மறுநாள் காலை ஹாஸ்டலில் சென்று மதரை சந்திக்கும் போது என்னென்ன பேச வேண்டும் என்பதை பேசிக்கொண்டனர்.
எப்படி மதரிடம் பெர்மின்ஷன் வாங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தனர்.
மறுநாள் காலை மதர் முன் இருவரும் அமர்ந்திருக்க.,
மதர் தான் “சரி சொல்லுங்க, என்ன முடிவு பண்ணிட்டு வந்து இருக்கீங்க”, என்று கேட்டனர்.
இருவரும் தங்கள் பேசி முடிவு செய்த அனைத்தையுமே
சொன்னார்கள்.
மதர் அவர்களை ஆச்சரியமாக பார்த்தார்.
இருவருமே “நிஜமா எங்களுக்கு அவ இப்படித்தான் இருக்கான்னு தெரியாது., நாங்க நினைச்சது அவங்க ஆடிட்டர் வீட்லயோ., இல்ல வக்கீல் வீட்டிலேயே யாராவது வந்து அப்பப்ப பாத்துப்பாங்கன்னு நினைச்சோம்., எங்க வீட்ல நாங்க எதுவும் பேச முடியாது இவளை பத்தி நாங்க கேட்கவும் முடியாது., ஆக்சுவலா இப்ப நாங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப கில்டியா ஃபீல் பண்றோம்., இந்த பொண்ண எங்க வீட்ல ஒரு பிள்ளையா வளர்த்து இருந்திருக்கலாம் ., அவங்களால முடியாத காரியம் கிடையாது., கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டமா இருக்கு., கில்ட்டியாவும் இருக்கு”, என்று சொன்னார்கள்.
மதர் தான் அவளின் நிலையை எடுத்துச் சொன்னார்.
“அவள குழந்தையா கொண்டு வந்து விடும் போது அவ கழுத்துல ஒரு பொடி செயின், ஒரு குட்டி கம்மல் மட்டும் இருந்துச்சி., அவளும் அதுதான் எனக்கு தெரிஞ்சி நைன்த் படிக்கிற வரைக்கும் போட்டு இருந்தா., அந்த சமயம் அவர் பெரிய பொண்ணாயிட்டான்னு சொல்லி,
நான் தான் உங்க இரண்டு வீட்டிற்கும் சொன்னேன்., ஆனா அவங்க பதில் பார்த்துக்கோங்க ன்னு சொன்னாங்களே., தவிர யாரும் வரலை., கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு., அதுக்கு அப்புறம் அவளை கொண்டு வந்து இங்க விட்டுட்டு போன ஆடிட்டர் வக்கீல் அவங்களுக்கு போன் பண்ணி சொல்லும் போது தான்.,
அவங்க நாங்க ஒரு நாள் சொல்லிட்டு வர்றோம் ன்னு சொன்னாங்க.,
அது மாதிரி வந்தாங்க, அதுக்கப்புறம் அந்த பொண்ணோட அப்பா வீட்ல வர்ற வாடகையை தனியா போட்டு வச்சிருப்பாங்க போல., அதை எடுத்து இந்த பொண்ணுக்கு கழுத்துக்கு போடுறதுக்கு ஒரு செயின்., காதுல போட கம்மல் கைக்கு போட மெல்லிசா ஒரு வளையல்., வாட்ச் அப்படின்னு வாங்கிட்டு., கொஞ்சம் டிரெஸ்ஸும் வாங்கிட்டு அவங்க ரெண்டு பேரும., அவங்க அவங்க மனைவியை கூட்டிட்டு வந்து பாத்துட்டு இந்த பொண்ணு கையில குடுத்துட்டு போனாங்க.,
அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான்., இப்ப வரைக்கும் இவ நேரில் பார்த்திருப்பா, அதுக்கப்புறம் அவ பார்த்தது உங்க ரெண்டு பேர் மட்டும் தான்”., என்று சொல்லியவர்.,
முகேஷ் இடம் திரும்பி “உங்க அப்பாவுமே அந்த பொண்ணை சேர்க்கறதுக்கு முன்னாடி இங்க ஒரு தடவ வந்திருந்தார்., கூட்டிட்டு வருவாங்க அந்த பொண்ணை சேர்த்துக்கோங்க., படிப்பு உண்டான செலவு., ஹாஸ்டல் செலவு எல்லாம் என் பொறுப்பு அப்படின்னு சொன்னாரு., கேரளா ல இருந்து போன் மட்டும் தான் வந்துச்சு., இப்ப தேவையான டிரஸ் மத்த பொருட்களை நாங்க வாங்கி அனுப்புறோம்., பட் நீங்க அவ கிட்ட எங்களை பத்தின தகவல் ஏதும் சொல்லிக்கணும்னு அவசியம் இல்ல., அப்படின்னு தான் சொன்னாங்க., அதனால தான் உங்க பேமிலிய பத்தி எல்லாம் அவளுக்கு ரொம்ப தெரியாது., ஆனா ஒரு விவரம் தெரிஞ்சதுக்கப்புறம் கேட்கும் போது என்னால சொல்லாம இருக்க முடியாது., அதனால லேஸ் லேசா சொல்லி வச்சிருந்தேன்”, என்று சொன்னார்.
இருவரும் அமைதியாக கேட்டுக் கொண்டே இருக்க., இருவருக்கும் குற்ற உணர்ச்சி அதிகமாக தான் ஆகியது.
“உங்களை நம்பி நான் எப்படி அனுப்புறது., அதுவும் பொம்பள புள்ள., நீங்க ரெண்டு பேரும் வயசு பசங்க”, என்று சொன்னார்.
இருவரும் “மதர் அப்படி எல்லாம் நினைக்காதீங்க., தர்ஷனா வ நாங்க நல்லபடியா பார்த்துப்போம்., இன்னும் அவளுக்கு வெளி உலகத்தை பத்தி நிறைய கற்றுக் கொடுக்க வேண்டியது இருக்கு., இப்படியே ஒரு பொண்ணு லைப்பை ஒட்டிட முடியாது இல்லையா”, என்று சொன்னார்கள் இருவரும்.
மதர்க்கு ‘அதுவும் சரி’ எனப்பட, “சரி நான் உங்களுக்கு ரெண்டு நாளில் தகவல் சொல்றேன்., மத்தபடி அவளுக்கு காலேஜ் கிடைச்ச உடனே தான் நான் இங்க இருந்து அவளை அனுப்ப முடியும்., ஆனா அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேர் வீட்ல இருந்தும் சம்மதம் சொல்லி போன் பண்ணனும்., இல்லாட்டி அவங்க எங்களுக்கு ஒரு மெயில் அனுப்பனும்., அப்படின்னா மட்டும் தான் நான் உங்களுக்காக ஹெல்ப் பண்ண முடியும்”, என்று மட்டும் சொன்னார்.
அவர்களும் சரி என்று சொன்னதோடு., “மதர் இன்றைக்கு ஒரு நாளைக்கு அவள லஞ்சுக்கு நாங்க வெளியே கூட்டிட்டு போகட்டுமா”, என்று கேட்டனர்.
மதரோ, “அது எப்படி அனுப்ப முடியும்., நீங்களே இப்பதான் வந்து இருக்கீங்க”, என்றார்.
“நம்பி அனுப்புங்க மதர், நாங்க நல்லபடியா பார்த்துக்கொள்வோம்”, என்று சொன்னார்கள்.
“சரி, உங்க அப்பா கிட்ட பேசிக்கிறேன்”, என்று சொன்னவர்.
முகேஷின் அப்பாவிடம் அழைத்து பேச., அவன் நேத்து ஏற்கனவே மிரட்டி இருந்ததால்., அவரும் சரி என சொன்னார்.
அது போலவே அந்த தாத்தாவும் சரி என்று சொல்ல., மதிய உணவு அவர்களோடு இவள் செல்வதாக முடிவாகி இருந்தது.
அவர்கள் மதிய உணவிற்கு செல்லும் முன்.,
மதர் தர்ஷனாவை அழைத்து அனைத்து விஷயத்தையும் மெது மெதுவாக சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தர்ஷனா.,
“நான் என்ன மதர் செய்ய வேண்டும்”, என்றாள்.
“அந்த பசங்க ரெண்டு பேருக்கும் இப்ப கில்ட்டி ஃபீலிங்கா இருக்காம், உன்னை இப்படி விட்டுட்ட முடியாது ன்னு சொல்லுறாங்க”, என்றார்.
இப்போ ஒன்னும் இல்ல., எப்படியும் நீ காலேஜ் ஜாயின் பண்ணும் போது அவங்க ரெண்டு பேரும் உன்னை கரெக்டான வழியில் கொண்டு போகணும்., வெளிய தங்கணும்., நீ எல்லாம் பழகணும் அப்படின்னு நினைக்கிறாங்க., அதனால எப்படியும் அவங்க வீட்ல பேசுனத வச்சு பார்க்கும் போது அவங்க இஷ்டப்படி தான் காலேஜ்ல சேர்ப்பாங்க”, என்று சொன்னார்.
“அது எப்படி மதர் அவங்க இஷ்டத்துக்கு சேர்ப்பாங்க”, என்று கேட்டாள்.
“அவங்க இஷ்டத்துக்கு னா என்ன, சாதாரண காலேஜ்லயா சேர்ப்பாங்க, எப்படி ஸ்கூல்ல நல்ல ஸ்கூலா பார்த்து சேர்த்தார்களோ., அது மாதிரி காலேஜ்லையும் நல்ல காலேஜா சேர்ப்பாங்க., நீ எக்ஸாம்க்கு படிக்கிறது எல்லாம் சொல்லி இருக்க இல்ல., நானும் சொன்னேன் பார்ப்போம்”, என்று சொன்னார்.
“சரி போ நீ இன்னைக்கு மத்தியானம் அவங்க கூட லஞ்சுக்கு வெளியே போகணுமாம்”, என்று சொன்னார்.
“ஹோட்டலுக்கு எல்லாம் வேண்டாம் மதர்”, என்று சொன்னாள்.
அவரும் “இல்ல நீ வெளியே போயிட்டு வா., அந்த பசங்க சொல்றது சரி தான்., நீ நாள பின்ன உன்னோட லைஃப் லீட் பண்ணும் போது., வெளிய உள்ள மற்ற விஷயங்களை எப்படி கத்துக்குவ”, என்று சொன்னார்.
யோசனையோடு, தலையாட்டினாள்., பின்னர் கிளம்பலாம் என்ற முடிவிற்கும் வந்திருந்தாள்.
வெளியே ஆண்களோடு தயங்கி தயங்கி தான் கிளம்பி வந்து இருந்தாள். கார் அமர்த்தி வந்திருந்த அவர்கள் இருவரும் இவளை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றனர்.
ஹோட்டல் சுற்றுப்புற சூழலை கண்களால் ஆராய்ந்தவள், எதுவும் சொல்லவில்லை அவள் முகத்தில் கூட சின்ன ஆச்சரியமோ, எதுவும் இல்லை.,
இதுவரை இங்கெல்லாம் வந்ததில்லையே, என்ற ஏக்கமோ எதுவும் வரவில்லை, அதை பார்த்ததுமே அவர்கள் இருவரும் பார்வை பரிமாற்றத்தை செய்து கொண்டனர்.
‘ஏன் இப்படி இருக்கிறாள்’ என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வந்தது.
ஆனால் ஃபுட் ஆர்டர் செய்ய சொல்லும் போது,
அவளோ “இங்கிருக்கும் உணவு எது எப்படி இருக்கும் என்று எல்லாம் தெரியாது., ஹாஸ்டல் சாப்பாடு கேட்டீங்கன்னா நான் சொல்லுவேன்., எந்த சாப்பாடு நல்லா இருக்கும் எந்த சாப்பாடு நல்லா இருக்காதுன்னு நீங்களே ஆர்டர் பண்ணுங்க” என்று சொன்னாள்.
“வெஜ் ஆர் நான் வெஜ்”, என்று அவன் கேட்டான்.
“எதனாலும் ஓகே., ஹாஸ்டல்ல எல்லாம் உண்டு”, என்று சொன்னாள்
அவர்கள் இருவரும் அவர்களுக்கு தெரிந்த விதத்தில் ஆர்டர் செய்தனர்.
சொல்லிய உணவு வந்தவுடன், இவளுக்கு தான் பார்த்து பார்த்து எடுத்துக் கொடுத்தனர்.
இவளோ “நீங்க சாப்பிடுங்க” என்று சொன்னாள்.
“நீ டேஸ்ட் பாத்துட்டு சொல்லு”, என்றனர்.
“ஓ என்ன பாத்தா டெஸ்ட் டியூப் எலி மாதிரி இருக்கா., ஏன் நீங்க சாப்பிட்டு சொல்ல மாட்டீங்களா”, என்றாள்.
அவர்களும் சிரித்துக் கொண்டே., “இல்ல உனக்கு இந்த ஃபுட்டோட டேஸ்ட்ல புடிச்சிருக்கா, புடிக்கலையான்னு, சொன்னா வேற எதுவும் ஆர்டர் போடலாம் இல்ல”, என்று சொன்னார்கள்.
“நான் டேஸ்ட் எல்லாம் ரொம்ப எல்லாம் யோசிக்க மாட்டேன்., எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன், அதனால டேஸ்ட் பார்த்து சாப்பிடும் டைப் எல்லாம் கிடையாது நானு”, என்று சொன்னாள்.
பிறகு மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும். போதே, அவர்கள் இருவரும் இவளிடம் தங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
அவளிடம் “இரண்டு குடும்பங்களை பற்றி உனக்கு என்ன தெரியும்”, என்று கேட்டனர்.
“எதுவும் தெரியாது, அப்பா அம்மா இரண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது மட்டும் தான் தெரியும், அதுவும் லாயர் அங்கிள் சொல்லி தெரியும், அப்புறமா படிக்க வைக்கிறது அம்மாவோட பிரதர்ன்னு சொல்லி மதர் சொல்லி இருக்காங்க., அப்புறம் எனக்கு டிரஸ் அன்ட் தேவையான பொருட்கள் அப்பப்ப வர்றது ரெண்டு பேமிலி சைடுல இருந்தும் வரும் அப்படிங்கறது தெரியும்., மத்த எதுவும் எனக்கு தெரியாது”, என்று சொன்னாள்.
“சரி உங்க அப்பா உனக்காக என்ன விட்டுட்டு போனார் என்று தெரியுமா”, என்று கேட்டனர்.
“தெரியாது, லாயர் அங்கிள் எப்பவாவது என்கிட்ட வந்து, கார்டியன் அவங்க அப்படிங்கிற மாதிரி போட்டு தான் சைன் வாங்குவாங்க., அப்போ என்கிட்ட சில பேப்பர்ஸ்ல சைன் வாங்கும் போது மதர் தான் உட்கார்ந்து டீடெயில்ஸ் கேட்பாங்க., சொல்லிட்டு சைன் வாங்கிட்டு போவாங்க., அப்போ எனக்கு விபரம் தெரிஞ்சி மதர் என்கிட்ட சொன்னது இதுதான்”, என்று தனக்கு தெரிந்ததை சொன்னவள்,
“இந்த விஷயங்கள் மட்டும் தான் சொன்னாங்க, வேற எதுவும் தெரியாதே”, என்று சொன்னாள்.
“ஓ சரி ஓகே” என்று சொன்னவன்.
பின்பு “சரி காலேஜ் சேரும் போது, எங்க கூட சென்னை வந்திரு”, என்று சொன்னார்கள்.,
“ஹாஸ்டல்ல சேர்த்து விடுவீங்களா”, என்று கேட்டாள்.
“நோ நோ, நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ஒரு அபார்ட்மெண்ட்ஸ்ல வீடு எடுத்து தான் தங்கி இருக்கோம்., அப்போ எங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு ரிலேஷன்ஷிப் இருக்குன்னு கூட தெரியாது., நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்டா இருந்ததால் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து இருந்தோம்., உனக்கும் அதே அபார்ட்மெண்ட்ல ஒரு வீடு பார்த்து தர்றோம், எங்களுக்கு குக் பண்றவங்களே குக் பண்ணி உனக்கு தனியா எடுத்துக்கொண்டு தந்து விடுவார்கள் சரியா., நீ அங்க இருந்தே காலேஜ் போயிட்டு வா.,
உன்ன காலேஜ்ல கொண்டு போய் விடுவது எங்க ரெண்டு பேர்ல யாராவது கொண்டு போய் விடுவோம்., ஈவ்னிங் கூப்பிட வர்றதும் அதே மாதிரி ரெண்டு பேர்ல யாராவது உன்னை கூப்பிட வருவோம், நீ தனி கிடையாது சரியா., உனக்கு நிறைய நாங்க கத்து கொடுக்க வேண்டியது இருக்கு., உனக்கு இந்த வெளி உலகத்தை பத்தி எதுவுமே தெரியாது., நீ நிறைய கத்துக்கணும்., நிறைய பாக்கணும்., நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்., உனக்கு பிடிச்சதை கேளு., உனக்கு ஆசைப்பட்டது எதுவா இருந்தாலும் சொல்லு., உனக்காக நாங்க ரெண்டு பேர் இருக்கோம்.,
இன்னும் உனக்கு என்னென்ன வேணும்னு சொன்ன., நாங்க செஞ்சு தருவோம்”, என்று சொன்னார்கள்.
அவள் அவர்களை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே., அவள் கண் கலங்குவது இருவருமே பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.
கண்ணீரை கட்டுப்படுத்தியவள் அவர்களிடம் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
அமைதியாக இருப்பவர்களை கோழை என்று எண்ணி விடாதீர்கள்.. தேவையற்ற வார்த்தைகளை விடாமல் அமைதியாக கடந்து செல்வதற்கு அதிக மனஉறுதி தேவை.