“இல்ல நீங்க அப்படித்தான் கொடுக்கணும்”, என்று சொன்னவள்.,

    முகேஷ் வினித்திடம்,  “ரெண்டு பேபி மாம்ஸ்”, என்று சொன்னாள்.

“ஆமா குட்டி, ஆமா பாப்பா”., என்று இருவரும் பேசிக் கொள்ள.,

    “மாம்ஸ், நான் சொன்னா கோபப்பட மாட்டியே”, என்று கேட்டாள்.

   “என்ன” என்றான்.

    “எங்க அப்பாவாவது, எங்க அம்மா போயி, அஞ்சு வருஷம் கழிச்சு தான் போனாரு, ஆனா அத்து இருக்காங்கல்ல., அப்படி எல்லாம் கிடையாது.,  எனக்கு எதுவும் னா அடுத்த செகண்ட்”, என்று சொல்லும் போதே.,

      “லூசு” என்று சொல்லி முகேஷ் பட் என்று அவள் வாயை மூடினான்.

    “என்ன பேசுற”, என்று அதட்டினான்.

   “உனக்கு புரியாது மாம்ஸ்., அதுதான் உண்மை., நான் உண்மையிலேயே உன்கிட்ட பர்ஸ்டு சொன்னேன்., நான் அவரோட அன்புக்காக மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதிக்கேன்னு,  ஆனா நிஜமா சொல்றேன் அவரை நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்தேனா.,  லைஃப்ல இப்படி ஒரு மனுஷனை நான் மிஸ் பண்ணி இருந்திருப்பேன்.,

   நான் ரொம்ப ஹேப்பியா தான் இருந்தேன்.,  இருக்கேன்.,  ஆனா எனக்கு கண்சிவ் ஆகி., பிரஷர் ஏறி இறங்க ஆரம்பிச்சு எல்லாம் வந்ததுக்கப்புறம்., கொஞ்சம் பயம் வர தான் செஞ்சுச்சு., இல்லன்னு சொல்லல., ஆனா கண்டிப்பா அவருக்காகவாவது நான் வந்துருவேன்., ஒரு வேளை நெருப்புன்னு சொன்னா வாய் சுடாது மாம்ஸ்.,  ஒரு வேளை எதுவும் பிராப்ளம்னா.,  ரெண்டு பிள்ளைகளையும் ஆளுக்கு ஒரு பிள்ளையா எடுத்து வளர்த்திருங்க,  யாரை நம்பியும் விட்றாத”, என்று சொன்னாள்.

  “லூசு மாதிரி பேசாத., ரெண்டு பிள்ளையும் நல்லபடியா நீ தான் வளர்ப்ப சரியா., அப்படிலாம் யோசிக்க கூடாது சரியா”, என்று இருவரும் அட்வைஸ் செய்து விட்டு அதன் பிறகு தான் டாக்டரிடம் இவர்கள் இருவரும் பேசி, அனஸ்தீசியா கொடுக்க ரெடி செய்து இருந்தனர்.

அதை இப்போது இருவரும் யோசித்துக்கொண்டே இருக்க, அவள் சொன்னது எத்தனை உண்மை என்பது  அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.,

   அத்தனை பேரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கண் மட்டும் அவள் வரும் பாதையை பார்த்து இருந்தது.

   அதன் பிறகு ஐசியூவிற்கு மாற்றி, அவள் சாதாரணமாக அறைக்கு மாற்றப்பட்ட பிறகும் அவள் எழுந்து நடமாடும் வரை, அவன் கையில் வைத்து பார்த்துக் கொள்வது போல தான் கவனித்துக் கொண்டான்.

      குழந்தைகளை வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்ள, அவளிடம்  “போதும்  ரெண்டு பேபி போதும்., இனிமேல் பேபிங்கிற வார்த்தையே கிடையாது”, என்று சொன்னான்.

    “ஏன் திடீர்னு, நாம ரெண்டு வீட்டிலும் நாம ஒவ்வொருத்தர் மட்டும் தான் ன்னு, நாம மூணு பெத்துக்கனும் ன்னு தானே சொன்னோம்”,என்றாள்.

   “ஐயோ நீ வரதுக்குள்ள நான் பட்ட பாடு”, என்று சொன்னான்.

   “அத்து அப்படி சொல்ல கூடாது., இன்னும் ஒன்னு ன்னு யோசித்தேன், நீங்க பயப்படுறதால பரவாயில்லை யோசனையை கைவிடலாம்”,என்று சொன்னாள்.

  இவள் சொல்ல, அவனும் “என்னது யோசித்தீயா”,  என்றான்.

     “ஆமா யோசித்தேன்” என்றாள்.

   அதன் பிறகு ஒரு வாரத்தில் வீட்டிற்கு அழைத்து வர, வீட்டினரின் கண்காணிப்பிலும், கவனிப்பிலும் ஒரு மாதத்தில் குழந்தைகளும் ஓரளவு உடல் தேறியிருக்க., அவளையும் நன்றாக தேற்றி இருந்தனர்.

    அந்த ஒரு மாதமும் யார் கண்ணிலும் அவளையும் குழந்தையும் அவர்கள் காட்டவில்லை.,

     அங்குள்ள முறைப்படி வெந்நீர் ஊற்றுவது., மருந்து கொடுப்பது, மருந்து உணவு கொடுப்பது, என்பதை மட்டும் செய்து இருந்தனர்.

     போனும் அவள் கைக்கு அடிக்கடி கிடையாது., வினித் முகேஷ் இருவரும் வீடியோ காலில் அழைக்கும் போதும் மட்டுமே போன் கொடுக்கப்பட்டது.

நிமலன் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றாலும்., அந்த அறையில் தங்குவதற்கு அவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

   அவளோடு நிமலனின் அம்மாவும் பாட்டியும் தங்கி இருந்தனர். நல்லபடியாக தாயையும் இரண்டு குழந்தைகளையும் தேற்றிக் கொண்டு வந்திருந்தனர்.

   குழந்தை பிறந்த 41 வது நாள் பெயர் சூட்டினர்.

  எப்போதும் போல அவர்கள் மூன்று குடும்பத்தினர் மட்டும் சேர்ந்து செய்தனர்.

   அதுவும் சிறப்பாக செய்ய அன்று தான் அவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

    பெயர் சூட்டு விழாவிற்கு நண்பர்கள் குழு வந்திருக்க.,  அப்போது தான் அவளுடைய கம்பெனியின் சிஇஓ “யம்மா தாயே, இப்பவாவது நீ உன் புருஷன் கம்பெனிக்கு வேலைக்கு போம்மா., தயவுசெய்து என் கம்பெனில ஒரு ஸ்டாப்புக்கு அந்த இடத்தை கொடு, நான்  ப்ல் பண்ணிக்குவேன்”, என்று சொன்னான்.

     “ஏன், நான் உங்க கம்பெனில ஒழுங்கா வேலை பார்த்து கொடுக்கலையா”, என்று கேட்டாள்.

   “யம்மா நீ ஒழுங்கா வேலை பாக்காம இல்ல, உன் புருஷன் உன்னை வேலைக்கு அனுப்ப மாட்டான்”, என்று சொன்னவன், “உனக்கு இரண்டு ப்ராஜெக்ட் வந்துச்சு.,  ரெண்டு ப்ராஜெக்ட் சமயமும் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டான்., கல்யாணம் முடியும் போது, உனக்கு ஒரு ஆஸ்திரேலியா பிராஜெக்ட் வந்துச்சு., இவன் அன்சைட்க்கெல்லாம் அனுப்ப முடியாதுன்னு சொல்லி தான் அந்த நேரத்துல உன்னை ஹனிமூன் தள்ளிட்டு போறேன்னு போயிட்டான்”, என்று சொன்னான்.

    இவளோ அவனைத் திரும்பி பார்த்து முறைக்க.,  “இப்போ டெலிவரிக்கு முன்னாடி கேட்டாங்க., இன்னொரு ப்ராஜெக்ட் இருக்கு., அது மறுபடியும் ஜெர்மன் கம்பெனி தான் கேட்டுச்சு., அப்பவும் அவங்க கிட்ட ரீசன் சொன்னதுக்கு., சரி டெலிவரி முடிஞ்சதுக்கு அப்புறம் வர முடியுமான்னு கேட்டாங்க., அப்பவும் இவன் முடியாதுன்னு சொல்லிட்டான்., இப்ப நீ தான் முடிவு பண்ணனும்”, என்று சொன்னான்.

    அவள் திரும்பி அவனை பார்த்து முறைக்க., அவனோ “ஒழுங்கு மரியாதையா நம்ம கம்பெனிக்கு வந்துரு., அந்த ஜெர்மன் ப்ராஜெக்ட், ஆஸ்திரேலிய ப்ராஜெக்ட், இதெல்லாம் நானே பார்த்து தாறேன்”, என்று சொன்னான்.

  “ஓஹோ, நீங்க வாங்கி தருவீங்க., என்னை அனுப்பிட்டு நீங்க பின்னாடியே என் கூட கிளம்பி வருவீங்க., அதுக்கு தானே”, என்று சொல்லி அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

     அவனும் “ஏன் கண்மணி என்னை விட்டுட்டு போவியா”, என்று கேட்டான்.

   “சார் உங்க கம்பெனிக்கு நல்ல ஆளா பார்த்து வேலைக்கு செலக்ட் பண்ணுங்க., என் புருஷன் என்னை எங்கேயும் விட மாட்டாரு., அது எனக்கு தான் தெரியும்., நானே பாத்துக்கிறேன்”, என்று சொல்லி சிரித்தாள்.

     அங்கு மகிழ்ச்சியான ஒரு சூழல் நிலவி இருந்தது. மதருக்கு வீடியோ காலில் தான் குழந்தையை காட்டினார்கள்.

டெலிவரி ஆன புதிதில் அவர் வந்து பார்த்து விட்டு சென்றிருந்தார். இப்போது அவர் வரவில்லை.

    வினித் முகேஷ் குடும்பத்தினரோடு இருந்தாலும், குழந்தையை ஆளாளுக்கு பார்த்துக் கொண்டனர்.

    இவளோ எப்போதும் போல., இருவருக்கும் நடுவில் போய் அமர்ந்தவள்., “மாம்ஸ் சொல்லு, உன் பிள்ளைக்கு நேத்து டாய்ஸ் வாங்கி இருக்க, அப்ப எனக்கானது எங்க”, என்றாள்.

       “நீ பிள்ளை கிட்ட எல்லாம் போட்டி போடுவியா”, என்று கேட்டான்.

     “போட்டி எல்லாம் இல்ல மாம்ஸ், நான் உன்கிட்ட ஒரு டாய் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு”, என்று சொன்னாள்.

       “அந்த நிமூ வா பாப்பா”, என்று முகேஷ் கேட்டான்.

    வினித் அவனிடம் தலையாட்டி நியாபகப் படுத்தாத என்னும் விதமாக கையை ஆட்ட.,

    அதை பார்த்த இவளோ, “மாம்ஸ் அப்போ உனக்கு ஞாபகம் இருக்கு., அப்ப நீ தான் வாங்கி தரணும்”, என்று சொன்னாள்.

    “ஐயோ அந்த நிமூ வேணும் ன்னு எத்தனை தடவை வாங்க சொல்லி என்னை பாடா படுத்துனா தெரியுமாடா., நான் ஞாபகப்படுத்தாதன்னு சொல்லவும்., இப்ப கேட்டுட்டியா”., என்றான்.

    “நிமூ டாய் தானே பாப்பா நான் வாங்கி தரேன்”, என்று முகேஷ் சொன்னான்.

    “டேய் பேசாம இருடா, அவளுக்கே ரெண்டு பிள்ளை இருக்கு., நம்மளாவது ஒன்னு ஒன்னு தான் வச்சிருக்கோம் பாரு., அவ பஸ்ட் அட்டெம்ப்ட் ல ரெண்டு வச்சிருக்கா”, என்று சொன்னான்.

     “மாம்ஸ்  அது உன் தப்பு, அதுக்கு நான் என்ன பண்ணுவேன்”, என்று சொன்னாள்.

   “என்னது என் தப்பா”, என்று வினித் சொன்னான்.

     வினித்திடம் “மாம்ஸ் எனக்கு நீ நிமூ வாங்கி தாங்க,முகி மாம்ஸ் நீ எது வாங்கி தருவ” என்று கேட்டாள்.

     “என்ன டாய்”, என்றான்.

     “நிமூ ஃப்ரெண்ட் டோரி”,என்றாள்.

     வினித்தோ, “குட்டி உனக்கு ரெண்டு பாப்பா இருக்குடா., நீ டாய் வச்சு விளையாடுற வயசாடா”, என்று கேட்டான்.

   “அப்ப நீ என்ன பார்த்து வயசானவன்னு சொல்ற., அப்படித்தானே”, என்று சொல்லி அவனிடம் அழுவது போல  செய்ய.,

    அவனோ “ஐயையோ உன்னை பார்த்து அப்படி சொல்வேனா குட்டி., உனக்கு என்ன இப்ப டாய் தானே வேணும், வாங்கி தந்துரலாம்”, என்று சொல்லிவிட்டு “அடுத்த வாரம் வாங்கி தரேன்”, என்று சொன்னான்.

     “பொய் சொல்லக்கூடாது” என்றாள்.

     “அப்போ உனக்கு வாங்கும் போது உன் பேபீஸ் க்கும் சேர்த்து வாங்கணும் இல்ல”, என்று கேட்டான்.

  “நோ மாம்ஸ், நீ வாங்கி கொடுக்க கூடாது, எனக்கு மட்டும் தான் நீ வாங்கி கொடுக்கணும்., அதுக்கெல்லாம் அவங்க டாடி வாங்கி கொடுப்பாரு”, என்று சொன்னாள்.

     அதே நேரம் அங்கு வந்த நிமலன், அவர்களுக்கு  எதிராக ஒரு இருக்கையை இழுத்து போட்டவன் அவளுக்கு உணவை கொடுக்க தொடங்கினான்.

    “அத்து ப்ளீஸ் இப்போ வேண்டாம்”,என்றாள்.

      “கொஞ்சம் தானே சாப்பிட்ட, அப்புறம் சாப்பிடுறேன் ன்னு சொன்ன இல்ல, இப்போ சாப்பிடு” என்றான்.

     இரண்டு வாய் உணவு உள்ளே சென்ற உடன்,

   “கண்மணி என்னடா பண்ணிக்கிட்டு இருந்த”, என்றான்.

    “அது ஒன்னும் இல்ல, இந்த மாம்ஸ் ரெண்டு பேரும் எனக்கு காலேஜ் படிக்கும் போதே ஒரு டாய் கேட்டேன்., அந்த டாயை இப்ப வரைக்கும் ஏமாத்திட்டு இருக்காங்க”, என்றாள்.

      “நீ டாய் வச்சு விளையாடுற வயசா”, என்று சொன்னான்.

   “உனக்கு டாய் யூஸ் ஆகலனா அது உன் பிள்ளைகளுக்கு தான்”, என்று சொன்னான்.

    “நோ நோ நோ எங்க மாம்ஸ் வாங்கி தர டாய் எனக்கு மட்டும் தான், உங்க பிள்ளைகளுக்கு வேணும்னா நீங்க வாங்கி கொடுங்க”, என்று சொல்லி அவனை கலாய்த்து கொண்டிருந்தாள்.

    அங்கு மகிழ்ச்சியான அதே நிறைவான சந்தோஷம் நிறைந்திருக்க வாழ்த்தி,  நாமும் அங்கிருந்து விடை பெறுவோம்.

   யாருமே இல்லாமல் இருந்தவளுக்கு, அத்தனை சொந்தங்களையும் கொண்டு வந்து கொடுக்க முடியும் என்று அவன் அன்பால் நிரூபித்தவன் நிமலன். அவனுடைய அன்பு மட்டும் தான் அவளுக்கு அத்தனையும் நிரந்தரமாக அவளிடம் தங்கும் படி செய்தது.

அன்பு என்ற ஒன்று நிறைந்திருந்தால் அகிலத்தையும் ஆள முடியும்., அகிலமும் அவர்களுக்கு சொந்தமாகும்., நிமலனின் அன்பு தர்ஷனாவிற்கு அத்தனையும் பெற்று தந்தது போல., உங்களின் அன்பு உங்களை சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் அள்ளித் தரட்டும்., வாழ்க வளமுடன்.

         என்றும் அன்புடன்

            ஆதி பிரபா.,

தன் மீது நம்பிக்கை உள்ளவனுக்கு, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. –லாவோ சீ