  “அம்மா அம்மா நீ எங்க அம்மா

 உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா

 தேடி பார்த்தன் கானும் உன்ன

கண்ணாமூச்சியே வாணி வெளியே…..”

பாடல் தொடங்கியதும் கண்களை இருக்க மூடிக்கொண்டால் அந்த பாடலின் ஒவ்வொரு வரியும் இவளுக்காக எழுதியது போல இருந்தது அதிலும்

 “ உயிரின் ஒருபாதி  பரிபோனாதே அம்மா

தனிமை நிலையாதே….

 இந்த வரிகளை கேட்டவுடனே கண்கள் இருந்து கண்ணீர் வடிய, ஏன் ம்மா என்னை விட்டு போன, பாரு எனக்குன்னு யாருமே இல்லை, இங்க தனியா இருக்கன், மாமா கூட நீ தனியா இருனு சோல்லிடாங்க நீதானே சொன்ன மாமா என்னை உன்னை விட நல்ல பாத்துபாங்கனு,  அன உன்மை என்ன தெரியுமா மாமாக்கு என்னை பிடிக்காது , என்னை யாருக்கும் பிடிக்காது போல, என் கூட யாரும் இருக்க மாட்டாங்கமா,  நீ இருந்திருந்த நீயாவது என் கூட இருந்துருப்பியா  ம்மா தெரியலயே எனக்கு , நான் தான் தப்பு என்னால தான் நீயும் போய்ட,  நான் பிறந்திருக்க கூடாது அப்போ நீயாவது சுடர், மாமா கூட இருந்துருப்ப நான் அன்னைக்கு வந்துருக்க கூடாது “ என தன் போக்கில் புலம்பிய படி இருந்தாள் தீபா .

அப்போது கீழே இருந்து சண்டை போடும் சத்தம் கேட்டது என்ன என்று கண்களை துடைத்த வாரு எட்டி பார்தால், கீழே 50 வயது உடைய பெரியவர் ,அவருடன் இன்னும் நான்கு பேர் பாக்கிய அக்கா விடம் கத்தி கொண்டு இருந்தன , அதை பார்த்து கீதா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருந்தாள். அந்த 50 வயது பெரியவர் பாக்கியாவை பார்த்து

“ பாக்கியா நான் சொல்றத கேலு அப்பா துணை இல்லாம தனியா இந்த காலத்துல பொண்ணா வழக்க முடியாது , நான் சொல்ற படி இந்த வீட்டை விட்டுட்டு என் வீட்டுக்கு வந்துரு நான் இந்த வீட்டை பாத்துக்கறேன்,  ஏன் வீட்டுலயும் போம்பல துணை இல்லாம நானும் என் பசங்களும் கஷ்ட படுறோம் நீ வந்த ஒன்னுக் ஒன்னு ஒத்தசயா இருக்கும், நம்ம கீதாவ  பெரியப்பா மாதிரி இல்லாம அப்பாவவே மாறி  பாத்துக்கறேன் “ என பேசியவாரு இருக்க திடீர் என்று “ உங்களுக்கு வீட்டுக்கு பொண்ணு வேனும்னா உங்க வயசுக்கு ஏத்தமாதிரி தேட வேண்டியது தான , வேணான்னு சொல்றவங்கள போய் கம்பல் பண்றிங்க “ என கூறியது வேறு யாரும் இல்லை நமது தீப நிலாவே தான் .

இதை பார்த்த கீதா “ என்ன இந்த அக்கக்கு யாரவது வாய்ல இருந்த லாக்கா திறந்து விட்டாங்களா இப்படி பின்றாங்க “ என வாயை பிளந்து பார்த்தால்.

“யாருமா நீ மூஞ்சில மாஸ்க் போட்டு வந்துட்ட , உனக்கும் இவங்களுக்கும் என்ன சமந்தம் “ என கூட வந்த ஒரு இளைஞன் கேட்க “ நான் யார இருந்த உனக்கு என்ன ரோட்ல அதும் அடுத்தவுங்க பார்க்கும் படி வீட்டு முன்னாடி நின்னு கத்திட்டு இருக்கிங்க இதுக்கே உங்கள உள்ள தள்ளலாம் “ என அசராமல் கூற

“போலிஸ்னா பயந்துடுவோமா எங்களுக்கு தெரியும் போலிஸ்-அ “ என இன்னொருவன் கூற , அதற்கு கீதா “ அவுங்க கூட போலிஸ் கூட தான் வர்க் பண்றாங்க”  என கூறிவிட்டு தன் தாய் பிண்ணே மறைந்து விட்டால் , இதை கேட்ட தீபா ஒரு நிமிடம் கீதாவை திரும்பி பார்த்து விட்டு “ இப்ப சொல்லுங்க பொலிஸ்க்கு நீங்க காள் பண்றீங்களா இல்ல நான் பண்ணட்டா “ என சொன்னதும் “ என்ன பாக்கியா போலிஸ் வச்சி மிரட்டுறியா நான் உன்னை எங்க பாக்கணுமோ அங்க பாத்துக்கறேன் “ என சென்று விட்டனர்.

அவர்கள் சென்றதும் பாக்கியா தீபாவை கட்டு பிடித்து அழுது தீர்த்து விட்டார்,  தீபாவிற்க்கு என்ன செய்ய வென்று ஒன்றும் தெ‌ரியாமல் “ அழுகாதீங்க க்கா , நீங்க தப்ப நினைக்கலனா என்ன பிரச்சனனு சொல்றிங்களா நான் முடிஞ்ச எல்ப் பண்ற “ இதை கேட்டு மீண்டும் சத்தமாக அழுது “ வாம்மா உள்ள போய் பேசலாம் “ என உள்ளே அழைத்து சென்று

“ தீபா இங்க உக்காருமா கீதா நீ உள்ள போ நான் அக்கா கிட்ட பேசிட்டு கூப்பிடறேன் “ என கீதாவை உள்ளே அனுப்ப பாக்க,

” ஏன் அக்கா உங்க பெண்ணுக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறீங்க  அவளுக்கும் தெரியட்டும் அப்போதான் உலகம் எப்படிப்பட்டதுனு தெரிஞ்சுப்பா “ அப்பவும் பாக்கியா தயங்க

“முன்ன மாதிரி இல்லக்கா  பசங்க இப்போ பெரியவுங்கள விட நல்ல மெட்சுரா தான்  இருக்காங்க நிங்க தயங்காம சொல்லுங்க, எனக்கு தெரிஞ்சி இந்நேரம் அவளுக்கு முழு விசியமும் கூட தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு “

பாக்கியா அதிர்ச்சியுடன் கீதாவை பார்க்க, கீதா தயக்கத்துடன் “ ஆமா அம்மா எனக்கு தெரியும்  , நீ ஒரு நாள் சித்தி கூட பேசும் போது கேட்டன், நீ பீல் பண்ண கூடாது தான் தெரியாத மாதிரி இருந்தேன்  “ பாக்கியா கீதாவை அழைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தால் , இதை ஆசை கலந்த ஏக்கத்துடன் பார்த்தாள் தீபநிலா

“ கீதா அப்பா இவளுக்கு இர‌ண்டு  வயசு இருக்கும் போது ஒரு அக்சிடன்ட்ல  இறந்துடாங்க  அவர் போய்ட்ட பிறகு இந்த வீடு தான் சாப்பாடு போட்டுச்சி அப்போ யாரும் உதவினு வந்து நிக்கல,  இந்த வீடு மட்டும் இல்லன நானும் என் பெண்ணும் என்ன ஆகிருப்போம் தெரியல” என கண்களை துடைத்த வண்ணம் தொடர்ந்தார் “  அவுங்க அப்பா இறந்த காசுனு கவர்மென்ட் கொஞ்சம் கொடுத்துச்சி அப்புறம் என் நகையை வச்சி இதுக்குமேல வீடு கட்டி அதை வச்சி தான் வாழ்தோம்  நல்ல தான் இருந்தோம் இந்த போன வருசம் தான் இப்போ ஒருத்தர் வந்தாரே அவர் ,கீதா அப்பாவோட முத்த அண்ணா  அவர் பொண்டாட்டி இறந்துடாங்க , அவுங்க போய் மூனு மாசம் முழுசா முடிஞ்சிருக்காது, கீதா ஸ்கூல் போன நேரமா பாத்து வந்து தப்பா பேசி வா நம்ம எல்லாம் ஒண்ண இருக்கலாம்னு சொல்லி “ அழுத பாக்கிய தொடர்ந்து “ அவனுக்கு இரண்டு பையன் அவங்களா என்ன சொல்லி ஒத்துக்க வச்சாரோ  அவனுங்களும் சப்போர்டுக்கு வாரனுங்க,   இந்த ஏறிய-ல இருக்கவுங்களும்  இதுக்கு சப்போர்ட்டு நீ மட்டும் தாம்மா என்னன்னு கேட்ட மத்த எல்லாம் எதும் தெரியாமா  அட்வைஸ் பண்றாங்க” என சொல்லி கண்களை துடைக்க.

“ நீங்க கவலை படாதீங்க க்கா எனக்கு தெரிஞ்சி இந்த வீட்ட  காமிச்சு தான் ஆசை காட்டி கூட்டிட்டு வந்துருக்கனும் வேனும்னா  நம்ம ஒரு போலிஸ் கம்பலேன்ட் கொடுத்துடலாம்”

“ சரிமா கொஞ்சம் நீயும் வரியாமா “ என தயங்கி தயங்கி தான் கேட்டார் பாக்கியா,  “நாளைக்கு ஈவினிங் போலாம் அக்கா, சரி நான் கிளம்பறேன் “ என எழுப்பிய தீபாவை “நில்லு நீலா ம்மா, சாப்பிட்டு போலாமே” என பாக்கியாவும் “ இன்னைக்காவது எங்க வீட்டுல சாப்பிடுங்க அக்கா “ என கீதாவும் சொல்ல,

“சரி சாப்பிடுறன் அக்கா “  உடனே பாக்கியாவும் கீதவும் நிலாவை அமர வைத்து உன்ன வைத்து விட்டே அனுப்பினர்.

தீபா சென்றதும் பாக்கியா “நல்ல பொண்ணு அன ரொம்ப பெசாது போல சாப்பிடும் போது கூட ஒரு வார்த்தை கொளம்பு வேணும் கூட்டு வேணும்னு கேக்கல இப்படி இருந்த நல பின்ன பிரச்சனைனா உதவினு கூட கேக்க யோசிக்கும் போல “

கீதா “நல்ல அக்கா தான் நான் கூட ஓவரா பண்றாங்கன்னு நினைப்ப அன பரவால நல்ல பாயின்டா பேசுறாங்க “ என இருவரும் பேசிய வாரு சென்றன.  தீபாக்கு பாக்கியாவை பார்க்கும் போது தன் அம்மா நினைவுதான் வரும் அதனாளே இந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக மாட்டால்.

அறைக்கு சென்ற நிலா “ நானும் அன்னைக்கு உன் கிட்ட பேசிருக்கனும் எனக்கு தெரியும்-ம்மா நீ பீல் பண்ணாதனு , அப்படி சொல்லி இருந்த பாக்கிய அக்கா, கீதா மாதிரி இருந்துருப்போம். என தன் அன்னையின் சிறுவயது புகை