குரு ‘அம்மா’ என்ற வார்த்தையில் தன் நண்பன் விசாகன்தான்  நினைவுக்கு வந்தான்.. குரு “என் அம்மா வரமாட்டாங்களா ப்பா” என்றான்.

கருணா ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான். “அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. இப்போ அவங்களுக்கு வேற குழந்தையும் இருக்கு. இனி அப்படி எல்லாம் வரமாட்டாங்க.. நீயும் இப்படி கேட்க்க கூடாது” என்றான், தன்னிரு பாக்கெட்டிலும் கைகளை விட்டுக் கொண்டு.

குரு “உனக்கு அம்மா வேண்டுமா” என்றான் குழந்தையாக.

கருணா சிரித்துவிட்டு “எனக்கு அம்மா இருக்காங்கடா.. உன் பாட்டி இருக்காங்கல்ல.. உனக்கு அம்மான்னா எனக்கு வைப்” என்றான்.

குரு “உனக்கு வைப் வேணுமா” என்றான் பிள்ளை.

கருணா “உனக்கு வேணும்ன்னா வேணும், உனக்கு வேண்டாம்ன்னா வேண்டாம்..” என்றான் எந்த பாவனையும் காட்டாமல்.

குருவிற்கு ஏதும் புரியவில்லை.. “எனக்கு அம்மா வேணும் போல இருக்கு ப்பா.. ஆனால், அப்படி வந்தால் நீ என்கிட்ட பேசமாட்டிய ப்பா” என்றான்.

கருணா புன்னகைத்தான்.. மகனை பார்த்து  இருக்கை விரித்து காரிலிருந்து சற்று தள்ளி நின்றான். மகன், பயமே இல்லாமல் காரிலிருந்து அப்படியே தாவினான் தந்தையை நோக்கி.. சட்டென மகனை பிடித்து அனைத்துக் கொண்டான் கருணா. இறுக்கமாக கட்டிக் கொண்டு நெற்றியில் முத்தம் வைத்து.. “அப்படியெல்லாம் இல்ல டா.. நாம இப்படியே இருக்கலாம்.. வீ ஆர் பாய்ஸ்..” என்றான்.

எதையும் பெரிதான விஷயமாக எடுக்காதது போலவே கருணா மகனிடம் பேசினானோ. 

மகனை உப்புமூட்டையாக தூக்கிக் கொண்டே ஷோவ்ரூம் ஒன்றுக்கு வந்தான். விளையாட்டும் பேச்சுமாக இருவரும் உடைகளை எடுத்தனர். மேலும் அவனுக்கு விளையாட்டு பொருட்கள்.. ஸ்டேட்ஷனரிஸ் என வாங்கிக் கொண்டு.. ஒரு நல்ல உணவகத்தில் உண்டு வீடு வந்தனர். நடுவில் போனில் பேசி வேலைகளையும் கவனித்துக் கொண்டான் கருணா.

மாலையாகிற்று வீடு வர.. தூங்கிவிட்டான் மகன். கார் நின்றதும் எழுந்துக் கொண்டான். 

குரு தன் தந்தையிடம் கேட்டு, விசாகனை பார்க்க அவன் வீடு சென்றான்.

இருவரும் குருவின் வீடு வந்தனர். தனக்கும் அவனுக்கு ஒன்றுபோல உடை எடுத்திருக்கவும்.. அந்த பாக் மட்டும் எடுத்துக் கொண்டு, நண்பனோடு தன் ஹாலுக்கு வந்தான் குரு.

இரு பிள்ளைகளும் அந்த உடையை பார்த்துக் கொண்டிருந்தனர். 

கருணா எல்லாவற்றையும் உள்ளே எடுத்து வந்தான். அன்னை தந்தை இருவரும் பார்த்தனர். ரத்தனா அக்கா காபி கொண்டுவந்து கொடுத்தார். இரு குழந்தைகளுக்கும் உண்பதற்கு சிற்றுண்டி கொடுத்தார். இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர் சலசலவென.. என்னமோ பேச்சு.

கருணா, வெளியே சென்றுவிட்டான்.. சின்ன வேலையாக.

இரவு உணவின் போதுதான் வந்தான் கருணா.. அன்னை தந்தை இருவரும் காத்திருந்தனர் எனலாம்.

கருணா உடைமாற்றி வந்து டேபிளில் அமரவும், அன்னை உணவு பரிமாறினார்.. “சாரதாவிற்கு, நாலுமுறை கூப்பிட்டுவிட்டான் செந்தூரன். நீ என்ன சொல்ற” என்றார்.

கருணா “எதுக்கு இப்படி டிஸ்டர்ப் பண்றாங்க தெரியலையே” என்றான்.

விசாலாட்சி புலம்ப தொடங்கிவிட்டார்.. அடுத்த திருமணம் பற்றி வரை.

கருணா “அம்மா, அது வேற.. இது வேற.” என்றான்.

அருணகிரி “சரி டா.. ஆனால், எடுக்கும் முடிவை சீக்கிரம் எடுக்கனுமில்ல நீ.. குரு வளர்ந்துட்டே வரான். இப்போது முடிவெடுத்தால்.. அவனால் ஒருவரை ஏற்க முடியும், காலம் மாறினால்.. ஏதாவது குழந்தை மனதில் இரண்டாம் எண்ணம் வந்திட போகுது டா” என்றார்.

கருணாவிற்கும் அந்த எண்ணம் உண்டு “ம்.. நல்லவங்களாக வந்தால் கல்யாணம் செய்துக்கிறேன். சும்மா கௌரவத்திற்கு ஏதும் பார்க்காதீங்க..  குருவின் மனசு பார்த்து நடக்கிறவங்க வேண்டும். அத்தோட, என்னால் திரும்பவும் நல்லா வாழமுடியும்ன்னு எல்லாம் கியாரண்டி கொடுக்க முடியாது சொல்லிட்டேன். அதற்கு ஏற்ப பாருங்க.. புரியுதா” என்றான்.

விசாலாட்சி சந்தோஷமும் துக்கமும் சேர்ந்தே வந்தது.. “அதென்ன டா அப்படி சொல்ற, வரவங்க எதிர்பார்ப்பாங்கல்ல..” என்றார்.

கருணா “அப்படி இல்லாதவங்களா.. கையில் குழந்தை இருப்பவங்களா பாருங்க.. திரும்பவும் எதையும் என்னால் ஏற்க முடியாது ப்ளீஸ். குருவை பாருங்க” என்றான்.

விசாலாட்சி மகளுக்கு அழைத்துவிட்டார். சாரதா, அன்னை சொன்னதை கேட்டுக் கொண்டாள். எல்லோரும் கருணாவை சமாதானம் செய்கிறேன் என அவனின் மனதை மாற்றுகிறோம் என சமாதானமாக பேச  முற்பட்டனர்.. ‘எல்லாம் சரியாகிடும், நாம நல்ல இடமாக பார்ப்போம்.. கண்டிப்பா இரண்டாம்முறை கடவுள் நம்ம ஏமாற்ற மாட்டார்.. நீ ஓபன் மைன்ட்டா இரு கருணா’ என நிறைய பேச்சுகள்.

கருணா “இல்ல, அப்போ வேண்டாம். என்னை எதற்கும் கம்பெல் செய்ய கூடாது.” என்றான். இதென்ன பேச்சு எனத்தான் எல்லோருக்கும் எண்ணம்.

பிரகாஷ் “விடு.. இப்போத்துதானே சரி என்றிருக்கிறான். நாம் பார்ப்போம், அவனுக்கு வேண்டியதை செய்வோம்.. எல்லாம் மாறலாம்” என பெண்களை தேற்றினார்.

மீண்டும் பிரகாஷ் அழைத்தான் செந்தூரன் பற்றி சொல்வதற்கு. கருணா “வேணும்ன்னா, நம்ம ரெசார்ட்டில் வந்து குருவை பார்த்துட்டு போக சொல்லு.. யாரும் கூப்பிட்டு போய் காண்பிக்கவெல்லாம் முடியாது. ஒன்ஹௌவர் மட்டும்தான். ஏதும் பேச கூடாது, வாங்கிக் கொடுக்க கூடாது. சும்மா பார்த்துட்டு போயிடனும் ஒகே’ன்னா வரசொல்லு.” என்றான்.

லேட் நைட். நாளை சண்டேதான் என பேசிக் கொண்டிருந்தனர்,கீழே. ஆனால், கருணாவிற்கு எப்போதும் இந்த நேரம் பிஸி.. அதனால் போன் வந்துக் கொண்டே இருந்தது, பேசிக் கொண்டிருந்தான்.

கருணா மொட்டைமாடி வந்துவிட்டான். இங்கே, கொஞ்சம் நிசப்த்தம்தான்.. இன்னமும் இந்த இரவை ரசிக்கிறோம்மென.. நிறைய விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டும்.. வண்டிகள் சத்தம் கேட்டுக் கொண்டும்தான் இருந்தது.

கருணாவிற்கு நான்கு உதவியாளர்கள்.. அதாவது ரெசார்ட் மேனேஜர்ஸ். அதைத்தவிர ஜெனரல் மேனேஜர் என இவர்களை தாண்டிதான் எல்லாம் அவனிடம் வரவேண்டும். ஆனாலும், கருணா எல்லா இடத்திலும் இருப்பான்.. நிர்வாகி என வேடிக்கை பார்க்கமாட்டான். எல்லா செய்தியும் அவனுக்கு தெரிந்தாக வேண்டும்.. அதனால், இந்த லேட் நைட்.. டென்ஷன் எல்லாம் அவனாக விரும்பி ஏற்பது. ஸ்ரத்தையுடன் வேலையை பார்ப்பான்.

போன் பேசி வைத்தான். நடந்துக் கொண்டிருந்தான்.. சற்று தூரத்தில்.. பெண் யாரோ நடப்பதும் தெரிந்தது. நன்றாக பார்த்தான்.. சுபியின் வீட்டில்.. ஓ அவள்தானா என எண்ணிக் கொண்டான். 

இப்போதுதான் நினைவு வந்தது சங்கீதாவிடம் பேசவில்லை என. அப்படியே காலையில் அவள் கொடுத்த பைல் என எல்லா ஞாபகமும் வந்தது. மனசு வருத்தம் கொண்டது.. ‘ச்ச.. உன்னை நம்பி ஏதாவது கொடுத்தால் இப்படிதான் செய்வீயா’ என எண்ணிக் கொண்டான். இப்போது யாரை அழைப்பது என நடந்துக் கொண்டே யோசனைக்கு சென்றான்.

என்ன நினைத்தானோ சுபியின் எண்ணுக்கு அழைத்தான். சுபி, போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள். அழைப்பினை பார்க்க.. கருணாகரன் என இருந்தது. இந்தநேரத்தில் அழைக்கிறான் என இருந்தது. எடுக்க கூடாது என எண்ணம்தான் விட்டுவிட்டாள்.

மீண்டும் அழைத்தான் கருணா. இப்போது தன் வீட்டிலிருந்து கையாட்டினான் அவளை நோக்கி.. அனிச்சையாய் இதை பார்த்தாள் சுபி.. போனை சைகை காட்டினான். சுபி எடுத்தாள் அழைப்பினை.

கருணா “ஹாய், சாரி உன்னை பார்த்ததால கூப்பிட்டேன்” என்றான்.

சுபி “ஏதாவது முக்கியமான விஷயமா” என்றாள்.

கருணா “இல்ல.. ச..சங்கீதாகிட்ட இப்போ பேசலாமான்னு கேட்க்க கூப்பிட்டேன்” என்றான்.

சுபி “அதை அவகிட்ட கேளுங்க..” என்றவள் தணிந்து. “அவ, கொஞ்சம் ரெஸ்டில்தான் இருக்கா.. மணியென்ன” என கணக்கிட்டவள்.. “நீங்க மோர்னிங் பேசுங்க.. இப்போ விடியல் நேரம்.” என்றாள்.. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான குரலில்.

கருணா “சாரி.. பயப்பாடாத. நான் ஏதும் தப்பாக” எனசொல்ல வர..

சுபிக்கு சங்கடமாக போனது “இல்ல, அப்படி இல்ல.. எதோ டென்ஷன்னில் இருந்தேன், அதான். நானும் சாரி.. மோர்னிங் எட்டு மணிக்கு மேல பேசுங்க.. எடுப்பாள். நான் மெசேஜ் செய்கிறேன் அவளுக்கு” என்றாள், தணிந்த குரலில்.

கருணா “பரவாயில்ல.. உன் பைல்’ இன்னிக்கு வேலை இருந்தது அதான் போய் பார்க்க முடியலை.. நாளைக்கு கண்டிப்பா பேசிட்டு சொல்றேன். நீ ஏதும் யோசிக்காத, கண்டிப்பா சீக்கிரம் விசா ஏற்பாடு செய்திடலாம். பார்த்துக்கலாம்.. ம்.. நீ தூங்கு. வைக்கட்டுமா.. பை” என்றான் என்னமோ நிதானமான குரலில்.

சுபி “ம்..” என்க இருவரும் ஒருசேர அழைப்பினை துண்டித்தனர்.

சுபி இன்னும் சற்று நேரம் அங்கேயே நடந்தாள். அவள் கீழே சென்றதை  அறிந்தபிறகுதான்.. கருணா கீழே வந்தான்.