நந்தித்தாவிற்கு வேலை சரியாக இருந்தது மதியமாக மண்டபம் வந்துவிட்டனர் நந்தித்தாவின் வீட்டிலிருந்து. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மறுநாள் ‘பிரசன்னா ஆராதனா’ திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஆராதனா வீட்டிற்கு சென்றுவிட்டு.. நேராக கரூர் வந்து சேர்ந்தனர் பிரசன்னா தம்பதியோடு எல்லோரும்.
ஏற்பாடுகள் எல்லாம் செய்தே வந்திருந்தார் நந்தித்தாவின் தந்தை. மாலையில் வந்து சேர்ந்தனர் எல்லோரும். விருந்து சடங்குகள் என எல்லாம் நல்லவிதமாக நடந்தது. இரவு மணமக்களை தனியே விட என இப்போது மேலே கட்டியிருந்த அறையைதான் தயார் செய்திருந்தனர் பெரியவர்கள்.
தங்களின் சம்பந்தி வீட்டார் தங்குவதற்கு என அடுத்த தெருவில் வீடு ஒன்றை வாடைகக்கு எடுத்திருந்தார்.கெளவ்ரவ் அமுதா பெரியப்பா பிரகதீஷ் என எல்லோரும் சென்னை கிளம்பினர், உண்டுவிட்டு.
பசுபதி நந்தித்தா இருவரும் உறவுகளோடு அந்த வீட்டுக்கு சென்றனர். பெரிய ஹால்.. மாடியிலும் கீழுமாக பெரிய வீடு. பசுபதி இதுவரை இப்படி தங்கியதேயில்லை எனலாம். உறவுகள் எல்லாம் அங்கிருந்த ஒற்றை கயிற்று கட்டிலை.. மாப்பிள்ளைக்கு, அதான் பசுபதிக்கு என கொடுத்துவிட்டு.. தாங்கள் பெரிய சைஸ் ஜமாக்களாம் விரித்து உறங்க தொடங்கிவிட்டனர். நந்தித்தா அவர்களோடு உறங்க முற்பட்டாள்.
கணவன் படுத்துவிட்டானா என பார்க்க.. கணவன் அங்கே இல்லை. நந்தித்தா படுத்துக் கொண்டாள். உறவுகள் எல்லாம் பேசிக் கொண்டே உறங்க.. கணவன் இன்னும் கணோமே என எண்ணி, எழுந்து அவனை தேடிக் கொண்டே வந்தாள். வாசலில்.. தாங்கள் உறங்கிய பெரிய ஹாலில்.. அதையடுத்து ஆண்கள் படுத்திருந்த அறை.. என எங்கும் இல்லை கணவன்.
போனில் அழைத்துக் கொண்டே மடி ஏறினாள். கணவன் அழைப்பினை ஏற்று “ம்.. சொல்லு” என்றான்.
மனையாளுக்கு, மேலிருந்து அவன் பேசுவதை உணர முடிந்தது.. “எங்க இருக்கீங்க” என கேட்டுக் கொண்டே மேலே வந்து சேர்ந்துவிட்டாள்.
கணவனும் அவளை பார்த்துவிட்டு அழைப்பினை துண்டித்தான்.
மனையாள் “என்ன பண்றீங்க தூங்கலை” என்றாள்.
கணவன் “என்ன பண்றேன்.. நீ தூங்கலை” என்றான்.
மனையாள் “உங்களை காணோம் அதான் வந்தேன்.. ஏன் தூக்கம் வரலையா” என்றாள்.
மனையாள் அந்த மொட்டை மாடியை அனார்ந்து பார்த்து நின்றாள் இரண்டுநிமிடம் பின்.. “அஹ.. நீங்க இப்படி எல்லாம் ஸ்டே பண்ணதேயில்லையா” என்றாள்.
கணவன் “அப்படியெல்லாம் இல்ல டி.. ஊருக்கு போனால் இப்படிதான் இருக்கும், நான் மட்டும் என்ன டாடா பில்லாவா.. என்னமோ.. தூக்கம் வரலை அவ்வளோதான்.” என்றான் கொஞ்சம் எரிச்சல் குரலில்.
நந்தித்தா அமைதியானாள்.
கணவன் இரண்டு நொடிகள் சென்று மனையாளை பார்க்க.. அவள் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.. அசதியாக.
கணவன் அதில் கொஞ்சம் அலார்ட் ஆனான்.. ‘என்னாச்சு.. டயர்டா இருக்கா’ என எண்ணிக் கொண்டு “என்ன ஆச்சு நந்து.. ஓவரா அலைந்தது.. முடியலையா..” என்றான்.
மனையாள் தலையசைத்தாள்.
கணவன் “அப்போ என்ன டா.. நீ தூங்கு போ.. எனக்கு வேற டென்ஷன்..” என்றான்.
மனையாள் சட்டென “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.
பசுபதி நின்று புருவம் உயர்த்தி “என்ன..” என்றான் டென்ஷன்னாக.
மனையாள் “ஏன் டென்ஷன்.. கொஞ்சம் அமைதியாக கேளுங்க” என்றாள், எரிச்சலாக.
கணவனுக்கும் எரிச்சலானது “நாளைக்கு, ஒரு மீட்டிங் இருக்கு.. அதே யோசனை.. நேரில் வர முடியாது சொல்லிட்டேன்.. ஜூனியர் கிட்ட டேட்டா கேட்டிருந்தேன் இன்னும் வரலை.. காலையில் அதை ரீசெக் செய்யனும்.. வேலை இருக்கு.. நெட்வொர்க் எடுக்கலை.. ம்.. டென்ஷன் தான்.. நீயும் இப்படி” என சொல்லியவன் வேகமாக நடந்தான்.
மனையாள் சொல்லவந்ததை எப்படி சொல்லுவது என தெரியாமல்.. “அதுக்கு நீங்க விழிச்சிருந்தால் சரியாகிடுமா.. தூங்குங்க.. நான் கட்டில் எடுத்துட்டு வரவா..இங்கேயே தூங்குரீங்களா” என்றாள்.
கணவன் தன் யோசனையிலிருந்து வெளியே வந்தான்.. “இல்ல இல்ல.. நீ எதோ சொல்ல வந்த சொல்லு..” என்றான், அவளின் அருகே அமர்ந்துக் கொண்டு.
“இல்ல, அப்புறம் பேசலாம்.. எனக்கு சரியாக தெரியலை.. நீங்க காரில் தூங்குங்களேன்.. ac இருக்கும்” என்றாள்.. குழப்பமாக.
பசுபதி “வா.. நீயும் வா” என்றவன் மனையாளை லேசாக கட்டிக் கொண்டான்.. “என்ன சொல்லணும்.. ஏதாவது இம்பார்ட்டன்ட்டா.. உண்மையை சொல்லு.. நீ சரியாவே இல்ல.. என்கிட்டே என்ன சொல்லணும்.. சொல்லிடு, எனக்கு தூக்கமே வராது.. ஏதாவது தப்பாகிடும்.. சொல்லிடு” என்றான் சீரியசான குரலில்.
இருவரும் யோசனையோடு பேசிக் கொண்டே கீழிறங்கி வந்துவிட்டனர். வாசலில் நின்றிருந்த காரில் பசுபதி ஏறிக் கொண்டு “வா.. கொஞ்சம் டிரைவ் போயிட்டு வரலாம்” என்றான் மனையாளை பார்த்து.
மனையாள் “என்ன விளையாடுறீங்களா” என்றாள். காட்டன் சல்வார்.. அயர்ந்து தூங்காத விழிகள்.. என்னமோ குழப்பத்தில் இருப்பது போன்ற உணர்வை கணவனுக்கு தர.. மனையாளை அந்த குழப்பத்தில் விட மனதில்லை அவனுக்கு. முன்பு அப்படி கவனிக்காமல் விட்டதால்.. தான் இழந்ததின் காலம் தெரியுமே அவனுக்கு.
கணவன் “இல்ல.. உண்மையாதான்.. வா.. நீ எதோ சொல்லனும்ன்னு சொன்ன.. வா, உள்ள அதுதான் ஓடுது.. வா” என்றான் அன்பான குரலில்.
மனையாள் உடல் சிலிர்த்து போனாள்.. கணவன் தன்னை நினைக்கிறானே என.. ஏதும் மறுத்து பேசாமல் “நாம் இங்கேயே பேசலாம்.. எங்கேயும் போக வேண்டாம்.. நீங்க தூங்கனும்..” என்றாள்.
கணவன் மனையாளின் முகம் பார்த்தான் என்ன உணர்ந்தானோ “சரி, சொல்லு” என்றான் சீட் இறக்கி விட்டு சரி செய்தான்.. கார் ஆன் செய்து ac ஆன் செய்துக் கொண்டே.
இருவருக்கும் தங்களை அறியாமேலே நடந்துக் கொண்டிருக்கும் எதையும் கணிக்காமல் காரில் அமர்ந்தனர். இயல்பான அன்பு.. மெனக்கெடல் இல்லாத உரையாடல்.. மெல்லிய காதலுமாக அந்த நேரம் அவ்வளவு உயிர்ப்பாக இருந்தது.
கணவன் “ம்.. என்ன டென்ஷன்..” என்றான்.
நந்தித்தா “அதொண்ணுமில்ல..” என தொடங்க..
கணவன் ஆவலாக அவளையே பார்த்திருந்தான். அவனின் உள்மனம் எதையோ எதிர்பார்க்கிறது.. மனையாளின் தயக்கமும்.. அவளின் புன்னகை முகமும்.. என்னமோ சொல்லுகிறது அவனிடம். ஆனால், பயமாக இருக்கிறது.. அவளிடம் கேட்க்க. வேலையின் நினைவுகள் எல்லாம் காணாமல் போக.. அவள் சொல்ல போகும் வார்த்தைக்காக காத்திருந்தான்.
மனையாள் “நான் இன்னும் ப்ரீயட்ஸ் ஆகலை.. ஓன் வீக்க்கு மேல ஆகுது..” என சொல்ல சொல்ல.. கணவன் அவளை அணைத்திருந்தான்.
இருவருக்கும் கண்களில் நீர்.. காரணம் சொல்லவும் வேண்டுமோ. நொடிகள் நிமிடங்களாக நீண்டது.
மனையாளை மெதுவாக விட்டு விலகியவன்.. படபடவென “எனக்கு தோணிச்சி.. என்னமோ நீ மெகந்தி வைச்சிட்டு இருந்தப்பவே எனக்கு தோணுச்சி.. பாரேன் உண்மைதானே” என சொல்லி அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான் கணவன்.
விழிகள் ஆனந்தத்திலும்.. அன்பிலும் மினுமினுக்க.. இந்த முத்தம்.. பசுபதியை பொறுத்தவரை.. தங்களுடைய காதல் பரிசாக வாரிசை தாங்கி இருப்பதற்கல்ல.. அந்த காதலை.. தனக்குள் உண்டாக்கியதற்காக, தன்னவளுக்கான முத்தம். அதை அதே காதலோடு வாங்கிக் கொண்டாள் பெண்.
கணவன் “செக் பண்ணியா” என்றான்,
மனையாள் ‘இல்லை’ என தலையசைத்தாள்.
கணவன் “சென்னை போய் பார்த்துக்கலாம் ம்.. நான் இங்க ஓவரா ஏதாவது பண்ணிட போறேன்.. நாளைக்கு சென்னை போய்டலாம்.. ம்..” என்றான் அடுத்தடுத்து திட்டமிட்டு.
மனையாள் “ம் “ என்றாள்.
கணவன் “உன்னால் ட்ரவல் பண்ண முடியுமா.. இல்ல இங்கேயே இருக்கியா” என்றான்.. கடைசி வார்த்தைகளை மெல்லிய குரலில் சொல்லி.
மனையாள் அவனின் டி-ஷிர்ட்டினை இறுக்கி பிடித்தாள்.
கணவன் கர்வமாகவே சிரித்தான்.. அவளின் பார்வையிலும் பிடியிலும்.. “என்னை விட்டு இருக்கமாட்ட தானே” என்றான்.
மனையாள் அவனை விட்டு, சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.
கணவனும் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.. இருவரும் நிமிடங்களை ரசித்தனர்.
பசுபதி பேசிக் கொண்டே “ம்.. கங்கராட்ஸ். அப்புறம் தேங்க்ஸ்.. என்னை புரிஞ்சிகிட்டு.. என்னோட வாழறதுக்கு. இப்பவும் உன்னை கவனிக்காமல் என் பிரச்சனையை சொல்லிட்டிருந்தேன்.. அதெல்லாம் கண்டுக்காமல்.. இப்படி என்னோடவே இரு.. கொஞ்சம் செல்பிஷ் போல நானு, இனி அப்படி இருக்கமாட்டேன்.. ம்..” என அவளை நெஞ்சில் மீண்டும் அணைத்துக் கொண்டான்.
மனையாள் “அய்யோ டிராமா போடறாங்க ப்பா.. ஒரே சினிமா வசனமா கேட்க்குது..” என்றாள் கிண்டலான குரலில்.
பசுபதி அலட்டிக் கொள்ளவே இல்லை “ம்.. இருக்கட்டுமே கொஞ்சம் ட்ரமிட்டிக்கா இருக்கட்டுமே.. என்ன இப்போ.. இதுவும் நல்லா இருக்குதானே” என்றான்.
மனையாள் அமைதியானாள்.
கணவன் “என்ன..” என்றான்.
மனையாள் ஒண்ணுமில்ல என தலையசைக்க.
கணவன் “தூங்கு.. இனி என்னை இப்படி எல்லாம் பார்க்க கூடாது நான் கண்ட்ரோலா இருக்க அல்லோ பண்ணனும். ம்.. வா உள்ள போய் தூங்கலாம்.. இங்க காரில் வேண்டாம்.. வா” என சொல்லி உள்ளே கூட்டி போனான்.
மறுநாள் காலையில் பசுபதி நேரமாக எழுந்துக் கொண்டான். பெண்கள் இப்போதுதான் ஒவ்வொருவராக எழ தொடங்கியிருந்தனர்.
பசுபதி நேராக காரெடுத்துக் கொண்டு தன் மாமனார் வீடு வந்தான். மாமனாரை பார்த்து.. விஷயம் சொன்னான். அவருக்கு ஆனந்தம் தன் மருமகள் வந்த நேரம் புதுவரவு என தன் மனைவியை அழைத்து விவரம் சொன்னார்.
நந்துவின் அன்னைக்கு அத்தனை சந்தோஷம். இங்கே அடுத்தடுத்து ஏற்பாடுகள் எல்லாம் எதோ பொக்கிஷத்தை பாதுகாப்பதற்கு திட்டம் தீட்டுவது போல நடந்தது சம்பந்திக்ளுக்குள்.
இப்போது பொதுவில் ஏதும் சொல்ல வேண்டாம்.. நந்துவும் பசுபதியும் சென்னை கிளம்ப வேண்டும்.. பசுபதியின் வேலையை காரணம் காட்டி.. என எல்லாம் சொல்லினர்.
நந்தித்தா பசுபதிதான், பிரசன்னா தம்பதியோடு மறுவீடு செல்வதாக ஏற்பாடு. இப்போது திட்டங்கள் மாறியது. பிரசன்னாவின் சித்தி சித்தப்பா.. மறுவீடு பிரசன்னா தம்பதியோடு கிளம்ப ஏற்பாடாகியது.
நந்தித்தா சற்று அசந்து உறங்கி எழுவதற்குள் எல்லாம் அவர்களின் திட்டப்படி நடக்க தொடங்கியது. ம்.. குழந்தை.. வாரிசு.. என்பது மற்ற எல்லாவற்றையும்விட மதிப்புமிக்கதுதானே. அதற்கான ஏற்பாடுகள் சரியாக இருக்க வேண்டும்தானே.
கரூரில் திருமணவீடு.. இன்னும் கலகலப்பாக இருந்தது.. நந்தித்தாவின் பெற்றோருக்கு வேறு என்ன வரம் வேண்டும்.. அதனால் களைப்பே இல்லாமல் வேலையை கவனித்தனர். மகனையும் மருமகளையும் மருவீட்டுக்கு முறையாக அனுப்பி வைத்தனர். பிரசன்னா, பசுபதியிடம் லேசாக சண்டைகூட போட்டான் ‘நீங்கதானே வரேன்னு சொன்னீங்க.. என்ன வேலை அதற்குள்’ என.
பசுபதி பெரியவர்களின் வார்த்தையை மீறி பிரசன்னாவிடம் உண்மையை சொல்லினான். அதன்பின் பிரசன்னா, தன் புது மனையாளோடு.. நந்து பசுபதியை பார்த்து வாழ்த்து சொல்லி.. சந்தோஷமாக கிளம்பினர் விருந்துக்கு.
நந்தித்தாவை இத்தனை அமர்க்களத்திலும் எல்லோரும் பொறுமையாக கவனித்துக் கொண்டனர்.
பசுபதி மீட்டிங் என அதை முடித்துதான் வந்தான். மதியம் உண்டுவிட்டு நந்தித்தா பசுபதி இருவரும் சென்னை கிளம்பினர்.
இருவருக்கும் மனம் நிறைந்து இருந்தது. வாழ்க்கை பயணமும் சிறப்பாக அமைய நாமும் வாழ்த்துவோம்!