20

    காலை நேரம் போர்வைக்குள் சுகமான தூக்கத்திலிருந்து, ‘யாரோ கண்மணி கண்மணி’, என்று அழைப்பது காதில் ஒலித்தது.

    சற்று நிதானித்தவள், தூக்கத்திலேயே “அத்து”, என்றாள்.

   அவள் அழைப்பை கேட்டவன் அவளை சேர்த்து பிடித்துக் கொண்டு, “எழுந்துக்கிற பிளான் இல்லையா”, என்றான்.

     “டைம் என்ன”, என்றாள்.

      “மணி 7:30 ஆகப்போகுது., நாம காலையில பிரேக்பாஸ்ட்க்கு, அங்க வீட்டுக்கு வாறோம் ன்னு சொல்லி இருக்கோம்., சோ இப்ப எந்திரிச்சு கிளம்பி கோவிலுக்கு போயிட்டு அதுக்கப்புறம் வீட்டுக்கு போகணும்”, என்று சொன்னான்.

      “ம்ம் ம்ம்”, என்று மெதுவாக போர்வைக்குள்ளே சுருண்டவள்., மீண்டும் தூக்கத்தை தொடர தொடங்கும் போது.,

     “கண்மணி நானே எந்திரிச்சிட்டேன்”, என்று சொன்னான்.

    “உங்களுக்கு என்ன, எனக்குத்தான் என்றவள், பேச வைக்காதீங்க”, என்றாள்.

     “என் கண்மணி தான், நல்லா பேசுவியே, இப்ப பேசேன்”, என்று சொன்னான்.

   “ஒன்னும் வேண்டாம்”, என்றவள், “ஒரு பைவ் மினிட்ஸ் படுத்துக்கிறேன்”, என்று சொன்னாள்.,

‌    “நான்  வேணா தூக்கிட்டு போகவா”, என்றான்.

      “வேண்டாம் நானே வர்றேன்” என்று சொல்லி விட்டு எழுந்து அமர்ந்தாள்.

      தலை முடியை அள்ளிக் கொண்டை போட்டவள்., “நீங்க குளிக்கலையா, எந்த ரூம்ல குளிக்க போறீங்க”, என்றாள்.

    “நீ எந்த ரூம் எடுத்துக்கிறயோ, அடுத்த ரூமில் நான் குளிச்சிட்டு வர்றேன்”, என்றான்.

  அதன் பிறகு காலையில் கிளம்பும் வேலை வேகமாக நடந்து முடிந்தது.

     கிளம்பியவர்கள் நேராக கோவிலுக்கு சென்றனர், அங்கிருந்த பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்து வெளியே வரும் போது, கையில் கொடுத்த இலை பிரசாதத்திலிருந்து சந்தனத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டு விட்டவன், சிரித்துக்கொண்டே தனக்கும் வைத்துக் கொண்டான்.

   அவளும்  அவனை பார்த்து சிரித்துக் கொண்டே சேர்ந்து நடந்தவள், ஏற்கனவே வீட்டில் இருந்து கிளம்பும் போது லேசான குங்குமத்தை நெற்றியில் லேசாக வைத்திருந்தாள், சந்தனமும் குங்குமமும் சேர்ந்து அவளை இன்னமும் அழகாக காட்டியது.

   அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே காருக்கு வந்த பிறகு, கார் கிளம்பிய பின், “என்ன சிரிப்பு”, என்றாள்.

   “கல்யாணம் முடிஞ்சு ஒன் டே தான் ஆகுதுன்னு, என்னால நம்பவே முடியல, அவ்வளவு சேஞ்சஸ் உன்கிட்ட”, என்று சொன்னான்.

    “என்ன சேஞ்சேஸ்”, என்று கேட்டாள்.

       “சமத்துப்பிள்னளையா மாறிட்ட,  நான் சொல்றதெல்லாம் கேக்குற”, என்று சொன்னான்.

    அவனை  திரும்பி பார்த்து முறைத்தவள், “ஐயோ பாவம் பத்து வருஷம் என் பின்னாடியே சுத்தி இருக்கீங்களே, அப்படின்னு ஒரே ரீசனுக்காக தான், நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்கேன்”, என்று சொல்லி விட்டு.,

     “சரி, இனிமேல் தலையாட்டல, நேற்று தலையாட்டியதோட முடிஞ்சு போச்சு., இன்னையிலிருந்து நான் என்னோட முடிவை மாத்திக்கிறேன்”, என்று சொன்னாள்.

    “அய்யய்யோ கண்மணி,  அந்த மாதிரி விபரீதமான முடிவு எல்லாம் எடுக்காத, நான் பாவம் இல்ல”, என்றான்.

       “இப்பதான் என்னமோ சொன்னீங்க, ஒரு நாள்ல நிறைய சேஞ்ச் ன்னு, அப்புறம் எதுக்கு இப்ப வேண்டாம் ன்னு சொல்லுறீங்க”, என்றாள்.

    “ஏன் கண்மணி, எனக்கு உன்னை கிண்டல் பண்றதுக்கு  உரிமை இல்லையா”, என்றான்.

    சிரித்துக் கொண்டே, “ஏன் உங்க காலை வார்றதுக்கு எனக்கு ரைட்ஸ் இல்லையா”, என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

     அதன் பிறகு சாதாரணமாக வீட்டினரை பற்றி பேசிய படி வீடு வந்து சேரும் போது கேட் அருகிலேயே உறவினர்கள் எல்லாம் நிறுத்தி பிடித்துக் கொண்டனர்.

          காரை வெளியேவே நிறுத்தி விட்டு இறங்கவும் கேட் அருகிலேயே ஆரத்தி சுற்றி பின் அவர்கள் வீட்டிற்குள் செல்ல  காலடி எடுத்து வைத்தனர்.

    சற்று தூரம் உள்ளே செல்ல வேண்டியது இருப்பதால் நடந்து போலாமே என்றனர்.

   “ஏன் திடீர்னு நேற்றைக்கு  வீட்டு வாசல்  வந்த பிறகு அங்க வச்சு தான் ஆரத்தி சுத்துனீங்க” என்று  கேட்டான்.

    “இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு டெஸ்ட்”, என்று உறவினரில் ஒரு பெண்மணி சொன்னார்.

    “என்ன டெஸ்ட்”, என்று கேட்டான்.

   இவளோ “என்ன பேசுறாங்க” என்று வினித்திடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    “ஏய் சீக்கிரம் மலையாளம் பேச தொடங்கு, உனக்கு ட்ரான்ஸ்லேட் பண்றதுக்கு ஒருத்தரை கூடவே கூட்டிட்டு சுத்த முடியாது”, என்றான்.

   முகேஷோ, “உனக்கு தான் புரியும் இல்ல”, என்று கேட்டான்.

      “இதுல நிறைய புரியாத வார்த்தை எல்லாம் வருதே”, என்று சொன்னாள்.

     “கொஞ்சம் வெயிட் பண்ணு, அண்ணனே சொல்லுவாரு” என்று சொல்லவும்.,

     அங்கோ, அவர்கள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது,

        மற்றவர்கள் அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்தனர், இவள் மட்டும் மொழி புரியாமல் அவனை திருதிருவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

     அவர்கள் பேசியது என்னவென்றால், “உங்க ரெண்டு பேருக்கும் ஒரு டெஸ்ட்”, என்று அந்தப் பெண்மணி சொல்லி முடிக்கவும்.

      கூட சேர்ந்தவர்கள், “ரெண்டு பேரும் சேர்ந்து ரெண்டு காலில் தான் நடந்து போகனும்”, என்று சொன்னார்.

     “ரெண்டு பேருக்குமே, ரெண்டு ,ரெண்டு, கால் தான் இருக்கு இல்லையா, அப்ப  ரெண்டு கால்ல தானே நடந்து போகனும்”, என்று கேட்டான்.

   “அப்படி சொல்லலப்பா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே ரெண்டு கால்ல தான் நடந்து போகனும், அது எப்படி நடந்து போறீங்கன்னு நாங்க பார்ப்போம்”, என்று சொன்னார்கள்.

   ஆளாளுக்கு சிரித்தபடி ஒவ்வொரு ஐடியா சொன்னார்கள்.

     அதில் ஒருவர் “பேசாம உன் பொண்டாட்டிய காலில் ஏத்தி நடக்க வையேன்” என்றார்,

    அதற்கு மற்றவர்கள் வேண்டும் என்றே நடந்து கூட காட்டினர்.

இவனும் “ஓஹோ அப்படியா விஷயம்”, என்றான்.

     பெரியவர்கள் தான் இவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

     “நீ உன் காலில் ஏத்திக்கோ, இல்லனா, அவ காலில் ஏறிக்கோ, ஆனால் ரெண்டு காலில் தான் நடக்கணும்., ரெண்டு பேரும் சேர்ந்து நடக்கணும்”, என்று சொன்னார்கள்.

     “நடக்கலாமே”, என்று சொன்னான்.

   இவள் தான் அவனிடம், “என்ன”, என்றாள்.

   அப்போது ஆளாளுக்கு சொல்வது, ஓரளவுக்கு இவளுக்கு புரிந்தாலும்., “அய்யய்யோ இல்ல வேண்டாம்”,என்றாள்.

    மற்றவர்களோ, “இன்னைக்கு அப்படி தான் நடக்கனும்” என்றனர்.

    அவனும் சிரித்துக் கொண்டே கட்டி இருந்த வேஷ்டியை மடித்து கட்டவும்., நிஜமாகவே காலில் ஏற்றி நடக்கப் போகிறான் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் கைப்பிடித்து அருகில் அழைத்தவன்., அவள் சேலையில் தொங்கிக் கொண்டிருந்த முந்தானையை எடுத்து அவள் கையில் கொடுத்து பிடித்துக் கொள்ள சொன்னான்.

யாரும் எதிர்பார்க்கும் முன்பே

அப்படியே அவளை கையில் தூக்கிக் கொண்டான்.,

   “அத்து என்ன இது”,என்று இவள் சொல்லவுமே,

    “சத்தம் மூச் கண்மணி”, என்றவன்.

     மற்றவர்களிடம்  “இப்ப ரெண்டு கால்ல தானே நடக்கிறேன்”, என்று சொன்னான்.

     அடப்பாவி என்று ஆளாளுக்கு கிண்டல் செய்து கொண்டிருக்க, அவளோ, அவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

       அப்படியே வீட்டிற்குள் தூக்கி வந்து ஹாலில் இறக்கி விடப் போகும் போது., அந்த பெண்மணி தான், “நேரா பூஜை ரூம்ல கொண்டு போய் இறக்கி விடு.,விளக்கு ஏத்தணும் இல்ல”, என்று சொன்னார்.

      பூஜை ரூம் அருகில் கொண்டு போய் இறக்கிவிட., “கோயிலுக்கு போயிட்டு வந்துட்டீங்களா”, என்று பாட்டி கேட்டார்.

   அவனும் “ஆமா”, என்று சொன்னான்.

   இவளோ தலையை மட்டும் ஆட்டினாள். பின்பு வீட்டில் விளக்கேற்றி விட்டு காலை உணவாக அங்குள்ள பதார்த்தங்களாக, ஆப்பம், இடியாப்பம், புட்டு என்று விதவிதமாக இருந்தது.

அதை பார்த்தவள், அவனைப் பார்த்து திருதிருவென முழித்தாள்.

   அவனும் சிரித்துக் கொண்டே, “உனக்கு புடிச்ச மாதிரி புட்டை செஞ்சு தாரேன்”, என்று சொல்லிவிட்டு அவளோடு சேர்ந்து உணவு உண்ண அமர்ந்தான்.

    அந்த உணவுகளை பார்த்தவுடன் அவளுக்கு இந்த பக்கமாக அமர்ந்த வினித்தும், முகேஷும் “ஐயோ இவளுக்கு இதெல்லாம் பிடிக்காதே, ஆப்பம் வேணும்னா சாப்பிடுறியா”, என்று கேட்டனர்.

    நிமலன் தான் அவர்களிடம் “அவ சாப்பிடுவா”., என்று சொன்னான்.