அடுத்தடுத்து நடந்தவை ஏதும் அவளின் கையில் இல்லை.. ஆனால், அந்த ஓட்டத்தோடு செல்ல முற்பட்டால் பெண்.
கணவன் ‘உன்னோடு இருக்கவா..’ என கேட்டதற்கு மனையாள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்தநேரத்தில். இரவு உணவினை இருவரும் சேர்ந்தேதான் உண்டனர். நண்பர்கள் இரவு கிளம்பினர் ஊருக்கு. அமுதா வீடு சென்றுவிட்டனர் அப்போதே. மனையாளும் பிரகதீஷும் மட்டும்தான் பசுபதிக்கு துணையாக மருத்துமனையில் இரவு இருந்தனர். பிரகதீஷ் வெளியே சென்று அமர்ந்துக் கொண்டான்.
பசுபதிக்கு மனையாள் தன்னோடு இருப்பதே அத்தனை ஆனந்தமாக இருந்தது.. அவளிடம் பேசுவதற்கோ.. அவளை கேர் செய்வதிலோ எந்த தயக்கமும் இல்லை.. அதை மனையாள் சிலநேரத்தில் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றாலும் கணவன் பேசிக் கொண்டே இருந்தான் மனையாளிடம். “மாத்திரை எடு.. இதெல்லாம் நைட் போடணும்” என அவளுக்கு மாத்திரைகளை காட்டிக் கொடுத்தான். பின் “நீ தூங்கு.. நேற்றும் சரியா இல்லை நீ” என்றான்.
மனையாள் ஏதும் பேசாமல் அந்த சின்ன பெட்டில் படுத்து உறங்க தொடங்கினாள்.
பசுபதிக்கு, தன்னவளை பார்ப்பதே ஒரு ஆறுதலாக இருந்தது.. என்மேல் உள்ள தவறுகளை பொறுத்துக் கொண்டாளே என ஒரு அமைதியில் தன்னவளை பார்வையால் தொடர்ந்திருந்தான். என்ன நடக்கிறது.. எப்படி இவளால் என்னை பொறுத்துக் கொள்ள முடிந்தது என யோசனை.. விடை கிடைத்ததா என தெரியவில்லை.. உறக்கம் வந்தது.
நந்தித்தா, மறுநாள் காலையில் கணவன் எழும் முன் கிளம்பி வீடு சென்றுவிட்டாள். கணவன் எழுந்தால்.. ‘பதில் கேட்டு என் முகத்தையே பார்த்திருப்பார்..’ என எண்ணிக் கொண்டு பிரகதீஷிடம் சொல்லிக் கொண்டு வீடு வந்தாள்.
பசுபதி, மாலையில் நந்தித்தாவின் வீடு வந்தான். மனையாளின் பதிலை எதிர்பார்த்தான் இரவு வரை.. இன்று காலையிலிருந்து எதோ நம்பிக்கை போல.. இல்லை, மௌனம் சம்மதம் என எடுத்துக் கொண்டானோ தெரியவில்லை. பெற்றோரிடம் ‘நான், நந்துவோடுதான் இருப்பேன் என மருத்துவமனையில் சொல்லிவிட்டான். அதை தொடர்ந்து நிறைய குழப்பம்.. ஏதும் பேசமுடியவில்லை.. பெரியவர்களால்.
‘இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுத்தது போல இல்லை.. அதற்காக மாப்பிள்ளை சொல்லுவதை எப்படி ஏற்காமல் போவது’ என வேதாந்தன் தம்பதிக்கு பயம். ‘பசுபதிக்கே முடியவில்லை.. நந்துவும் வேலைக்கு போகிறாள்.. இது எப்படி சரி வரும்..’ என கெளவ்ரவ் தம்பதியும் குழம்பினர்.
அதை பசுபதியிடம் கேட்க முடியவில்லை.. இப்போதுதான் மகன் மனையாளை கவனிக்கிறான்.. சமாதானமாக போக எண்ணுகிறான்.. அதை எப்படி தடுப்பது. ஆனால், எப்படி பசுபதியை கவனித்துக் கொள்ள முடியும் நந்துவினால் என குழப்பம். அதை மகனிடம் கேட்க்க முடியவில்லை.
வீடு பார்க்க என ஏற்பாடுகள் நடந்தது.
மாலையில், பசுபதி மனையாள் வீட்டிற்கு வந்தான். மனையாள் அடுத்த ஒருமணி நேரத்தில் வந்துவிட்டாள். வீடே நிறைந்து இருந்தது. சொல்லபோனால் வீடு மக்களை ஏற்க போதுமானதாக இல்லை. பெண்ணவளின் கண்கள் அந்த சின்ன கூட்டத்தில் கணவனைத்தான் தேடியது.
நந்தித்தா உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அமைதியாகினர்.. அன்னைதான் “வா நந்து, மாப்பிள்ளை ரூமில் இருக்கார் போய் பார்” என்றார்.
நந்தித்தாவின் அன்னைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் மருத்துவமனைக்கு செல்லவேயில்லை. மருமகனுக்கு தேவையானதை வீட்டிலிருந்து செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். மகளோ வேலைக்கு என இரண்டு நாட்களும் சென்றுவிட்டாள். அமுதாதான் மகனை பார்த்துக் கொண்டார். இப்போது மகன் வேறு.. இங்கேதான் இருப்பேன் என சொன்னதால்.. கெளவ்ரவ் வரவில்லை மகனை பார்க்க.. அமுதாவும் ஏதும் சொல்லிக் கொள்ளவில்லை. வேதாந்தன்தான், மருமகனை டிஸ்சார்ஜ் செய்ய வந்திருந்தார். அவரிடம்தான் ‘வேறு வீடு பார்க்க வேண்டும்’ என கெளவ்ரவ் சொல்லிவிட்டார். அவர்களும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக பார்க்க தொடங்கிவிட்டனர். ஒன்றும் பெரிதான விஷயம் இல்லைதானே.
அமுதா அண்ணி, தன்னிடம் சொல்லவேயில்லை என நந்துவின் அன்னைக்கு வருத்தம்.. எனவே, மகளிடம் என்ன பேசுவாரோ என பயம்தான். மருத்துவமனையிலிருந்து வந்தது முதல் அமுதாவின் முகம் சரியில்லை.. ஒரு கோவத்தோடுதான் இருந்தார்.. இப்போது பேச்சும் தன் மகளிடம் அப்படிதானே இருக்கிறது.. என அன்னையாக பயம் உள்ளே ஓடிக் கொண்டே இருக்கிறது.
இப்போது நந்து “சொல்லுங்க அத்தை” எனவும்.. அமுதா “நீ போய் முகம் கழுவிட்டு வா.. அண்ணி அவளுக்கு காபி கொடுங்க” என்றார்.
நந்துவின் அன்னை ‘போ..’ என சைகை செய்து மகளை அனுப்பி வைத்தார். நந்தித்தா தன் அறைக்கு வந்தாள்.. கணவன் அங்கேதான் படுத்துக் கொண்டிருந்தான்.. கணவனின் உயரத்திற்கு தன் கட்டில் பொருந்தவில்லை.. அந்த அறையே சின்னதாக தெரிந்தது.. சங்கடமான ஒரு புன்னகையை கணவனிடம் உதிர்த்தாள்.. ஆனால், அவளின் மணாளனோ ஆனந்தமாக புன்னகைத்தான்.. “ஹொவ் இஸ் யுவர் டே” என்றான் அந்த புன்னகையோடு.
நந்தித்தாவிற்கு சுவாசம் தப்பியது.. அந்த புன்னகையில்.. எதோ காதல்.. நேசம்.. என தான் புலம்பிய வார்த்தைகள் எல்லாம் புலம்பல் அல்ல.. உண்மை என.. மெதுவாக, தப்பிய சுவாசத்தில் நுழைவதாக தோன்ற.. “ம்..” என சொல்லி, மெதுவாக நகர்ந்துக் கொண்டாள் அங்கிருந்து. உடைகளை எடுத்துக் கொண்டு.. ரெஸ்ட் ரூம் சென்றாள்.
கடகடவென உடைமாற்றி.. முகம் கழுவி வெளியே வந்தாள்.. கணவன் இருக்கும் அறைக்கு வந்தாள்.. “வலி இப்போ பரவாயில்லையா.. ஏதாவது குடிக்கிறீங்களா.. எடுத்துட்டு வரவா” என்றாள்.
பசுபதியின் மண்டைக்குள் மணியடித்தது.. அன்னையின் முகமே சரியில்லை என.. அதனால் இப்போது “இங்க வா நந்து” என்றான்.
மனையாள் அவனுடைய அருகில் வந்து அமர்ந்தாள்.. கணவன் “இங்க பார்.. அம்மாகிட்ட நான் இங்கதான் இருக்க போறேன்னு சொல்லிட்டேன்.. நீ என்ன சொல்ற” என்றான்.
நந்தித்தாவிற்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.
கணவன் “ஏன் என்னை பார்த்துக்க மாட்டியா” என்றான்.
மனையாள் முறைத்தாள். கணவன் “என்ன சொல்லு” என்றான்.
மனையாள் “இல்லை, இங்க எப்படி உங்களுக்கு சரியாய் வரும்.. நீங்க சென்னை போங்க..” என்றாள்.
கணவன் “இரு இரு.. நான் சொல்றதை கேளேன்..” என்றான்.
நந்தித்தா அமைதியானாள்.
கணவன் “நான் உன்கூட இருக்கனும்.. இது அதற்கான டைம்.. இன்னமும் நீ கோவமா இருக்கியா” என்றான்.
மனையாளுக்கு எந்த நேரத்தில் என்ன பேச்சிது எனதான் தோன்றியது.. அதை மறையாமல் கேட்டகவும் செய்தாள் “எனக்கு எப்போ கோவம் இருந்தது.. இது உங்களோட உடல்நிலை சம்பந்தப்பட்டது. இதில் நாம.. இப்படி எல்லாம் பேசவேண்டாம்” என்றாள்.
கணவன் “எனக்கு இதுதான் வேண்டும்.. எனக்கு ஒரு சான்ஸ் கொடேன், நான் இங்கதான் இருப்பேன்” என்றான் கொஞ்சம் உறுமலாக.
மனையாள் “எனக்கு காலேஜ் இருக்கு.. உங்களுக்கும் உங்க வேலை இருக்கு.. என்னால் எப்படி..” என சொல்லி தலையில் கை வைத்துக் கொண்டாள்.
பசுபதி “முடியும்ன்னு நினைச்சால் முடியும்” என சொல்லி படுத்துக் கொண்டான். ‘என்னடா இது இவளோ கெஞ்ச வைக்கிறா.. என்னதான் பிரச்சனை.. காலிலே விழுந்தேட்டேன்..என்னதான் செய்யணும்’ என முனகிக் கொண்டே எழுந்து வெளியே சென்றான்..
நந்தித்தா, செல்லும் கணவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்.. கோவமில்லை அந்த முறைப்பில்.. ஒரு ஆராய்ச்சி.. அத்தோடு ஒரு ஈர்ப்பு.. ‘என்ன வேண்டுமாம் இவருக்கு’ என்ற ஆராய்ச்சி.
பசுபதி வெளியே அமர்ந்தான்.
நந்தித்தாவின் முகத்தில் ஏனென்றே தெரியாமல் ஒரு புன்னகை.. ‘நான் அவர்கூட இருக்கனுமா?.. எப்படி முடியும்.. அவர் உடல்நிலை முக்கியமே.. என்ன செய்ய போறேனோ’ என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
அமுதா காபியோடு மருமகளின் அறைக்கு வந்தார்.. நந்தித்தாவிற்கு நெருடலானது. நந்தித்தா எழுந்தாள் இப்போது. மருமகளிடம் காபியை கொடுத்தார். மாமியாரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.
நந்தித்தா “அத்தை, நானே” என சொல்ல சொல்ல காபியும் பேச்சும் வந்துவிட்டது அவரிடமிருந்து. அதனால் அமைதியானாள்.
அமுதா “என்ன சொல்றீங்க ரெண்டுபேரும்.. சேர்ந்து வாழ்றேன்னு சொல்றீங்களா..” என்றார் விசாரணையான குரலில்.
நந்தித்தா ஏதும் சொல்லவில்லை.
அமுதா “அவன் என்னமோ இங்க இருக்கேன்னு சொல்றான்.. நீ என்ன சொல்ற” என்றார்.
நந்தித்தா “தெரியலை அத்தை.. அவருக்கு உடம்பு முடியலை.. நான் வேலைக்கு போறேன்.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.” என்றார்.
அமுதா “சொல்லு.. நீ. அவன் இங்கதான் வந்திருக்கான் உன்னை பார்க்க.. பேசும் போதும் கூட.. உன்கூட இருக்கனும்ன்னு நினைக்கிறான்னு புரியுது.. நீ சொல்லு.. தெளிவா சொல்லு.. உனக்கு அவனை பிடிக்குதா.. சேர்ந்து வாழ நினைக்கிறியா” என்றார் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டியவராக.
நந்தித்தாவின் கண்களில் கண்ணீர் சட்டென.. இரண்டு நிமிடம் அமைதியானாள்.. தனக்குள் எடுத்திருந்த முடிவினை எப்படி சொல்லுவது என எண்ணம்.. ஆனாலும், மாமியார் ஒரு முடிவோடு கேட்க்கும் போது சொல்லவில்லை என்றால்.. தவறாகிவிடும்.. எனவும் எண்ணிக் கொண்டவள் “அத்தை, என்னால் அவரை புரிந்துக் கொள்ள முடியுது. எ..எனக்கும் அவரோடு இருக்கத்தான் எண்ணம். ஆனால், இப்போது வேலைக்கு என வந்துட்டேன். என்னால் பாதியில் விட முடியாது. இது, என்னுடைய ஆறுதல் அத்தை.. எப்படி சொல்றது. யாருமேயில்லைன்னு இருந்த போது.. என்னுடைய் சப்போர்ட் சிஸ்டம் அத்தை இது. அதுதான் இப்போ எனக்கு முக்கியம்.. சாரி அத்தை” என்றாள்.
மகனின் அன்னையாக அமுதாவிற்கு அதிர்ச்சிதான்.. ஆனாலும், திடமான ஒரு பெண்ணாக மருமகளின் எண்ணத்தில் உண்மை இருப்பதை உணர்ந்தார். அதை ஆமோதிக்க வேண்டும் என எண்ணம்.. ஆனால், அன்னையாக ஒரு பயம்.. மகன் ஏமாந்திடுவானோ என.. அதனால் “அதெல்லாம் சரி, தெளிவா சொல்லு.. இனி உங்கள் வாழ்க்கை.. உன் வாழ்க்கை.. எப்படின்னு சொல்லிடு தெளிவா.. சேர்ந்து வாழுறீங்களா? பசுபதி பற்றி உனக்கு தெரியும்” என்றார்.
நந்தித்தா “அதான் சொன்னேனே அத்தை” என்றாள் கொஞ்சம் வெட்கத்தோடு.
அமுதா அமைதியாகவே இருந்தார்.
மருமகள் “அத்தை.. நான் அமைதியாகவேதானே இருக்கேன்.. உங்களுக்கு புரியுது. நீங்க திரும்பவும் ஏன் கேட்க்குறீங்க” என்றாள்.
நந்தித்தா “அத்தை, நான் அவரோடதான் இருப்பேன் போதுமா.. இதென்ன கேள்வியோ” என்றாள்.. தலையை குனிந்துக் கொண்டே கடைசி வார்த்தையை முனுமுனுத்தவாறே.
அமுதா மருமகளின் கையை பிடித்துக் கொண்டார்.. “எங்களுக்கு தெரியும்.. உன் மொழியில் கேட்க்கனுமில்ல.. என் மகன் நிறைய கஷ்ட்டப்பட்டுட்டான்.. எல்லாம் இருக்கு.. அனுபவிக்க முடியலை அவனால்.. அது இனியும் தொடர கூடாதில்லை. நீ சொன்னதே போதும்.. சரி, எங்களோட முடிவுகளை சொல்றோம்.. புது வீடு பார்க்கிறோம். நீ எப்போதும் போல வேலைக்கு போ.. நாங்க வாரம் ஒருமுறை வரோம்.. உனக்கு உதவிக்கு.. சென்னையிலிருந்து வேலைக்கு ஆள் வரட்டும். நீங்க ரெண்டுபேரும் சென்னை வரும் போது.. புரிதலோடு வரணும், அவ்வளவுதான். என்ன ஒரு மூணு வாரம் இருப்பீங்களா.. அதற்குள் நல்ல சேஞ்ச் வரட்டும் உங்களுக்குள். உனக்கு இந்த ஏற்பாடு ஒகே தானே.. வீடு கண்டிப்பா இது போதாது டா” என்றார் மருமகளிடம் எல்லா முடிவுகளையும் சொன்னபின்.. வேண்டுதலாக மருமகளின் வேலையை விடமாட்டேன் என்ற அவளின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு.. இந்த வீட்டில் இருக்க மாட்டீங்களா என அவள் கேட்டிட கூடாதே என எண்ணி வேண்டினார் எனலாம்.
நந்தித்தா “அத்தை.. எனக்கும் அவர் இங்கே எனக்காக இருக்க நினைத்ததே போதும் அத்தை.. நீங்களும் எனக்காக இங்கே இருந்தது எல்லாம் எனக்கு தெரியும் அத்தை.. எனக்கு ஓகேதான்.” என்றாள்.
இருவர் முகத்திலும் ஒரு புன்னகை.. ஒரே புன்னகை.. இருவராலும் கட்டிக் கொள்ள முடியவில்லை இந்த விளம்பரங்களில் வருவது போல.. அந்த புன்னகையில்.. இணைப்பின் உறுதியை கொண்டாடினர் எனலாம்.
அந்த வாரத்தில் வீடு பார்த்து விட்டனர். கெளவ்ரவ் அவர்களின் தொழில்முறை நண்பர்.. அவர்களின் வீடு ஒன்று இருப்பதாக சொல்லவும்.. அந்த வீட்டினை வாடைக்கு என எடுத்துக் கொண்டனர். அதில் எல்லா ஏற்பாடுகளும் இருந்தது. அமுதா கெளவ்ரவ் இருவரும்தான் மகன் மருகளை வீடு மாற்றினர். கெளரவ் வேலையாட்கள் சென்னியிலிருந்து கூட்டி வந்தார்.
அந்த வாரம் முழுவதும் எல்லோரும் பிஸி. பசுபதி நந்தித்தா இருவரும் பார்த்துக் கொண்டே அந்த நாட்களை கடத்தினர். ஒருமாதிரி வெட்கமாக இருந்தது.. பிரிந்துவிட்டு.. மீண்டும் சேர்வது எதோ ஒரு வெட்கத்தை கொடுத்தது.. இருவருக்கும், பொதுவில் பேச்சுகளே இல்லை.. அவளை பார்த்தாலே அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. அன்னை தந்தை முன் இயல்பாக “நந்து” என அழைக்க முடியவில்லை அவனால்.. கூச்சமாக உணர்ந்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டி இருந்தது பலசமயம்.
அதிலும் மனையாள்.. புதுவீட்டில் முதல்நாள் தங்களின் அறைக்கு வந்ததும்.. கொஞ்சம் பரபரப்பானான் கணவன்.
முன்பிருந்த வீட்டில் மனையாள் வெளியேதான் உறங்குவாள்.. இடம் இருக்காது.. கட்டில் சிறிது.. இடமும் இல்லை, அதனால். இன்று அவனின் சென்னை வீடு போன்று தனி இடம் இருவருக்கும்.. பசுபதி, மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.
நந்தித்தா “மாத்திரை போட்டாச்சா” என்றாள்.
கணவன் கையை காட்டினான் மாத்திரைகளோடு.. மனையாள் புன்னகைத்துவிட்டு, தன் அணிமணிகளை கழற்றத் தொடங்கினாள்.. காலையிலிருந்து ஒரு உடை.. அதனால், மாற்றுடை எடுத்துக் கொண்டு சென்று மாற்றிக் கொண்டு வந்தாள்.
பின் பொறுமையாக ஏதேதோ ஸ்கின் கேர் என தலைமுடியை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். பின் கழுவி வந்த முகத்தினை சின்ன டவல் வைத்து துடைத்தாள். பின் சீரம்.. என முகத்தில் துடைத்துக் கொண்டிருந்தாள், நந்தித்தா.
பசுபதிக்கு இம்சையாக இருந்தது.. கணவனாக அவள் செய்வதை எல்லாம் பார்க்க.. தெரிந்து செய்கிறாளா தெரியாமல் செய்கிறாளா.. லைட் ஆஃப் பண்ணுவாளா.. மாட்டாளா.. என யோசனையோடு.. அவளின் செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவன் செல்லமாக முறைத்தான் மனையாளை.. அத்தோடு “எங்க தூங்கறது.. நீதான் மேக்கப் போட்டுட்டே இருக்கியே..” என சொல்லி சாய்ந்தான் கட்டிலில்.
மனையாள் “சாரி..” என சொல்லி.. தலையணையை எடுத்து கீழே போட..
கணவன் “ஆமாம்.. இதெல்லாம் முன்னாடி நீ செய்தது போல இல்லையே.. அதென்ன தூங்க போகிற நேரத்தில்.. மேக்கப்.. ம்..” என்றான் ரசனையில் குரல் கூட வசீகரமாக இருந்தது.
மனையாளும் வசீகரமாக புன்னகைத்து “இது மேக்கப் இல்லையே.. இது நைட் ஸ்கின் கேர்..” என்றாள்.
கணவன் அவளையே பார்த்துவிட்டு “ஹம்.. அது என்னமோ.. இப்போ ரொ..ம்ப அழகா.. க்கும்.. என்னமோ ஃபேஸ் க்லோவா இருக்கு..” என்றான் ரசனையோடு, மனையாளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு.
இருவருக்கும் ஏனென்றே தெரியாமல் ஒரு புன்னகை. இருவரின் கண்களும் இமைக்காமல் ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ள.. அதில் நிறைய ஏக்கம்தான் வழிந்தது.
மனையாள் பெட்ஷீட் எடுத்துக் கொண்டு கீழே விரிக்க..
கணவன் “நந்து.. நான் ஒன்னும் செய்யமாட்டேன்.. இங்க வந்து தூங்கு” என்றான், காதலாக கொஞ்சம் தன்னவளை சீண்டும் குரலாக.
மனையாள் “இல்ல வேண்டாம்.. கை அடிபட்டிருக்கு.. நீங்க நிம்மதியா தூங்குங்க.. சரியாகட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்” என சொல்லி.. கீழே படுத்துக் கொண்டாள்.
புன்னகை முகம் வாடித்தான் போனது இருவருக்கும்.. ஒரு கூச்சம்.. தயக்கம்.. வெட்கம்.. என இதெல்லாம் தங்களுக்கு தெரியாமலே வந்துவிடுகிறது அவர்களுக்குள்… இப்போது சின்ன ஒதுக்கமும் வ்னதுவிட்டது. அதனால், இயல்பாக எப்படி தங்களை தாங்களே கையாள்வது என தெரியவில்லை.. இருவரும் தடுமாறினார். இப்போதும் அதேதான்.. அமைதியாக கண்மூடி உறங்க தொடங்கினர்.
“சொல்லாமல் கொள்ளாமல்..
நெஞ்சோடு காதல் சேர..
நெஞ்சோடு காதல் சேர..
மூச்சு முட்டுதே..
இந்நாளும் எந்நாளும்
கைகோர்த்து போகும் பாதை
கண்ணில் தோன்றுதே..”
இரண்டுநாட்கள் தங்கி.. மருமகளுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்துதான் சென்னை வந்தனர், கெளவ்ரவ் தம்பதி.