விடியல்-4

சுடர் வேலை பார்க்கும் பள்ளி 10 நிமிடம் நடக்கும் தூரமே என்பதால் இருவரும் நடந்தே செல்வார்கள்.  அன்று நடக்க இருக்கும் ஸ்கூல் ஆன்னிவெர்சரி சீப் கெஸ்டாக தமிழ்நாட்டு யூத் மினிஸ்டர் வருகிறார் என்றும், அவரை வரவேற்க சுடரும் நிற்க  வேண்டும் என்று பிரின்சிபால் ஆதித்யனின் உத்தரவு. இதை யோசித்தவாறு வந்த சுடரை பார்த்த வேந்தன் “என்னம்மா கோபமா வரீங்க ”

“அது ஒன்னும் இல்லடா இந்த ஆதி பிரின்சி இருக்காருல, அவரு இந்த சீப் கெஸ்ட் வரும் போது அம்மாவ முன்னாடி நிக்க சொல்லிடாங்க அதன் ஒரே சோகம் “

“உனக்கு, முன்னாடி நிக்க பிடிக்கலனா ஆதி சார் கிட்ட சொல்லிடுமா “

“நீ ஈசியா சொல்லிட்ட ,என் கஷ்டம் எனக்கு, அவர பாத்தாலே பயமா இருக்கு இதுல எங்க இருந்து சொல்ல “என தலையை இட வலமாக ஆட்ட ,

“நான் சொல்லவாமா நான் சார் பாத்து பயப்பட மாட்டேன் “

“நல்லா சிரிச்சி சிரிச்சி பேசுனா எப்படி பயம் வரும் உனக்கு, எல்ல முறைப்பயும் ஸ்டாப் மேலே மட்டும் காமிக்கிறது, எல்லம் என் நேரம் ,நான் வர்க் சேரும் போது தான் இவரும்  பிரின்சிப்பாலா ஜாயின் பண்ணனும், போன இயர் பிரின்சிப்பல் ஸ்வீட்னு சொன்னாங்க “ என முனங்கிய வாரு வர ,

வேந்தன் “என்னம்மா ஆதி சார் கிட்ட பேசவா “ என கேட்க, அதற்கு உடனே சுடர் “வேண்டம் தம்பி நான்..நான் பாத்துக்கறேன் “ என வேகமாக சொல்லி “விட்டா இவனே கூட்டிட்டு போய் எங்க அம்மா உங்களை பார்த்து பயப்படுறாங்கணு  கொண்டு போய் விட்டுருவான் போல” என மனதில் நினைத்தவாறு பள்ளி வந்து சேர்ந்தன.

வேந்தனை அவன் படிக்கும் வகுப்பில் விட்டுவிட்டு  சுடர்  ஸ்டாப் ரூம் சென்று, இவள் ஸ்டாப் ரூம் சென்று  ரெடி ஆகி இவள் வகுப்பில் இருக்கும் மாணவர்களை  பார்க்க சென்றால்.

அங்கு சுடர் “ ஸ்டூடண்ஸ்  பெல் ரிங் ஆனதும் எல்லாரும் லைன்னா ஸ்டேஜ் கிட்ட போய் சைலன்டா உட்காரனும் ஓகே “, அப்போது அங்கு வந்த இன்னொரு ஆசிரியர் “மேம் ஆதி சார் உங்கள ஸ்பீச் பேப்பர் எடுத்துட்டு வர சொன்னாங்க”.

“ஓகே மேம் கிளாஸ் கொஞ்சம் பாத்துக்கோங்க மேம் நன் வந்துறன் “ என்று சொல்லி ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.

ஸ்டாப் ரூம் அருகே செல்ல பேச்சி சத்தம் கேட்டது “மேம் மேக்கப் போட்ட மாதிரி தெரியல தானா நல்ல பாத்து சொல்லுங்க இந்த ஆதி பிரின்ஸி கண்டு பிடிச்சா வம்பா ஆகிடும் “ இதை கேட்ட சுடர் இது வாணி மேம் தான இவுங்க மேக்கப் போட்டு ஸ்கூல் வந்து இருக்காங்கால “என ஆச்சரிய பட்டால் சுடர் .

சுடர் நினைத்ததையே அங்கே இருந்த ரோசியும் கேட்டாங்க,”அது என்னோட க்ரஷ் தான் டுடே சீப் கெஸ்ட் அதன் அழக தெரியனும்-னு லைட்டா மேக்கப் போட்டு வந்தன் “ இதை கேட்ட ரோசி வாணியை மேலிருந்து கீழே பார்த்து “ ஆமா எப்போ உங்களுக்கு சயின்ஸ் – ல இருந்து சோசியல் – க்கு இன்டரஸ் மாரிச்சி “என கிண்டல் செய்ய , அதற்க்கு வாணி வெக்க பட்டுக்கொண்டே “இவர எப்போ இன்ஸ்டால பார்தனோ அப்போ இருந்து , இன்னிக்கு தான் நேர்ல பாக்க சான்ஸ் கிடைச்சிருக்கு “.

“அது எப்படி பார்த்ததும் பிடிச்சிருச்சி “என ரோசி கேட்க

“தெரியல பஸ்ட் போட்டோ பாத்து மயங்கி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க பண்ற  ஹெல்ப் பாத்து புல்லா பிலட் ஆகிட்டேன் “

இவர்கள் பேசியதை கேட்டவாறு உள்ளே நுழைந்த சுடர் மனதில் “ ம்ம்ம்.. எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ ,இதை வெளிய சொல்லி அட்வைஸ் பண்ண  நம்ம வில்லியா  ஆகிடுவோம், இவங்கள சொல்லி தப்பு இல்லை நம்மலும் இப்படி தானா இருந்தோம் “ என எண்ணியவாறு ஸ்பீச் பேப்பரை எடுத்து செல்ல முயலும் போது, வாணி சுடரை நிறுத்தி “சொல்லுங்க  மேம் நான் எப்படி இருக்க மேம் “ அதற்கு சுடர்

“எப்பவும் போலா அழக இருக்கிங்க “இதை கேட்ட வாணி வானுக்கும் பூமிக்கும் குதித்தவாறு “ தாங் யு மேம் “ என்று கூறி “டைம் ஆச்சி நான் என் க்லாஸ் போரன் “என சென்று விட்டால், பின் சுடரும் பிரின்சிபாலை பார்க்க சென்றாள்.

அங்கே இவளை பார்த்த ஆதி ஏற இறங்க பார்த்த வண்ணம் மனதில் “யூத் மினிஸ்டர் வராரு சொன்னதும் ப்யூட்டி-ல இருந்து பாட்டி வர மேக்கப் போட்டு வந்திருக்காங்க இவங்க மட்டும் ஏன் எப்பவும் போல வந்திருக்காங்க “ என யோசித்த வண்ணம் இருக்க , சுடர் “சார், சார் …ஆதி சார் “ என அழைத்த உடனே “ அ.. “ என சுதாரித்து “மேம் உங்க ஸ்பீச் இருக்குல அதுல லாஸ்ட்-ஆ சீப் கெஸ்ட் பத்தி ஒரு டூ லைன் சேத்துருங்க“ என பேசிக்கொண்டே போக ,சுடர் முகத்தை உம்மென்று வைத்து “அது சரி,மாகா ராஜா உத்தரவு போட்டாறு, லாஸ்ட் மினிட்ல அந்த ரெண்டு லைனுக்கு எங்க போக மேஜிக் தான் போடனும் “ என மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது, நேரில் ஆம் இல்லை இதை தவிர வேறு வார்த்தை பேச தான் முடியுமா. சுடர் மனதில் நினைத்ததை படித்தது போல “நானே அந்த டூ லைன்ன மெசேஜ் பண்ணிருக்க செக் பண்ணிருங்க  சுடர் “ உடனே சுடர்

“ஓகே சார்” என்று வெளியில் சொல்லி மனதில் “நல்ல சார் தான், நாம தான் அவசர பட்டுடோம்  போல“ என்று நினைத்தவாறு மெசேஜ் பார்த்து ஒரு நிமிடம் உரைந்துவிட்டால் “ அதை பார்த்த ஆதி “மேம் எல்லாம் ஓகே-வா “ என்று கேட்ட பின் தான் நினைவு வந்து ,

“சார் கெஸ்ட் நேம் கரைட்டா “

“ம்ம்ம் கரைட் தான் தமிழ்நாடு யூத் மினிஸ்டர் சந்திர மகிழன் ஏன் உங்களுக்கு தெரியாத ? “

“இல்ல யூத் மினிஸ்டர்னு ஒன்னு இருக்கு தெரியும் அது யாரு  நேம் என்ன தெரியாது “

“டீச்சரா இருந்து யூத் மினிஸ்டர் தெரியளனு சொல்றிங்க “

“நான் இங்கிலிஷ் டீச்சர் “

“ இங்கிலிஷ்-னா அதுக்குன்னு நியூஸ்லாம் பாக்க மாட்டீங்களா என்ன “

“இனிமே பாக்குற சார் “

“எதை பாப்பிங்க”

“நியூஸ்-அ” இதை கேட்டு  ஆதி நெற்றியை பிடித்தவாறு  சுடரை முறைத்து ” சரி டைம் ஆச்சு போங்க “ என சொல்லி சென்றுவிட்டான்.

உடனே கைப்பேசியை எடுத்து இண்டர்நெட்-ல் சந்திர மகிழன் என்று டைப் பண்ணி பார்த்தால் அந்த முடிவு வருவதற்குள் மனதில் பெரும் போராட்டம் “இல்ல இருக்காது வேற யாராவதா தான் இருக்கும் நேம் கரைட் அவன் நேம் வெறும் மகிழன் தான “ என அவளுக்கு அவளே செல்லிக்கொண்டால்.

லோட் ஆகி முடிந்ததும்  கண்கள் கலங்கின ,அந்த படத்தை பார்த்து கண்களை துடைத்துக்கொண்டாள் மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தாள் அவனே தான் அது , அவனுடைய முழு பெயர் கூட அவன் சொல்லவில்லை, காதில் அவன் குறள் கேட்டது “என்னும் ரெண்டு நாள்தான் உன் முகம் கூட நியாபகம் இருக்காது நீ எனக்கு அவ்ளோ தான், உன் கண் அவுளோ அழகு அதுலதான் நான் விழுந்துட்டன்,  சுடர் நான் உனக்கு யாரு சொல்லு, “ என மாற்றி மாற்றி காதில் அவன் பேசியது, அவனது சிரிப்பு சத்தம் கேட்டது சுடர் காதுகளை இருக்க மூடி “நான் உன்னை  மறந்திட்டேன்,  எனக்கு நீ யாரும் இல்லை , நான் மறந்திட்டேன், நீ வேனா போ .. “ என திரும்ப திரும்ப சொன்னவாறு இருக்க, ஆதி சுடர் தோள் களை பிடித்து  உலுக்கி“மேம் மேம் ..ஒளி  …” என கத்தவும்  தான் நினைவு வந்து கண்களை திறந்தாள்.

கண்கள் கலங்கி முகம் சிவந்து இருந்த வளை பார்த்து ஆதி “என்ன ஆச்சி மேம்  உங்களுக்கு “ என கேட்க அதற்கு சுடர் “ஃபைவ் மினிட்ஸ் சார் உக்காந்துட்டு வரன்,  சீப் கெஸ்ட் ரிஸிவ் பண்ண நான் வரல ப்ளீஸ் சார் “ என தலையை பிடித்தவாறு கேட்க ,”சரி ஓகே மேம் அப்போ ஸ்கூல் ஸ்பீச்-க்கு “

“நான் வந்துடுவேன் சார் தாங்யூ” என சொல்லி அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

சிறிது நேரம் கழித்து வாசல் பக்கம் சத்தம் கேட்டது. சுடர் இருந்தது பஸ்ட் புளோர் அங்கு இருந்து வாசலை நன்றாக பார்க்கலாம், அங்கே வெள்ளை சட்டை ஜீன்ஸ் அணிந்து சிரித்துக்கொண்டே கைகளை கூப்பி நன்றி கூறியவாறு உள்ளே நுழைந்தான் அவன் சந்திர மகிழன்.