உன்னை நினைத்து 20

ஆதிசேஷன்  தனது மேல் அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தவன் , தான்  சமிப காலமாக இந்தியாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பிளாக் மேஜிக்(சூனியம், தீய மந்திரம்,மந்திரவாதிகள், கருப்பு மந்திரம்), ஈவில் மேஜிக் (தீய மந்திரம்) மக்களிடையே அதிகம் பரவ படுவதை செய்தித்தாள்களிலும் ஊடகம் வாயிலாகவும்  பகிரபடுவதை பார்த்து கொண்டு இருந்த நான் அதன் தொடர்ச்சியாக நான் டிரெய்னிங் பீரியடில் இருந்த சமயம் ஒரு தாய் தன் சொந்த குழந்தையை  பலி கொடுத்தால் தனக்கு நல்லது மற்றும் பெரிய கோடிஸ்வரியாக மாறுவாள் என்று ஒரு மந்திரவாதி சொன்னதை நம்பி தான் பெற்ற அந்த பெண் குழந்தையை  தன் கையாலே தன் கணவனுக்கு தெரியாமல்  கொன்றதை, செய்திவாயிலாக  தூரத்தில் இருந்து பார்த்த எனக்கு அந்த ஆசாமியை பிடிக்க வேண்டும் என்று  தோன்றினாலும்,அடுத்து அடுத்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இது போல் நடப்பது போலிஸ் அதிகாரி  தங்கலாலே கண்டுபிடிக்க முடியாததை எண்ணி புதிதாக  ஜாயின் செய்த அதிகாரியான என்னிடம் தரப்பட்டு இந்த கேஸ் அடுத்த ஒரு மாதத்தில் கேஸ் க்ளோஸ்  செய்து தராவிட்டால் கேஸ் சிபிஐ விசாரணை செல்லப்படும் என்று கோர்ட் உத்தரவு படி நான் இந்த கேஸ்ஸை எடுத்து நடத்த, நடத்த  நடத்த இதில் பிரபலமான முக்கிய புள்ளிகள்களும் இதனை எல்லாம் நம்பி  தாந்திரீகம் மாந்திரீகம் தில் தங்களை அந்த ஆசாமி சொல்லுவது போல ஆடு,கோலி, பன்றி,மாடு என்று பலி கொடுத்தது போக,மனித குழந்தை, பெண்கள் குழந்தைகள் என்று இப்போது  இப்படி போக இதில் ஆனாதை குழந்தைகள், அதரவற்று சாலைகளில் இருக்கும் குழந்தையை கடத்தி,அந்த குழந்தைகளை கொன்று இங்கே பல சக்திகளை பெறுக்க போகிறோம் நீங்கள் நினைத்து நிறைவேற போகுது என்று சொல்லி அவர்களை ஆட்கொண்டு தாங்கள் நினைத்தது நிறைவேறிய அடுத்த நோடி அவர்கள் அங்கிருந்து மாயமாகிவிட்டனர்!

ஆனால் இவர்கள் சொல்லுக்கு உடன் படாத சக்தி வேலனை அவர்கள்,நோக்கத்தினை மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களை எங்கே  காவல் துறை அதிகாரிகளிடம் உலரி விடுவான்  என்று நினைத்தவர்கள் அவனை கொல்ல துடிக்க ,இதனை அரிந்து தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்ற சொல்லி சக்தி வேலன் ஆதிசேஷனை தஞ்சமடைந்தவன்,11வயது அனாதை அதரவற்று பசிக்கு உணவு கேட்டு சென்ற குழந்தையை கடத்தி அந்த குழந்தையுடன் எனது குழந்தையையும் பலியிட  சொன்னார்கள் நான் அவர்களிடம் இருந்து என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த பிஞ்சு சிறுமியை நீங்கள் காப்பாற்றி விடுங்கள் என்றவன் மயக்க மாகி விட அவனை  அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்து விட்டு, நான் விரைவாக அந்த சிறுமியை காப்பாற்ற, நான் அங்கு விரைவாக செல்ல, அங்கு போலிஸ் சைரன் ஒலி கேட்டு ஆசாமிகள் ஒடி விட உயிருக்கு போராடியபடி இருந்த சிறுமியை அருகில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் சேர்த்தது வரையில் உங்களுக்கு தெரியும் சார் , ஆனால் இதில் நான் அந்த சிறுமி காயத்திரியை காப்பாற்றி கொண்டு போகும் சமயம் என் தந்தை அங்கு மறைந்து இருந்ததை கண்டு சந்தேகித்து அவரை பின் தொடர இதற்கு தலைவனே என் தந்தை என்று தெரியும் போது  எனக்கு எப்படி இதனை தடுப்பது என்று தெரியாத சமயம் அவரே வந்து என்னிடம் முன் ஜென்மம் அது இது என்று  விடாது சொல்லி கொண்டும்  என்னை ஹிப்னாடிசம் பண்ண!

நான் அவர் கட்டுக்குள் வர ஆனால் அதன் படியே நடித்து அவர் அடுத்த குறி மிஸ்டர் சரவணன் மனைவி ஜானவி, மற்றும் அவர் மகன் நவிலன் என்று எனக்கு தெரிந்த நொடி நான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த அதே நொடி இவர்களை வைத்து தான் அந்த மொத்த கும்பலையும் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு,இவர்களை வைத்து  அவர்களை பிடிக்க வேண்டிய நேரத்தில் சரவணன் அங்கு வந்ததால் அவர்களை கொல்ல போன எனது தந்தை , ம் என்று தொண்டையை  செருமியவன் சிகாமணியை சுடவேண்டிதாகிவிட்டது என்று  கூறி மேல் அதிகாரிக்கு சல்யுட் வைத்து  ஆதிசேஷன் வெளியே வர!

மற்ற அதிகாரிகள் ஜானவி சரவணனிடம் விசாரணையில் அங்கு நடந்தவற்றை கேள்வி எழுப்ப , சரவணன் ஜானவி இருவரும் எங்களை காப்பாற்ற தான் ஆதிசேஷன் சார் ஷூட் பண்ணாங்க என்று வாக்கு முலம் அழிக்க!

இதனால் அரசு இந்தியாவில் தேடப்படும்  டார்க் மேஜிசியன், ஈவில் மேஜிசியன் சீகாமணி,அப்பாவி குடும்பத்தை காப்பதாற்காகவும், ஐபிஎஸ் அதிகாரி ஆதிசேஷனை தாக்கியதால் ஷூட்  செய்யபட்டு  சம்பவ இடத்தில் சீகாமணி இறந்தார் என்று அந்த கேஸ்  மூடி கோர்ட்டிலும் தீர்ப்பு வழங்கி ஆதிசேஷன் நிறபுறாதி எனவும் அவர் போலிஸ் உத்யோகத்தை தொடரலாம் எனவும் தீர்ப்பு வர!

நேராக அரசு  குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற ஆதிசேஷன் குழந்தை காயத்திரியுடன் அமர்ந்து இருந்த தனது தாய் வள்ளியம்மாளிடம் ஏற்கனவே நடந்தவற்றை கூறியதால், மகனை பார்த்து கசந்த புண்ணகையை சிந்தியவருக்கு சொல்லில் அடங்கா வருத்தம்,

ம்மா இன்னும் அந்த ஆளு பத்தி நினைச்சிங்கனா தயவு செய்து இந்த குழந்தையை விட்டு போங்க என்று ஆதிசேஷன் கடுமையாக கூற!

ஆதி நான் அவரை பற்றி நினைக்கவில்லை , இப்படி பட்ட மனிதனுடன் என் வாழ்க்கையை பகிர்ந்தது எண்ணி வருந்துகிறேன்,நீ என் வயிற்றில் மகளாக பிறக்காமல் மகனாகப் பிறந்ததே எனக்கு வரம் தான் கண்ணா, இல்லை என்றால் இப்போது இறந்த எல்லாம் பெண் பிள்ளைகள் போல என்னோட மகளும் இறந்து இருப்பாளோ என்னவோ,ஏற்கனவே அவருக்கு பெண் பிள்ளை பிறந்தால் பேர் அதிர்ஷ்டம் நீ பிறந்தது துரதிஷ்டம் என்பது போல பேசியவருக்கு  எல்லாம் மாறி போனது ஏதானாலோ என்று  புலம்பியவருக்கு நிச்சயமாக வருத்தமோ துயரமோ இல்லை ,ஒரு அரக்கன் அழிந்து விட்டான் என்று நிம்மதி பெருமூச்சு மட்டுமே அவரிடம்!

ஆதிசேஷன் நீங்கள் கொடுத்த அந்த சோட்டானிகரை பகவதி அம்மன் ரக்கஷை என்னை அவரின் கட்டுக்குள் என்னை செல்ல விடாமல் அனைவரையும் காப்பாற்றியது என்று பேசியவர்கள் ,இவர்கள் பேசிய போது காயத்திரி துரம் சென்றவள் அப்பா பாட்டி சீக்கிரம் வாங்க என்று கத்தி கூப்பிட!

அதற்குள் குட்டிம்மா கத்த கூடாது உன் கூட இருக்குற பசங்க நமக்கு அப்பா இல்லையென்னு வருத்த படமாட்டாங்களா என்று ஆதிசேஷன் பக்குவமாக கேட்க!

சாரிப்பா தெரியலையே இனி காயு பாப்பா சமத்து பிள்ளையா இருப்பா!

சரி எதுக்கு கூப்பிட்டிங்க  ஆதிசேஷன் கேட்க!

இவ என்னோட தோழி இவளையும் நம்மோட  கூட்டிட்டு  போகலாமா என்று ஆர்வமுடன் கேட்க!

ச்சு பாப்பா உன்னை கூட்டிட்டு போக தான் பர்மிஷன் வாங்கி இருக்கேன் ஆனால் இந்த குட்டி ராதையை இல்லையே என்று தன்னை ஏக்கமுடன் பார்த்து கொண்டு இருந்த ஐந்து வயது குழந்தையை கண்டவனுக்கோ மனது ஒரு மாதிரி ஆக!

அவன் அம்மாவை பார்க்க,அவரோ இந்த ஒரு பிள்ளை தானே தத்து எடுத்துக்க போற சொன்ன இப்போது என்னை பார்த்தால் நான் என்ன சொல்லுவது என்று கேள்வி எழுப்பியவருக்கும் அந்த பிள்ளையை அப்படியே விட்டு செல்ல எண்ணமும் இல்லை, நீ காயுவ அந்த பாப்பா கூட விளையாட விட்டு என்னோட வா தூரமாக அழைத்து சென்றவருக்கு, முதலில் ஒரு பெண் பிள்ளை வளர்ப்பது என்பது  மிகப் பெரிய விடயம், ஆனால் நீ இன்னோரு குழந்தையும் தத்தெடுக்க நினைப்பது நல்லது ஆனால் இந்த இருவரையும் வளர்க்க என்னால் கொஞ்சம் காலம் தான் முடியும் அதன் பிறகு  என்ன செய்வாய், அதனால் நீ அந்த இன்னோரு பிள்ளையை வளர்க்க வேண்டும் என்றால் நீ கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் ஆதி!

ஒரு பெண் துணையுடன் தான் மகள்களை வளர்க்க வேண்டும் என்று எந்த கட்டளையும் இல்லை நான் எல்லாமாக இருந்து இந்த என்னோட பிள்ளைகளை வளர்ப்பேன்!

என்றவன் போய் குட்டி ராதையிடம் நான் உன்னை அழைத்து போக கண்டிப்பாக அப்பா வருவேன் இப்போது காயத்திரிய புது பள்ளிக்கூடத்தில் சேர்கனும்ல இல்லை ,போகலைனா மிஸ்ஸு காயத்திரி  பனிஷ் பண்ணுவாங்க அதனால் இப்போ போய் அப்புறமா வரேண்டா!

அதுக்கு தன்னை விட்டு விட்டு போக போகிறார்கள் என்று புரிந்ததோ  அவர்களை விட்டு தூரம் சென்று டாட்டா காட்டா!

காயத்திரி சந்தோஷமாக ஆதிசேஷன் கைகளை பிடித்து தன் புதிய வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைத்தாள்