கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க போறா’ என்று தனக்குதானே சபாஷ் போட்டு கொண்டு இருந்தவர் மேல் தலையணை வந்து விழ,
திடுகிட்டவர் திரும்பி பார்க்க அங்கு ருத்ர தேவியாக நின்றிருந்தார் அவர் மனைவி.
“பத்து……”
“ம்ம்…. பத்துதான்….. பத்தேதான். பாவி மனுஷா உனக்குள்ள என் மேல எவ்ளோ வன்மம் இருந்திருந்தா இப்படி எல்லாம் பேசி இருப்ப”.
“என்ன பத்து இப்படி சொல்லிட்ட. எனக்கு என்ன வன்மம் இருக்க போகுது….”
“பின்ன நீங்க சொன்ன வார்த்தையை கேட்டு, வேற என்ன நினைப்பேன்னு எதிர் பார்க்குறீங்க”
“அப்படி என்ன பெருசா சொல்லிட்டேன்”
“அட பாவி. என் உசுரு உனக்கு விளையாட்டா போச்சா. உசுரு மேன் உசுரு. என்ன சொல்லிட்டேன்னு கூலா கேட்குற” என்று கேட்டவரை திரு திரு விழியுடன் பார்த்த கிருஷ்ணா “அ…. அ…. அது…. ஹர்ஷா கல்யாணம் வேண்டாம்னு சொல்லவும்….”
“அதுக்கு என் உசுர பனையம் வைப்பியா மேன் நீ. உடம்பு சரியில்லாம போயிடும்னு சொல்லி இருக்கலாம், இல்ல ஹார்ட் வீக்கா இருக்கு அதிர்ச்சி நியூஸ் எதுவும் சொல்ல கூடாது கல்யாணத்துக்கு சம்மதி மத்தத அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லி இருக்கலாம். அது என்ன என் உசுரு மேல உனக்கு இவ்ளோ காண்டு…”
“அப்படி இல்ல பத்து உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாதான் ஹர்ஷா ஒத்துப்பான்னு….”
“பாவி மனுஷா அதுக்கு உன் உசுர சொல்றது இல்ல வெட்டியா சுத்திட்டு இருக்க அந்த கிழவி உசுர சொல்றது…”
“நானா……என்னை சொன்னா அவன் மதிக்க மாட்டான் பத்து…” என்றவரை உறுத்து விழித்த பத்மா “அப்போ உங்க அம்மா கணக்கு என்ன…”
“ஹிஹிஹி….. அது…பத்து…. பாவம் அவங்களே வயசானவங்க. அம்மா பாவம் பத்து அதான்……”
“கிராதகா…அப்போ நான் பாவம் இல்லையா?”
“இல்ல பத்து என்ன இருந்தாலும் அவங்க என்னை பத்து மாசம் சுமந்து பெத்த ஆத்தா….”
“போடாங்………” என்றவர் வாயை ஓடி வந்து மூடிய கிருஷ்ணன் “நோ.. டா…” என்க,
அவர் கையை தட்டிவிட்ட பத்மா “உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தாங்கன்னா என்னை மட்டும் என்ன அமேசன்ல ஆர்டர் போட்டா எங்கம்மா வாங்குனாங்க. ஆ…வூன்னா…. இதையே சொல்லிட்டு இருக்க,
நான் இப்போவே கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு போறேன். நீயாச்சு…உன் புள்ளையாச்சு….. உன் குடும்பமாச்சு. கொஞ்சம் ஏமாந்தா போட்டோவா மாட்டி மாலை போட்ருவாங்க போல” என்றவர் செல்ல போக,
அவர் கையை பிடித்து பெட்டில் அமர வைத்த கிருஷ்ணன் “வை டா டென்ஷன்.” என்று கேட்க,
அடப்பாவி என்பது போல் வாயில் கை வைத்த பத்மா “அது எப்படி வூட்டுக்கார் பண்றது எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே பண்ணாதது போல் எதுக்கு டென்ஷன்னு கேட்குற” என்று கடுப்பாக கேட்க,
“இங்க பாரு சும்மா இந்த செல்லம் பள்ளம்னுட்டு வந்த அவ்ளோதான் சொல்லிட்டேன். அந்த கிழவி என்ன பேச்சு பேசுது. நீ என்னடான்னா அம்மா பாவம்ன்னு சொல்லிட்டு இருக்க. இந்த மூஞ்சுக்கு நான் கிடைச்சதே அதிகம். இதுல இன்னொரு பொண்ணு தேடி கட்டி வைக்குதாம்.
கிழவிக்கு உடம்புல கொழுப்பு இல்ல. உடம்பே கொழுப்புலதான் இருக்கு” என்று பல்லை நற நறக்க, அவரை சமாளிக்கும் விதமாக,
“எங்க வர்றது அதான் போட்டு தள்ள முடிவு பண்ணிட்டீங்களே”
“அதயே பேசாத பத்து. நான் பேசிட்டு வந்த அப்புறம் ஹர்ஷா எதுவும் மறுத்து பேசல பாரு. கண்டிப்பா காலைல கல்யாணத்துக்கு அவன் சம்மதம் சொல்வான் பாரு”.
“ம்ம்…. சொன்னா சந்தோஷம்தான்” என்று பெரு மூச்சுடன் சொன்னவர் அப்படியே யோசனையில் மூழ்கி இருக்க,
கிருஷ்ணாவோ “அதெல்லாம் நல்லதா நடக்கும். வா நாம இப்போ தூங்கலாம்”என்று அழைக்க,
“ஆனாலும் உனக்கு இருக்கு. என் உசுருக்கு ஆபத்துன்னு சொன்ன உடனே உன் ஆத்தா வாம்மா மின்னல்ங்கற மாதிரி என்ன வேகமா ஹர்ஷாகிட்ட ஓடி வந்தாங்க பார்த்திங்களா,
மத்த நேரம் எல்லாம் முழங்கால் வலிக்குது தைலம் தேயி… நல்லெண்ணெய் தேயின்னு வரும் இப்போ என்னன்னா குடு குடுன்னு ஓடி வருது” என்று சொல்லி கொண்டே திரும்ப கிருஷ்ணன் உறங்கி இருந்தார்.
அதில் திகைத்து போனவர் ‘அதுக்குள்ளவா இந்த மனுஷன் தூங்கி இருப்பாரு’ என்று யோசித்து பின் கோபமாக ‘அதானே அவங்க அம்மாவ சொன்னா காதும் கேட்காது, கண்ணும் தெரியாது. தூக்கம் மட்டும் நல்லா வந்துடும்’ என்று முணு முணுத்து கொண்டே படுக்கையில் சாய்ந்தார்.
ஆதவன் தன் பொன் கரங்களை பரப்பி தன் ஆளுகையை துவங்க தயராகும் அழகான காலை பொழுது. மற்றவர்களுக்கு எப்படியோ ஹாசிக்கு இனி வரும் நாட்கள் அனைத்தும் அழகாக இருப்பது போல் தோன்ற போவது கூட இல்லை என்ற எண்ணத்துடன் படுக்கையில் படுத்தவாறே மேலே சுற்றி கொண்டிருந்த மின் விசிறியை வெறித்து கொண்டு இருந்தாள்.
இரவு அறைக்குள் வந்தவள் அப்படியே மடங்கி அமர்ந்து கதறி அழ துவங்கினாள். நான் அவன் நினைவுலயே இல்ல. சின்ன வயசுல இருந்து அவன் ஒருத்தனை மட்டும் நான் நினைச்சுட்டு இருக்க, அவன் வேற பொண்ண பார்த்து கல்யாணம் செய்துக்கற அளவுக்கு போயிட்டான்.
ஏன் ஹர்ஷா இப்படி பண்ணுன? மனசு ரொம்ப வலிக்குதுடா. இதயத்துல யாரோ கத்திய இறக்குன மாதிரி ரொம்ப வலிக்குதுடா’ என்று தனக்குள் புலம்பி கொண்டே தரையில் படுத்து அழுது கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை.
திடீரென்று விழிப்பு வர, ஏன் இங்கு படுத்து இருக்கிறோம் என்று குழம்பியவள் பின் நினைவு வந்தவளாக அழுது கொண்டே தரையில் தூங்கிவிட்டோம் என்பதை உணர்ந்து பெரு மூச்சு விட்டு . ‘ஏன் ஹாசி எதுக்கு அழற. நீ இப்படி ஏங்கி ஏங்கி அழறதால எதாவது மாற போகுதா.
இல்லை உன்னோட காதல்தான் அவனுக்கு புரிய போகுதா. எதுவும் மாற போறது இல்லை. நிதர்சனத்தை ஏத்துக்க பழகு. அவன் உன்னை பிரண்டா பாக்குறதா சொன்னான். அந்த லிமிட்லயே நின்னு பார்த்துட்டு. உன் அண்ணன் கல்யாணம் முடிஞ்ச உடனே கிளம்பற வழிய பாரு.
காதல் இல்லாதவன் பின்னாடி போய் காதல் பிச்சை கேட்க நினைக்காத. அது ரொம்ப அசிங்கம்’. என்ற மூளையின் சொல் புரிந்தாலும் அவனையே கணவனாக நினைத்து வாழ்ந்த மனது உண்மையை ஏற்க மறுக்க,
மனதுக்கும், மூளைக்கும் இடையில் கிடந்து அல்லாடி போனாள் பேதை பெண்.
அப்போது அவள் அறை கதவு தட்டப்பட, மணியை பார்த்தாள் ஆறு என்று காட்டியது. இந்நேரத்திற்கு யார் என்ற யோசனையோடு சென்று அவள் கதவை திறக்க, நிரஞ்சன்தான் அங்கு நின்றிருந்தான்.
அழுது அழுது முகம் சிவந்து இமை வீங்கி ஒரு நாளிலேயே துவண்ட கொடி போல் ஆன தங்கையை கண்டு மனது வலிக்க அவளையே பார்த்து கொண்டிருந்த அண்ணனை கண்டு கோபமானவள் “அண்ணா….. இந்த மாதிரி பார்க்குறதை நிறுத்து. நீ என்னை இப்படி பாக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல.
இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி ஒரு பார்வை. என்னைய மிஸ் பண்றதால அவனுக்குதான் லாஸ் எனக்கு இல்ல. நான் சரி ஆகிடுவேன். என்ன இருந்தாலும் பொண்ணுங்களுக்கு இருக்க காதல் அளவுக்கு ஆண்களுக்கு இருக்கறது இல்ல.
கண்ணு முன்னாடி அழகா இருக்கறதைதான் ஆண்கள் செலக்ட் பண்ணுவாங்க. பழைய காதலை மறந்துருவாங்கன்னு சொல்றது உண்மைதான் போல, அவனை சின்ன வயசுல இருந்து நேசிச்ச நான்தான் முட்டாள்.
ஆண்கள் குணமே இதுதான் போல, சரி அதை விடு. இனி அவனை பத்தி பேசறதுக்கூடா வேஸ்ட் ஆப் டைம்தான். நான் சொன்ன லிஸ்ட்ல நீ சேராமா போய் அம்மா அப்பாகிட்ட உன் லவ் விஷயத்தை சொல்லு. இல்ல… நான் சொல்லவா” என்று தெளிவாகவும் தைரியமாகவும் பேசிய தங்கையை பெருமையாக பார்த்த நிரஞ்சன்.
“இல்லடா நானே பேசறேன். கண்டிப்பா நீ நினைக்கற மாதிரி ஆண் உன் அண்ணன் இல்லைன்னு காட்டணும்ல. அதனால நானே பேசறேன்”என்க,
“ம்ம்….” என்றவள் “இப்போ எதுக்கு இந்நேரத்துக்கு வந்து கதவை தட்டுன. உன் தங்கச்சி தப்பான முடிவு எடுத்துடுவான்னு பயந்துட்டியா” என்று கேட்க,
பக்கென்று சிரித்துவிட்டான் நிரஞ்சன். அவன் சிரிப்பை கண்டு கோபமாக அவனை முறைத்தவள் “அவளோ பெரிய ஜோக் ஒன்னும் நான் சொல்லலியே”என்க,
அவனோ “பின்ன என்னடி சரி காதல் தோல்வில இருப்பியே கொஞ்சம் சோகத்தை பிழிஞ்சு உன்கிட்ட பேசலாம்னு பார்த்தா, நீ காமெடி பண்ணிட்டு இருக்க”
“டேய் அண்ணா….. நான் சூசைட் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சியான்னு கேட்டா அது உனக்கு காமெடியா தெரியுதா”
“ஆமா. உன்னால பல பேர் சாக வாய்ப்பிருக்கு. ஆனால் நீ சாக……. வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பே இல்ல…”என்க,
அவளோ அண்ணனை முறைத்து கொண்டு நின்றிருந்தாள். உடனே அவளை அணைத்தவன் “நீ தைரியமான பொண்ணுன்னு எனக்கு தெரியும். நேத்தே உன்னோட தெளிவு எனக்கு புரிஞ்சுது. அதனால நான் அதை நினைப்பேன் இதை நினைப்பேன்னு நீயா எதாவது லூசு போல யோசிக்காத சரியா” என்றவன் தன்னிடம் இருந்து தங்கையை பிரித்து அவள் தலையை கலைக்க,
அவளோ அண்ணன் பாசத்தை கண்டு கண்கள் கலங்கினாலும் வெளியில் அதை காட்டி கொள்ளாமல் தலைல கை வைக்காதடா லூசு பயலே. இப்போ எதுக்கு இந்த அர்த்த ராத்திரில வந்து கதவை தட்டுன அதை சொல்லு”
“அது……”
ரேவதி,“என்னடா இன்னும் கிளம்பாம இங்கயே நின்னுட்டு இருக்க? அண்ணனும் தங்கச்சியும் அப்படி என்னதான் பேசுவீங்களோ, போடா போ.. போய் கிளம்பு. ஹாசி போய் சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பி வா”
ஹாசி,“எங்கம்மா?”
“ கோவிலுக்கு போறோம் ஹாசி”.
“இந்த நேரத்துலயா” என்றவள் ஆச்சர்யமாக கேட்க,
“ம்ம்…. நம்மளோட குல தெய்வம் கோவிலுக்கு போகணும். இப்போ கிளம்புனாதான் ஏழு மணிக்கு ரெடி ஆக முடியும். அப்புறம் அங்க போக பத்து மணி ஆகிடும். சாமி கும்பிட்டு கிளம்ப மூணு மணிக்கு மேல ஆகிடும். அதான்…நீ என்னடா வாய பார்த்துட்டு நிக்கற போ….”
“இதோ…. போயிட்டேன்…” என்றவன் தன் அறை நோக்கி ஓடிவிட்டான்.
அடுத்தாக ரேவதி பார்வை மகள் புறம் திரும்ப “ சரி நானும் கிளம்பறேன்” என்று சொல்லி கதவை அடைத்து கொண்டாள்.
தன் அறைக்கு சென்ற நிரஞ்சன் சீக்கிரமே தன் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லி மித்ராவை திருமணம் முடித்து, குடும்பமாக இங்கிருந்து அமெரிக்கா சென்றுவிட வேண்டும்’ என்று முடிவெடுத்து கொண்டவன் மனதில் மித்ராவை விட்டு செல்லும் எண்ணம் துளியும் இல்லாமல் தெளிவாக இருந்தது.
அண்ணன், தங்கை இருவரும் கிளம்பி வர குடும்பம் மொத்தமும் தங்கள் கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கு கிளம்பினர்.
ரேவதி, “ஏங்க அந்த போனை குடுங்க. ரேவதிக்கு போன் பண்ணி. இது மாதிரி கோவிலுக்கு போறோம்னு ஒரு வார்த்தை சொல்லிடலாம். நீங்க திடீர்னு கிளம்பலாம்னு சொல்லவும் அவங்ககிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லல” என்று ராஜ் போனை வாங்கி பேசினார் .
அங்கு வீட்டில் ஹர்ஷா இரவு முழுவதும் தூங்காமல் தன் அறைக்குள் நடந்து கொண்டு இருந்தவன். விடியும் தருவாயில்தான் சென்று படுத்தான்.
நன்றாக உறங்கி எழுந்தவன் மணியை பார்க்க அது காலை பத்து என்று காட்டியது. உடனே வேகமாக எழுந்து அமர்ந்தவன் தன் போனை எடுத்து பார்க்க அர்ச்சனாவிடம் இருந்து பல மிஸ்டு கால் வந்திருந்தது.
ஹாசியிடம் இருந்து எதுவும் அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தவன் இல்லை என்றவுடன் ‘இவளுக்கு என்ன ஆச்சு. நேத்து கோவில்ல வெயிட் பண்ண சொன்னா கேட்காம அவப்பாட்டுக்கு கிளம்பி போயிட்டா, சரி வீட்டுக்கு போயிட்டேன்னாவது மெசேஜ் அனுப்புனால பாரு. எப்போவும் அனுப்பற குட் மார்னிங், குட் நைட் கூட இல்ல.
ஒருவேலை அவங்க வீட்லயும் இந்த கல்யாண விஷத்தைப்பத்தி பேசியிருப்பாங்களோ. கோவத்துல என்கூட பேசாம இருக்காளோ’ என்று யோசித்து கொண்டு இருந்தவனின் கவனத்தை கலைத்தது சைலண்டில் இருந்த போனில் மின்னிய லைட் வெளிச்சத்தில்.
அர்ச்சனாதான் அழைத்திருந்தாள். உடனே அட்டன் செய்து காதில் வைத்தவன் இன்னும் அரை மணி நேரத்தில் ஆபிசில் இருப்பதாக சொல்லி பாத்ரூம் நோக்கி ஓடினான்.
குளித்து கொண்டிருக்கும்போதும் ஹர்ஷாவிற்கு ஹாசி நினைவுதான். அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இருக்காதோ, கண்டிப்பா இருக்காது. ஏன்னா அவளும் என்னை பிரண்டாதானே பார்த்தா. இல்லைனா நேத்து அர்ச்சனாவை அறிமுகப்படுத்தும்போது சாதாரணமா இருந்திருக்க மாட்டாளே என்று யோசித்தவன் இறுதியில் மாலை ஆபிஸ் முடிஞ்சு கண்டிப்பா ஹாசிக்கூட பேச வேண்டும். அதற்கு முன்னாடி அர்ச்சனாட்ட வீட்டு நிலவரத்தை சொல்லி அவங்க வீட்ல பேச சொல்லணும்’ என்ற முடிவுடம் கிளம்பி கீழே வர,
கிருஷ்ணன் ஹால் சோபாவில் விரைப்பாக அமர்ந்து கொண்டு அவனுக்காக காத்திருந்தார். மனைவியையும் கண்களால் கெஞ்சியவர் சோகம் போல் முகத்தை வைத்து கொள்ள சொல்ல,
‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று தலையில் அடித்து கொண்டவர், முகத்தை மாற்றி கொண்டு மகனையே பார்த்து கொண்டு இருந்தார்.
கிருஷ்ணன், “பத்மா…. அவன் என்ன முடிவெடுத்திருக்கான்னு கேளு” என்க, அவரும் மகன் முகத்தை ஆவலாக பார்த்தார்.
புருவத்தை தேய்த்தவாறு தாயையும், தந்தையையும் பார்த்த ஹர்ஷா “ம்மா யோசிச்சு நாளைக்கு சொல்றேன்” என்றுவிட்டு செல்ல போக,
“பத்மா உன்னோட உயிர் சம்மந்தமான விஷயம் சீக்கிரம் ஒரு முடிவ சொல்ல சொல்லு. வேற பொண்ண விரும்புனாலும் சொல்ல சொல்லு” என்றுவிட்டு அங்கிருந்த பேப்பரை எடுத்து படிப்பது போல் அவர் முகத்தை மறைத்து கொள்ள,
பத்மாவோ ‘ஹையோ….. இந்த வார்த்தையை மனுஷன் சொல்லும்போது எல்லாம் பக்கு பக்குன்னு இருக்குதே. பேசும்போது தேவதைகள் ததாஸ்து சொல்லும்னு சொல்லுவாங்களே அது மாதிரி எந்த தேவதையாவது சொல்லிட்டா என்ன பண்றது’, என்று புலம்பி கொண்டே மகனை பார்க்க, அவனோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தான்.
பத்மா, “டேய் உன்னை என்னமோ செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட சொன்ன மாதிரி என்னடா யோசிக்கற, கல்யாணம் பண்ணிக்கதானேடா சொன்னோம்’ என்று மகனை கழுவி ஊத்தியவர் “ஹர்ஷா……” என்று அழைக்க,
அவனோ, “நான் கிளம்பறேன்ம்மா ஏற்கனவே லேட் ஆகிடுச்சு” என்க,
பேரன் எதிரில் வந்த தேவகி பாட்டி “நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுப்பா. உனக்கு புது அம்மா கிடைப்பா பார்த்துக்கோ” என்று மருமகளை நக்கலாக பார்த்து கொண்டே அவர் சொல்ல,
கடுப்பான பத்மா கணவனை பார்க்க அவரோ ‘இல்லையே எனக்கு எதுவும் கேட்கலையே. எதாவது பேசுனீங்களா என்ன’ என்பது போல் நீயூஸ் பேப்பரில் தலையை புதைத்து கொண்டார்.
பத்மா,’குடும்பமாடா இது. வாச்சதுதான் சரி இல்லைன்னா, வந்ததும் சரி இல்ல’ என்று புலம்பி கொண்டே கிச்சன் நோக்கி சென்றுவிட்டார்.
ஹர்ஷா என்ன பதில் சொல்ல போகிறான். ஹாசிக்கு இந்த திருமண விஷயம் தெரிந்தால் என்ன முடிவு எடுக்க போகிறாள் அனைத்தையும் அடுத்த எபியில் பார்க்கலாம்.