“இதுதான் நானும் சொன்னேன், ஏன்னா அந்த ஃபேமிலிகுள்ள இப்பவாவது சேர்ந்திட மாட்டோமா அப்படிங்கற ஒரு சின்ன ஆசை இருக்கும்., அது கூட என்னால கெட்டுப் போகக்கூடாது., அதை தான் நானும் சொல்ல வந்தேன்.,
என்ன பொறுத்த வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கற ஒரு மைண்ட் செட் இப்ப வரைக்கும் எனக்கு வரவில்லை ன்னு வையுங்களேன்., எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா எங்க அம்மா பேமிலி என்னை கல்யாணம் பண்ணிக்க போறவங்களை மனசார ஏத்துக்கணும்., எங்க அப்பா பேமிலி அவர மனசார ஏத்துக்கணும்., அது யாரா இருந்தாலும் சரி., இது ரெண்டும் எனக்கு முக்கியம்., அது மட்டும் இல்லாம என்னோட சிட்டுவேஷன் என்னோட அம்மா அப்பா பத்தி என்னோட பேக்ரவுண்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கிறவருடைய ஃபேமிலி முழுசா என்னை ஏத்துக்கணும்., அவங்க வீட்லயும் எல்லாருக்கும் அதுல சம்மதமா இருக்கணும்., அப்படினா மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்., இதெல்லாம் நடக்குமா என்கிறது பெரிய கொஸ்டின் மார்க் தான்.,
சோ இதெல்லாம் நடந்தா நான் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்”, என்று சொன்னாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “இப்ப நீ என்ன எல்லாம் சொன்ன ன்னு நான் திருப்பி சொல்றேன், சரியானு சொல்லு”, என்று சொன்னவன்.,
“ஹலோ, நான் என்ன கல்யாணம் பண்ணிக்க போறவரோட ஃபேமிலியை சொன்னேன்”, என்று சொன்னாள்.
“ஆமா மேடம், நானும் அதைத்தான் சொல்றேன்., நான் மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணுவேன்., வேற யாரும் உன்னை கல்யாணம் பண்ணனும்னு கனவுல கூட நினைக்க கூடாது”, என்று சொன்னான்.
அவனை பார்த்து முறைத்த படி தள்ளி நிற்க, அவனும் அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு, உதட்டை குவித்து தள்ளி நின்று காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டான்,
“நான் மட்டும் தான் உனக்கு , நீ மட்டும் தான் எனக்கு”, என்று சொன்னவன்.,
“வெயிட் அண்ட் சீ மேடம்”, என்று சொல்லிவிட்டு இரவு டின்னருக்காக அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
“அடிக்கடி யோசிக்காத, உனக்கும் சேர்த்து நான் யோசிக்கிறேன், ஓகேவா”, என்று சொல்லி அவள் கையை தன் கையோடு கோர்த்துக் கொண்டவன்.,
“இந்த வருஷம் நியூ இயர் பிறக்கும் போது, இந்த கை என் கைக்குள்ள தான் இருக்கணும்., இதே மாதிரி ஒவ்வொரு நியூ இயர்க்கும் இந்த கை என் கைக்குள்ள தான் இருக்கணும்”, என்று சொன்னவன்.,
“ஒன்னே ஒன்னு சொல்லட்டா கண்மணி” என்றான்.
இவளோ அவனை திரும்பிப் பார்த்து சரி எனும் விதமாக தலையசைக்க., அவனும் நேரத்தை பார்த்து விட்டு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு.,
நியூ இயர் பிறக்கும் போது நான் சொல்றேன்”, என்று சொன்னான்.
“எது சொல்றதா இருந்தாலும், இப்ப சொல்லுங்க, நியூ இயர் பிறக்கும் போது எதையாவது லூசு மாதிரி உளற கூடாது”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் சொல்லுவேன், இன்னைக்கு சொல்ல முடியலன்னா நாளைக்கு சொல்லுவேன், அவ்வளவு தானே”, என்று சொல்லிக் கொண்டான்.
அதன் பின்பு அவர்களுக்கான இரவு உணவு வர சாப்பிட்டு விட்டு., அங்கு உள்ள லான் பகுதியில் நடக்கும் போது,
“கண்மணி நான் உன் வினித் மாமா விட நல்ல தமிழ் பேசுறேனா”, என்று கேட்டான்.
இவளும் “ஆமா நானும் கேட்கணும்னு நினைச்சேன்., மாம்ஸ் இங்கே காலேஜ்ல படிச்சாங்க, ஆனாலும் அவங்கள விட நீங்க நல்லா பேசுறீங்க”, என்று சொல்லும் போதே, அவன் சொன்னான்.,
“உனக்காக தான் தமிழ் கத்துக்கிட்டேன்., அதுவும் கொச்சின்ல பாதி நாள் இருந்தா., சென்னையில பாதி நாள் இருப்பேன்., அதுக்கு முன்னாடி பதினைந்து நாளுக்கு ஒரு முறை கொடைக்கானல் வருவேன்., தூரத்தில் இருந்து உன்னை பார்த்துட்டு போவேன்., உன்னை பார்க்க முடியலைன்னா மதர் கிட்ட எப்படி இருக்க, என்னனு கேட்டுட்டு போவேன், நிச்சயமா உன்ன பத்தி ஒரு தகவல் வாங்காமல் அங்கிருந்து கிளம்ப மாட்டேன்”, என்று சொன்னான்.
அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அப்புறம் அடிக்கடி இங்கு வரும் போது தமிழ் தானே, தன்னால கத்துக்கிட்டேன் ல அப்படித்தான்., நல்ல பேசுறேனா”, என்று கேட்டான்.
இவளோ சிரித்தபடி பார்த்து கொண்டு இருந்தாள், அதே நேரம் சரியாக நியூ இயர் பார்ட்டி தொடங்கும் போது இருவரும் வந்து சேர்ந்தனர்.
அப்போது மியூசிக்கோடு சேர்ந்து பாடலும் வர, நியூ இயரை வரவேற்கும் விதமாக பார்ட்டி தொடங்க, சரியாக அங்குள்ள நேரத்திற்கு இரவு 12 ஆகியது, அனைவரும் ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி புது வருடத்தை மகிழ்வோடு வரவேற்றனர்.
இவளும் சந்தோஷமாகவே அவளோடு கோர்த்திருந்த அவனது கையை பார்த்துக் கொண்டே “ஹாப்பி நியூ இயர்”, என்றாள்.
அவனும் “ஹாப்பி நியூ இயர் கண்மணி”, என்றவன் “மாம்ஸ்னு கூப்பிட மாட்டியா”, என்றான்.
அவளோ இல்லை எனும் விதமாக தலையை அசைத்து விட்டு.,
அவனிடம் “நியூ இயர் பிறக்கும் போது கைக்கோர்த்து தான் இருந்துச்சு., இப்ப குடுங்க”, என்று சொன்னாள்.
அவனும் சிரித்துக்கொண்டே., “ஒரே ஒரு நிமிஷம்”, என்று சொல்லி விட்டு அங்குள்ளவரிடம் அவன் சொன்ன பாடலை போட சொல்லும் படியாக கையை காட்டினான்.
அதேநேரம் அங்குள்ள ஒரு நபர் அவன் கையில் பூங்கொத்தைக் கொண்டு வந்து கொடுக்க.,
பாடல் ஓடவும் அவளிடம் பூங்கொத்தை நீட்டி “ஐ லவ் யூ கண்மணி”, என்றான்.
பாடல் வரியோடு சேர்ந்து அவனும் பாடலை படிக்க.,
“நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில்
வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி ,
என் ஆணி வேரடி
சுமை தாங்கும்
எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான்
உன் அடிமையடி”
இந்த வரிகள் முடியும் முன் அவன் கையில் இருந்து இவள் கைக்கு மாறி இருந்த பூங்கொத்தோடு., அவன் கழுத்தை சேர்த்து கட்டிக் கொண்டாள்.
அவன் உயரத்துக்கு எம்பி இருந்தவளை அப்படியே தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி தூக்கியவன்.
கையை காட்டி பாட்டை நிப்பாட்டும் படி சொன்னவன்.
தன்னோடு சேர்த்துக் கொண்டு அவள் காதுக்குள் மீண்டும் “லவ் யூ கண்மணி., லவ் யூ கண்மணி”, என்று சொன்னவன்., அழுத்தமாக அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
நியூ இயர் செலிப்ரேஷன் முடிந்து அங்கிருந்து கிளம்பும் வரை, அவன் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தபடியே இருந்தான்.
பின்பு காரில் ஏறி அவர்கள் தங்கி இருந்த இடம் வரும் வரை அவள் எதுவுமே சொல்லாமல் இறங்கும் போது., அவள் மடியில் இருந்த பூங்கொத்தை கையில் எடுத்துக் கொண்டு இறங்கி சென்றாள்.
இருவரும் உள்ளே வந்தவுடன் கதவை சாத்திவிட்டு, அவள் அருகே வந்தவன் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு.,
“நான் அப்ப ஒன்னு சொன்னேன்ல., உன்கிட்ட அப்புறமா சொல்லுவேன், இல்ல நாளைக்கு சொல்லுவேன்னு சொன்னேன் இல்ல கண்மணி., நீ என் கூட இருக்கணும்., நான் உன் கூட இருக்கணும்., அவ்வளவு தான்.
உனக்கு கல்யாணம் புடிச்சிருந்தா, ஓகே கல்யாணம் பண்ணிப்போம்., கல்யாணம் பண்ண மாட்டேன், இப்படியே தான் நான் ஒரு ப்ரண்ட் மாதிரி தான் பக்கத்துல இருப்பேன்., மற்றபடி எனக்கு வொய்ஃபா மாற மாட்டேன் என்றாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., நீ என் பக்கத்தில் இருந்தால் போதும்., என் கைக்குள்ள இப்படி இருந்தா போதும்.,
நான் எதையும் உன்கிட்ட எதிர்பார்க்கல., பட் எல்லாருக்கும் உள்ள சாதாரண ஆசைகள் எல்லாமே உண்டு., வீட்ல நீ சொன்ன அத்தனை பேர்ட்டையும் பெர்மிஷன் வாங்க வேண்டியது என் பொறுப்பு சரியா., அதை நான் பார்த்துக்கிறேன்.,
எல்லாரும் சம்மதித்தால் உனக்கு கல்யாணத்துக்கு ஓகே தானே”, என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்து தலையை அசைக்க., மீண்டும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்., “நான் இருக்கிற வரைக்கும் நீ இருப்ப., நீ இருக்கிற வரைக்கும் தான் நானும் இருப்பேன்., அதை மட்டும் என்னைக்கும் மறந்துடாத”, என்று சொல்லி மீண்டும் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க.,
முதல் முதலாக அவன் முதுகோடு கைகோர்த்து அவனை இறுக்கிக் கொண்டாள்.
நீங்கள் ஒரு மனிதனின் மனதை அறிய விரும்பினால், அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். –ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே