அங்கு சென்ற போதும் அது போல தான் ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு விருந்து முடிக்கும் நேரத்தில்., அம்மாவுடைய பெரியப்பா மகள் அதாவது அம்மாவிற்கு அக்கா முறை உள்ளவர், மருத்துவர் தான் அவரும்., இவள் வந்திருப்பது தெரிந்து வெளியூரில் இருந்தவர் வந்து சேர்ந்திருந்தார்.
அவளைப் பார்த்தவுடன் அவரோ வேகமாக வந்து கன்னத்தை தடவி அவளையை உத்துப் பார்த்தவர்., “உங்க அப்பா ஜாடை உனக்கு அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்., உங்க அம்மா சாயல் லேசா ஒட்டுது”, என்று சொன்னார்.
அனைத்தும் ஆங்கிலத்தில் உரையாடினாலும் அவரது கண் கலங்குவதும்., அவரது முகமாற்றமும் அவளுக்கு நன்றாக புரிந்தது.,
அதே நேரம் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, தன்னை பற்றி ,தன்னுடைய உறவு முறையை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டார்.,
முகேஷ் தான், “அத்தை இதெல்லாம் ஓவரா தெரியலையா? வீட்டுக்கு வந்த புள்ளைய விருந்து சாப்பிட விடாம அழ வைக்கணும் முடிவு பண்ணிட்டீங்களா”, என்று சொல்லி அவர் கையில் இருந்து அவளை இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.
அதன் பிறகு அவர்களுக்குள் சுமூகமான பேச்சு இருந்தாலும்., அவர் கண் ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும் போதும் கலங்குவதை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
அதன் பிறகு அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் போது எல்லோரும் சந்தோஷமாகவே வழி அனுப்பி வைத்தனர்.,
“முகேஷிடம் ஒரு வழியா விருந்து எல்லாம் முடிச்சுச்சுடா, இப்போதைக்கு யாரும் கூப்பிடாதீங்க., இனிமேல் எங்கேயும் இப்போதைக்கு வர்றதா இல்ல”, என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
அவளிடம் ப்ளைட் ல் வரும் போது அவளுடைய நாட்களை பற்றி கேட்டான்.
அவள் அவனைப் பார்த்து முறைக்க.,
“கேட்கிறது தப்பு இல்லம்மா, சொல்லு”, என்று சொன்னான்.
“எதுக்கு கேட்கிறீங்க” என்று அவள் கேட்டாள்.
அவனும் தேதியை சரியாக சொல்லி கேட்டான்.
இவளோ அவனை அதிர்வாக பார்த்தாள், “எப்படி தெரியும்”, என்று கேட்டாள்,
அவனும் “கிட்டத்தட்ட ஏழு மாசம் ஓரே இடத்தில் இருந்திருக்கோம்”, என்று சொன்னான்.
அவனைப் பார்த்து முறைத்து விட்டு, “அது தான் தெரியுது இல்ல., அப்புறம் எதுக்கு கேக்குறீங்க”, என்று சொன்னாள்.
“அப்போ ஓகே தானே”, என்றான்.
“என்ன ஓகே”, என்றாள்.
“ஹனிமூன்”, என்று சொன்னான்.
அவனை திரும்பி பார்த்தவள், “சும்மா இருங்க அதெல்லாம் வேண்டாம்”, என்று சொன்னாள்.
“ஏன் உங்க பாஸ் உனக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்திருக்கானா”, என்று கேட்டான்.
“இல்ல நான் இன்னும் லீவுல தான் இருக்கேன்”, என்றான்.
“அப்புறம் என்ன கண்மணி நானே கம்பெனி விட்டுட்டு கிளம்புறேன்., உனக்கு என்ன”, என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தவன்.,
“ஆமா எப்ப நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வருவ”, என்றான்.
“எப்ப வரலாம் ன்னு தோணுதோ, அப்ப வாறேன்”, என்று சொல்லி விட்டு அவன் தோளிலேயே சாய்ந்து தூங்க தொடங்கி இருந்தாள்.
பிளைட் லேன்ட் ஆவதற்கு சற்று முன்னே அவளை எழுப்பியவன்., “வீட்டுக்கு போய் தூங்கலாம் எழுந்துக்கோ”, என்று சொல்லி அழைத்து வந்தான்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் அவரவர் வேலைகள், அவரவரை இழுத்துக் கொண்டது.,
அதன் பிறகு வீட்டில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஹனிமூன் செல்வதற்காக கிளம்பினார்கள்.
அவளோ அவனிடம் “எங்க போறோம்”, என்று கேட்டாள்.
அவனும் “சஸ்பென்ஸ் கூட்டிட்டு போற இடத்துக்கு வா, இப்படி எதுவும் திங்க் பண்ணுவ ன்னு தான் உன்னை டிரஸ் கூட பேக் பண்ண விடல., நானே பேக் பண்ணினேன்”, என்றான்.
ஏர்போர்ட் வந்து அமரவும்., இவளோ அவனிடம்., “நீங்க என்ன டிரஸ் பேக் பண்ணி இருக்கீங்க என்று கூட பார்க்கலை, நிறைய போய் வாங்கிட்டு வந்த மாதிரி எல்லாம் இருந்துச்சு.,என் ட்ட காட்டவும் இல்ல, கூட்டிட்டு ம் போகலை,ஏதாவது ஏடாகூடமா இருந்துச்சுன்னு வைங்களேன்., நான் இப்ப போட்டு இருக்க டிரஸ் லையே அப்படியே இருந்துருவேன்”, என்று சொன்னான்.
“பத்து நாளைக்கா இப்படியே இருப்ப”, என்றான்.
“என்னது பத்து நாளா” என்றாள்.
“ஆமா பத்து நாள், பத்து நாளைக்கு குறைந்து எப்படி ஹனிமூன் போறது”, என்றான்.
“ம்ஹூம், நீங்க இருக்கீங்களே”, என்று சொன்னாள்.,
“ஏன் கண்மணி நல்லா தானே இருக்கேன், எதுவும் குறை இருக்கா”, என்று கேட்டவன், “நமக்கு ன்னு கொஞ்சம் தனிமை வேணும் இல்ல”, என்றான்.
“இங்க மட்டும் நீங்க அப்படியே கூட்டுக்குடும்பத்தோடு உட்கார்ந்து கும்மியடிச்சிட்டு இருந்தீங்க பாருங்க., இங்கேயும் தனிமையில் தானே”, என்றவள்.,
அங்க வீட்டிலிருந்து, தனியா போறேன், தனியா போறேன் ன்னு, அப்பப்ப இழுத்துட்டு வந்துட்டீங்க., வாரத்துல ஒரு நாள் அங்க கூட்டிட்டு போனீங்க., கல்யாணம் ஆகி 3 வீக்ஸ் முடிஞ்சது, இதோ ஒன் மந்த் ஆகப்போகுது., ஒன் மந்த்ல கல்யாணம் முடிஞ்சு, ரிசப்ஷன் முடிஞ்ச அந்த டைம் போயிருக்கும் போது தான் கிட்டத்தட்ட ஐந்து நாள் இருந்தோம், அதுக்கப்புறம் வீக்லி ஒன்ஸ் அப்படித்தானே கூட்டிட்டு போய் இருக்கீங்க”, என்றாள்.
அவனும் சிரித்துக்கொண்டே “சரி, ஊர்ல இருந்து வந்த உடனே., உன்ன கொண்டு போய் பாட்டி வீட்டுல விடுறேன்”, என்று சொன்னான்.
“ஆனாலும் கண்மணி நீ சமத்து புள்ளையா மாறிட்ட தெரியுமா”, என்றான்.
“என்ன சம்மத்து”, என்று கேட்டாள்.
“கேரளா புட் எல்லாம் சாப்பிட்டுக்கிற., இந்த புட் தான் வேணும்னு கேட்கல”, என்று சொன்னான்.
“எந்த ஃபுட்டா இருந்தாலும், ஓகே, நான் தான் சொல்லிட்டேன்ல”, என்று சொன்னாள்.
“அப்படி கிடையாது கண்மணி, உனக்கு எது புடிச்சிருக்கோ அதைத்தான் கேட்கணும்., அதுக்காக இங்க இருக்கிறது தான் சாப்பிடணும் அப்படின்னு கட்டாயம் எல்லாம் கிடையாது., வேற வழி இல்லன்னா சாப்பிடலாம்., ஆனா உனக்கு இங்க எதுவும் இல்லை ன்னு யாரும் சொல்ல மாட்டாங்க”, என்று சொன்னான்.
“அது எனக்கே தெரியும் அத்து, அத்தை சொல்லியிருக்காங்க”, என்று அவனை வாரிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு தெரியாது, அவர்கள் செல்ல இருப்பது மாலத்தீவுக்கு என்று., அங்கு சென்ற பிறகு கடலுக்கு இடையில் போடப்பட்டிருந்த குடில்களும்., அந்த கடல் காற்றும் அந்த அறையின் அழகும் அத்தனை ரம்யமாக இருந்தது.
இவ்ளோ விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் “10 நாள் போதுமா”, என்று கேட்டான்.
அவளோ சிரித்தபடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு “தேங்க்ஸ் அத்து”, என்றாள்.
“வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா”, என்று கேட்டான்.
“வேற என்ன வேணும்”, என்று கேட்டாள்.
“கேட்பதற்கு ஒன்னும் பாக்கி இல்லையே”, என்று அவன் சொல்ல.,
இவளோ, “கொடுப்பதற்கு மிச்சம் எதுவும் இல்லையே”, என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனும் அவளை இழுத்து., அவள் நெற்றியில் முட்டி, முத்தம் கொடுத்து தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன்., “10 நாள் போதுமா”, என்று கேட்டான்.
இவளோ சிரித்தபடி கடலில் சத்தம் எப்படி இருக்கும் ன்னு கேக்கணும்., அதுக்கு சொல்றேன்”, என்றாள்.
அதன் பிறகான நாட்கள் அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது., ஒவ்வொரு நாளும் புதிதாக இருப்பது போலவே தோன்றியது.,
பத்து நாள் என்பது 15 நாளாக மாறியது.
அவர்கள் மீண்டும் கொச்சினுக்கு வந்து சேரும் போது மீண்டும் அவரவர் வேலை அவர்களை இழுத்துக் கொண்டது.
தங்கள் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ தொடங்கியிருந்தனர்.
இவளோ இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அங்கு வீட்டில் சென்று இரண்டு நாள் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவதை வழக்கமாக்கி வைத்தாள்.
அவனையும் சேர்த்து மாற்றி வைத்திருந்தாள். குடும்பத்தினரோடு இருப்பது அவளுக்கும் மகிழ்வாகவே இருந்தது. அவளை சந்தோஷமான மனநிலையிலே அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
சில நேரங்களில் அவர்கள் சொல்லும் தமிழ்நாட்டு சமையலை இவள் செய்து கொடுக்கவும் தயங்குவதில்லை.,