விடியல் -5

சந்திர மகிழன் 6 அடி உயரம் , மாநிறம், வயது 29 ,தினமும் கடை பிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி விளைவாக அவனை  இளமையாக காட்டியது,  தந்தை சந்திர வர்மன் தமிழ் நாட்டின் சீப் மினிஸ்டர் மக்களுக்கு நன்மை அதிகம் செய்வதன் பலனாக இரண்டாம் முறையும் தேர்தலில் இவரே வென்றார்.

மகிழன் முகத்தில் ஒட்ட வைத்த அளவான சிரிப்புடன் பள்ளிக்குள் நுழைந்தான் அங்கு இருந்தவர்களை பார்த்து கைகளை கூப்பியும் சிறுவர்களுக்கு கைகளை ஆட்டியவாறும் மேடையை நோக்கி சென்றான்.

இதை தூரத்தில் இருந்து பார்த்த சுடர் கண்களை அழுத்தி துடைத்தவாறு , “எனக்கு நீ ஒன்னுமே இல்லை நான் அழ மாட்டா, நான் ஏன் அழுகனும்  நான் என் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கன் ஐ டோட் கேர்“ என அவளுக்கு அவளே தைரியம் கொடுத்தவாறு மேடையை நோக்கி சென்றாள் .

 இவள் வருவதை மேடையில் இருந்து மகிழனின் அருகே அமர்ந்திருந்த ஆதியே முதலில் காண்டான், அவள் வருகையில்  ஒரு வித்தியாசம் , சுடர் கலகலப்பான பெண் எப்போதும் ஒரு சிரிப்பு முகத்தில் இருக்கும் , ஆனால் இன்று புன்னகை தொலைத்த முகத்தோடு மேடை ஏறினால்.

மேடை ஏறிய சுடர் -யை நெற்றி சுருங்க பார்த்தான் மகிழன்,ஒரு நிமிடம் இருக்கும் இடம் மறந்து அவளையே பார்த்தவாறு இருந்தவனை மாணவர்களின் கை தட்டும் ஓசையே நினைவுக்கு கொண்டு வந்தது, இப்போது சுடரை சாதரணமாக பார்பதுபோல்  பார்த்து வைத்தான், சுடர் உரை முடிந்து மேடை விட்டு இறங்கி, அவள் இடம் சென்றபின்னும் அவளையே அடிக்கடி பார்த்தான்.

“என்ன இவ இப்படி மாறிட்டா எதோ ஆண்டி கட்டுற புடவை கட்டியிருக்க, கண்ல மையும் வைக்கல இவ சுடர் ஒளி தானா, இல்லை வேற யாறோவா “ என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கும் போது ஆதி அவன் தோள் தொட்டு “சார் உங்கள தான் கூப்பிடுறாங்க ஸ்பீச் கொடுக்க”,

“சாரி இதோ “ என்று ஸ்பீச் கொடுத்து முடித்து சுடர் முகம் பார்த்தான், முகம் அமைதியாகவே இருந்தது “என்ன நம்மல பார்த்தும் அமைதியா  இருக்க “ என சலித்தவாறு வந்து அமர்ந்தான்.

நிகழ்ச்சி முடிந்த பின்னும் இவன் அருகே வரவில்லை சுடர் மாணவர்களை கவனிப்பது போல அங்கயே இருந்து கொண்டால். சுடரை மகிழன் விடாமல் பார்பதும் சுடர் இவனை காணாதது போல் இருப்பதும் என, இதை கவனித்த ஆதி” ஏதோ சரியில்லை “ என நினைத்து கொண்டான்.

வாணி மேம் துறத்தில் இருந்த சுடரை பார்த்து

“மேம் …சுடர் மேம் இங்க வாங்க “ கைகளை ஆட்டி அழைக்க,

“அச்சோ இவங்க வேற நேரம் காலம் புரியாம பேர்ஃபார்மன்ஸ் பண்றாங்க “ என மனதோடு பேசியவாறு முகத்தில் வரவழைத்த புண்ணகையோடு அவர்களை நோக்கி சென்றாள்.

சுடரை பிடுத்த வாணி “சந்திரா சார் கிளம்ப போறாரு ஒரு ஹாய் சொல்லிருவோம் மேம் வாங்க “ அதற்க்கு சுடர்

“நான் வரல மேம் நீங்க போங்க” என பல்லை கடித்து  கொண்டு சொல்ல,  அந்தோ பாவம் ,அதை கவனிக்கும் நிலையில் நம் வாணி மேம் இல்லை.

சுடர் மறுப்பை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு  சுடரை இழுத்து சென்றாள் வாணி. சுடரும் வேறு வழி இன்றி சென்றால், அங்கே மகிழன் ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டே சுடரை தேடிக்கொண்டு இருந்தான். அங்கு வந்த வாணி “ ஹாய் சார் நான் உங்க பெரிய பேன் சார், எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நிங்க மக்களுக்கு பண்ற ஹெல்ப் பாத்துதான் நானும் நிறைய ஹெல்ப் பண்ற  ஸ்டாட் பண்ணியிருக்கேன் “ என மூச்சி பிடிக்க பேசியவளை பார்த்த மகிழன் “பொருமை பொருமை மேம் மூச்சி வாங்குது பாருங்க, அமா உங்க நேம் …” என இழுத்து நிப்பாட்ட, உடனே வாணி “ நான் வாணி இவங்க சுடர் “ என அறிமுகம் படுத்தினாள், இதை பார்த்த சுடர் சலனமின்றி அமைதியாக நின்று கொண்டு இருந்தாள். அவள் மனதில் இருப்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் வாணியை நோக்கி கை நீட்ட வாணி இறக்கை இன்றி வானில் தான் மிதந்தால், அடுத்து சுடரிடம் கை நீட்ட சுடர் அவன் கைகளை வெறித்து பார்த்த வண்ணம் கை கொடுக்காமல் நின்றாள், இதை பார்த்த ஆதி எதையோ யோசித்தவாறு, மகிழனை அழைத்து சென்று விட்டான். அவன் சென்ற உடனே மூச்சை இழுத்து விட்டால் சுடர்,

 வாணி “என்ன மேம் நல்ல சான்ஸ்-அ மிஸ் பண்ணிடிங்க “

“என்ன நல்ல சான்ஸ் ”

“ அதான் சந்திரா சார், அவர் யாறு “ என அவன் புகழ்பாட தொடங்கும் முன்னே

“ம்ம் யாரு அவர் “ என பட்டெண்று சுடர் கேட்க, அதற்க்கு வாணி புரியாமல் “ என்ன யாரு மேம் “

“அதான் மேம், எதோ நேம் சொன்னீங்களே ஆ.. சந்திரா சார், யாருன்னு என்ன கேட்டா அவர பாக்க கூட்டிட்டு வந்த உங்களுக்கே அவர் யாருன்னு தெரியலனா, எனக்கு எப்படி தெரியும், வேனும்ன ஆதி சார் கிட்ட போய் கேளுங்க அவரு நல்ல விலக்கி சொல்லுவாங்க, மேம் இப்போ எனக்கு க்ளாஸ்-க்கு டைம் ஆச்சி நான் கிளம்பறேன் “ என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள், வாணி தான் ஒன்றும் புரியாமல் “நான் ஏன் ஆதி சார்கிட்ட போய் சந்திரா சார் பத்தி கேக்கணும்” என புலம்பியபடி அவள் அறையை நோக்கி சென்றாள்.

அதன் பின் மகிழனை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு “ அவன் நம்ம லைப் ஒட முடிஞ்ச பக்கம் ஸோ யோசிச்சி டைம் வேஸ்ட் பண்ணாத சுடர் “ என ஒரு நல்ல முடிவை எடுத்தாள். எடுத்த முடிவு நிலைக்குமா சுடரை தனியாக விடுவானா மகிழன்.

வானம் நிலவின் வருகை என்னி வெட்கத்தில் சிவந்து இருந்தது அந்த மாலை பொழுது, அலைகளோ சிவந்து இருந்த வானத்தை பார்த்து சந்தோஷத்தில் பெரும்இறைச்சல் போட்டு ஒன்றுக் ஒன்று விளையாடி கொண்டு இருந்தது, இந்த அழகிய காட்சிக்கு அருகே அமைந்திருந்தது அந்த கெஸ்ட் அவுஸ். வீட்டை சுற்றி பூந்தோட்டம் அமைந்திருந்தது பார்க்க ஒரு சிறிய மாளிகை போல இருந்தது. வீட்டின் உட்புறம் விலை உயர்ந்த அலங்கார பொருட்களால் அலங்கரித்து மிக அழகாக இருந்தது அந்த கெஸ்ட் அவுஸ் சொல்லப்போனால் பல இளைஞர்களின் கனவு மாளிகை என்று சொல்லும் வண்ணம் இருந்தது.

அந்த வீட்டின் ஹாலில் ஸோபாவில் அமர்ந்து புகை பிடித்தவாறு கால் மேல் கால் போட்டு சீலிங்கை பார்த்து எதையோ யோசித்து சிரித்துக்கொண்டு இருந்தான் அவன் சந்திர மகிழன், அப்போது அவனை உலுக்கிய வாரு “டேய் மச்சான், மகி ” என சொன்னது தான் தாமதம் கைகளை நீட்டி தன் நண்பன் என்றும் பாராமல் அடிப்பது போல் எழுந்து “ என்ன மகி-னு கூப்டாதனு எத்தன வாட்டி சொல்றதுடா“ கண்கள் சிவக்க கூறியவனை பார்த்த சரவணன்,”எனக்கு வேனும், நல்ல வேனும் நண்பன் கூப்டானு என் டார்லிங்ஸ் ஓட டேட்-அ கேன்சல் பண்ணிட்டு வந்தன்-ல நல்ல மரியாதைட எனக்கு, உனக்கு நான்-ல அவ்ளோ தான் ல “ என முகத்தை திருப்பி நிர்க்க, உடனே மகிழன்

 “டேய் மச்சான் என்ன பத்தி உனக்கு தெரியாத-ட சாறிடா” என அவன் கைகளை பிடிக்க,” உடனே அவனும் பயந்திட்டியாட சும்ம ஃபன்க்கு “ என கண்களை சிமிட்டி ஸோபவில் அமர்ந்தான், இதை பார்த்த மகிழன் தலையில் அடித்தவாறு அருகில் அமர்ந்தான்.

விளையாட்டை விட்டு விட்டு சரவணன் மகிழனை பார்த்து “ சோல்லுடா என்ன பிரச்சன?”

“ஒரு பொண்ணோட ஃபுல் டீடியல்ஸ் வேனும்”

“அதுக்கு நீ டிடக்டிவ் ஆபிஸ் தான் போனும் “

“அந்த வெண்ணை எனக்கு தெரியாத, நான் இன்வாள் ஆகுறது ரிஸ்க் அப்பறம்.., அர்ஜன்ட் கூட “

“என்ன வாஷ்ரூம் போனுமா”

“டேய் சாரா.., புரிஞ்சிக்கோடா என்னை “

“சரி மூஞ்சை அப்படி வைக்காத பாக்க முடியல, டீடியள்ஸ் சொல்லு யாருன்னு “

“நேம் சுடர் ஒளி இந்த ஸ்கூல் டீச்சர்”

“ஓ அப்புறம்”

“அப்புறம்-ல இல்லை அவ்ளோதான் “

“டேய் என்ன பாத்த எப்படி இருக்கு உனக்கு “

“ பெரிய கிரிமினல் லாயர் மாதிரி இருக்கு “ என சரவணனை பார்த்து சிரித்த மகிழனை பார்த்து முறைத்தன் சரவணன்,

 “சரி ஒரு டூ டேஸ் வெயிட் பண்ணு, எல்லாம் கலக்ட் பண்ணிறன் “

“ டூ டேஸ்-அ கொஞ்சம் என்னும் சீக்கிரமா முடிக்க முடியுமா “ என மகிழன் தன் சிகரெட்டை அனைத்தவாறு கேட்க

“உன் அவசரத்துக்காக நைட் போய் எல்லார் விட்டு கதவையும் தட்டுன போலிஸ் காரங்க என்னை தட்டிருவாங்க மச்சான், ஏற்க்கனவே எனக்கும் போலிஸ்க்கும் ஏழம் பொருத்தம், டூ டேஸ் தானா வெயிட் பண்ணு தப்பு இல்லை”

“சரிடா சுடர் பத்தி எல்லாம் கலைட் பண்ணுடா ஒன்னு கூட மிஸ் ஆக கூடாது “ என தீவிரமாக சொன்ன நண்பனை பார்த்து “ எதுக்கு இந்த பெண்ணை பத்தி விசாரிக்க சொல்றடா “

“நீ டீடியல்ஸ் கொண்டுவா நான் சொல்றேன் இப்போ கேக்காத ஓ.கே”

“ம்ம்ம்… “ என தலை ஆட்டிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் என்னோறு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தவாறு “ சுடர்…” என முனுமுனுத்த வாறு அமர்ந்தான்.