சுபி, கரணுக்கான பதிலை அனுப்பிவிட்டாலும்.. கண்களில் நீர்தான் நிற்க.. மனது தளும்ப தொடங்கியது.
‘இரண்டாம் திருமணம்..’ அவன் சொன்ன பெருவழி பாதை.. ம்.. மீண்டும் ஒரு திருமணம்.. மலையை புரட்டும் வேலை. ம்.. மாமனார்.. கரண் பெற்றோர்.. என் பெற்றோர்.. பிள்ளைகள்.. ஹப்பா.. எத்தனைபேரை சமாளிக்க.. எனக்கு தெம்பில்லை எனத்தான் எண்ணம் பெண்ணுக்கு. ம்.. முறையான, இரண்டாம் திருமணம்.. இரண்டாம் வாழ்க்கை.. என்பதெல்லாம் எளிதானதல்லவே. அந்த இரண்டாம் பயணம் எப்படி இருக்குமோ.. என்ற பயம் இருக்கிறதே.. அது, இன்னமும் பெரிய அவஸ்த்தை. அந்த அவஸ்த்தைதான் சுபிக்கு.
லக்ஷ்மி இல்லாதா இந்த மூன்று வருடமும் பெரிய போராட்டம்தான், சங்கடம் இல்லாமல் இல்லையே. இதற்கு அது நல்லதா.. அதற்கு இது நல்லதா என்ற முரண்கள் எப்போதும் இருக்குமே. எதற்கு அழுகிறேன் என தெரியாமல் ஒரு அழுகை.. எதற்கு கத்துகிறோம் என தெரியாமல் சட்டென கோவம். அதேநேரம்.. எந்த நிபந்தனையும் இல்லாமல் மன்னிப்பு வேறு கேட்க வேண்டும்.. ஆக, வாழ்க்கை.. இன்னமும் அவள் கையில் இல்லை.. யார்யாரோ சொல்லுகிறார்கள்.. செய்கிறாள். ஒருமாதிரி இறுக்கம்.. ‘என்ன இப்போ.. இன்னிக்கு ரெஸ்ட் எடு..’ என சொல்ல யாருமில்லை. ஆனால், ‘எப்படி பையனை ஆளாக்க போற.. எப்படி தனியா இருக்க போற..’ என பயபடுத்தி யோசனை சொல்லிக் கொண்டே இருப்பர். எப்போதும் எதோ ஒரு பரபரப்பு அவளை சூழ்ந்துக் கொண்டேதான் இருக்கும். அதனாலேயே யாரையும் நம்புவதேயில்லை அவள். தனியாகவேதான் ஒரு முடிவோடு ஓடிக் கொண்டிருந்தாள் சுபி.
ஆனால், இந்த ஆறுமாதமாக.. கரண் அவள் கண்ணில்பட தொடங்கிவிட்டான். இந்த கவிதைகளில் எல்லாம் வருவது போல.. எந்தகாற்று மூச்சுகாற்றாகும் என யார் சொல்லுவர்.. அப்படிதான் கரண் வந்தான். எப்படி வந்தது கரண் மேல் நம்பிக்கை என அவளுக்கே தெரியவில்லை.. ஆனால், கரணை நம்பினாள். தெரியும்.. தனக்கும் அவனுக்குமான உறவுநிலை.. அதை வேண்டாம் எனதான் நினைக்கிறாள். அதற்காக அவனை.. விரட்ட முடியவில்லை. அழுத்தமாக எப்படி பதிந்தான் என யோசித்துக் கொண்டிருக்கிறாள் இப்போது.
ஆனால், முடியாது என பதில் அனுப்பியாகிவிட்டது கரணுக்கு. முதல்முறை குழப்பம்.. ஒருவருவனுக்காக. தன் லக்ஷ்மியின் புகைப்படத்திடம் புலம்ப தொடங்கினால் மனதால்.. நடு இரவில்தான் உறக்கம் வந்தது, சுபிக்கு.
சங்கீதாவிற்கு, என்னமோ சுபியின் மேல் கோவம். பேசவேயில்லை தங்கையிடம்.. சுபி அழைக்கும் போது ‘சரி இல்லை என்ன’ என பேசி வைத்துவிடுகிறாள். என்னமோ சுபியை நினைத்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது எனலாம். அவளின் அவஸ்த்தை புரியவில்லை.. அவளின் ஓய்வில்லாத நிலை தெரியவில்லை.. ஆனால், மீண்டும் திருமணத்திற்கு அவளை கரண் கேட்க்கிறான் என்ற எண்ணம் உறுத்துகிறது அக்காவிற்கு. இப்படி எல்லாம் நடக்குமா.. அதுவும் நம் வீட்டில்.. என எண்ணிக் கொண்டாள். சங்கீதா பெரிதாக கரண் சுபி விஷயத்தில் விருப்பம் காட்டவில்லை.. தங்கையிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. சாதரணமாக அழைக்ககூட இல்லை.
கார்த்திக்’கு.. வீரா கரண் என யோசிக்கும் போது.. கரண் நல்ல தேர்வு என எண்ணிக் கொண்டார். ம்.. கரணுக்கும் இது இரண்டாம் திருமணம்.. வீரா போல, அவசரம் கொண்டவனில்லை.. சுபியின் மாமனாரின் அழுத்தத்தில் வந்தவனில்லை கரண்.. ஆஸ்ட்ரேலியா செல்லும் முன் கண்டிப்பாக சுபிக்கு திருமணத்தை முடித்திட வேண்டும் என எண்ணிக் கொண்டே இருந்தார். சுபி இதுபற்றி பேசுவாளா எனவும் பார்த்திருந்தார். ஆனால், சுபி பேசவில்லை.. வீடு வந்து பிள்ளையை பார்த்து சென்றாலே தவிர ஏதும் பேசவில்லை.
சுபி, என்னமோ தன் எண்ணத்தில் நிலையாக இருப்பதாக அவளாக எண்ணிக் கொண்டாலும்.. அது நடக்கவில்லை. கரண், அவளை சுற்றி நின்றான். நாளில் ஒருமுறையாவது அவளை பார்க்காமல் விடுவதில்லை அவன். ஏதும் பேசவில்லை.. ஆனால், நானிருக்கிறேன் என நினைவு படுத்தினான். அந்த பார்வையை அவளால் கண்டும் காணாமல் செல்லமுடியவில்லை. எத்தனைநாட்கள் ஒருவர் பார்க்க முடியும்.. நேசம் இல்லாமல் என சுபிக்கே தோன்ற தொடங்கிவிட்டது.
கரண் பிள்ளைகள் இருவரையும் சமமாக காக்க தொடங்கிவிட்டான். குருவோடு எங்கு சென்றாலும் விசாகனை அழைத்து செல்லுகிறேன் என செய்தி அனுப்பிடுவான் சுபிக்கு. அத்தோடு, தன்மீது.. அவனின் அக்கறையும் புரிய தொடங்கிவிட்டது பெண்ணுக்கு. ம்.. கரணின் பங்கு அவளின் வாழ்வில் நுழைந்துக் கொண்டதை தாமதமாகவே கண்டுக் கொண்டாள் போல.. பெண்ணவள். இந்தபக்கம்.. அந்தபக்கம்.. என பெண்ணின் மனம் அலைபாய தொடங்கிவிட்டது.
கார்த்திக், ஒருநாள் சுபியின் கிளினிக் வந்தார். சுபி அதிர்ந்துதான் போனாள்.. “என்ன மாமா.. இவ்வளவு தூரம்” என்றாள்.
கார்த்திக் புன்னகையோடு “ஒரு சமாச்சாரம் பேசணும்.. அதான்” என்றார் எந்த பீடிகையும் இல்லாமல். சொல்லிவிட்டு சாய்ந்து அமர்ந்து சுபி கொடுத்த டீயை பருகாமல் வெறித்து பார்த்தார்.
சுபி “மாமா.. என்ன ஆச்சு.. என்ன திடீர்ன்னு.. என் மாமனார் ஏதாவது” என்றாள்.
கார்த்திக் “இல்ல சுபி, அவர் என்னிடம் ஏதும் பேசவில்லை. நீ பயப்படாத.” என்றார் பின் “நாங்கதான்.. “ என தொடங்க.
சுபி “மாமா, எங்க அப்பா மாதிரி பேசுறீங்க, என்ன இந்தமுறை அப்பாவா” என்றாள்.
கார்த்திக் புன்னகைத்து “கரண்” என்றார்.
சுபியின் கண்களில் கார்த்திக் காண காத்திருந்த அதிர்ச்சி.. ‘ஆக, சுபியிடம், தங்களிடம் பேசியது பற்றி சொல்லவில்லை கரண்’ என உறுதி செய்துக் கொண்டார்.
கார்த்திக் “கரண் வீட்டுக்கு வந்திருந்தார்.. உன்னை மேரேஜ் செய்துக்க ஆசைப்படுறேன்னு சொன்னார். அப்படி கூட இல்ல, விசாகனையும் உன்னையும் பார்த்துக்கிறேன்னு சொன்னார்.” என சொல்லி நிறுத்தினார்.
சுபி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.. அவள் எதிர்கவில்லை.. சண்டையிடவில்லை.. வீராவை பற்றி பேசும் போது வரும் எந்த எரிச்சலும் இப்போது வரவில்லை.. அதிர்ந்த முகபாவனை மட்டுமே.. கார்த்திக் கண்டுக் கொண்டார்.
சுபி, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு “மாமா, இதெல்லாம் என்கிட்டே அவர் சொல்லியிருக்கார்.. க்கும், அவர்கிட்டவே பதிலும் சொல்லிட்டேன். மாமா.. இதெல்லாம் ஒத்து வராது.” என்றாள், குரலில் அப்பட்டமான இயலாமை த்தொவ்னி.
கார்த்திக் “என்ன சுபி, இப்படி சொல்ற.. கண்டிப்பா சரி வரும்..” என்றார்.
சுபி “என்னால் இன்னொரு லைப் உள்ள போக முடியாது. எனக்கு விசாவின் கமிட்மென்ட் மட்டும் போதும். இன்னொரு லைப்.. அப்புறம் அது இதுன்னு.. எனக்கு முடியாது மாமா. எனக்கு இந்த கிளினிக்.. விசா.. அப்பா அம்மா இவங்க மட்டும் போதும்.. ப்ளீஸ் மாமா” என்றாள்.. குரல் உடைய தொடங்கியது.
கார்த்திக் புன்னகைத்தார்.. “அஹ.. எல்லோரும் இப்படி நினைத்தால், தனியாக யாருமில்லாமல்தான் இருக்கனும். ம்.. மனசு விட்டுட்ட.. நீ. அவ்வளவுதான் நான் சொல்லுவேன். ஆனால், தைரியமானவள் மாதிரி காட்டிக்கிற.. அது நல்லதில்லையே சுபி. எத்தனைநாள் உன்னை ஏமாத்திப்ப.. முடியாதில்ல. காலம்தான் லக்ஷ்மியை பறித்தது.. அதே காலம்தான் கரணை உன்னிடம் கொடுக்குது. காலம் காட்டும் பாதை.. நீ மறுக்கவோ.. அதை தாண்டி போகவோ உனக்கு முடியாது. யோசி சுபி.. நல்லா யோசி.. கரணிடம் பேசு.. நல்ல முடிவை சொல்லு.. நான் எல்லோரிடமும் பேசுவேன். நீ பயப்படாதே.” என்றார்.
சுபி கேட்டுக் கொண்டாள், எதிர்த்து பேசவில்லை.. கார்த்திக் “வரேன் சுபி.. விசாகன் எங்க” என்றார்.
சுபி தயக்கமாக “குருவோடு.. கிரிக்கெட் கிரௌண்ட் போயிருக்கான்.” என்றாள்.
கரண் “அஹ.. யோசி.. உன்னை சுற்றி என்ன நடக்குதுன்னு யோசி சுபி” என்றவர்.. விடைபெற்று கிளம்பினார்.
சுபி முன்பே குழம்பி இருப்பவள்.. இப்போது இன்னமும் குழம்பினாள்.
இரவில் கிளினிக் விட்டு கிளம்பினாள்.. காரில் வர வர.. கார்த்திக் சொன்னதுதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. நிறைய யோசனை.. குரு கரண் விசாகன்.. என நல்லவிதமாகவே சென்றுக் கொண்டிருந்தது.. குடும்பம்.. மீண்டும் ஒரு வாழ்க்கை.. முடியுமா என்னால் என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் பெண்.
ஆனால், பதில் கிடைக்கவில்லை.. வீடு வந்துவிட்டாள்.
இப்படியே நாட்கள் எளிதாக கடக்க.. சுபி, போராட தொடங்கினாள் தன்னுள். கார்த்திக் போன் செய்து வீட்டுக்கு வர சொன்னார் இரண்டு மூன்று முறை.. சுபி விசாகனோடு சென்று வந்தாள். ஆனால், பதில் சொல்லவில்லை, கார்த்திக்கு.
கரண், இரண்டுமுறை சங்கீதாவிடம் பேச.. சங்கீதா பிடி கொடுக்கவில்லை. கரண், கார்த்திக்கு அழைத்து பேசினான். அவர் ‘எங்களுக்கு எந்த தடையுமில்லை.. நீங்க பேசுங்க.. சுபியும் நீங்களும் கலந்துகொண்டு வந்து சொல்லுங்கள், நான் எல்லாம் சரி செய்து தருகிறேன்’ என்றார். கரணுக்கு, அவர் பேச்சில் நம்பிக்கை வர.. சுபியிடம் பேசுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.