“உன்னுள் ரோஜாவை நான்” அத்தியாயம் 4

          மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து விரிந்த கூந்தலை இடை வரை நீண்டிருந்த கூந்தலை மேலாக எடுத்துக் கட்டி இருந்தால் தலை குளித்துவிட்டு லைட்டாக ஒப்பனைகள் செய்து கொண்டிருந்தால் வீரபாண்டி மோகனையும் ராஜனையும் அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தார். வினோதினி நேர் எதிரே சோபாவில் அமர்ந்த மோகனின் உருவம் தெரிந்தது கண்ணாடியில் முதலில் அவள் கவனிக்கவில்லை பின்பு தான் கவனித்தால் அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் லைட் பச்சை வண்ணத்தில் அடர்ந்த பச்சை வண்ணம் பார்டரில் அமைந்திருந்த சேலையை கட்டி இருந்தால் நூல் புடவையில் மிக கம்பீரமாக ஒரு இளவரசியாக வீற்றிருந்தால் அவள் பார்ப்பது தெரிந்ததும் மோகன் தலையை குனிந்து கொண்டான் இவளும் எந்திரித்தால் வீரபாண்டியோ அம்மா இங்க வந்து பாரு வினோதினி யார் வந்து இருக்காங்கன்னு உங்க மாமனார் வந்திருக்காருமா! அப்படின்னு சொல்லி சொல்லி கூப்பிட்டார்.

அவளும் எந்திரித்து வாங்க மாமா என்றால் ராஜனும் அம்மா நல்லா இருக்கியா மா என்று கேட்டார் திருமணத்திற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கின்ற பொழுது இன்னும் வேலைக்கு போய்க்கொண்டே இருக்கிறாயா அம்மா  வினோதினியோ பள்ளியில் சட்டென்று நின்று விட முடியாது மாமா அதனால் புதிய ஆள் எனக்கு பதில் போடுற வரைக்கும் நான் போய் கொண்டு தான் இருக்க வேண்டும் மாமா என்று கூறினாள்.கல்யாணத்துக்காவது லீவு விடுவாங்கலாமா என்று கேட்டார் அதெல்லாம் விடுவாங்க மாமா என்றால் ,சரி நான் கிளம்புறேன் மாமா நேரம் ஆயிடுச்சு என்று தன் ரூமிற்கு சென்றாள்

திரும்பி வரும்போது தன் நீண்ட கூந்தலை பின்னலிட்டு மடித்து கொண்டையாக போட்டு வந்தால் மோகனோ தன் மனதில் நினைத்துக் கொண்டான் கூந்தல் விரிச்சிருந்தா தான் அழகு அப்படின்னு நினைத்தான் .

நினைத்த உடனேயே அவன் மண்டையில் கொட்டு வைக்க நினைத்து மனதிலே கொட்டு வைத்தான். இது அண்ணனுக்கு பார்த்த பெண் என்று உரைத்தது அவள் முடியை விரித்து போட்டு இருந்தால் என்ன மடிச்சு கட்டியிருந்தால் என்ன என்று நினைத்துக் கொண்டான் வீட்டிலிருந்து ரோட்டிற்கு சென்றால் வேன் வந்து விடும் மாமா நான் வருகிறேன் என்று சொல்லிகிளம்பி விட்டாள்.

நாட்களும் நகர்ந்து திருமண நாள் வந்தது திருமண நாளுக்கு முந்தைய நாள், முகிலன் பெங்களூரில் இருந்து வந்திருந்தான் அவனுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்து கொண்டிருந்தன இங்கேயோ வினோதினிக்கும் செய்ய வேண்டிய சடங்குகள் செய்து கொண்டிருந்தன இரவு மண்டபத்திற்கு செல்ல தயாராக இருந்தார்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண நாளும் இனிதே தொடங்கியது ஐயரோ மாப்பிள்ளையை கூப்பிடுங்கள் மந்திரங்கள் ஓத என்று சொன்னார் .

ஜெயராணியோ மோகனை அனுப்பி மோகன் முகிலனை கூட்டிக் கொண்டு வரச் சொன்னார் .மோகன் போய் முகிலனின் அரை கதவை தட்ட அங்கு யாரும் இல்லை மோகன் பாத்ரூமில் எல்லாம் செக் பண்ணிட்டு முகிலனுக்கு போன் பண்ணினான் ரிங் போய் கட் ஆனது அவனோ எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல நான் நிஷாவை தான் விரும்புகிறேன் அவளோட பெங்களூர் போகப்போறேன் அப்படின்னு மெசேஜ் பண்ணி இருந்தான் அதைப் பார்த்ததும் மோகனுக்கு தூக்கி வாரி போட்டது. இதை எப்படி நான் அப்பா கிட்ட சொல்லப் போறேன் அப்படின்னு சொல்லி நினைச்சு ரொம்பவும் நொந்து போயிட்டான் .

உண்மையில் இதுக்கப்புறம்தான்  அவன் ரொம்ப நொந்து போ போறான் என்று அவனுக்கு தெரியவில்லை ஐயரோ மாப்பிள்ளைய கூப்பிடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ராஜனும் வந்து எங்கப்பா முகிலன் என்று கேட்டார் தனக்கு வந்திருந்த மெசேஜை காட்டி படிக்க சொன்னான் அதைப் படித்ததும் ராஜன் முகத்தில் அறைந்து அழுது கொண்டார் வீரபாண்டிக்கும் கல்யாண மேடையில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்து பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்தனர் வீரபாண்டி ராஜனை பார்த்து தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாக சொல்லி சண்டைக்கு போனார்.

ராஜன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார் மோகனோஅப்பா நான் பஸ் ஸ்டாண்ட் போறேன் அங்க தான் அண்ணே எப்படியும் இருப்பான் நான் போய் கூட்டிட்டு வந்துறேன் என்று போகப் போனான்.

 ராஜனும் வேண்டாம்ப்பா இனி நீ தான் அந்த மேடைல உட்கார வேண்டும் என்று கூறினார் மோகன் இல்லப்பா அது சரிவராது இது அண்ணனுக்கு பார்த்தவங்க நான் கல்யாணம் பண்ணா சரி வராது என்று கூறினான் இப்ப வேற வழி இல்ல என் மானத்தை காப்பாத்த நீதான் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கூறினார். ராஜன் அப்பாவோட மானத்தை காப்பாத்துப்பா என்றுமோகனின் கால்களில் விழப்போனார். மோகனோ சரி அப்பா நான் ஒத்துக்குறேன் என்றான் அவன் ஒத்துக்கிறேன் என்று சொன்னது வினோதினி எப்படியும் இதை மறுத்து விடுவாள் என்பதால்தான் ,

அதே நேரத்தில் வினோதினியும் அங்கே அவன் எண்ணத்தை இன்னும் பொய் யாக்காமல் வீரபாண்டியிடம் வாதாடி கொண்டிருந்தாள் எனக்கு இந்த கல்யாணம் வேணாம் என்று வீரபாண்டியோ எனக்கு வேற வழி இல்ல இப்ப மட்டும் நீ தாலி கட்டிகலனா நான் எல்லாருக்கும் முன்னாடியும் என்னால தலை குனிஞ்சு வாழ முடியாது என்று லட்சுமியும் அவளிடம் மன்றாடி கொண்டு இருந்தார் வினோதினியும்  சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்று சொன்னால் அவளும் மோகனை மனதில் வைத்துக்கொண்டு அவன் எப்படியும் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்று மனதில் வைத்துக் கொண்டு தைரியமாக நின்று கொண்டிருந்தாள் .

 

 

கல்யாணத்தை எப்படியாவது நிப்பாட்டு என்று மனதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆனால் அவனோ மேடையில் வந்து அமர்ந்து கொண்டிருந்தான் வினோதினியும் வேறு வழி இல்லாமல் தானும் மணமேடையில் போய் அமர்ந்தால் வேறு வழி இல்லாமல் முணுமுணுப்பாக அவனிடம் கல்யாணத்தை நிப்பாட்டு என்று சொல்ல தொடங்கினால் மோகனோ நீ வந்து   இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி எழுந்து விடு என்றான் வினோதினியோ என்னால் முடியாது அப்பா திட்டுவாங்க என்றால் அவனும் என்னாலும் முடியாது என்னையும்  எங்க அப்பா திட்டுவாங்க என்றான், நீ நிப்பாட்டு நீ நிப்பாட்டு என்று இருவரும் மாறி மாறி சொல்லிக் கொள்ள வினோதியின் கழுத்தில் தாலி ஏறி இருந்தது மோகனோ வேறு வழி இல்லாமல் கட்டி இருந்தான் வினோதினிக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை எப்படியாவது இவன் நிப்பாட்டிடுவான்னு நினைச்சோமே என்ன பண்றது அப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா கடைசி வரைக்கும் கல்யாணத்தை நிப்பாட்டாம இருந்துட்டாளேன்னு மோகன் யோசிச்சிட்டு இருந்தான் .

இப்படி இவர்கள் மாறி மாறி யோசித்துக் கொண்டே இருக்க ஐய்யரோ எழுந்து பெரியோர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க என்று சொன்னார் வேறு வழி இல்லாமல் இருவரும் ஆசீர்வாதம் வாங்கினார் அடுத்ததாக பந்தயம் நடந்தது யார் முதலில் காகித பேப்பர்களைப் பிரித்து உள்ளிருக்கும் பொருட்களை எடுக்கிறார்கள் என்று அதில் லத்திகாவும் யாழினியும் அக்கா அண்ணா நீங்க தான் ஜெயிக்கணும் நீங்க தான் ஜெயிக்கணும் சீக்கிரம் பிரிங்க சீக்கிரம் பிரிங்க அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. மோகனும்அவளவிட சீக்கிரமா பிரிச்சு காட்டணும் அப்படிங்கற வெறியோட பிரிச்சான். ஆனால் வினோதினியோ இது ஒண்ணு தான் இப்ப கேடு அப்படிங்கிற மாதிரி இருந்தா இங்க வாழ்க்கையே போச்சு இதை பிரிச்சா என்ன ஆகப்போகுது என்று நினைத்தாள். மோகன் ஜெயிச்சு அதிலிருந்து மோதிரத்தை எடுத்தான் அதை வினோதினிக்கு அணிவிக்க சொன்னார்கள் அடக்கடவுளே இதுக்காகவா இப்படி வேகமா பிரிச்சோம் என்று நினைத்தான்.

 இதில் மோகனுடைய வேட்டி வேற இடுப்பிலே நிக்காம இருந்தது என அவனுக்கு பேண்ட் போட்டு தான் பழக்கம் அடுத்து ஒவ்வொரு ஆளா வந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சாங்க பார்த்தா சேர் வந்து அசைந்து அசைந்து கொண்டு  இருந்தது ,வேட்டியும் நழுவ சேரும் நழுவ ஒரே ரணகளமாக இருந்தது .மோகனுக்கும் வினோதவும் என்ன செய்வதென்று புரியாமல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்து போட்டோகிராபர் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க மோகனோ சிறிது நேரம் இருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் தந்தையிடம் அப்பா அந்த வேட்டி நிக்கவே  மாட்டேங்கிறது இதற்கு முதலில் ஏதாவது வழி சொல்லுங்க என்றான் .

அதற்கு அப்பா தன் இடுப்பில் உள்ள பெல்ட் அந்த காலத்துல கட்டுவாங்க என்று மோகனின் இடுப்பில் கட்டி ஒரு வழியா நிக்க வச்சாரு வேட்டிய அதுக்கு பிறகு நின்னுச்சு , அதுக்கு பிறகு சேர சரி பண்ணுங்க முதல்ல என்று சொன்னான் .

ஏனென்றால் வினோதினி சேரை பார்த்து லைட்டாக சிரிப்பது போல் தோன்ற அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஜெயராணிக்கு என்ன பண்ணுவதென்று தெரியவில்லை .இந்த முகிலன் பய இப்படி பண்ணிட்டானே என்று  இருந்தது. அடுத்து பந்தியில் உட்காரும்போது போட்டோகிராபர் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடும் படி  சொன்னார் மோகனோ இலையில் இருந்த லட்டை எடுத்து வேறு வழி இல்லாமல் ஊட்ட சென்றான். வினோதினியோ முறைத்துப் பார்த்தால் மோகன் அதைப் பார்த்ததும் அதெல்லாம் வேணாம் நீங்க சும்மா இருங்க அப்படின்னு சொன்னான் பெரிய கருப்பன் தன் பேத்தியை கண்ணால் அடக்கி விட்டு இல்ல பரவால்ல மோகன், ஊட்டி விடுங்கப்பா என்றார் வினோதினியும் சிறிதாக வாங்கிக் கொண்டாள்.

தம்பதியர் இருவரும் மோகனுடைய வீட்டிற்கு சென்றனர் அங்கே வினோதினியை ஜெயராணி விளக்கேற்ற சொன்னார் விளக்கேற்றி விட்டு அப்பா முருகனே யார் வேணான்னு நினைச்சேனோ அவங்களே எனக்கு புருஷனா கிடைச்சிருக்காங்க இதுல நான் என்ன பண்றது இந்த வாழ்க்கையை நான் எப்படி ஏத்திட்டு வாழ முடியும் அப்படின்னு சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தால் மோகனோஇந்த வாயாடியா எனக்கு பொண்டாட்டியா கிடைக்கணும் ஏன்டா முருகா இப்படி பண்ணுன என்று நொந்து கொண்டிருந்தான். அடுத்து தம்பதியருக்கு பால் பழம் கொடுத்தனர் அடுத்து ஒரு பானைக்குள் மோதிரம் சங்கு இவற்றை போற்று எடுக்க சொன்னார்கள் அதில் யார் முதலில் எடுக்கிறார்களோ அவர்கள் கைதான் குடும்பத்தில் ஓங்கி இருக்கும் என்று கூறுவார்கள் வினோதினியோ விருப்பமே இல்லாமல் பானைக்குள் கைவிட்டால் மோகனும் பானைக்குள் கைவிட்டான். லத்திகாவும் நரேந்திரனும் அக்கா  அண்ணா வேகமா எடுங்க யார் முதல்ல மோதிரத்தை எடுக்குறாங்கன்னு பார்ப்போம் என்று கூறினார்கள் நரேந்திரன் தன் அக்கா வினோதினியிடம் அக்கா நீங்க எப்படியாவது அந்த மோதிரத்தை எடுத்துரு என்று சொல்லிக் கொண்டிருந்தான் ப்ளீஸ் வினோதினியும் தம்பிக்காக மோதிரத்தை எடுக்க முற்பட்டால் ஆனால் மோகனோ மோதிரத்தை எடுக்க அதனை வினோதினி பிடுங்கினாள் மோகனா விட்டுக் கொடுக்கவில்லை கடைசியாக மோகன் மோதிரத்தையும் வினோதினி சங்கையும் எடுத்தாள் நரேந்திரனும் அக்கா என்ன அக்கா இப்படி பண்ணிட்ட என்றான் ஒரு வழியாக சடங்குகள் எல்லாம் முடிந்து.

 இரவு நேரம் வந்தது வினோதினியும் மோகனும் அவரவர் பெற்றோர்களிடம் முதலிரவு வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தார்கள் வீரபாண்டியும் வினோதினி அம்மா லட்சுமியும் தன் மகளிடம் கெஞ்சி கொண்டிருந்தார்கள் மோகனும் வினோதினியும் ஒரு வழியாக ரூம்க்கு வந்தார்கள் மோகன் முன்பே சென்றிருந்தான் வினோதினி தயங்கி தயங்கி பின்னாடி வந்து கொண்டு இருந்தாள். மோகனோவேறு வழி இல்லாமல் கட்டிலில் போய் அமர்ந்திருந்தான்.

வினோதினி பதுமையாக ரோஸ் வண்ணப்பட்டு கட்டி எழிலோவியமாக இருந்தாள் பால் செம்மை கொண்டுவந்து டேபிளில் வைத்து விட்டு மோகனை பார்த்து எந்திரி என்றால் மோகனோ எதுவும் புரியாமல் எந்திரிச்சு நின்றான் வினோதினி சண்டைக்கு கிளம்பினால் உன்னை என்ன சொன்னேன் கல்யாணத்தை நிப்பாட்ட தானே சொன்னேன் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட என்று கேட்டாள் உனக்கு தான் பொண்ணுங்கன்னாலே பிடிக்காது அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணுன நீ ஒரு ராமானுஜம், மோகனோ நீ எதற்கு உட்கார்ந்து இருந்த பிடிக்கவில்லை என்று எந்திரிச்சு இருக்க வேண்டியதுதானே எதுக்கு உட்கார்ந்திருந்த என்று கேட்டான் நான் எனக்காக உட்கார வில்லை எங்க அப்பாக்காக தான் உட்கார்ந்தேன் என்றாள். அதே மாதிரி தான் நானும் என்றான். மோகனோரூமிற்குள் உள்ளே வந்தபோது அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்தான் அது தவறாக அதாவது வாயாடியாவது அமைதியாக இருக்கிறதாவது என்று சொல்லிவிட்டான் வினோதினியோ யார் வாயாடி நீ தான் ராமானுஜம் என்று கூறினாள். இப்படி இருவரும் மாத்தி மாத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

 இனி இவர்களில் யார் முள்ளாகவும் மலராகவும் இருக்க போகிறார்கள் என்று பார்ப்போம் இல்லை இருவரும் ரோஜாவாக மலரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இனி..