சுடர் ஒளி பெயருக்கு ஏர்ப்ப ஒளிவீசும் முகம் பெரிய கண்கள் அதற்கு மை இட்டால் மிக அழகாக இருக்கும், ஆனால் வைக்க மாட்டாள் சராசரி பெண்களின் உயரம் அளவான உடல்வாகு என ஒப்பனைகள் இன்றியும் அழகாக இருப்பாள். அந்த அழகு தான் அவளை இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என எண்ணி அதன் மேல் அவளுக்கு கோபம்.
குமரன் 40 வயது நிரம்பிய ஆண்மகன் ஆனால் பார்க்க தன் வயதை விட இளமையாக இருப்பான். தன் அக்கா மகள்களுக்காகவே வாழ்பவன். குமரனின் அக்கா குழலி அவளுக்கு இரு மகள்கள் மூத்தவள் தீபநிலா இளையவள் சுடர் ஒலி. தீபா பூந்தமல்லியில் ஒரு வீட்டில் தனியாக வசிக்கிறாள், சுடர் குமரனுடன் கோடம்பாக்கம் அருகே ஒரு அப்பார்ட்மெண்ட்-ல் இருக்கிறாள். தீபா குமரன் விட்ட வார்த்தைக்காக தனியாக இருக்கிறாள், குமரனுக்கு தெரியவில்லை அந்த தனிமை அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது என்று தனிமையில் தன்னை தொலைத்து கொண்டு இருக்கிறாள் என்றும் தெரியவில்லை,இது குமரனுக்கு தெரிந்தால் என்ன ஆகும்.
குழலிக்கு 6 வயது குமரனுக்கு 3 வயது இருக்கும் போது இருவரும் நிரந்தர விருந்தாளியாக தன் அன்னையுடன் அம்மா பாட்டி வீட்டில் தஞ்சமடைந்தனர், ஒரு வருடம் கலிந்தவுடன் அக்கா அன்னையாக மாறினாள். பாட்டிக்கு இரண்டு ஆண் இரண்டு பெண்பிள்ளை அனைவறையும் திருமணம் முடித்து அருகேயே வீடு பார்த்து வைத்து விட்டார். சொந்தம் அனைவரும் அருகருகே இருந்தது, முதலில் நன்றாகவே இருந்தது, அவர்களின் அம்மா வீட்டை விட்டு செல்லும் வரை குமரன் குழலி மீது பாசம் குறைந்து கோபம் அதிகம் ஆனது அவர்கள் அம்மா மீது இருந்த கோபம் இவர்களிடம் திரும்பியது பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்று வாழ்க்கை சென்றது.
ஆனால் பன்னிரண்டு வருடம் சென்று மீண்டும் அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பம் அதன் விளைவே, இப்போது அனைத்து சொந்தம் இருந்தும் அவர்களை விட்டு முடிந்த வரை தள்ளியே இருக்கிறார்கள்.
வேந்தனுடன் வெளியே சென்று வீடு திரும்பிய சுடர் எப்பவும் போல வீட்டு வேலை செய்ய தொடங்கி விட்டாள். அப்போது தீபநிலா இடம் இருந்து வீடியோ அழைப்பு வந்தது அதை பார்த்து மலர்ந்த முகத் தோடு போனை எடுத்தால் “அக்கா எப்படி இருக்கீங்க இன்னைக்கு வர்க் சீக்கரம் முடிஞ்சிதா சீக்கிரமா கால் பண்ணிடீங்க “ என விளையாடி கொண்டு இருந்த வேந்தனை கைகளை ஆட்டி வர சொன்னவாறு சோபாவில் அமர்ந்து பேசினால்.
“ம்ம் இப்போ தான் வீட்டுக்கு வந்த வேந்தன் என்ன பண்றான், இன்னிக்கு ஸ்கூல் லீவ்ல “ என தீபா தன் வீட்டு பால்க்கனியில் அமர்ந்து காப்பி குடித்தவாறு கேட்டாள்
“ஆமாக்கா ஸ்கூல் இல்லனு வெளில போயிட்டு வந்தோம் “என பேசும் போது வேந்தான் அருகில் வந்து அமைதியாக அமர்ந்தான். சுடர் போனை அவனிடம் நீட்ட, வேந்தன் அதை வாங்காமல் கைகளை கட்டியவாரு, தலையை திருப்பி அமர்ந்திருந்தான்.
“என்ன வேந்தா அமைதியா இருக்க பெரியம்மா கூட பேச மாட்டியாட “ என கலக்கத்தோடு கேட்டால். எப்பவும் தீபாவிடம் இருந்து கால் வந்தால் சுடரை கூட பேச விட மாட்டான் வாய் ஓயாது ஸ்கூல் கதை பேசுவான் ஆனால் இன்று இந்த அமைதி அவளை பயம் முடித்தியது.
சுடர் வேந்தனை பார்த்து “டேய் பேசுடா பெரியம்மாகிட்ட, உனக்காக வர்க் முடிச்ச ஒடனே கால் பண்ணிருக்காங்க பேசுடா”
வேந்தன் “போங்க நான் பேச மாட்டேன் பெரியம்மாக்கு என் மேல பாசமே இல்லை” என வாயை பிதுக்க, தீபா உடனே “யார் அப்படி சொன்னாங்க செல்லம் பெரியமாக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்டா “
வேந்தன் அதற்கு “பிடிக்கும்னா என்னை பாக்க ஒரு தடவ கூட நேர்ல வரல நான் கூப்பிட்டா கூட வர மாட்டிக்கிறாங்க கிப்ட் மட்டும் அனுப்புராங்க அன எனக்கு கிப்ட் வேனா ” என எதோ சொல்ல வந்து அள தொடங்கி விட்டான். சுடர் உடனே அவன் கண்களை துடைத்தவாறு “தங்கம்ல அலுகாதீங்கடா பெரியம்மா வருவாங்கடா அலுகாதிங்க அங்க பாருங்க பெரியம்மா கூட அலுறாங்க பாரு “
அப்போதுதான் தீபா கண்களை தொட்டு பார்த்தாள் நான் அலுறான உடனே சுதாரித்துக்கொண்டால் அதற்குள் வேந்தன் பயந்து” பெரியம்மா அலதீங்க நான் அலுகல என கண்களை துடைத்து கொண்டான் “
சுடர் “அக்கா அக்கா அலதக்கா “ என என்ன செய்ய என தெரியாமல் பதற தொடங்கி விட்டாள்.
தீபா இருவரையும் பார்த்து “ஒன்னும் இல்ல நான் அலுகல கண்ல துசி விழுந்துருச்சி, இங்க பாரு வேந்தா பெரியம்மாவ, நான் என்ன வர்க் பண்றன் சொல்லுங்க “ அதற்க்கு வேந்தன் கண்களை துடைத்து கொண்டு “ ஆ.. தெரியும் தப்பு பண்றவுங்கள கண்டு பிடிக்கிறது “
“எஸ் கரேட் நா உன்னை பாக்க வந்துட்ட யார் தப்பு பண்றவுங்கள கண்டு பிடிப்பாங்க சொல்லு “ என தீபா கேட்க, அதற்க்கு வேந்தன் “அப்போ உங்கள பாக்க முடியாதா” என சோகமாக கேட்க “செல்லமே இங்க பாருங்க உங்க பர்த்டேக்கு கண்டிப்பா உங்களா பாக்க யார் என்ன சொன்னாலும் வருவேன் சரியா சிரிங்க இப்போ “ வேந்தன் உடனே தன் பிஞ்சி கைகளை விரித்து மூடி என்று “ஒன் டு திரி… “ என எண்ணி விரல்கள் பத்தாமல் தன் தாயை பார்க்க அதை பார்த்து சிரித்த சுடர் “என்னும் சவன் மத்து இருக்கு “ என கண்ணம் கில்லி சொல்ல, அதை பார்த்த தீபாவிற்க்கும் ஆசைதான் உடனே அங்கு செல்ல, ஆனால் என பெருமூச்சு விட அங்கே வேந்தன் குதித்தவாறு “ ஜாலி பெரியம்மா வாரங்க..” என போனை பிடுங்கி தீபாவுடன் கதை பேச தொடங்கி விட்டான்.
போன் பேசிமுடித்த உடன் தீபா அந்த இருண்ட வானை பார்த்து பழைய நினைவை அசைப்போட்டால் சிறு வயதில் சுடர் அவ்வளவு சேட்டை செய்வாள், அவலுக்கு அப்பா என்றாள் அவ்வளவு இஷ்டம் ஆனால் இப்போது என கசங்கிய முகத்துடன் சிரித்தால் அக்கா என்று ஒரு நாளும் அழைக்க மாட்டாள் தீபாவை, சந்தோஷமாக இருக்கும் போது நிலா என்றும், கோபம் வந்தாள் தீபா, என்றும விளையாடும் போது எருமை என பல பெயர்கள் வைப்பாள், அனால் இப்போது இது வேர சுடர் என எழுந்து உள்ளே சென்று விட்டால். அங்கே சுடரும் இதைதான் யோசித்து சிரித்துக்கொண்டே, வாய்க்குள் “அலுமூஞ்சி நிலா “ என்று புதுப்பெயர் வைத்தாள்.
இரு வாரம் கழித்து ஒரு காலை பொழுதில் எப்பவும் விட சீக்கிரமாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தால் சுடர் அவளை பார்த்த குமரன் “என்னம்மா இவ்ளோ சீக்கிரமா கிளம்புறீங்க “என கப்பி கப் எடுத்தவாறு கேட்டான் “அது டுடே ஸ்கூல் ஆன்வர்சரி பன்சன் இருக்கு மாமா அதான் சீக்கிரம் போனும் நான் வேற ஸ்கூல் பத்தி ஸ்பிச் தரனும் “ என வாய் பேசினாலும் கை வேலையை பார்த்த வாரு இருந்தது.
சுடர் ஒரு தனியார் பள்ளியில் ஒன்றில் இருந்து ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில அசிரியராக பணி புரிகிறாள். அதே பள்ளியில் தான் வேந்தனும் படித்து வருகிறான்.
வேந்தனை எழுப்பி அவனை தயார் செய்து இருவரும் பேசியவாறு நடந்து பள்ளியை நோக்கி சென்றன. சுடருக்காக இன்று காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் மகிழ்ச்சியாக பள்ளியை நோக்கி சென்றாள். யாரை பார்க்கவே கூடாது என்று நினைக்கிறாளோ அவனை பார்க்க வைக்க போகும் விதியை சபிப்பாலா? இல்லை அவனை பார்த்தவுடன் கலங்க போகும் கண்களை சபிப்பாலா?. யார் அவன்?