அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை,
மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஹாசி. தன் பத்து வருட காதல் கதையையும், அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் மறைக்காமல் அவள் பகிரும் ஒரே நபர் அந்த நிலவு தோழிதான்.
இன்றும் மித்துவுடன் சிறிது நேரம் பேசியவள், நிலவு தோழியிடம் தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியை தெரிவிக்க மாடிக்கு வந்துவிட்டாள்.
மனம் முழுதும் மகிழ்வு, தன்னவன் காதலை சொன்ன நிகழ்வை நினைத்தவளுக்கு சிரிப்புதான் வந்தது. காதலை சொல்றதுக்கு முன்னாடி புருஷன் ஆக போறியா சரியான ஆளு சிக்கி நீ.
ஆனாலும் நீ உன் வாயால லவ்வ சொல்லியிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்றவள் நினைக்க,
அதே நேரம் “ஐ லவ் யூ டா” என்ற ஆணவன் குரலை கேட்டு விக்கித்து போனாள்.‘அட கடவுளே இதைதான் டெலிபதினு சொல்லுவாங்களோ, நான் நினைச்ச உடனே வந்து நிக்கறான்’ என்று நினைத்தவள் திரும்ப போக,
அதே சமயம் ஹர்ஷாவும் மாடியில் யாரோ நிற்பதை கவனித்து “ஓகே பாய் இங்க யாரோ இருக்காங்க. நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம்” என்று கிசு கிசுப்பாக கூறி போனை பாக்கெட்டில் போட்டுவிட்டான்.
அவன் மெதுவாக பேசவும் அந்த குரல் ஹாசி காதில் விழவில்லை. இருட்டும் ஆணவனின் குரலும் செய்த மாயத்தில் பெண்ணவள் தடுமாறி போனாள்.
போனை கட் செய்தவன் யார் என்று பார்க்க அருகில் போக, அது ஹாசி என்று தெரிந்து நிம்மதி மூச்சுவிட்டவன். மாலை கோவிலில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று அவள் அருகில் போய் நின்றான்.
தன்னுள் எழுந்த பட படப்பை பெரிய பெரிய மூச்சிகளைவிட்டு சரி செய்தவள் திரும்ப, ஹர்ஷாவோ அவளுக்கு வெகு அருகில் நின்றிருந்தான்.
அவ்வளவு நெருக்கத்தில் ஆணவனை எதிர்பார்க்காதவள் தடுமாறி கீழே விழ போக,
ஹையோ விழ போகிறோம் என்று தோன்றிய உடன் ஹர்ஷா கையை பிடிக்க, சாதாரணமாக நின்றிருந்தவன் அவள் இழுத்த இழுப்பில் சமாளிக்க முடியாமல் அவளுடன் சேர்ந்து கீழே விழுந்தான்.
பெண்ணவளின் மேலேயே விழுந்த வேகத்தில் இருவர் இதழும் இணைந்து பிரிந்தது. ஹர்ஷாவின் மொத்த எடையும் பெண்ணவளின் மென் உடலோடு அழுந்த, பதறி போன இருவரும் வேகமாக எழுந்தனர்.
ஹர்ஷா, “சாரி…. சாரி….. ஹாசி நான் உன்கிட்ட பேசலாம்னு….. சாரி” என்க,
பெண்ணவளுக்கோ வெட்கம் பிடிங்கி தின்றது. முகம் சிவந்து போனவள் அவனிடம் பேச முயன்றாலும் குரல் வெளி வராமல் போக, அந்த இடத்தைவிட்டு செல்ல தூண்டிய மனதின் பேச்சை கேட்டு வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ஹாசி ஓடுவதை பார்த்த ஹர்ஷா தலையில் அடித்து கொண்டான். ’கடவுளே….. என்னடா பண்ணி வச்சிருக்க. கோவில்ல நடந்த சம்பவத்துக்கே இன்னும் மன்னிப்பு கேட்கல, அதுக்குள்ள அடுத்த சம்பவமா. ஹையோ வேகமா வேற போறா, கோவமா இருப்பாளோ… பின்ன கோவமா இல்லாம எப்படி இருப்பா. நீ பண்ணுன வேலைக்கு’ என்று அவன் மனசாட்சி வந்து முறைக்க,
திரு திருவென விழித்தவன் ‘சரி சரி கோவப்படாத மனசாட்சி. நான் என்ன பண்ணட்டும் மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன். இப்படி ஆகி போச்சு’ என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல,
அவனை ஏற இறங்க பார்த்த அவன் மனசாட்சி ‘அடே அப்பா…. ரொம்ப நடிக்காதடா. மன்னிப்பு கேட்க வந்தவன் வந்தப்பவே சவுண்டு குடுத்துட்டு வர வேண்டியதுதானே.
அந்த புள்ளைய பயப்படுத்துற மாதிரி அவ்வளவு பக்கத்துல எதுக்கு போன? உனக்குதான் ஆல்ரெடி ஆள் இருக்குல்ல அப்புறம் எதுக்குடா போன?
‘அடேய் மானங்கெட்ட மனசாட்சி….”
“எதே….. நான் மானங்கெட்டவன். நீ நல்லவன் அப்படிதானே”.
“ஆமா பின்ன. நீ தப்பு தப்பா பேசுவ நான் கேட்டுட்டு இருக்கணுமா. அவ என்னோட சைல்ட் ஹூட் பிரண்ட், பிரண்ட் மட்டும்தான். என் மனசுல அர்ச்சனா தவிர வேற யாருக்கும் இடம் இல்ல.
சரி கோவில்ல நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்கலாம்னு போனேன். அங்க நடந்தத சத்தமாவ சொல்ல முடியும். யாரவது கேட்டா என் சோலி முடிஞ்சு. அதான் பக்கத்துல போய் பேசலாம்னு நினைச்சேன் அது இப்படி ஆகி போச்சு” என்று சொல்ல,
மனசாட்சியோ கொஞ்ச நேரம் யோசித்து “ஏன்டா ஹர்ஷா ஒரு வேலை இந்த யூனிவர்ஸ் உன்னையும் ஹாசியையும் சேர்த்து வைக்க நினைக்குதோ அதான் இப்படி எல்லாம் நடக்குதோ” என்க,
ஹர்ஷா கீழே எதையோ தேடினான். “ என்னடா என்னத்த தொலச்ச? என்ன தேடுற?”
“ம்ம்ம்….. உன்னை அடிக்க கல்லை தேடுறேன்”
“எத….. என்னை அடிக்க கல்லா…..”
“ஆமா. லூசு மாதிரி உளராம முதல்ல நீ உள்ள போ. ஹாசி எனக்கு பிரண்டு மட்டும்தான்” என்று சொல்ல,
அவன் மனசாட்சியோ எனக்கும் ஒரு காலம் வரும்டி அப்போ பேசிக்கறேன்” என்றுவிட்டு மறைந்தது.
ஹர்ஷாவோ “ச்ச……என்னைக்கும் இல்லாம இன்னைக்குதான் அப்பா ஆபிஸ் விஷயமா வெளிய போய்ட்டாருனு அச்சு போன் பண்ணுனா. ஆசையா நிலாவ பார்த்துட்டே பேசலாம்னு வந்தேன் எல்லாம் போச்சு” என்று பெரு மூச்சுவிட்டவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
அங்கு தன் அறைக்கு வந்த ஹாசிக்கோ தலை கால் புரியவில்லை காதலையும் சொல்லிவிட்டான். முதல் இதழ் அணைப்பும் நடந்துவிட்டது.
கண்ணாடி முன் போய் நின்றவளுக்கு தன் முகத்தை பார்க்கவே வெட்கமாக இருந்தது ‘ஆனாலும் சிக்கி உன்கிட்ட இவ்ளோ வேகத்தை நான் எதிர் பார்க்கல’ என்று சொல்லி கொண்டிருந்த சமயம் வந்து குதித்தது அவளது ஒரு மனசாட்சி.
“வேகம் அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு. எல்லாமே வித்தியாசமா இருக்கு. பிரண்ட் பிரண்ட்னு சொல்றான். உன் கண்ண பார்த்து மட்டும்தான் பேசறான். ஒரு காதலியை பார்க்கற பார்வை உன்னை பார்க்கல. அப்புறம் எப்படி?” என்ற அதன் கேள்விக்கு,
மற்றொரு காதல் மனம் பதில் சொன்னது. என்ன சீக்கிரம் நடக்குது. பத்து வருஷத்துக்கு மேல இவங்க காதல் போயிட்டு இருக்கு”.
“இவங்க காதல் இல்ல. இவ காதல்”
“சூ…. ஏதோ ஒன்னு. அப்புறம் கோவில்ல நடந்தது. இப்போ மாடில நடந்தது எல்லாம் காதல்னால இல்லாம வேற என்ன”
“அட பைத்தியமே மாடில நடந்த நிகழ்வு எதிர்பாராம நடந்தது”
“அப்போ பொட்டு வச்சது, லவ்வ சொன்னது அது எல்லாம் கூட எதேச்சையா நடந்ததா. நீ அவ சொல்றது எல்லாம் கேட்காத ஹாசி. உன் காதல் கனவை ஆரமி. அவ கிடக்கறா.
“ஹேய் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்னும்போதே கடுப்பான ஹாசி “நீ முதல்ல கிளம்பு தேவையில்லாம பேசி என்னை கன்பியூஸ் பண்ற” என்க,
அவளை பாவமாக பார்த்த “ஹாசி உன் நல்லதுக்குதான் சொல்றேன். நீ ஏன் ஹர்ஷாகிட்ட நேரா பேசக்கூடாது. எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம். அவன்கிட்ட பேசிட்டேன்னா நல்லது” என்றவுடன் ஹாசி முகம் யோசனைக்கு தாவ,
அதை கவனித்த அவள் காதல் மனம் “லூசு என்ன பேசுற. இப்படி விளையாடறதும் நல்லா த்ரில்லிங்காதானே இருக்கு. அவன் உனக்காக இனி பண்ற ஒவ்வொன்னையும் கவனி அது ஒரு ஜாலியா ஹேப்பியா இருக்கும்.
இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு நாளைக்கு உன் முகத்தையே பார்த்துட்டு இருப்பான் பாரு. நீ கோபப்படுறியா இல்லையானு. அதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும். இவ சொல்றான்னு நீ போய் நேர்ல பேசுனேன்னு வை.
அவ்வளவுதான் சோலி முடிஞ்சுடும். நீயும் போய் லவ் பண்றேன்னு சொல்லுவ. அவனும் ஆமான்னு சொல்லுவான். அவ்ளோதான் சப்புன்னு முடிஞ்சுடும்.
இந்த பசங்களுக்கு ஒரு விஷயம் கிடைக்கற வரைதான் அதைபத்தியே யோசிப்பாங்க. கிடைச்சுடுச்சு, அதான் கெடச்சுருச்சுல்ல எங்க போக போகுது. நம்மகிட்டதானே இருக்குன்னு அசால்ட் வந்துரும்.
சோ……அவன் விளையாட்டு, அவன் காதலை சொல்ல முடியாம தவிக்கும் தவிப்பு, உனக்கான அவன் ஏக்கம் எல்லாத்தையும் இப்போவே நீ ரசிச்சுக்கிட்டாதான் உண்டு. அப்புறம் உன் விருப்பம்” என்று சொல்லி செல்ல,
ஹாசி மனதில் காதல் மனம் சொல்வதுதான் சரி என்ற எண்ணம் தோன்ற, சரி சிக்கி எவ்வளவு தூரம் போறான்னு பார்ப்போம் என்று முடிவெடுத்து கொண்டாள்.
காதல் மனம் சொன்னது போல் பெட்டில் படுத்தவள் முதல் இதழ் அணைப்பையும், ஆணவனின் வாசத்தை அறிந்து கொண்டதையும் நினைத்து நாண சிரிப்பு எழ, அதையே எண்ணி கனவு காண துவங்கிவிட்டாள்.
காலை முதல் ஆளாக எழுந்த ஹர்ஷா முதல்ல ஹாசிகிட்ட மன்னிப்பு கேட்கணும் என்ற முடிவோடு எழுந்து கீழே வர அங்கு அமர்ந்திருந்தவர்களை கண்டு அதிர்ந்து போனான்.
‘அட கடவுளே இவங்கல்லாம் என்ன இப்போ வந்திருக்காங்க. ஒருவேலை ஹாசி நேத்து நடந்த விஷயம் எல்லாத்தையும் அவங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லியிருப்பாளோ. அதை பத்தி இவங்க கேட்டா என்ன சொல்லி சமாளிக்கறது’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தவன் அப்படியே நின்றிருந்தான். அப்போதுதான் அவனை கவனித்த ராஜ் அவனிடம் பேச துவங்கினார்.
“வாப்பா ஹர்ஷா என்ன ஜாக்கிங்கா. இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட”.
பத்மா, “அட என்னண்ணா நீங்க ஜாக்கிங்கா. அப்படினா என்னன்னே இவனுக்கு தெரியாது. காலைல வேலைக்கு போகணும்னுதான் எந்திரிக்கறான். இல்லைனா நைட்டுதான் எழுந்திரிப்பான். ஞாயாயித்து கிழமை இவன் பண்ற அக்கபோரை பார்க்கணுமே சாப்பிட வாடான்னு நாமதன் போய் அவனை தொங்கிட்டு இருக்கணும்” என்று சொல்ல,
ரஞ்சன் “ஹா…. ஹா…ஹா…. அப்படியா ஆண்டி இன்னும் ஹர்ஷா மாறவே இல்ல” என்று சிரிக்க, அவரோ “மாறிட்டலும்…. வானம் நிலத்துக்கு குதிச்சு வந்துடும்”என்று நொடித்து கொள்ள,
ஹர்ஷா ரஞ்சனை முறைத்து வைத்தான்.
இருவருக்கும் சிறு வயதில் இருந்தே ஆகாது.ஒருவனை மற்றொருவன் எப்படி எப்போது போட்டு கொடுக்கலாம் என்று ஆர்வத்துடன் காத்திருப்பர்.
அப்படி வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாக பயன்படுத்தி கொள்வர்.
ரஞ்சனை எண்ணி பல்லை கடித்தவன் அவன் பெற்றோர் முன்பு எதையும் காட்டி கொள்ளாமல் இருக்க சிரமபட்டு சிரித்து வைத்தான்.
ரேவதி, “ஹர்ஷா வளர்ந்துட்டப்பா. நல்லா இருக்கியா?
ஹர்ஷா, “ஹான் நல்லா இருக்கேன் ஆண்டி. நீங்க எப்படி இருக்கீங்க?”
பத்மா, “ஆமா ரேவா எனக்கென்னன்னு மானாவாரியா வளர்ந்து நிக்கறான். சரி என்ன சாப்பிடுறீங்க காபி, டீ….”
ரேவதி, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பத்மா. பொண்ணா தனியா அனுப்பி வச்சுட்டோம்னு இவருக்கு அங்க இருக்க முடியல. நாமளும் போயே ஆகணும்னு ஒரே பிடிவாதம்.
அதான் ரஞ்சனையும் ஒர்க் பிரம் ஹோம் வாங்கு. நாம சென்னைக்கு போகலாம். ஹாசிக்கு வேலை முடியற வரை நாம அங்கதான் இருக்க போறோம்னு சின்ன பிள்ளை மாதிரி அடம்.
அவன் அங்க இருந்து முடிக்கற வேலைய முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு அதான் வரல, வேலை முடிஞ்ச உடனே கிளம்பு கிளம்புன்னு எங்களை இழுத்துட்டு வந்துட்டாரு. அதுவும் அவகிட்ட சொல்லாமலே சர்ப்ரைஸ் குடுக்க போறாராம்.
அவ வந்தா நீங்க சொல்லாதீங்க நாங்க போய் ரெப்ரஷ் ஆகிட்டு வரோம்.
“அப்புறம் பத்மா….. தப்பா எடுத்துக்காத நாங்க வேற வீடு பாத்துட்டோம். அங்க ஹாசிய கூட்டிட்டு போறோம். இங்கதானே இருக்கோம் அடிக்கடி வீட்டுக்கு வரோம். கோவிச்சுக்காத”.
பாட்டி, “என்ன ரேவதி இது இத்தனை வருஷம் ஒன்னும் மண்ணா பழகிட்டு. இங்க இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டுதான் வந்தீங்களா. அப்போ எங்க மேல இருக்க பாசம் அவ்வளவுதான் இல்ல.
எங்க புள்ளைய உங்களை நம்பி நாங்க அவ்ளோ தூரம் அனுப்பி வச்சோம். அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்ல அப்படிதானே”.
ராஜ், “ஹையோ அம்மா அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நான் அப்படி நினைக்கல”.
“வேற எப்படி நினைச்ச”.
கிருஷ்ணா, “அம்மா…. கொஞ்சம் சும்மா இருங்க. அவன் பயப்படுறான். என்ன ராஜ் அம்மாபத்தி தெரியாதா. பட படன்னு பேசுவாங்க மனசுல எதுவும் வச்சுக்க மாட்டாங்க”.
ராஜ், “ம்மா….. உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல. என் பொண்ண கல்யாணம் முடியற வரை என் பக்கத்துலயே வச்சுக்கணும்னுதான்……” என்றவர் இழுக்க,
பத்மா கணவனை பார்த்து பேசவா என்பது போல் கண் காட்டி கொண்டு இருக்க, அவரோ இப்போதான் வந்தாங்க அதுக்குள்ள இதைப்பத்தி பேச வேண்டாம் என்பது போல் கண்களால் பதில் சொல்ல, அவரும் சம்மதமாக தலையசைத்தார்.
ஆனால் பாட்டிக்கு ஏது இது போன்ற நாசுக்கு எல்லாம் “நல்லா பார்த்துக்கோ. கல்யாணத்துக்கு அப்புறம் என் பேத்தி இங்கதான் இருக்க போறா, நீதான் மக வேணும்னா இங்க வந்து பார்த்துட்டு போகணும்” என்று சொல்ல, மொத்த குடும்பமும் அவரை வாயை பிளந்து பார்த்தது.
ஆனால் கவனிக்க வேண்டியவனோ ‘ஹாசி இப்போ வந்து இவங்ககிட்ட நேத்து நடந்தது எல்லாம் சொன்னா…. என் நிலைமை என்ன ஆகும்’ என்ற யோசனையில் மூழ்கி போய் இருந்தான்.
அனைவரும் தன்னையே பார்ப்பதை கவனித்த பாட்டி “என்ன எல்லாரும் இப்படி முழிக்கறீங்க. ஏற்கனவே பேசி வச்சதுதானே அப்புறம் என்ன? அதுல எதுவும் மாற்றம் பண்ணனும்னு நினைக்கறீங்களா நீங்க” என்று மகன், மருமகளை அவர் பார்க்க அவர்களோ இல்லை என்பது போல் வேகமாக தலையாட்டினர்.
அடுத்ததாக அவர் பார்வை ராஜ், ரேவதி மேல் பதிய அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு “அவ உங்க வீட்டு பொண்ணுதான் எங்களுக்கு அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை” என்றனர்.
அவர்கள் சொல்வதை கேட்ட பின் பெரியவர் மூவர் முகத்திலும் நிம்மதி சாயல் படர்ந்தது.
ரேவதி அப்படி சொன்ன பின் ரஞ்சன் ஹர்ஷா முகத்தை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருக்க, அவனோ தனக்குள் யோசனையில் மூழ்கி இருந்தான்.
ரஞ்சன்,‘ எவ்ளோ முக்கியமான விஷயம் பேசறோம். இவன் எதைப்பத்தி யோசிச்சுட்டு இருக்கான்’ என்று எண்ணியவன் மன ஓட்டத்தை தடுக்கும் பொருட்டு தாய், தந்தை இருவரும் அவர்களுக்கு என்று ஒதுக்கிய அறைக்கு போக,
ஹர்ஷாவை பார்த்த பத்மா “டேய் மகனே என்னடா பகல் கனவு கண்டுட்டு இருக்க. என்ன ஆச்சு உனக்கு?” என்க,
அவனோ அப்போதுதான் யோசனையில் இருந்து மீண்டவன் “ஹான்…. என்னம்மா?”
“சரியா போச்சு போ என்ன யோசிச்சுட்டு இருப்ப. போ ரஞ்சனுக்கு மாடில இருக்க ஒரு ரூம காட்டு ப்ரஸ் ஆகிட்டு வரட்டும்”
“ம்ம்…. சரிம்மா” என்று முன்னால் செல்ல,
ரஞ்சன் வேண்டுமென்றே கை வலி இருப்பது போல் சிரமமாக அவன் பெட்டியை தூக்க அதை கவனித்த கிருஷ்ணன் “ஹர்ஷா அந்த பெட்டியை தூக்கிட்டு போ பாவம் ரஞ்சன் சிரமப்படறான் பாரு” என்க,
ஹர்ஷா அவனை திரும்பி பார்க்க ரஞ்சனோ அவனை நக்கல் பார்வை பார்த்து கொண்டு நின்றிருந்தான். அதை கண்டு பல்லை கடித்தவன் பெட்டியை தூக்கி கொண்டு மாடியை நோக்கி நடக்க துவங்கினான்.
ஹர்ஷா, ஹாசி இருவர் திருமணம் பற்றி பேசும்போது கவனிக்காமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் இந்த விஷயம் தெரிந்தால் ஹார்ஷா என்ன செய்ய போகிறான்.
ஆணவனை சுத்தலில்விட்டு ரசித்து பின் தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஹாசிக்கு அர்ச்சனாவைபற்றி தெரிய வரும்போது என்ன செய்வாள்.
தங்கையின் காதல் கை கூடிவிட்டது. இனி தன் காதலுக்கு, கல்யாணத்திருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று எண்ணி இருக்கும் ரஞ்சனுக்கு தங்கை காதலில் மோசமாக தோற்றுவிட்டாள் என்ற உண்மை தெரிந்தால் மித்ரா நிலை என்ன ஆகும்.