தாரகை 7

பாட்டி, “எதுக்கு பக்கத்துல்ல வந்து பயமுறுத்துறீங்க?”

நான் உன் பக்கத்துல வந்தா உனக்கு பயமா இருக்காடா?

திடீர்ன்னு மூஞ்சிக்கு பக்கத்துல்ல வந்தா யாராக இருந்தாலும் பயமா தான இருக்கும்..

அய்யோ! நிறுத்துங்க பொறுமை காக்காது அலைபேசியை எடுத்து ஜோவை அழைத்தாள் தன்வி.

அலைபேசியை எடுத்த அவன் குரல் கரகரத்தது.

“உனக்கு எவ்வளவு தைரியம்? நிதுட்ட எங்களை பார்க்க, பேசக் கூடாதுன்னு சொல்லுவ? நிது இப்ப ஓ.கே தான?” கேட்டாள்.

ஹாஸ்பிட்டலில் இருக்கேன். அப்புறம் கால் பண்றேன்..

ஹாஸ்பிட்டலா? என்னாச்சுடா?

“ஸ்கேன் எடுக்கணும்ன்னு டாக்டர் நிதுவை அழைச்சிட்டு போயிருக்காங்க” குரல் கலங்க பேசினான் ஜோஜித்.

ஸ்கேன்னா? ஏன்? எதுக்கு?

“இனி கால் பண்ணாத. என்னோட அக்கா இனியாவது நிம்மதியா இருக்கணும். உன்னோட அண்ணாவால எல்லாத்தையும் இழந்துட்டோம். விட்ரு. அவ முன்னாடி நீங்க யாரும் வர வேண்டாம்” சொல்லி அலைபேசியை வைத்து விட்டான்.

கண்ணீருடன் சந்திரமுகனை அணைத்து, “நான் என்ன செய்தேன் பிக்ப்பா? நானும் அவங்கள பார்க்க கூடாதுன்னு சொல்றான். எல்லாம் இவனால்..” ரிஷியை தன் பலம் கொண்டு அடிக்க, அவன் அமைதியாக நின்றான்.

ஸ்கேன்னு சொன்னம்மா? மான்விழி கேட்க, நிதுவுக்கு தலைவழி தாங்க முடியாமல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. ஸ்கேன் எடுக்க அழைச்சிட்டு போயிருக்காங்களாம்..

“நாம போய் பார்த்துட்டு வரலாமா?” பாட்டி கேட்க, அதான் தெளிவா ஜோ “வேண்டாம்”ன்னு சொல்லீட்டானே! அலைபேசியில் அவனை மீண்டும் அழைத்தாள் தன்வி.

“உனக்கு என்ன தான் பிரச்சனை? இருக்கிற பிரச்சனை போதாதுன்னு எதுக்கு டார்ச்சர் பண்ற? வராத…எங்கள நிம்மதியா இருக்க விடு” அவன் கத்தினான்.

“அழுது கொண்டே நிதுவுக்கு ஸ்கேன்ல்ல என்ன சொல்றாங்கன்னு மட்டும் சொல்லு?” அலைபேசியை வைத்து விட்டு தனு அறைக்கு ஓடினாள்.

“தனு” நளினி அவள் பின் செல்ல, “நள்ளூ அவள விடு. எல்லாரும் சாப்பிட்டு தூங்குங்க” பாட்டி கூற, “இல்லம்மா…” சந்திரமுகன் தன்வி அறையை பார்த்து விட்டு அமைதியாக அமர்ந்தார்.

மாமா, அழுதுட்டு போறா? அந்த பயனுக்கு ரொம்ப தான் திமிரு. எம் பிள்ளையை திட்டி இருக்கான்.

“அவனோட அக்கா ஹாஸ்பிட்டல்ல இருக்கா. அவன் முன்னாடி அழுதுட்டு இருந்திருக்கா? டென்சன்ல்ல இருப்பான். சும்மா அவனை குறை சொல்லாதம்மா..” சந்திரமுகன் “எல்லாரும் சாப்பிடுங்க” என்றார்.

“நீங்க?” மான்விழி கேட்க, “சாப்பிடுங்க” தனு அறையை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரமுகன்.

“எனக்கும் எதுவும் வேண்டாம்” பாட்டி தன் மகன் அருகே அமர்ந்தார்.

அத்தை, “மாத்திரை சாப்பிடணும். நீங்க வாங்க” அக்கறையுடன் மான்விழி அழைத்தார்.

இரும்மா, முதல்ல பிள்ளைக்கு என்னன்னு தெரிஞ்சுக்கலாம்..

“அங்க என்ன நடக்குதுன்னு நமக்கு எப்படி தெரியும்?” நளினி கேட்க, சந்திரமுகன் புன்னகைத்தார்.

“மாமா” நளினி அழைக்க, அந்த பொண்ணு இருந்த மனநல காப்பக மருத்துவரிடம் ஏற்கனவே பேசிட்டேன். நமக்கு விசயம் வந்திரும்…

மாமா, “அந்த பொண்ணு அவ்வளவு முக்கியமா? பைத்தியமா இருந்த பொண்ணு. நம்ம குடும்பத்தை பத்தி என்ன பேசுவாங்க?” நளினி கேட்க, “ஆமா எனக்கு இந்த திருமணம் பிடிக்கலை” என்றான் ரிசாத்பவன்.

தன் தாயை பார்த்த சந்திரமுகன், “என்னோட செலக்சன் தப்பா இருக்கும்ன்னு நினைக்கிறீயாம்மா?”

கண்டிப்பா இருக்காதுப்பா..

தன் அறைக்கு சென்ற சந்திரமுகன் ஒரு பென்டிரைவ்வை ரிஷியிடம் கொடுத்து, “டீவியில் கனெக்ட் பண்ணு” என்றார்.

“என்னதுடா இது?” பாட்டி கேட்க, “போடுன்னு சொன்னேன்” சந்திரமுகன் அதட்ட, அவரை பார்த்துக் கொண்டே ரிஷி போட்டு விட்டான்.

“நளினிம்மா, நீ சொன்ன பைத்தியக்காரியை பத்தி தெரிஞ்சுக்கோ” சினமுடன் கூறி விட்டு ரிமோர்ட்டில் ப்ளே செய்தார்.

முதல் வீடியோவில் குட்டி ஸ்ரீநிதியை காட்டி, பள்ளியில் சேர்ந்த முதல் வருடம்…1330 திருக்குறள் கூறி முதல் பரிசு கலெக்டர் கையால் வாங்கியது.

புகழுடன் சேர்ந்து பெயிண்டிங் கிளாஸ் போனது. இதே வகுப்பில் பவி, ஜோவும் இருக்காங்க..

நம்ம தனு சொன்னது போல நால்வரும் எல்லா இடத்திலும் சேர்ந்து தான் இருப்பாங்க.. பாருங்க..

ஜோவும் புகழும் கராத்தே கிளாஸ்ல்ல இருக்காங்க.

ஐந்தாம் வகுப்பில் பரதம் வகுப்பில் சேர்ந்தது.

பத்தாம் வகுப்பில் க்விஸ் போட்டியில் சைனா வரை நிதியும் புகழும் சென்று வெற்றியுடன் வந்திருக்காங்க என்று அந்த க்விஸில் இருவரும் டிஸ்கஸ் செய்து விடை அளித்த வீடியோவும் இருந்தது. அனைவரும் ஆச்சர்யமாக இருவரையும் பார்த்தனர்.

“இப்படி ஒரு பொண்ணு பக்கத்துல இருந்து புகழ் காதலிக்கலைன்னா தான் தப்பு” நளினியை பார்த்து, “இப்ப என்னம்மா சொல்ற?”

காலேஜ் வீடியோ பாக்குறீயாம்மா? அவர் கேட்க, “மாமா நான் சொன்னது தப்பு தான். ஆனால் இப்ப நடப்பதை தான ஆளுங்க பேசுவாங்க”..

சிரித்த அவர், நம்ம பொருளோட தரத்தை பார்த்தால் போதும்மா..

பொருளா? அந்த பொண்ணை பொருளா பாக்குறதா சொல்றீயாடா? சினமுடன் கேட்டார் பாட்டி.

அம்மா, உதாரணத்துக்காக சொன்னேன். அந்த பொண்ணு புத்திசாலித்தனத்தை நீங்க பார்க்கலை. அதை விவரிக்க தான் இதை காட்ட வேண்டியதா போச்சு. இப்படியொரு பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வந்தால் நல்லா இருக்காதா என்ன?

பவிதாவும் சும்மா இல்லை. படிப்பில் உச்சம் இல்லை என்றாலும் பிசினஸ் விசயத்துல்ல சரியா இருப்பா. அதே போல தான் குடும்பத்திலும். ஆனால் என்ன? வீட்டு வேலையே செய்யத் தெரியாது தன் மனைவியை பார்த்தார்.

“அதனால என்ன? என்னோட பசங்களோட சந்தோசமான வாழ்க்கைக்காக எதுவும் செய்வேன்” மான்விழி கூற, அவர் புன்னகைத்தார்.

உங்க காலேஜ்ல்ல தான் நால்வரும் படிச்சிருக்காங்க. புகழ் தான் எல்லா வருடமும் முதல் இடத்தை பிடித்திருக்கான். அவன் இப்ப உயிரோட இருந்தால் என்னோட கம்பெனி பொறுப்பை கூட ஒப்படைத்து விடுவேன் அவர் கூற, ஜெய் முகம் மாறியது.

ஸ்ரீநிதிக்கு அந்த தகுதி இருக்கு. நான் அந்த பொண்ணை எதுக்காகவும் கட்டாயப்படுத்த மாட்டேன். ரொம்ப நல்லப் பொண்ணும்மா. அம்மா மட்டும் தான். கஷ்டப்பட்டு தான் வளர்த்திருக்காங்க. பள்ளியில் தான் நால்வரும் பழக ஆரம்பிச்சு இருக்காங்க. நம்ம தனு சொன்னது போல நல்ல ப்ரெண்ட்ஸ். யாரும் யாரையும் விட்டு கொடுத்து பேச கூட மாட்டாங்க..

ஜோஜித்..அந்த பையன் பன்னிரண்டாம் வகுப்பு கால்ப்பந்து போட்டிக்காக ஜெர்மனி வரை சென்று வெற்றி பெற்று வந்திருக்கான். அவனுக்கு எளிதாக ஸ்போர்ட் கோட்டாவில் இடம் கிடைச்சிருக்கு..

நிதி, புகழ், ஜோ…பவிக்காக அவங்க கனவை விட்டு பிசினஸ் படிக்க வந்திருக்காங்க. ஜோ விளையாட்டை விட்டது போல புகழும் நிதியும் அவங்க கனவை விடாம கோர்ஸ் சேர்ந்தாங்க..

ஜெய் அவங்க இருவரின் டிசைன்ஸ்ஸையும் பார்க்குறியா?

ம்ம்..

நிது, புகழ் இருவரும் தனியாக, சேர்ந்து என தயாரித்த ஆடைகளை காட்டினார்.

“இந்த டிசைன்ஸ் எதுவுமே யாரும் உபயோகிப்பது போல இல்லையேப்பா? ஆனால் சூப்பரா இருக்கு” ஜெய் கூற, ம்ம்..இவங்க கோர்ஸ் செய்த இடத்தில் இதை வெளியே விட மாட்டாங்க. அதான் இன்னும் வெளிய வரலை..

நிது மட்டும் டிசைன்ஸ் செய்ய ஆரம்பிச்சான்னா நம்ம கம்பெனி மூலமாக விளம்பரம் செய்து விற்பனையை தொடங்கலாம். லாபம் நிறைய கிடைக்கும்.

இந்த நவீன யுகத்தில் அவங்க டிசைன் காலேஜ் கெர்ல்ஸ்க்கு பிடிக்கும் வாய்ப்பிருக்கு ஜெய் கூறினான்.

“பரவாயில்லை திறமையான பொண்ணு தான்” நளினி கூற, பவிதா அளவிற்கு ஸ்ரீநிதி அழகில்லை என்றாலும் மனசளவில் ரொம்ப அழகு தான் அந்த பொண்ணு பவிதா கூட பிடிவாதம் செய்வாள் என்றார் சந்திரமுகன்.

“அப்பா, இருவரையும் ஒத்து பார்க்காதீங்க” ஜெய் சினமுடன் கூறினான்.

“பாருடா.. அதுக்குள்ள அந்த பிள்ளைக்காக உம் மவன் பேசுறான்” பாட்டி ஜெய் கன்னத்தில் இடித்தார்.

ஷ்ஆ…பாட்டி..

சிரித்த அவன் அம்மா மான்விழி.. “அந்த பொண்ணு தான் இவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிருச்சே!” ஜெய்யை சீண்டினார்.

அம்மா, அவளுக்கு என்னை பிடிக்காதுன்னு சொல்லலையே! பிடிச்சிருக்குன்னு தான சொன்னா. டாட் எனக்கு மேரேஜ்ன்னா அது என்னோட பப்ளிம்மாவோட தான்.

ரிசாத் அவனை முறைத்து பார்த்தான்.

ஜெய் தோளில் கையை போட்டு, “முதல்ல ஜோவை நீ சமாளி. நான் மத்ததை பார்த்துக்கிறேன்” என்றார்.

கண்டிப்பாப்பா..

தன்வியின் தோழி அனன்யா வீட்டிற்குள் வந்தாள்.

“அங்கிள், தனு இருக்காளா?” அவள் கேட்க, “அவ அறையில தான் இருக்காம்மா. போ பாரு. கோபமா இருக்கா” என்றார் சந்திரமுகன்.

அலைபேசியை காதில் கொடுத்து, “சண்டை போட்டியாடா?” கேட்டாள் அனன்யா.

உனக்கு அது தேவையில்லை. அவ நல்லா தான இருக்கா?

எனக்கு தேவையில்லாத விசயத்தை என்னிடம் எதுக்கு கேக்குற? சினமுடன் பேசினாள்.

ஏற்கனவே டென்சன்ல்ல என்று அவன் சொல்லும் போது, டாக்டர் என்று நிதுவின் அம்மா சத்தம் கேட்க, “ஜோ நீ எங்க இருக்க? யாருக்கு என்னாச்சு?” அனன்யா பதறினாள்.

“தனு நல்லா இருக்காலான்னு பார்த்துட்டு மேசேஜ் பண்ணு” அலைபேசியை வைத்து விட்டான்.

ஏய், “யாருக்கு என்ன? சொல்லு?” அவள் பேச அவன் வைத்து விட்டான்.

“இவன் சொன்னான்னு வந்தேன் பாரு” தலையில் அடித்து, டீவியை பார்த்து…”வாவ்..ஜோ..கால்பந்து விளையாடுவானா? பாவி இதையும் நீ சொல்லலையேடா!” முன் வந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவன் எதுக்கு உனக்கு கால் பண்ணான்?” பாட்டி கேட்க, பாட்டி இதுக ரெண்டும் சண்டை போட்டு எப்போதும் இப்படி தான் என் உயிரை வாங்குங்க..

என்னது? எப்போதும் சண்டையா? ஜெய் அவளிடம் வந்து, தனுவுக்கும் ஜோக்கும் ஏதாவது?

அப்படி தான் நானும் நினைத்தேன். அப்படியெல்லாம் இருக்க முடியாது. இருவரும் ஒரு விசயத்துல்ல தான் ஒத்துமையா இருப்பங்க. அது நிது, பவி, புகழ். மத்தபடி இருவருக்கும் ஆகவே ஆகாது என்றாள்.

“ஹப்பாடா இப்ப தான் நிம்மதி” முந்தானையால் நளினி விசிற, தன்வி வேகமாக இறங்கி வந்தாள்.

ஏன்டி, உங்க சண்டைக்கு நான் ஊறுகாயா? ஒழுங்கா அவன் அழைத்தால் எடு. என்னோட டாட் வரும் நேரமாகிடுச்சு. நான் சுத்திட்டு இருந்தா அவரு என்னை கொன்னே போட்ருவார். நான் வீட்டுக்கு போறேன். ஜோ ஹாஸ்பிட்டல்ல இருக்கானாமே! என்னாச்சு? அனன்யா கேட்க,

“நிதுவுக்கு ஸ்கேன் பண்றாங்களாம். நீ வா போகலாம்” தனு அனன்யா கையை பிடித்து இழுத்தாள்.

நிதுவா? நிது அங்கல்ல?

இல்லடி, நிது இப்ப சரியாகிட்டாங்க. ஆனால் தலைவலின்னு ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. பெரிய இவனாட்டம் பேசிட்டு இருக்கான்டி அவன். அவன் சொல்லி நான் கேட்பேனா?

“அழுதியாடி” அனன்யா கேட்க, “பிக்ப்பா நான் பார்த்துட்டு மெசேஜ் பண்றேன். எதுவும் தெரிஞ்ச மாதிரி யாரிடமும் காட்டிக்காதீங்க. நீங்க சொன்னது நடக்கும்”  தனு ரிஷியை பார்த்துக் கொண்டே அனன்யாவை பார்த்தாள்.

“ரொம்ப சீரியசா இருக்காங்களாடி?” எல்லாரையும் பார்த்துக் கொண்டே அனன்யா கேட்க, “தெரியலடி” தனு தன் அம்மாவிடம் சென்று, “மாம்..நான் போயிட்டு வாரேன்” அணைத்து எல்லாரையும் பார்த்தாள்.

நான் வரவா தனு? ஜெய் கேட்க, “வேண்டாம் அண்ணா. இப்ப நீங்க வந்தா சரியா இருக்காது. முதல்ல நிது சரியான பின் என்னோட திட்டத்தை சொல்றேன்” தன்வி அங்கிருந்து அகன்றாள்.

ஹாஸ்பிடலுக்கு வந்த தனுவும் அனன்யாவும் வரவேற்பறையில் விசாரித்து மருத்துவர் அறைக்கு வந்தனர். வெளியே அனைவரும் இருந்தனர்.

ஜோ இருக்கையில் சாய்ந்து சோர்வுடன் அமர்ந்திருந்தான். எல்லார் முகமும் வருத்தமுடன் இருந்தது.

ஜோ முன் வந்து, அவன் சட்டையை பிடித்து இழுத்த தன்வி, “ஏன்டா நான் என்ன செய்தேன்? நான் நிது பவியை பார்க்க பேச தான் செய்வேன். உன்னால என்னடா செய்ய முடியும்?” அவன் கன்னத்தில் அடித்தாள்.

“ஏம்மா, யாரு நீ? எங்க புள்ளைய அடிக்கிற?” அழகி தன்வியிடம் சண்டைக்கு வந்தார்.

“ஆன்ட்டி..ஆன்ட்டி…ப்ளீஸ் அவள விடுங்க. அவளும் நிது சீனியரை பார்க்க தான் வந்தாள்” அனன்யா சொல்லிக் கொண்டே தன்வியை அவனிடமிருந்து பிரித்து இழுத்தாள்.

ஜெய்யும் அவன் பாட்டியும் ஓடி வந்தனர்.

“தனு” ஜெய் சத்தமிட, அவளாகவே ஜோவிடமிருந்து நகர்ந்து இருவரையும் பார்த்தாள்.

சாரி, “அவ டென்சன்ல்ல ஏதோ பண்ணிட்டு இருக்கா. வா” ஜெய் தன்வி கையை பிடிக்க, “அண்ணா நீயும் பாட்டியும் எதுக்கு இங்க வந்தீங்க? நான் சொல்லீட்டு தான வந்தேன்..”

நீ வந்த வேகத்திலே நீ ஏதோ செய்யப் போறன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறம் வராம என்னடி பண்றது? வா வீட்டுக்கு போகலாம்.

பாட்டி, “நான் நிதுவை பார்க்க வந்தேன். பார்த்துட்டு வந்துடுறேன்” இருவர் கையையும் விட்டு, தர்மேந்திரன் அருகே வந்து “அங்கிள் நீங்களும் பவியும் என்னை போகச் சொன்னால் நானே போயிடுறேன்” அவர் கையை பிடித்துக் கொண்டாள்.

ஏய்..ஏய்..அவரு என்னடி சொல்லணும்? எங்க ஜோவை அடிச்சிட்டு என்ன பேச்சு பேசுற? கொந்தளித்தார் அழகி.

அத்த,  தனு என்னோட படிச்சவ தான். விடுங்க. என் மேல தான் தவறு ஜோ அவரை பிடிக்க, பனிமலருடன் ஸ்ரீநிதி வந்தாள்.

“பவி நீங்க சொல்லுங்க. நான் இப்பவே போறேன்” தனு பவிதாவிடம் சென்றாள். அவளோ எதிர்பாராமல் வந்த ஜெய்கிரிஷை பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.

ஸ்ரீநிதி அவள் அம்மாவின் கைப்பிடித்து வந்து நிற்க, ரிஷியின் மொத்த குடும்பமும் வந்திருந்தனர். ஆனால் ரிஷி மட்டும் அங்கு இல்லை. அவன் இல்லாததை பார்த்த ஸ்ரீநிதி தவறாக எண்ணிக் கொண்டாள்.

பனிமலர் கையை விட்டு தனுவிடம் சென்ற ஸ்ரீநிதி, “தனு யாருக்கும் ஏதும் ஆகிடுச்சா?” பதட்டமுடன் எல்லாரையும் பார்த்தாள்.

அவள் கேட்டதன் அர்த்தம் புரிந்து பவி அவளிடம் வந்து அவள் கையை இறுக பற்றினாள்.

“வீ” ஸ்ரீநிதி அவளை பார்த்து, அவர்களை பார்க்க ரிஷி அவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.

உஃப் காற்றை ஊதி, “ஸ்ரீநிதி அவன் அம்மாவை புரியாமல் பார்க்க, எதுக்கு எல்லாரும் வந்துருக்கீங்க?” தனு சினமுடன் அவளுடைய பிக்ப்பாவிடம் சென்று கேட்டாள்.

“தனும்மா தெரிந்தும் தெரியாதது போலவெல்லாம் இருக்க முடியாது” என்ற சந்திரமுகன் ஸ்ரீநிதியை நெருங்க, அவள் மனம் படபடத்தது.

பவிதா கையை விட்டு பனிமலர் அருகே சென்று நின்று கொண்டாள் ஸ்ரீநிதி. தர்மேந்திரனும் அழகியும் நளினியை பார்த்து திகைத்து இருந்தனர்.

“உனக்கு தலைவலின்னு ஸ்கேன் பண்ணப் போறதா தனு பேசிட்டு இருந்தா. அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்” அவர் கூறிக் கொண்டே ஸ்ரீநிதி அம்மாவை பார்த்து,.. “ஏதும் பிரச்சனையில்லையே!” கேட்டார்.

தாத்தா மருத்துவருடன் வெளியே வந்தார்.

“ஹலோ சார்” சந்திரமுகன் அமரேசனிடம் கையை நீட்ட, இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். அவர் பார்வையும் நளினியை வருடி அழகி தர்மேந்திரனை ஏறிட்டது.

அழகி ஏதோ கேட்க வர, அவர் கையை அழுத்தி பிடித்தார் தர்மேந்திரன்.

அவர் தன் கணவனை ஏன்? கேட்கலாம்? என்பது போல பார்த்தார். அவர் “வேண்டாம்” தலையசைத்தார்.

நிது மறந்த சில நினைவுகள் அவளை சுற்றி வந்திருக்காம். அதான் தலைவலின்னு சொன்னாங்க..

டாக்டரை சந்திரமுகன் பார்க்க, அவர் தானாக அவரிடம் சென்று ஸ்ரீநிதியின் ரிப்போர்ட்டை கொடுத்தார்.

சார், நீங்க எங்களுக்காக இவ்வளவு தூரம் வர தேவையில்லையே! அமரேசன் கேட்டார்.

“அதனால என்ன சார்? தெரிஞ்ச பொண்ணு தான! அதான் பார்க்க தோன்றியது. என்னம்மா?” அவர் கேட்க, பாட்டி அழகியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“அம்மா” சந்திரமுகன் சத்தமாக அழைக்க, என்னப்பா? அவர் தன் மகனை பார்த்தார்.

பாட்டி அழகி அருகே சென்று, ஏம்மா நீ? அவர் அமரேசனை பார்த்தார்.

“நான் தர்மேந்திரன் மனைவி” நிமிர்வுடன் கூறினார்.

ஓ! புன்னகைத்தார் பாட்டி சௌபாக்கியம்.

“புகழ் அண்ணாவோட மாம் பாட்டி” தனு கூற, அழகி அவளை பார்த்தார்.

பாட்டி அழகியை ஆழ்ந்து பார்க்க, அவரோ தனுவையே பார்த்தார்.

ஆன்ட்டி, “என்னாச்சு? இப்ப தான் என்னை திட்டுனீங்க? உங்களுக்கு என்னை மறந்து போச்சா. புகழ் அண்ணா, நிது கூட உங்க வீட்டுக்கு ஒரு முறை என்னோட தோழிகளுடன் வந்திருக்கேன்ல்ல”..

“மறந்து போயிருக்கும்மா” தர்மேந்திரன் கூறி, தன் மனைவி கையை பிடித்தார்.

“நிது நீங்க ஓ.கே தான?” அனன்யா அவளிடம் வந்தாள்.

ரிஷி குடும்பம் அவளை பார்க்க வந்ததை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.

“நிது” அனன்யா அவளது கையை பற்ற, ஹம்..அ..அனா..நீ இங்க? கண்ணை சிமிட்டினாள்.

அனன்யா புன்னகையுடன், “நிது நீங்க ரொம்ப ஷாக்ல்ல இருக்கீங்க போல?”

“இல்ல” அவள் ஜோவை பார்த்தாள்.

“சாரிக்கா” அவன் அவளை அணைத்துக் கொண்டான்.

ஜோவை நகர்த்தி, “நீ என்னிடம் சொல்லும் முன் அவளிடம் சொல்லு” பவிதாவை காட்டினாள்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நிது நீ நல்லா இருக்கேல்ல போதும்.

“வா நாம வீட்டுக்கு போகலாம்” பவிதா அழைக்க, சுயம் வந்த அழகி, “அம்மூ எங்க வீட்டுக்கு தான் வருவா” என்றார்.

ஆன்ட்டி, “அக்கா ஓய்வெடுக்கணும். எங்க வீட்டுக்கு நான் அழைச்சிட்டு போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” ஜோ கூற, “எனக்கு வயசாயிருச்சு சொல்லி காட்டுறீயாடா?” அவர் சினமுடன் அவனை முறைத்தார்.

ஆன்ட்டி, நான் அதுக்கு சொல்லவில்லை. உங்க உடல்நிலைக்காக சொல்றேன்.

“எனக்கென்னடா? நான் நல்லா இருக்கேன்” அவர் ஸ்ரீநிதியையும் யாரோ போல குடும்பத்தின் பின் நின்று கொண்டிருந்த ரிசாத்பவனையும் பார்த்தார்.

“இப்ப என்ன யார் வீட்டுக்கு நிது போகிறதுன்னு தான பிரச்சனை?” அவளே சொல்லட்டும் பவிதா கூற,

ஸ்ரீநிதி அழகியை பார்த்து, ஆன்ட்டி நீங்க உடம்ப பார்த்துக்கோங்க. நான் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வாரேன். இப்ப அம்மாவோட போறேன்..

“அம்மாவோட போறீயா? என்னோட வீட்டுக்கு வா” பவிதா ஸ்ரீநிதி கையை பிடிக்க, ஜோ அவள் கையை தட்டி விட்டான். இருவரும் முறைத்துக் கொண்டனர்.

இருவருக்கும் இடையே வந்து,“யாருக்கும் பிரச்சனையில்லாமல் நான் வேணும்ன்னா எங்க வீட்டுக்கு நிதுவை கூட்டிட்டு போகவா?” தன்வி புன்னகையுடன் கேட்க, இருவரும் ஒரே போல் “நோ” சத்தமிட்டனர்.

“வீ நீ ஏற்கனவே ஈவ்னிங் சீக்கிரமே ஆபிஸ் விட்டு எனக்காக தான வந்த? நாளை ஆபிஸ் போகணும். நீ தாத்தாவோட கிளம்பு. ராகவ் வரலையா?” ஸ்ரீநிதி கேட்க, “ராகவ் வந்தாச்சு. அக்கா நீங்க வாங்க. உங்களை நானும் அம்மாவும் பார்த்துக்கிறோம்”..

அவன் தலையில் தட்டிய ஜோ, “எப்ப பாரு எங்களோட போட்டிக்கு வந்து நிக்கிற?”

போட்டிக்கு இல்லண்ணா..அக்காவுக்காக தான்..

ஆமா, ஜோ தன்வியை பார்த்து, “உன்னிடம் கோபமா பேசிட்டேன். சாரி. அப்புறம் இப்ப பேசுன மாதிரி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு பேசுன? நிது…இவளிடம் பேசக் கூடாது. சரியா?” ஜோ நேரடியாகவே கேட்டான்.

ஸ்ரீநிதி ஜோ கையை பிடித்து அவனை பார்த்து, “நான் எதுக்குடா அவங்க வீட்டுக்கு போகப் போறேன்? நம்ம வீட்டுக்கே போகலாம். ராகவ் நீ வீயையும் தாத்தாவை வீட்ல பத்திரமா இறக்கி விட்டுரு”..

ம்ம்! சரிக்கா என்று பின் நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ரிசாத்தை முறைத்து, “போகலாமாய்யா?” அமரேசனிடம் கேட்டான்.

“எங்க பாப்பாவை பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி சார். நாங்க போயிட்டு வாரோம்” அமரேசன் சந்திரமுகனிடம் கை குலுக்கி விட்டு, பனிமலரிடம் திரும்பினார்.

“நீங்க எப்படி போகப் போறீங்க?” ஸ்ரீநிதியை பார்த்துக் கொண்டே அமரேசன் கேட்டார்.

“நாங்க பார்த்துக்கிறோம்” பனிமலர் கூற, “நாங்க டிராப் பண்றோம்” மான்விழி கூறினார்.

பரவாயில்லைங்க. என்னோட பொண்ணு கார்ல்ல வர மாட்டா. அவ ஜோவோட பைக்ல்ல வந்திருவா. நான் ஆட்டோல்ல..

“நாங்க இருக்கும் போது என்ன பேசுறீங்க அண்ணீ?” உரிமையுடன் அழகி பனிமலர் கையிலிருந்த பொருட்களை வாங்கி, நாங்க டிராப் பண்ணிடுவோம். கார்ல்ல தான் வந்துருக்கோம்..

எல்லாரும் கிளம்ப, ஜோ பைக்கை எடுத்தான். பைக் ஆன் ஆகலை.

“என்னாச்சுடா?” பனிமலர் பதட்டமுடன் கேட்டார்.

அம்மா, நீங்க முன்னாடி போங்க. நாங்க வந்துருவோம்.

“அதெப்படி? நிதும்மா கொஞ்ச நேரம் கார்ல்ல அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறீயாடா?” தர்மேந்திரன் கேட்டார். அவள் காரை பார்க்கவும் அன்றைய எண்ணத்தில் வியர்த்தது. அவள் மனதில் பயம் சூழ்ந்தது.

அங்கிள், நான் பார்த்து அக்காவை அழைச்சிட்டு வந்துருவேன்.

ரிஷி பைக்ல்ல தான் வந்துருக்கான். ஜோ நீ கார்ல்ல ஏறுப்பா. நிது ரிஷியோட வரட்டும். இருவரையும் கோர்த்து விட்டார் பாட்டி.

ரிஷி ஏதும் சொல்லாமல் பைக்கை எடுக்க, “முடியாது. ஆட்டோ ஏதாவது வந்தால் நான் அக்காவை அழைச்சிட்டு வாரேன்”.

“பொம்பள பிள்ளைய இந்த நேரத்துல்ல தனியா? யோசித்து பாருப்பா” மான்விழி கூற, “நானும் என்னோட பிள்ளைங்களோட போய்க்கிறேன்” ஜோ ஸ்ரீநிதி அருகே வந்து நின்றார் பனிமலர்.

“மலர் இந்த நேரம் பிடிவாதம் வேண்டாம்மா. வேணும்ன்னா நம்ம ஜோவும் நிதுவுமே அந்த பையனுடன் வரட்டும்” தர்மேந்திரன் கூற, அரை மனதாக ஒத்துக் கொண்டு காரில் ஏறினார் பனிமலர்.

பவிதா ஜோ அருகே வந்து, “அவனிடம் பேசி பிரச்சனை எதுவும் செய்யாத. நிது தனியா உங்களை சமாளிக்க முடியாது” எச்சரித்து அவனிடம் ஸ்ரீநிதியை கண்ணை காட்டி விட்டு ஜெய்யை பார்த்துக் கொண்டே ஏறினாள். எல்லாரும் கிளம்பினார்கள்.