தாரகை 11

பொண்ணுங்க இருவரும் புடவை, ஒப்பனையை முடித்து மல்லிகை சரத்துடன் வெளியே வந்தனர்.

“இந்தாங்கடா. ஜூஸ்ஸை எல்லாருக்கும் கொடுங்க” அழகி கொடுக்க, அதை வாங்கி இருவரும் எல்லாருக்கும் கொடுத்தனர்.

ஜோவும் தர்மேந்திரனும் வந்தனர். ஜெய் பவிதாவை பார்த்து கண்ணடிக்க, சிறுபுன்னகையுடன் அவனுக்கு கொடுத்து அவள் அறைக்கு சென்றாள்.

ஸ்ரீநிதி ரிஷிக்கு கொடுக்க, அவள் கொடுக்க அவன் அவளை பார்க்க, அவள் நகர்த்த அவன் வாங்க கையை நீட்டினான். எல்லாரும் புன்னகைத்தனர்.

“தனு பொண்ணுங்களுக்கு பிக்ம்மாவோட சேர்ந்து பூ வச்சு விடுடி” சொல்ல, இருவரும் வைத்து முடித்தனர்.

தனு இருவருக்கு கை கொடுத்து வாழ்த்து கூறி, ஜெய்க்கும் வாழ்த்தை கூறி விட்டு ரிஷியை பார்த்து திரும்பிக் கொண்டாள். இரு ஜோடிகளையும் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர்.

தாம்புலம் மாத்திறலாமே! பாட்டி கேட்க, “மாத்திடலாம். பவிம்மா வெளிய வா” தாத்தா அழைக்க, அனைவரும் சேர்ந்து இருந்தனர்.

ஹாய் அங்கிள், தனு தர்மேந்திரனிடம் கையசைக்க, ஆடை எப்படி இருக்கு? அவள் கேட்க, “சூப்பர்” வாயசைத்து அவர் கையை உயர்த்தினார். எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.

ஏன்டி, உனக்கு இவரையும் தெரியுமா?

மாம், நேற்று இவங்க வீட்ல தான பர்த்டே பார்ட்டி நடந்தது..

நளினி இருவரையும் பார்த்தாள்.

“ஜோ முன்னாடி வா” தர்மேந்திரன் தட்டை மாற்ற அவனை அழைக்க, ஜெய் அருகே வந்து நின்றான்.

“ஜோ” அழகி அழைக்க, “வந்து தொலையிறேன்” ரிஷி அருகே வந்தான்.

ஜோ அலைபேசி ஒலிக்க, அவன் அதை கட் செய்தான்.

மீண்டும் வந்தது. ஜோ என்று அழைத்த குரலில் அவன் அதிர்ந்து வாயில் பக்கம் பார்த்தான்.

கிஷோர் மலர்ச்செண்டுடன் கண்ணில் கூலருடன் வந்திருந்தான்.

நடப்பதை பார்த்து அவன் கையிலிருந்த மலர்ச்செண்டு கீழே விழுந்தது.

இவனா? ஜோ இவன் இங்க என்ன பண்றான்? கிஷோர் சினமுடன் கேட்க, தனுவும் பவியும் கிஷோரிடம் சென்று பேச, “உங்க அண்ணனுக்கு ஊர் உலகத்துல்ல எவளுமா கிடைக்கல” கேட்க, ரிஷி சினமுடன் கையை முறுக்கினான்.

ரிஷியின் முறுக்கிய கையை பற்றிய ஸ்ரீநிதி, “சீனியர் என் விருப்பப்படி தான் நடக்குது” என்றாள்.

நிது, இவனை கல்யாணம் செய்தால் நீ கஷ்டப்படணும்.

“ஏம்ப்பா?” சந்திரமுகன் கேட்க, அங்கிள்..நான்..அவன்.. சொல்ல முடியாமல் நிற்க, “அம்மா நீங்க கொடுங்க” ஜோ அவன் அம்மாவிடம் தட்டை கொடுத்து விட்டு கிஷோரை இழுத்து வெளியே சென்றான்.

ரிஷி கையை விட்டு ஸ்ரீநிதி கீழே விழுந்திருந்த மலர்ச்செண்டை கையில் எடுத்து மேசையில் வைத்து அவள் அம்மாவிடம் நின்று கொண்டாள். பாட்டி அவளின் செய்கையில் புன்னகைத்தார்.

இவன் எதுக்கு இங்க வந்தான்? தனுவை பார்த்து ரிஷி கேட்க, அவள் ஸ்ரீநிதியை பார்த்தாள்.

சும்மா அண்ணியை பார்க்க வந்துருப்பாங்க..

இவன் எதுக்கு ஸ்ரீநிதியை? அவன் பார்க்க, அவளுக்கு புகழின் நினைவு வந்து விட்டது.

“தட்டை வச்சிட்டு நிக்கக் கூடாது” பாட்டி சொல்ல, தாத்தா பனிமலருடன் தட்டை பிடித்து அவர்களுடன் மாற்றினார்.

நாங்க கிளம்புகிறோம்.

“ஸ்வீட் சாப்பிடாமல் எப்படி? கொஞ்ச நேரம்” பெண்களுடன் உள்ளே சென்று அழகி கொடுத்து விட, இனிப்பு மிக்சரை கொடுத்தனர். அனைவரும் சாப்பிட்டு புன்னகையுடன் இருந்தனர்.

நிச்சய தேதியை குறிக்கலாமா? பாட்டி கேட்க, ம்ம்! என்றார் பனிமலர்.

தாத்தாவும் தலையசைக்க, எல்லாரும் சேர்ந்து ஒரு வாரத்தில் “நிச்சயம்”  முடிவு செய்து அவர்கள் செல்ல, வருத்தமுடன் அமர்ந்திருந்த கிஷோரை முறைத்து சென்றான் ரிஷி.

கிஷோரை சமாதானப்படுத்தி அவனை வீட்டிற்குள் அழைத்து வந்தான் ஜோ.

“என்ன ஆன்ட்டி? அவனை பற்றி தெரிந்தும் அவனுக்கு நிதுவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிவு பண்ணியிருக்கீங்க?” கிஷோர் பனிமலரிடம் கேட்டான்.

நான் என்னப்பா செய்றது? நிதுவுக்கு அவனை விட யார் மீதும் விருப்பம் இல்லையே! எனக்கு என்னோட பொண்ணு நல்லா இருக்கணும்..

அதான் ஆன்ட்டி வேண்டாம்ன்னு சொல்றேன்..

அப்படியில்லப்பா மனசுல ஒருத்தன வச்சிட்டு வேறோருவனுடன் என்னோட பொண்ணு வாழ்ந்தால் தான் அவ வாழ்க்கை பாழாகிடும்.

ஆன்ட்டி இப்ப எல்லாரும் காதலிக்கிறவங்கள கல்யாணம் பண்ணிக்கிறதில்லை.

ஆமாப்பா, ஆனால் என்னோட பொண்ணு அப்படி ஒருவனுடன் நிம்மதியா வாழ மாட்டா. எனக்கு அவளோட சந்தோசம் தான் முக்கியம். பிரச்சனை வந்தால் அவளுக்கு நானும் ஜோவும் இருக்கோம்.

ஆடையை மாற்றி விட்டு ஸ்ரீநிதியும் பவிதாவும் வந்தனர். கிஷோர் அமைதியாக ஸ்ரீநிதியை பார்த்தான்.

“சீனியர் சாப்பிடுங்க” ஸ்ரீநிதி அவனிடம் வந்தாள்.

கிஷோர் கையை அவளிடம் நீட்ட, ஸ்ரீநிதி பவிதாவை பார்த்துக் கொண்டே கையை கொடுத்தாள்.

கங்கிராட்ஸ். நீ வேற யாரையாவது செலக்ட் பண்ணி இருந்தா கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும். அவன் என்ன செய்யப் போறானோ?

பரவாயில்லை சீனியர். நான் பார்த்துக்கிறேன்.

புன்னகைத்து “நான் கிளம்புகிறேன்” பவிதாவை பார்த்து, “ஜெய் சார் ரொம்ப ஜெனுவன் பட் கம்பெனி விசயத்துல்ல அப்படி இருக்க மாட்டார். நீயும் கவனமா இருந்துக்கோ” வாழ்த்தை கூறி அவன் நகர்ந்தான்.

பவிதா ஸ்ரீநிதியிடம், நான் சொல்ற ஆடை தான் நீ அணியணும். உனக்கே பழகிடும் அவள் கூற, எதுக்கு வீ? ஜோ சினந்தான்.

சரிதான் ஜோ. நாம இருக்கிற இடத்திற்கு ஏற்றவாறு நடந்துகிட்டா தான அவங்களுக்கும் பெருமை.

“என்னமோ சொல்ற? பார்த்து எல்லாம் நல்லதாகவே நடக்கணும்” ஜோ விரக்தியுடன் அவனறைக்கு சென்றான்.

மாலை நேரத்தில் ஸ்ரீநிதி அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவள் ஹலோ என்றாள்.

நிதிம்மா, நான் தான் ரிஷியோட பாட்டி.

சொல்லுங்க பாட்டி?

உன்னோட மாமா பேசக் கூடாதுன்னு சொல்லி இருந்தான். என்னால முடியாதும்மா. அதான் போன் போட்டுடேன் தனு தான் எண்ணை கொடுத்தாள் என்று ஆரம்பித்தவர்.. அவர்கள் அனைவர் பற்றி அனைத்தையும் கூறி, அவர்களின் வீட்டிலுள்ள பொருட்கள் எங்கு இருக்குமென்று பேசிக் கொண்டிருந்தார்.

ஜெய் வீட்டிற்குள் நுழைந்து பாட்டியை பார்த்துக் கொண்டே அவனறைக்கு சென்றான்.

சற்று நேரத்தில் ரிஷி வந்து தன் பாட்டியை பார்த்து, “பாட்டி” சிணுங்கியவாறு… “சோ ஹார்டு. ஒரே ஹெடேக்கா இருக்கு” அவர் மடியில் படுத்தான்.

பேசிட்டு இருக்கும் போது எதுக்குடா தொந்தரவு செய்ற?

“தொந்தரவா? பாட்டி நீங்க இப்படி பேச மாட்டீங்க. யாரிடம் பேசிட்டு இருக்கீங்க?” அலைபேசியை பிடுங்கினான்.

“உன்னோட பொண்டாட்டிகிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” அவர் கூற, அலைபேசியை பார்த்து விட்டு அவர் கையில் கொடுத்து அவரை முறைத்து அவன் நகர, ரிஷி நீ பேசுறியா?

“அதான் தலையில கட்டியாச்சுல்ல. எப்படியும் பேசி தான ஆகணும். கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கிறேன். நான் பேச எதுவுமில்லை” அவன் விட்டேத்தியாக கூற, “ரிஷி” அவன் அம்மா சத்தமிட்டார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் ஸ்ரீநிதி.

அலைபேசியை காதுக்கு கொடுத்து, சாரிம்மா அவனை பற்றி தெரிந்தும் நான் கேட்டிருக்க கூடாது.

பரவாயில்லை பாட்டி. அவரை எதுவும் சொல்ல வேண்டாம்.

அவர் அலைபேசியை பிடுங்கிய மான்விழி, “நிதி அவனோட பேசு” அலைபேசியை தன் மகனிடம் கொடுத்தார்.

பெருமூச்சுடன் அவன் அலைபேசியை வாங்கினான். ஸ்ரீநிதி பதட்டத்தில் அமைதியானாள்.

அவள் பேசாமல் இருக்கவும், “என்ன பண்ணீட்டு இருக்க?” கேட்டான்.

ஜோவும் அம்மாவும் வந்துருவாங்க. அதனால ஸ்நாக்ஸ் தயார் செய்துட்டு இருக்கேன்.

என்ன ஸ்நாக்ஸ்?

காலிப்ளவர் பக்கோடா..

ஓ..நல்லா செய்வீயா?

“ம்ம்! பாட்டிகிட்ட கொடுங்களேன்” அவள் சொல்ல, அவன் அம்மாவை முறைத்து அலைபேசியை பாட்டியிடம் கொடுத்து சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான்.

ம்ம்..சரிம்மா என்று புன்னகையுடன், “விழி..உன்னோட மருமக உன்னிடம் பேசணுமாம்” அலைபேசியை மான்விழியிடம் கொடுத்தார்.

சுக்கு காஃபி அவனுக்கு போட்டு கொடுக்க சொல்லி அவள் கூற, அவனுக்கு பிடிக்காதும்மா..

அத்த, உங்க கார்டனில் இருக்கும் பன்னீர் ரோஜாவை அடுப்பிலிருந்து இறக்கும் முன் கலந்து ஒரு கொதி விட்டு கொடுங்க. பிடிக்க வாய்ப்பிருக்கு ஆன்ட்டி.

“நல்லதும்மா. நான் பார்க்கிறேன். புத்திசாலி புள்ள தான்” பாட்டியை தேடினார்.

ரிஷி அவன் அம்மாவையே பார்க்க, “பாட்டி எங்கடா?”

“தெரியல” தோளை குலுக்கினான்.

சரிம்மா, நான் வைக்கிறேன். பாட்டிகிட்ட அப்புறம் பேசு..

“ஓ.கே ஆன்ட்டி” அவள் வைத்து விட்டாள்.

பாட்டி மருந்தை எடுத்து வந்து அவன் தலையில் மசாஜ் செய்ய, “வாவ் பாட்டி ரிலிஃப்பா இருக்கு” கண்ணை மூட, உன்னோட பொண்டாட்டி தான் மருந்தை செய்யும் விதம் சொல்லி அதை எப்படி தேய்க்கணும் என்றும் கூறினாள்.

இந்தா..இதை குடி..

என்னதும்மா?

குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு?

அவன் அதனை முகர்ந்து பார்த்து சிஃப் சிஃப்பாக அருந்தி..ம்ம்..ஓ.கே..என்னது இது? அவன் கேட்க,

சுக்கு காஃபி…

அம்மா, எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல்ல?

இப்ப தானப்பா ஓ.கேன்னு சொன்ன?

வித்தியாசமா இருக்கு. இதையும் அவ தான் சொன்னாளா?

ஆமா. எவ்வளவு புத்திசாலித்தனம்?

ஏமாத்திட்டு புத்திசாலின்னு சொல்றீங்க?

சின்னப்புள்ளையாடா நீ உன்னை ஏமாத்த? சின்னபசங்க சாப்பிடலைன்னா எதையாவது சொல்லி சாப்பிட வைக்கும் அதே ட்ரிக் தான். அதை சமையலில் பயன்படுத்துறா..

உன்னோட தலைவலி போகணும். அதுக்காக தான செய்தா..

இப்ப போ. ரெஸ்ட் எடுத்துட்டு பாரு. தலைவலி கான்..

அதை நான் சொல்லணும்..

“நீ சொல்ல மாட்ட ஆனால் சரியாகும்” பாட்டி கூற, அவன் வேகமாக அறைக்கு சென்றான்.

“இப்பவே எல்லாரையும் அவ பக்கம் இழுக்குறா” முணங்கியவாறு படுத்தான்.

இரவு எழுந்த அவனுக்கு தலைவலியே இல்லை. அவனும் அதை நன்றாக உணர்ந்தான். ஆனால் அவளால் சரியானதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. யாரும் அவனிடம் கேள்வியும் கேட்கவில்லை. அன்றைய நாள் சென்று விட்டது. இதே போல பவியிடமும் பேசினார்கள். அவளுக்கு சமையல் விசயமே தெரியவில்லை. பாட்டி அவளை கேலியுடன் நகர்த்தினார்.

இவர்களின் நிச்சய நாளும் வந்தது.

தனு, “சீக்கீரம் வா. எல்லாரும் கிளப்பீட்டாங்க” நளினி சத்தமிட்டார்.

“வாரேன்ம்மா” கிரீன் புளோரல் லெஹங்காவை தூக்கிக் கொண்டு கதவை திறந்து தேவதை போல வந்து நின்றாள் தன்வி.

என்னோட அழகுடி நீ? நெட்டி முறித்தார் நளினி.

“ஆமா, நீயும் என்னோட அழகும்மா” நளினிக்கு நெட்டி முறித்து புன்னகைத்தாள்.

“சரி வா. உன்னோட பாட்டி கத்த போறாங்க” இருவரும் கீழே வந்தனர்.

ஜெய்யும் ரிஷியும் சிவப்பு நிற கோர்ட்டு சட்டையுடன் மாப்பிள்ளை கலையுடன் நின்று கொண்டிருந்தனர்.

“வாவ்! சூப்பரா இருக்கீங்க அண்ணா” தனு ரிஷியை பார்த்துக் கொண்டே ஜெய்யை அணைத்துக் கொண்டாள்.

“நகருடி. உன்னோட முகச்சாயம் என்னோட பிள்ள ஆடையில ஒட்டப் போகுது” தன்வியை நகர்த்தினார் மான்விழி.

வாங்கடி இங்க என்ன பேச்சு? சௌபாக்கியம் சத்தமிட்டார்..

தன்வி பாட்டி காதில் ஏதோ சொல்ல, அவர் கையை உயர்த்தினார்.

என்னடி?

அது ரகசியம். அப்படிதான பாட்டி..

ஆமா..ரகசியம்..உன்னிடம் நாங்க சொல்ல மாட்டோம். “வாங்க” சொல்லி தன்வி கையை இழுத்து சென்றார்.

மணமேடை மலர் மேடையாக அலங்கரிக்கப்பட்டு பல வண்ண நவீன விளக்குகளுடன் அரங்கம் முழுவதும் ஜொலிக்க, பாடல்கள் ஒலிக்க மாப்பிள்ளைகள் வரவழைக்கப்பட்டனர். ஜோ இருவர் கையையும் பிடித்து அழைத்து வந்தான்.

தன்வி அவனையே கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்தாலும் கடந்து சென்று விட்டான்.

அதற்கு முன்னதாகவே ஸ்ரீநிதி, பவிதாவை தயார் செய்து அவர்களின் பெற்றோருடனான சடங்குகளை செய்தனர். பனிமலரே பவிதாவின் அம்மாவாக இருந்து அனைத்தையும் செய்து முடித்தார்.

நிது, பவி தயாராகிட்டாங்களா? கேட்டுக் கொண்டே மான்விழியும் அவரது குடும்பமும் பெண்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தனர். இருவரையும் பார்த்து உறைந்து நின்றனர்.

தன்விக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. ரிஷி என்ன பேச்சு பேசினான். ஆனால் இப்ப என்ன செய்றான்னு பார்க்கணும்? மனதில் எண்ணிக் கொண்டாள்.

“அண்ணீ, வாவ் சூப்பரா இருக்கீங்க?” தன்வி இருவரையும் அணைத்து, “உங்களுக்கு சர்பிரைஸ் இருக்கு” என்றாள்.

சர்பிரைஸ்ஸா? ஸ்ரீநிதி புன்னகையுடன் கேட்டாள்.

“கேக் கட் பண்றதெல்லாம் சொல்லீறாத” பவிதா சொல்ல, என்ன பவி அண்ணி இப்படி சொல்றீங்க? கேக்கெல்லாம் பெரிய விசயமேயில்லை.

என்னது சொல்லு? ஆர்வமுடன் பவிதா கேட்க, “உங்க சர்பிரைஸை அப்புறம் வச்சுக்கோங்க. அங்க ஐயர் வெயிட்டிங்” நளினி கூற, மணமக்களோட தாய்மாமாக்களை வரச் சொல்லுங்க என்றார் ஐயர்.

தாத்தா தர்மேந்திரனை பார்க்க, “அழகி வா” அவர் தன் மனைவி கையை பிடித்து மேலே ஏறினார்.

மான்விழியின் அண்ணன் ஒருவரும் தர்மேந்திரனும் தாய்மாமன் செய்யும் சடங்கை செய்தனர்.

 மான்விழியின் மாமா குணசேகரன் வந்தார். அவருக்கு மனைவி இல்லை. ஆனால் மகன் இருக்கிறான் பூபாலன். அவன் ஜெய்யை விட மூத்தவன்.

பூபாலன் தன் சித்தி பசங்களை மேடையில் நின்று அவதானித்துக் கொண்டிருந்தான்.

ஜெய் முகம் பிரகாசிக்க, ரிஷியோ அலைபேசியில் மூழ்கி இருந்தான். அதை பார்த்து பூபாலன் முகம் விகர்சித்தது.

“பொண்ணுங்கள அழைச்சிட்டு வாங்க” ஐயர் கூற, எல்லார் கவனமும் மணமகள் அறைப் பக்கம் சென்றது. ஜெய் ஆர்வமுடன் பார்க்க, ரிஷி தன் அண்ணனை பார்த்து விட்டு, எல்லாரையும் போல மணமகள் அறையை பார்த்தான்.

“ஏதோ பொண்ணுங்களை பார்க்காத மாதிரி எல்லாரும் அங்க தான் பாக்குறாங்க” மனதில் எண்ணியவாறு பார்த்துக் கொண்டிருந்த ரிஷி கண்கள் விரிந்தது.

அவனவள் பிங்க் நிறத்தில் நிறைய கற்களால் வடிவமைக்கப்பட்ட பிரைடல் பார்ட்டி வியர் லெஹங்காவும் அதற்கேற்ற அணிகலங்களுடன் தலையை விரித்து..அதற்கேற்ற அழகான ஒப்பனை ஹர்வியர் கிளிப்ஸ் அணிந்து தேவதை போல சென்றாள்.

ஸ்ரீநிதி பவிதா இருவரும் ஒரே போல ஆடையில் மேடை ஏற, பூபாலனின் கண்களும் மனமும் இரு பெண்களையும் வட்டமிட்டது.

ஜெய் அவனை மறைந்து பவிதாவை பார்க்க, அவனுடன் வந்த அவன் நண்பர்கள்..

“மச்சீ, இவனோட ஜொல்லால ஊரே வெள்ளக்காடாகப் போகுதுடா” ஒருவன் கேலி செய்ய, எதுவும் ஜெய் காதில் ஏறவேயில்லை.

பெண்களை விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்த பூபாலன் மனதில் எண்ணமொன்று உதிக்க, தன் சித்தி பசங்களை பார்த்தான். ஜெய் அவனை மறந்து இருக்க, ரிஷி தன் பழியுணர்வை மறந்து ஸ்ரீநிதியை ரசித்துக் கொண்டிருந்தான்.

ச்சே…என ஆனது பூபாலனுக்கு.

இவனுகள யாருக்காவது விருப்பமில்லைன்னா தேர்ந்தெடுக்கலாம்ன்னு எண்ணிய அவனுக்கு எல்லாம் போனது போல இருந்தது. ஆனாலும் அவன் இரு பெண்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்திரமுகனும் மான்விழியும் மேடையில் ஏறி தாய்மாமன்கள் முன்னிலையில் பெண்கள் இருவருக்கும் தட்டை கொடுக்க, சீக்கிரமா இந்த ஆடையை உடுத்திட்டு வாங்க என்று அனுப்பினார்.

ஜெய் நிதானமாகி தன் தம்பியை பார்த்தான். ஆனால் ரிஷி அப்பொழுதும் ஸ்ரீநிதியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அழைக்கவில்லை என்றாலும் வந்துவிட்டனர் ரிஷியின் நண்பர்கள் ஜெகதீஸ், ஜானி, ரக்சித், யுகமித்ரன், ஆருத்ரா..

“ஹாய்டா” சத்தமிட்டு வந்த ஜெகதீஸ் தன் நண்பனின் பார்வை ஸ்ரீநிதி மீது ஆழ்ந்து இருப்பதை பார்த்து அவனது தோளை பற்றினான்.

கவனம் சிதறி ரிஷி அவர்களை பார்த்து அதிர்ந்து, அவன் தந்தையை பார்த்தான்.

“யார டார்லிங் தேடுற? அவ தான் உள்ள போய்ட்டாளே!” ஆருத்ரா கொஞ்சியவாறு ரிஷி தோளில் கையை போட்டாள்.

ஜெய் நண்பர்களில் ஒருவன் அவள் கையை தட்டி விட்டு, “அவன் நீ கொஞ்சி விளையாடும் காதலன் இல்லை. ஸ்ரீநிதியின் கணவனாக போறான்” சத்தமிட்டான்.

பக்கமிருந்தவர்கள் அவர்களை பார்க்க, “பாரு டார்லிங். இவன் என்ன பேசுறான்னு? உனக்கு இந்த ஸ்ரீநிதியை பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும். உன்னை கட்டாயப்படுத்தி தான கல்யாணம் செஞ்சு வைக்கிறாங்க” மீண்டும் அவள் கொஞ்சி பேசினாள்.

அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் சாதனா. நம் தன்வியின் தோழி.

“ச்சீ! பொண்ணாடி நீ? இத்தனை பேர் மத்தியில அண்ணாவோட இப்படி வெட்கமில்லாமல் பேசுற?”

“ஏய்ய்! ஹௌ டேர் யூ?” ஆருத்ரா சாதனாவை அடிக்க கையை ஓங்கினாள்.

ஜோ அவளது கையை தட்டி விட்டு, ஏய் உனக்கு அறிவிருக்கா? பசங்களோட ஒட்டிக்கிட்டு திரியிற இவக்கிட்ட பேசிட்டு இருக்க? சாதனாவை ஜோ திட்டினான்.

டேய், நிதுவுக்காக தான் பேசினேன்..

“பேசி என்ன பண்ணப் போற?” சினமுடன் ரிஷியை முறைத்த ஜோ, “நீ செய்றதை அவன் செஞ்சிருக்கணும். யாருக்கு தெரியும் இப்படி கொஞ்சல் மட்டும் தான? இன்னும் போகுமோ என்னமோ?” ஜோ பேச, ரிஷி சினமுடன் எழுந்தான்.

“கோபம் வருதா உனக்கு? இதே போல தான எனக்கும் இருக்கும். என்னோட அக்காவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நிச்சயம் பண்ண வந்துட்டு இவளையும் வர வச்சிருக்க. இந்த கண்றாவிக்கு தான் அன்றே நிதுவிடம் இவன் வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டாளா? திட்டினாலும் அவன் தம்பியாக சரியாக பேசுகிறான்” ஜெய் அமைதியாக இருந்தான்.

“ஜோ அமைதியா போ” ரிஷி சினமுடன் சொல்ல, “ஓ! நான் அமைதியா போகணும். போறேன் இப்பவே இரு திருமணமும் நடக்காதவாறு பண்றேன்” அவன் நகர, “ஜோ” ஜெய் அழைத்தான்.

“என்னால உங்க குடும்பத்துல்ல யாரையும் நம்ப முடியல. என்னை மன்னிச்சிருங்க மாமா” ஜோ திரும்ப, அவன் முன் கண்கலங்க வந்த தன்வி, “நம்ப முடியலையா? என்ன நம்ப முடியல? யார நம்ப முடியல?” கேட்டாள்.

“உன்னோட வேலையை பாரு” ஜோ கூற, “என்னோட வேலையா? நான் என்னடா வேலை பார்த்தேன்?”

ஏன் உனக்கு தெரியாதா? இந்த திருமணம் நடக்க காரணமே நீ தான?

ஆமான்னு வச்சுக்கோ. இப்ப என்ன பிரச்சனை? இவன் என்னோட அண்ணன்னு தான பிரச்சனை. இப்ப சொல்றேன்..இந்த ரிஷி என்னோட அண்ணன் இல்லை. எனக்கு ஜெய்கிரிஷ் மட்டும் தான் அண்ணன்.

நிது..நிது வாழ்க்கை இவனால அழியக் கூடாது. நீ சொன்னது போல தாராளமா நிறுத்து. ஆனால் பவி அண்ணீ ஜெய் அண்ணா கல்யாணம் நடந்தே ஆகணும் கண்ணீர் வழிய அவள் பேச, ஜோ அமைதியாக நின்றான்.

“தனு இவங்களுக்காக என்னை அண்ணன் இல்லைன்னு சொல்ற?” ரிஷி சீற்றமுடன் கேட்டான்.

ஆமாடா, நீ இல்லைன்னு என்னோட மனசுக்கு புரிய வச்சால் தான் நிம்மதியா இருப்பேன். காலேஜ்ல்ல படிக்கும் போது உன்னை பத்தி பேசி அவனோட தங்கை நான்னு சொல்லும் போது வலிக்கும் பாரு…

என்ன சொல்ற? ரிஷி கேட்க, இப்ப வந்த பிரச்சனை கற்பழிப்பாக தான் உன் மேல பெயர் வந்தது.

 நம்ம காலேஜ்ல்ல பணக்கார பொண்ணுங்க மட்டும் உன்னோட பேசுவாங்க. அவங்க சுகத்துக்காகன்னு நிறைய பேச்சு வந்தது என்று தனு அவளது அலைபேசியை எடுத்து…இதோ பாரு..இது நீயும் இவளும் தான? கேட்டாள்.

ரிஷி அதனை வாங்கி ஆருத்ராவிடம் அலைபேசியை காட்டி “என்ன இது?” சினமுடன் கேட்டான்.

“அவள எதுக்குடா மிரட்டுற? அது நீ தான்” ஜெகதீஸ் சொல்ல, அவன் வாயிலிருந்து ரத்தம் வந்தது.

பங்சனுக்கு வந்த அனைவரும் திரும்பி பார்க்க, தாத்தா தடுமாற்றத்துடன் மெதுவாக நடந்தார். “இருங்க நான் பார்க்கிறேன்” தர்மேந்திரன் வேகமாக அவ்விடம் செல்ல, சந்திரமுகனும் சென்றார்.

பெண்களை தயார் படுத்தி வெளியே அழைத்து வந்த மான்விழி சத்தம் கேட்டு திரும்ப, பவிதாவும் ஸ்ரீநிதியும் ரிஷியின் நண்பர்களை பார்த்து அதிர்ந்தனர்.

“நீ என்ன அடிச்சாலும் இது நீ தான்? ஆரு பேசு” ஜெகதீஸ் சொல்ல, “ஆமா ரிஷி நான் குடித்திருந்த போது நீ தான் என்னை அந்த பப் அறைக்கு அழைத்து சென்ற. நான் மட்டுமல்ல நம்முடன் படித்த பொண்ணுகளையும் நீ தான்”.

“அந்த ஷாலினியை பார்த்தவுடன் பிடிச்சி போய் தான் அவளது கற்பை சூறையாடின” அவள் சொல்ல சொல்ல, ஸ்ரீநிதி பொறுமை பறந்து மான்விழி கையை விட்டு ஆருத்ரா முன் வந்து, “யாரு இவர் மத்த பொண்ணுங்ககிட்டயும் உன்னிடம் தவறா நடந்துக்கிட்டார்”.  ஆருத்ராவின் செவில் கிழியும் அளவிற்கு அறைந்தாள்.

ஆருத்ரா காதை தட்ட, அவளுக்கு காது கேட்கவில்லை.

ஸ்ரீநிதி அவள் அம்மாவை தேடி அழைத்தாள்.