“ம்ம்…” என்று தலையை ஆட்டியவள் “நீங்க கிளம்புங்க செல்விம்மா.. ட்ரெஸ் பேக் மட்டும் தானே நானே எடுத்துப்பேன்.. லாக் பண்ணிட்டு கீழ சாவி குடுத்துட்டு போயிக்கிறேன்..” என்று சொல்ல,
“அதுக்கில்ல பாப்பா…” என்று இழுத்தார் அவர்.
அவளின் நிலை அவருக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் யாருக்கு என்ன சொல்வது என்றும் அவருக்கு தெரியவில்லை. சிவாவிடம் இதற்கு மேல் இதனைப் பற்றி அவரால் பேசவே முடியாது. ரஞ்சிதம் அவ்வளவு தான். வந்து கொன்று போட்டாலும் போடுவார்.
“மனசுல எதையும் போட்டுக்காத பாப்பா…” என்று அவர் ஆறுதலாய் பேச,
“ம்ம்ச் ஒண்ணுமில்ல. சும்மா தான் உக்காந்து இருக்கேன். மத்த திங்க்ஸ் எல்லாம் கூட அப்போவே ஜான் கிட்ட குடுத்து விட்டுட்டேன் செல்விம்மா. ரூப்பாவும் வர மாட்டா. சோ நீங்க கிளம்புங்க. கொஞ்ச நேரம் இருந்துட்டு நான் கிளம்பிடுவேன்…” என,
“தனியா விட்டுப் போக ஒருமாதிரி இருக்கு பாப்பா…” என்றார் செல்வி மனம் கேளாமல். அப்போதே மணி ஏழு மணி ஆகிவிட்டது. இனி இரவு எந்நேரத்தில் இவள் கிளம்புவாள் என்று இருக்க,
“ம்ம்ச் நீங்க போங்க செல்விம்மா.. எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு…” என்று அவள் பிடிவாதமாய் சொல்ல, அதற்குமேலும் செல்வி அழுத்தி எதையும் பேசவில்லை.
“கிளம்புறப்போ சொல்லு பாப்பா…” என்றவர் வீடு நோக்கிச் செல்ல, நேரம் மேலும் கடந்தது தான் மிச்சம்.
சிவா அன்றைய தினம், கீழே தான் இருந்தான். வந்து சில நிமிடங்கள் ஆகியிருக்க, சிண்டுவிடம் “சாவி குடுத்தாங்களா?!” என்று கேட்க,
“இன்னும் அந்தக்கா மேல தான் இருக்கு…” என்றான் அவனும்.
“இன்னுமா?!” என்று நெற்றி சுறுக்கியவன் “செல்வியக்கா எங்க?” என,
“நேரம் பார்த்தியா இப்போவே எட்டுக்கு மேலாச்சு…” என்று சத்தம் போட,
“சரி இரு நான் வர்றேன்…” என்றார்.
“இல்ல வேணாம்.. நா.. நானே பேசிக்கிறேன்…” என்றவனுக்கு ஒருவேளை தன்னிடம் சொல்லிவிட்டு செல்லவேண்டும் என்று காத்திருக்கிறாளோ என்ற எண்ணம்.
போகமாட்டேன் என்று சொல்வாள். கடினப்பட்டு அனுப்பிட வேண்டும் என்று எண்ணியிருக்க, அவளோ நீ என்ன சொல்வது என்னை என்கிற ரீதியில் பேச, இப்போது அவள் இன்னும் கிளம்பாமல் இருப்பது என்னவோ அவனை போட்டு பிசைந்து எடுத்தது.
“ம்ம்ச்…” என்று அழுத்தமாய் தன் தலையை கோதிக்கொண்டவன்
“மணி எங்க டா?!” என்று கேட்க,
“அந்த கடைல…” என்று சிண்டு சொல்லவும் “ம்ம் சரி.. நான் போய் பேசிட்டு சாவி வாங்கின்னு வர்றேன். நான் நைட் வூட்டுக்கு போயிடுவேன். பார்த்து எல்லாம் பூட்டிட்டு தூங்கு…” என்றவன், யோசனையுடனே மாடிக்குச் செல்ல, அங்கோ ஹாலில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டு இருக்க, அவளைக் காணோம்.
“பை.. பைரவி…” என்று சிவா அழைக்க, சத்தமே இல்லை.
‘எங்க போனா…’ என்றவன் பார்வையை சுழற்ற, அவனது அந்த மாஸ்டர் பெட்ரூம் கதவு திறந்து இருந்தது.
அந்த அறை எப்போதும் பூட்டித்தான் இருக்கிறது என்பது அவனுக்கும் தெரிந்தே இருக்க, இப்போது திறந்திருப்பது கண்டு ‘அங்க இருப்பாளோ…’ என்ற யோசனையுடனே, அறைக்குள் வர, அங்கே இருட்டாகத்தான் இருந்தது.
பைரவியோ, அறையின் ஜன்னலில் நெற்றி வைத்து சாய்ந்து நிற்பது வெளியில் இருந்து வரும் வெளிச்சத்தில் தெரிய, அவள் அப்படி நின்றிருந்த கோலம் அவனுக்கு எப்படியானதொரு வலியை கொடுத்திருக்கும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் “பைரவி…” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, அவளோ திரும்பே இல்லை.
அவளின் உடல் லேசாய் அழுகையில் அசைவதும், மெல்லிய கேவல் ஒலியும் அவனுக்கு இப்போது கேட்க ‘அழுகிறாளா?!’ என்று நெஞ்சம் தூக்கி போட,
‘அவளை நன்றாய் பார்த்துக்கொள்ள வேண்டும்…’ என்று நொடிக்கொரு தரம் எண்ணி எண்ணியே அவள் மீது காதல் கொண்டவனுக்கு, இந்த காட்சியை காண சகிக்கவில்லை.
பைரவியோ பெரிதாய் “உனக்காக வரவில்லை…” என்று சொல்லிவிட்டாள் தான்.
ஆனால் கிளம்புகையில் அவளால் தாள முடியவில்லை. அந்த அறைக்குள் போகவே கூடாது என்று எண்ணியவள், ஒரே ஒரு முறை அங்கே சென்று பார்த்துக்கொள், உன் கற்பனை காட்சிகளை எல்லாம் அங்கே சென்று ஒருமுறை மீண்டும் மனதினில் ஓட்டிக்கொள் என்று அவளது காதல் மனது சட்டாட்டம் செய்ய, பைரவியின் கால்கள் தன்னைபோல் அந்த அறைக்குள் போக, அதற்குமேலே அவளுக்கு அழுகை நின்றபாடில்லை.
சிவா வருவான் என்று நினைக்கவில்லை. ஆனால் அவனது குரல் கேட்கவுமே இன்னும் அழுகை கூட, திரும்பி அவனைக் காணும் சக்தியில்லாது அப்படியே ஜன்னலோடு ஒட்டி நிற்க
“ப.. பைரவி…” என்றபடி அவளருகே செல்ல, அவ்வளவுதான் அவன் பக்கம் வந்த அடுத்த நொடி, வேகமாய் திரும்பி அவன் மீதே சாய்ந்து அழத் தொடங்கிவிட்டாள்.
உடைந்துவிடக் கூடாது என்று வைராக்கியமாய் இருந்தவளுக்கு இன்றைய நாளில் அது முடியவில்லை.
“சிவா…” என்று கேவலோடு சாய்ந்தவளின் கரங்கள் அவனை இறுக தழுவிக்கொள்ள, சிவா அதிர்ந்து நின்றான்.
“எ.. என்னால முடியல சிவா…” என்றபடி அவள் மேலும் அழ
“ப.. பைரவி.. எ.. என்னாச்சு?” என்று அவன் இன்னும் அதிர்வு மாறாமல் கேட்க, அவளோ அவனை மேலும் இறுக்கமாய் அணைத்து, அவனோடு மேலும் ஒன்றி அழ, அவனது கரங்களோ அவனையும் மீறி அவளை ஆதுரமாய் அணைக்க,
“என்னாச்சு பைரவி?” என்றான் மனதுருகி.
அவனுக்குத் தெரியாததா என்ன?!
அவளது உள்ளம் இப்போது என்ன பாடுபடும் என்று.
அவனது என்னாச்சு? என்ற கேள்விக்கு அவளிடம் பதிலே இல்லை. இதோ இந்த நிமிடம் அவனது கரங்களுக்குள் அவள் இருக்கிறாள் அதுவே போதுமானதாய் இருக்க, இந்த நொடியை முழுதுமாய் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவளுக்கு புத்தியில், மனதில் இருந்தது.
காதலின் நியதிகள் தனி தானே.
சிவாவின் முகத்தினை கூட ஏறிட்டு பைரவி பார்க்கவில்லை. ஆனாலும் அணைப்பில் இருந்து விலகும் எண்ணமே இல்லாதவள் போல, அவனை அப்படி ஒன்றி நிற்க, காதல் கொண்ட மனது அவளது மட்டும் தானா என்ன?!
அவனுக்கும் தானே..
அவளுக்குண்டான அத்தனை உணர்வுகளும் அவனுக்கும் இருக்கும் தானே.
அந்த நொடி, அவர்களின் காதல், மற்றதை மறக்கச் செய்தது.
“பைரவி… பைரவி… இங்க என்னை பாரு டி…” என்று அவள் கன்னம் பற்றி அவள் முகம் நிமிர்த்த முயற்சிக்க,
“ம்ம்ம்ஹூம்…” என்று பிடிவாதமாய் தலையை ஆசைத்தவள், அவன் நெஞ்சிலே மீண்டும் விசும்பலோடு முகம் புதைக்க,
அவளின் பழைய சிவாவாய் இப்போது அவன் நிற்க, அவனது இலக்கம் கண்டவள், கண்ணீர் விழிகளோடு அவனைப் பார்க்க, முகமோ அப்படியொரு சிவப்பில் இருந்தது. எத்தனை நேரம் அழுதிருப்பாளோ என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. கண்ணீரோடு சேர்ந்து ஒட்டியிருந்த அவளது கேசத்தை ஒதுக்கி, அவள் முகத்தை அழுந்தத் துடைத்தவன் “என்ன பைரவிம்மா?” என்று கேட்க,
“நீ.. நீங்க… இருந்துட்டீங்க தானே.. நான் இல்லாம என்னோட பேசாம பார்க்கம எல்லாம் ஒரு வருஷம் முழுசா இருந்துட்டீங்க தானே. இப்போ போகணும்னா எனக்கு நிஜமா தெரியலை.. நான் என்ன செய்றதுன்னு தெரியலை.. உங்கக்கிட்ட சண்டை போடவோ, கெஞ்சவோ கூட எனக்கு தோணலை…” என்று உதடு பிதுக்கி அவள் பேச,
“ஒன்னும் வேணாம்.. நீங்க ஒன்னும் என்னை கன்சோல் பண்ண வேணாம்.. நான் போயிட்டா, இப்படித்தான் அடுத்தும் அழுவேன். அப்போ யார் இப்படி வந்து துடைச்சு விடுவா?” என்றவள்,
“ஒன்னும் வேணாம்…” என்று மீண்டும் சொல்ல,
“சரி.. சரி… நான் எதுவும் செய்யல.. பட் இப்படி அழாத.. ப்ளீஸ்.. எனக்கு ஒருமாதிரி கில்டியா இருக்கு..” என, அவளோ மௌனமாய் அவன் முகம் பார்த்து நின்றாள்.
“உனக்கு எதுவும் பேசணுமா?!” என்று கேட்டான் மனமுருகி.
என்னவோ அவனுக்கு இந்த முறை அவளை இப்படி அழுகையோடு அனுப்பிடக் கூடாது என்பது மனதில் திண்ணமாய் தோன்ற, அப்படியொரு கேள்வி அவனும் கேட்டுவிட,
“எவ்வளோ ஈசியா கேட்டுட்டீங்க சிவா பேசணுமா அப்படின்னு? அப்.. அப்போ உங்களுக்கு எதுவுமே இல்லியா? இதோ.. இந்த ரூம்.. இதுவே சொல்லுதே உங்க மனசு என்னன்னு.. இம்மி மாறாம நான் சொன்ன அத்தனையும் செஞ்சு வச்சிருக்கீங்க. பின்ன எப்படி சிவா உங்கனால என்னோட பேச இருக்க முடிஞ்சது..?” என்று அவள் கேட்க,
அவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்..
அப்போது அவன் மௌனமாய் பதிலேதும் சொல்ல முடியாதவனாய் நிற்க “பேசுங்க… இப்போவாவது பேசுங்க சிவா. உங்க சைட் ஒரு ரீசன் இருக்கு. அதை நான் மனசார அக்சப்ட் பண்ணிக்கிறேன். ஆனா உங்களோட வலிகளை கூட என்கிட்டே இப்போ ஷேர் பண்ணிக்கக் கூடாதா? இப்படி ஓடுறீங்க. இந்த ட்ரஸ்ட் விசயத்துல நீங்க எனக்கு எவ்வளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க.. அதெல்லாம் எனக்கு புரியாத?
அட்லீஸ்ட் நான் கிளம்புறப்போ, நல்லபடியா போயிட்டு வான்னு சொல்ல கூட உங்கனால முடியாது இல்லை. என்னை உங்க லைப்ல சேர்த்துக்க வேணாம். வேண்டவே வேண்டாம். ஆனா, ஆனா… உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் ஒரு தடவையாவது சொல்லிருக்கலாம் தானே. நான் இங்க வந்ததே பிடிக்காதது போல நடந்துக்கிறீங்க…” என்று அவள் பேச, அவனது நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்து கொண்டு இருந்தது.
இதோ இதெல்லாம் நடந்து விடக் கூடாது என்பதால் தானே அவள் கண் முன்னே வராமல் இருந்தான்.
‘என்னை நல்ல முறையாய் வழியனுப்பக் கூடாதா..’ என்று அவளே கேட்கிறாள், அதை செய்ய முடியாதவனாய் தானே அவன் நிற்கிறான்.
தோற்று போய், தொய்ந்து போய் நிற்பது அவனுக்கே தெரிகிறதே, இதோ இன்னமும் கூட, அவனது கரம் அவளின் கரத்தைத் தானே பற்றிக்கொண்டு இருக்கிறது.
“அ.. அப்படி எல்லாம் இல்ல பைரவி…” என்று அவன் மெல்ல பேச,
“வேற எப்படி.. இதோ எத்தனை முன்னேறி இருக்கீங்க நீங்க… புதுசு புதுசா வேற வேற பிஸ்னஸ் எல்லாம்.. ஒருதடவை கூட என்கிட்டே எதுவும் சொல்லக் கூடாதா? நான்.. நான் புரியுதா நீங்களாவது என்னைப் பார்க்கணும்னா, வீடியோஸ்ல பார்த்துப்பீங்க.. ஆனா நான்.. நான் எப்படி யார்கிட்ட உங்களை பத்தி கேட்கிறது? அது எனக்கு எப்படி இருக்கும்னாவது புரியுதா உங்களுக்கு..” என,
“நீ.. நீ என்னை யோசிக்காத பைரவி.. உனக்காக பாதை பெரிசு.. முன்னேறி போயிட்டே இரு…” என்று அவன் பேச, அப்படியே தொய்ந்து கீழேயே அமர்ந்துவிட்டாள்.
“பை.. பைரவி…” என்று அவனும் கீழே அமரப் போக,
“வேணாம்.. ப்ளீஸ் போதும்.. விடுங்க.. நான்.. நான் கிளம்புறேன்…” என்று அழுந்த அவள் முகத்தை அவளே துடைத்துக்கொண்டு, மெல்ல மீண்டும் எழுந்து கொள்ள,
“நா.. நான் வந்து விட்டுட்டு வரட்டுமா?” என்று கேட்டவனை, கொன்று விடுவது போல் முறைத்தவள்
“நீங்க எப்படியோ வாழுங்க.. கல்யாணம் பண்ணிக்கோங்க.. என்னவோ பண்ணுங்க.. ஆனா ஒன்னு நான் இப்படித்தான் இருக்கணும், இதுதான் செய்யணும் அது இதுன்னு இனி நீங்க எனக்கு ஆர்டர் எல்லாம் போடக் கூடாது. நான் கேட்கவே மாட்டேன்.. கிளம்புறேன்…” என்று அவனில் இருந்து இரண்டு எட்டு எடுத்து வைத்தவள், மீண்டும் வந்து
“ஒரே ஒரு தடவ உங்களை இன்னொரு தடவை ஹக் பண்ணிக்கவா?!” என்று கேட்டவளின் குரலில் ஆயிரம் ஏக்கங்கள்.
கேள்வி என்னவோ அவள் கேட்டுவிட்டாள், அதை அவள் முடிக்கும் முன்னமே அதை சிவா செயல்படுத்திவிட, அவனது அணைப்பில் அத்தனை வலிகள். மன வலியும் தெரிய, உடல் வலியும் கண்டது.
“சி.. சிவா…” என்றவள் திணறி நிற்க,
“போதும் டி.. வார்த்தையால என்னை கொள்ளாத…” என்றவன் யாசகமாய் பார்க்க, கண்களை இறுக மூடித் திறந்தவள், என்ன நினைத்தாளோ, அவனை மேலும் தன்னோடு நெருக்கி, சிவாவின் இதழ்களில் அழுந்த முத்தமிட, சிவாவின் உடல் ஒருமுறை சிலிர்த்துத்தான் போனது.
ஓராண்டு காலம்..
அவளது நெருக்கம் இல்லாது.. அணைப்பு இல்லாது.. முத்தங்கள் இல்லது…
இதோ இன்றும் அவர்களின் கண் முன்னே பிரிவு தான் நிற்கிறது. இருவரும் தங்களின் பாதைகள் தனி தனி என்று தான் நிற்கிறார்கள். உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடியாதா, சரி உனக்கான ஒரு நியாயம் இருப்பின் நான் உன்னிடம் சண்டையிடவோ, கெஞ்சவோ போவதில்லை என்று அவளும் உறுதியாய் தான் இருக்கிறாள்.
ஆனாலும் கிளம்பத்தான் மனம் வரவில்லை.
இதெல்லாம் சரியா தவறா என்பது கூட தெரியவில்லை. அவனை இன்னொரு முறை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருக்க மறையாது அவனிடமே அதை சொல்ல, அந்த அணைப்பை அவனே கொடுத்தான். இப்போதோ முத்தமிட்டுச் செல்கிறேன் என்று அவள் முத்தமிட, முத்தங்கள் இருவருக்கும் பொதுவானது தானே.
இதழ்கள் அவளுக்கு மட்டுமா சொந்தம். அவனுக்கும் தானே.
வலியும் வேதனையும் அவளுக்கு மட்டும் தானா? அவனுக்கும் தானே.
இதோ.. இதோ.. இந்த இதழ் முத்தத்தை இப்போது அவனதாக்கிக் கொண்டான். அவனது அணைப்பு அவளது இடையோடு இருக்க, பைரவியின் கரமோ அவன் கேசம் பற்றி, இன்னும் இன்னும் என்று சொல்லாமல் சொல்ல, காதல் மட்டுமே அங்கே பேசிக்கொண்டு இருக்க, மற்றது எல்லாம் இருவருக்கும் மறந்தே போனது.
மூச்சு வாங்கும் நேரம் “பைரவி…” என்று சொல்லியே அவன் மீண்டும் அணைக்க,
“சிவா.. சிவா…” என்று அவனை தன்னோடு மேலும் மேலும் இருக்கியவளுக்கு, அந்த நிமிடம் தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. இந்த நொடியை.. இந்த நாளை உனக்கு சொந்தமாக்கிக் கொள் பெண்ணே.. வாழ்வில் அடுத்தது என்னவோ தெரியாது.
ஆனால் இந்த நிமிடத்தில் நீ அவனுக்கு சொந்தமாகிவிடு..
இது மட்டுமே அவளுக்குத் தோன்ற, விலகும் நினைப்பே அவளிடம் இல்லை. அவனோ அவளுக்கும் மேலே நின்றான். எது எப்படியோ போகட்டும்.. நீ இந்த நிமிடம் என்னை கொன்று கூட போட்டுவிட்டு போ. உன் கரங்களில் நான் என்னவோ ஆகிக் கொள்கிறேன். எடுத்துக்கொள் என்னை என்று தன்னை அவளிடம் ஒப்புவிப்பதிலேயே முடிவாய் இருந்தான்.
“முழுதாய் என்னை சொந்தமாக்கிக் கொள்..” என்று இருவருக்குமே, மற்றது எல்லாம் என்னவோ ஆகிக்கொள்ளட்டும் என்பது மட்டுமே இருவருக்கும் மனதினில் இருக்க, மீண்டுமொரு முத்த யுத்தம்.
இம்முறை முத்தத்தோடு இல்லாமல், அவன் சூடான மூச்சுக்காற்றுடன் அவள் கன்னம் தீண்டி, கழுத்தில் முகம் புதைத்து, அவளின் மெல்லிடையை இறுக்கமாய் பற்ற..
“ஸ்…” என்று வலியில் முனகினாலும், பைரவிக்கு சிவா கொடுக்கும் இந்த வலியோ அத்தனை இனித்தது.
கடைசி வரை நான் உன்னவளாக மட்டுமே இருந்திட விரும்புகிறேன். நாம் வாழ்வில் ஒன்றிணைந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி என்று அவள் எண்ணியது போலவே தான் சிவாவின் உள்ளமும் எண்ணியது. எப்போதுமே உனக்கு மட்டுமே சொந்தமாகினேன் நான் என்று அவனது ஒவ்வொரு செயலும் சொல்லாமல் சொல்ல, அணைப்பும், முத்தங்களும் தாண்டி அவர்களின் நிலை அடுத்ததற்கு செல்ல, எப்போது இருவருக்கும் கட்டில் வந்து சேர்ந்தனர் என்று தெரியவில்லை.
ஆடைகள் யார் களைந்தது? இருவருக்கும் தெரியாது..
எல்லைகள் யார் மீறியது? இருவருக்கும் தெரியாது..
அனுமதி யார் தந்தது? இருவருக்கும் தெரியாது..
பிடித்தங்கள் நீள்கிறதா? அதுவும் தெரியாது..
அடுத்தது என்ன? பதிலே கிடையாது..
அப்போது இது?! இந்த சங்கமம் எதற்காக?!
இப்படி எந்த கேள்விக்கும் இருவரிடமும் பதில் இல்லை. ஒன்றே ஒன்று, தங்களை மற்றவரிடம் ஒப்புவித்திட வேண்டும். அது போதும். இந்த கூடல் அடுத்து கொடுக்கும் நினைவுகள் போதும் என்று இருவரும் பின்னி பிணைய,
“பைரவி… என்னை பாரு டி…” என்று அவளை கொஞ்சி கெஞ்சினான்..
அவளோ வெட்கம் ஒருபுறம், கூச்சம் ஒருபுறம் இருந்தாலும் அடிமனதில் இருக்கும் வலியும் அப்படியே இருக்க, சிவா அவளருகே இப்படி மற்றது மறந்து, தன்னை மட்டுமே சிந்தித்து மோகித்து இருப்பதை ரசித்துக்கொண்டு இருந்தாள்.
அவள் வயிற்றினில் அவன் முகம் புதைத்திருக்க, பைரவியின் கரமோ அவனது தலையை அழுந்தப் பற்றிக்கொள்ள மீண்டும் ஒரு முத்த ஊர்வலம் மொத்தமாய் அவள் உடலில் அவன் நடத்த, சுகம் தாளாமல் சொக்கித்தான் போனாள் பைரவி.