கண்ணிமைக்காமல் அவன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்.,
சிரித்தபடி “அந்த அபிஷேக் இருக்கான் இல்ல, உன்னோட பைனல் இயர்ல, அதாவது உன்னோட 5த் செமஸ்டர் வரைக்கும் நார்மலா தான் உன்கிட்ட பேசிகிட்டு இருந்தான்., அதுக்கப்புறம் அவன் உன்ன பத்தி நியூஸ் கேதர் பண்ண ஆரம்பிச்சான்.,
அப்படியும் உன் மாமன்ங்க இருக்காங்களே அவங்களுக்கு பயந்துட்டு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணல.,
பட் இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தா ப்ரொபோஸ் பண்ணி இருப்பான்”, என்று சொன்னான்.
அவனையே விழி விரித்து பார்க்க.,
“அப்புறம் ஏன் ப்ரொபோஸ் பண்ணல ன்னு யோசிக்கிறியா., நான் தான்”, என்று சொன்னான்.
“ஆமா இங்க தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல., வெயிட் பண்ணவங்க வொய்ஃபை இன்னைக்கு வந்தவன் கூட்டிட்டு போய்ட்டாங்கற மாதிரி., அந்த மாதிரி ஆயிட்டா, உனக்காக ஒருத்தன் நான் காத்துகிட்டு இருப்பேனாம், அவன் வந்து ஈஸியா ப்ரொபோஸ் பண்ணுவானாமா”,என்றான்.
“என்ன பண்ணுனீங்க”, என்றாள்.
“ஒன்னும் பண்ணல, பயப்படுற மாதிரி எல்லாம் இல்ல, கூட்டிட்டு போய் சொன்னேன்”, என்றான்.
“யாரு நீங்க கூட்டிட்டு போய்”, என்றாள்.
சத்தமாக சிரித்தவன், “என் ஆட்கள் கூட்டிட்டு, ம்ஹூம் தூக்கிட்டு வந்தாங்க., வந்த உடனே சொன்னேன்., இங்க பாருப்பா இப்படி இப்படி விஷயம்., சோ உனக்கு நல்ல ஜாப் வாங்கி கொடுக்கிறேன், வேலைய பாத்துட்டு போ, இல்ல ஹையர் ஸ்டடிஸ் போகனும் னா உனக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கிறேன்., ஆனா பீஸ் எல்லாம் நீ தான் கட்டனும், நான் கட்டுவேன்னு எதிர்பார்க்காத, போ படி உன் லைஃப்ல செட்டில் ஆகுற வேலையை பாரு., தர்ஷனா பக்கம் உன் பார்வை கூட திரும்ப கூடாது., ஏன்னா அவ என் கண்மணி அப்படின்னு சொன்னேன்., அதுக்கப்புறம் பிரெண்ட் ஷிப் டக்குனு கட் பண்ணா., சந்தேகம் வருமோன்னு சொல்லி நான் தான் அவன் கிட்ட சொன்னேன் நார்மலா எப்பவும் பிரண்டா பழகுவியோ அந்த மாதிரி பேசணும்., உன் கண்ணுலையோ உன் பேச்சிலேயோ, சின்ன வித்தியாசம் தெரிஞ்சாலும் உன்னோட ஆப்பர்சூனிட்டிஸ் பறிக்கப்படும்., அப்படின்னு சொன்னேன்”, என்று சொன்னான்.
அவனை முறைத்து பார்த்தவள், “ஏன் இதெல்லாம்” என்றாள்.
“எனக்கு மட்டுமே சொந்தமானவ நீ, உன்னை வேற யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது., ஏன் உங்க மாம்ஸ் ரெண்டு பேருமே உனக்கு வெளிய வச்சு ஊட்டி விடும் அந்த போட்டோஸ்லாம் கைக்கு வரும் போதெல்லாம்., எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா”, என்றான்.
“ஆமா போட்டோஸ் சொல்றீங்க, மதரும் சொன்னாங்க போட்டோஸ் காட்டுங்க”, என்று கேட்டாள்.
“எல்லாம் லேப்டாப்ல இருக்கு, வீட்டுக்கு போயிட்டு காட்றேன் என்ன”, என்று சொன்னான்.
அப்புறம் என்று சொல்லி அவன் செய்த சில விஷயங்களை சொல்லும்போது, அவனை முறைத்து பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்,
“ம்ஹூம் சரியில்லை, நீங்க போட்டோஸ் எல்லாம் காட்டுங்க”, என்றாள்.
“நிஜமா லேப்டாப்ல இருக்கு, நம்ம ரூம்க்கு போனதுக்கப்புறம் காட்டுறேன்”, என்று சொன்னான்.
“இங்கேயா”, என்று கேட்டாள்.
“இங்க தான் நம்ம லேப்டாப் எடுத்துட்டு வரலையே, அங்க போய் என்று சொல்லிவிட்டு உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லு, கஷ்டம் உன்னோட வலி எல்லாத்தையும் சொன்ன, ஆசை”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை”, என்று சொன்னாள்.
“ஃபுட்”, என்று கேட்டான்.
“அதான், நான் சொல்லிட்டேனே எதையும் வீணாக்க பிடிக்காது, அதனால எது கிடைக்கிறதோ, சாப்பிட்டு பழகிட்டேன்”, என்று சொன்னாள்.
“புடிச்ச டேஸ்ட், அதாவது புளிப்பு இனிப்பு அந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா., எப்பவாவது இது ரொம்ப நல்லா இருக்கு அப்படின்னு ஏதாவது ஃபீல் பண்ணி இருக்கியா”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் பர்டிக்குலரா இல்லை, எல்லாமே ஓகே அப்படிங்கற மாதிரி தோணும்., எதையும் வெறுக்க மாட்டேன் அவ்வளவுதான்”., என்றாள்.
“அப்புறம் வேற ஏதாவது டூர்”, என்று கேட்டான்.
“டூர் அப்படின்னு பார்த்தா, ஸ்கூல் லைஃப் முடியற வரைக்கும் கொடைக்கானல்ல விட்டு நான் எங்கேயும் போனது கிடையாது., காலேஜ் வந்ததுக்கு அப்புறம் டூர் போக பயமா இருந்துச்சு., ஃபர்ஸ்ட் இயர் மாம்ஸ் ரெண்டு பேருமே பயந்தாங்க.,
அனுப்பறதுக்கு தயங்குனாங்க., செகண்ட் இயர்ல கொஞ்சம் பிரெண்ட்ஸ் சர்க்கிள் கிடைத்தவுடன்., பிரெண்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சு பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரணும் அப்படின்னு சொல்லி தான் அனுப்பி வெச்சாங்க., சோ அதுக்கு அடுத்து வந்த மூன்று வருஷமும் டூர் போயிருக்கேன்., அவளோதான், அதுக்கப்புறம் நான் எங்கேயும் போனது கிடையாது., இப்போ ரீசண்டா அப்படின்னு சொன்னா வேலையில ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் ஜெர்மன் ஒரு தடவை போயாச்சு., இப்ப யுஎஸ் வந்தாச்சு.,
அப்புறம் நீங்க ஒரு தடவை கட்டாயப்படுத்தி கொச்சின் கூட்டிட்டு போனீங்க., அப்புறம் மாம்ஸ் வீட்டுக்காக ஒரு முறை கொச்சின் போய்ட்டு வந்தேன்., அப்புறம் ஒரு தடவை மாம்ஸ் காக பெங்களூர் போயிருந்தேன்.,
அப்புறம் ரெண்டு பேருடைய கல்யாணத்துக்காகவும். ஒரு தடவ கொச்சின், ஒரு தடவ பெங்களூரும் போயிட்டு வந்தேன்.,அவ்வளவு தான் என்னோட ட்ரிப்”, என்று சொன்னாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., “வேற ஏதாவது”, என்று கேட்டான்.
“பெருசா எதுவும் இல்ல” என்று சொன்னாள்.
“ஏதாவது உனக்கு தோணுமில்ல”, என்று கேட்கும் போது.,
“தோனி இருக்கு., ஆனா” என்று யோசனையோடு சொன்னவள்.,
“எனக்கு கடல் பாக்க ரொம்ப பிடிக்கும்., ஆக்சுவலா நான் சென்னை வந்ததுக்கு அப்புறம் மாம்ஸ் ரெண்டு பேர்ட்டயும் கேட்டது கடல் பார்க்க போகனும் அப்படின்னு சொல்லி தான்., கூட்டிட்டு போவாங்க.,
ஆனா நைட் நேரத்துல மாம்ஸ் ரெண்டு பேரும் கண்டிப்பா இந்த மாதிரி லோன்லியான பிளேஸ்க்கு கூட்டிட்டு போக மாட்டாங்க., ஏன்னா அவங்க சொல்லுவாங்க, உன்னை எங்களை நம்பி விட்டிருக்காங்க., சோ உன்னோட பாதுகாப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம்., அப்படின்னு சொல்லிட்டு அந்த மாதிரி கூட்டிட்டு போக மாட்டாங்க.,
எனக்கு அந்த அலை அடிக்கிற சத்தம்., அப்புறம் நிலா வெளிச்சம்., நிலா வெளிச்சத்துல கடலை பாக்கணும்., அப்புறம் அந்த அலையோட சத்தத்தை தவிர., அந்த இடத்தில் எந்த சத்தமும் இருக்கக்கூடாது.,
அப்புறம் அந்த அலை சத்தத்தோடு போட்டி போடுற காத்தோட சத்தம்., இந்த மாதிரியெல்லாம் ரொம்ப பிடிக்கும்.,
அதெல்லாம் நான் யோசிச்சு பார்த்து இருக்கேன் எப்படி இருக்கும் அப்படின்னு., என்ன பகல்ல நம்ம போகும் போது அந்த அலை சத்தத்தோட மக்களோட பேச்சு சத்தம் தான் அதிகமா இருக்குமா., சோ எப்பவாவது, ரேரா சைடு பீச் அந்த மாதிரி மாம்ஸ் கூட்டிட்டு போவாங்க., அப்போ அந்த அலையோட சத்தம் இருந்தாலும் வெளிச்சமா இருக்குமா., அது மட்டும் கொஞ்சம் நம்ம நினைச்ச மாதிரி இல்ல ன்னு தோணும்.,
எனக்கு பௌர்ணமி நேரத்துல மாம்ஸ் கூட , அந்த அப்பார்ட்மெண்ட்ஸ்ல இருக்கும் போது நைட் மொட்ட மாடிக்கு போகணும்னு சொல்லுவேன்., அப்ப மாம்ஸ் ரெண்டு பேரும் கூட்டிட்டு போவாங்க., என்னை மட்டும் தனியா விட பயந்து போய் அவங்க ரெண்டும் ஒரு ஓரமா உக்காந்திருப்பாங்க,
உனக்கு இந்த இருட்டுல என்ன தெரியுது., நிலால என்ன ஆராய்ச்சி பண்றே ன்னு கேட்பாங்க., ஆனா ஏனோ புடிக்கும்” என்று சொன்னாள்.
அவளேயே பார்த்துக் கொண்டிருந்தவன், “ஓகே” என்று சொல்லி கண்ணடித்தான்.
“என்ன ஓகே” என்றாள்.
“ஒன்னும் இல்ல சும்மா”, என்று சொன்னவன்.,
“சரி வேற”, என்று கேட்டான் ,
“வேற என்ன, வேற ஒன்னும் இல்ல”, என்று சொன்னவள், “நான் பேசிட்டேன் இல்ல., இப்ப நம்ம பிளேஸ்க்கு நம்ம போயிடலாமா”, என்று கேட்டாள்.
“அது எப்படி, இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க நியூ இயர் வந்துரும்”, என்றான்.
“ஹலோ நம்ம மத்தியானமே போன் பண்ணி நான் இந்தியால இருக்குற மாம்ஸ், அப்பறம் என் பிரெண்ட்ஸ்க்கு, மதர்க்கு பேசினேன், அப்புறம் நீங்க உங்க வீட்டுக்கு எல்லாம் விஷ் பண்ணீங்க., இந்த மாதிரி எல்லாம் விஷ் பண்ணி முடிச்சாச்சு, கிளம்பலாம்”, என்று சொன்னாள்.
“கண்டிப்பா நாளைக்கு மத்தியானம் கிளம்பி நாளைக்கு நைட்டுக்குள் நம்ம இடத்துக்கு நாம போயிரலாம், ஓகே வா இப்ப என்ன பண்றோம்., ரூம் போயிட்டு ஒரு சாயா கொஞ்சம், ஸ்னாக்ஸ் ஏதாவது முடிச்சுட்டு அதுக்கு அப்புறமா கிளம்புறோம்., வெளியே ஒரு இடத்துக்கு போறோம்.,
நைட் டின்னர் முடிச்சிட்டு, நியூ இயர் செலிப்ரேஷன் முடிச்சிட்,டு அதுக்கப்புறம் தான் ரூமுக்கு சரியா”, என்றான்.
இவளோ “இல்ல இந்த மாதிரி பழக்கம் எல்லாம் இல்லை”, என்று சொன்னாள்.