பசுபதி, அவர்கள் குடும்பத்தோடு வீடு வந்தான். அன்னை தந்தை மாமா மாமி.. என எல்லோரும் நிரம்பி இருக்க.. அவளின் கணவனும்.. மனையாளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்.
நந்தித்தா அறைக்கு சென்றுவிட்டாள்.
ஆனால், வீட்டில் எல்லோரும் “வாங்க மாப்பிள்ளை” என் வரவேற்றனர்.
வேதாந்தன் முகத்தில் இப்போதுதான் நிறைவு. ஒருவாரம் முன்பே, தன் சம்பந்தியிடம் அழைத்து பிரசன்னாவிற்கு பெண் பார்ப்பது பற்றி பேசியிருந்தார். அப்போதுதான்.. மாப்பிள்ளை வரணும் என கேட்டிருந்தார்.
அப்படிதான் பசுபதிக்கு விஷயம் தெரிய.. மனையாளை இப்போது விட்டுவிட்டால், பிறகு என்னால் பிடிக்க முடியாது என எண்ணிக் கொண்டான் போல.. அன்னை சொன்னதும் ‘நாம போகுனும்மா அம்மா’ என்றான்.
அன்னை “இப்போவே எல்லோரும் வேண்டாம் டா.. அண்ணன், மாப்பிள்ளை வருவரா எனதான் கேட்டார். அதனால், உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே. இருந்தாலும் போ.. நந்துவின் மரியாதை முக்கியம்தானே” என்றார்.
பசுபதி அன்னையை ஏறிட்டான்.. பின் “எப்போ.. என்னான்னு.. சொல்லுங்க” என்றவன் கிளம்பிவிட்டான்.
அன்று இரவே வேதாந்தன் மாப்பிள்ளைக்கு அழைத்து பேசினார், விவரம் சொன்னார். ஒன்றும் அலட்டிக் கொள்ளாமல் தான் வருவதாக சொல்லிவிட்டான் பசுபதி.
இப்போது மகளை தேடினார்.. அவளின் அன்னை. அந்த ஹாலில் காணவில்லை.. அன்னைக்கு எரிச்சலானது.. ‘இன்னமும் என்ன பிரச்சனை இவளுக்கு..’ என பெண்ணை அழைக்க சென்றார்.
நந்தித்தா குழப்பத்தில் அமர்ந்திருந்தாள்.. அன்னை அறையின் உள்ளே வந்ததும்.. புரிந்து போனது.. என்ன சொல்ல வந்திருப்பார் என. சலித்துக் கொண்டு எழுந்து “என்ன ம்மா.. வேணும்” என்றாள்.
அன்னை “வெளிய வா போதும்” என்றவர்.. “என்ன நினைச்சிட்டு இருக்க.. எல்லோர் முன்பும் மாப்பிள்ளையை மரியாதையில்லாமல் நடத்துவியா” என்றார்.
மகளோ வாயில் கை வைத்துக் கொண்டாள்.. “அம்மா, உனக்கே இது அநியாயமா இல்லையா, என்னை எப்படி மதிச்சாங்கன்னு மறந்துட்டியா” என்றாள் கோவமாக.
அன்னை “பழங்கதையை பேசிட்டே இருந்தால் எப்படி வாழ்வது.. மனச, முன்னாடி வைச்சு பாரு” என்றார்.
மகளோ ‘உச்சு’ கொண்டிக் கொண்டு.. இன்றும் அங்கும் நடந்தால் என்ன செய்வதென்று தெரியாமல்.
அன்னை “இப்போ வெளியே வா.. உங்க ரெண்டு பேருடைய சண்டை.. எப்போதும் பொதுவில் இருக்க வேண்டாம். அண்ணன் திருமணம் நல்லபடியா நடக்கணும். அத்தோடு சேர்ந்து உன் வாழ்க்கையும் சீர் ஆகணும். வா.. அங்க வந்து நில்லு போதும்” என்றார் அதட்டலாக, ஆலோசனையாக. வெளியே சென்றுவிட்டார் அன்னை.
நந்தித்தாவிற்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. அன்னையின் சொல்படி வெளியே வந்தாள்.. கண்களில் கோவம் தெரிய முறைத்துக் கொண்டே கிட்சென் சென்று சென்றாள்.
எல்லோரும் மதிய உணவு சமைக்கலாமா இல்லை வெளியே சென்று உண்ணலாமா என பேசிக் கொண்டிருந்தனர்.
அன்னையும் மாமியும் ஜூஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். இவளின் கைகளில் அந்த ட்ரே வந்தது. மனதுள் ‘என்ன பெண் பார்க்க வந்திருக்காங்களா.. நான்தான் கொண்டு போகனுமா.. எதுக்கு இந்த சீன்’ என எண்ணிக் கொண்டே வெளியே வந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.
அவளின் கணவன் பசுபதி புன்னகையோடு.. ட்ரிங்க் எடுத்துக் கொண்டான். அவனின் கண்கள் அவளையே சுற்றியது. இயல்பாக இருக்க முயன்றுக் கொண்டிருந்தாள். பொதுவில் கணவன் இப்படி பார்ப்பது, அவனோடு.. போவது வருவது.. இதோ இப்போது பரிமாறுவது என எல்லாம்.. தன்னைமீறி நடக்கிறது. ஆனால், ஏன் என்னால் எதையும் தைரியமாக சொல்ல முடியவில்லை.. அவனை பார்த்தாலே எதோ தடுக்கிறது.. என தன்னையே நொந்துக் கொண்டு.. வந்து அன்னையோடு நின்றாள்.
பசுபதி, பெரியவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ள எண்ணினாலும்.. அவனை போன் அழைப்பு.. தொந்திரவு செய்துக் கொண்டே இருந்தது. அதில் அவன் வேறு மனையாளையும் பார்க்க வேண்டும்.. ஆக, பசுபதி பிசியாகவே இருந்தான்.
பிரசன்னா “ஆர்டர் போட்டிடலாமா” என்றான் உணவினை பற்றி அன்னையிடம் கேட்டுக் கொண்டு.
அன்னை மாமி இருவரும் “சமைத்திடலாம் டா” என்றனர்.
பிரசன்னா “அம்மா, பசுபதி வந்திருக்கார்.. ரெண்டு பேரும் கொஞ்சம் பேசிக்கட்டுமே..” என்றான், தங்கையை பார்த்துக் கொண்டே கிசுகிசுப்பான குரலில்.
அன்னை “வேண்டாம் டா.. சண்டை போட்டு உன் தங்கை, அவரை கோவப்படுத்திடுவா.. முதலில் வந்தவரை நல்லா கவனிக்கணும். நாங்க சமைச்சிடுறோம்” என சொல்லி சமையலை தொடங்கினர்.
பிரசன்னா தங்கையை அழைத்து.. “பசுபதியை டிரெஸ் சேன்ஜ் செய்ய சொல்லேன்.. ப்ரீயா இருக்கட்டுமே” என்றான்.. அவனின் லாப்பில் வேலை பார்த்துக் கொண்டு.
நந்தித்தா “நீயே சொல்லேன்..” என்றவள் நிற்காமல் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டாள்.
அவளின் கணவன்.. வீட்டின் வெளியே நின்றுதான் போன் பேசிக் கொண்டிருந்தான்.. மனையாள் செல்லுவதை பார்த்துவிட்டு, மீண்டும் தன் பேச்சினை தொடர்ந்தான்.
நீண்ட பேச்சுதான். அரைமணி நேரம் சென்றும்.. மனையாள் மேலே வராததை பார்த்துவிட்டு, கீழே பார்வையை ஓட்டினான். எங்கும் காணவில்லை.. எங்கே போய்விட்டாள்.. என எண்ணிக் கொண்டே கீழே வந்தான்.
ஒரு பார்க் ஏரியா இருந்தது.. அவ்வளவு பராமரிப்பில்லாமல் இருந்தது. அங்கே காணவில்லை அவளை.. எங்கே என பின்பக்கம் தேடினான். பின்பக்க.. கம்போன்ட் அருகே இருந்த ஒரு சப்போட்டா மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு, போனினை பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய மரங்கள் அந்த காம்பவுண்ட் அருகே. நிழலாக இருந்தது. ஆங்காங்கே சிமென்ட் பென்ஞ்ச். அதன் ஒன்றில் தனியே நந்தித்தா அமர்ந்திருந்தாள்.
பசுபதி மனையாளின் அருகே வந்து அமர்ந்தான்.
பெண்ணவளுக்கு முதலில் அச்சம்.. பின் கணவன்தான் உணர்ந்து அமைதியானாள்.
பசுபதி “ஏன் என்னாச்சு.. நான் வந்தது டிஸ்டர்ப்’பா இருக்கா” என்றான், தடுமாற்றமான குரலில்.
பெண்ணவள் என்ன பதில் சொல்லுவது என யோசித்தாள்.. ஆமாம் என சொன்னாலும் அவனுக்கு சாதகமாகும்.. இல்லை என சொன்னாலும் ‘அப்போ, என்னை எதிர்பாத்து இருந்திருக்க’ என்பான்.. ஆக எப்படி சொன்னாலும், அவனுக்கு சாதகமாகும் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
பசுபதி “ஆனால், நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற” என சொல்லி நிறுத்திக் கொண்டான்.
மனையாளுக்கு கண்களில் நீர் சேர்ந்துக் கொண்டது.. இன்னும் எதோ சொல்லுவான் என எதோ பெண்ணவள் எதிர்ப்பார்த்திருப்பாள் போல.. கணவன் ஏதும் பேசாமல் அமரவும்.. தானும் அப்படியே அமர்ந்துக் கொண்டாள்.
இருவருக்கும் மனம் தளும்பி நிற்கிறது.. வார்த்தைகள் கொண்டு இருவருக்கும் பேச தெரியவில்லை.
பசுபதி “க்கும்.. என் கூட பெங்களூர் வரியா.. உனக்கு ஒருவரை அறிமுகம் செய்கிறேன்” என்றான்.
நந்தித்தா கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அமர்ந்தாள்.. நிமிர முடியவில்லை.. ‘யாரை அறிமுகம் செய்யணும்.. இப்போ..’ என யோசிக்கவே பயமாக இருந்தது.
பசுபதி “அவ ஒருத்திதான் பிரச்சனை.. வேவ்வேற நம்பரிலிருந்து கூப்பிட்டுட்டே இருக்கா. இன்னும் ஏதாவது பிரச்சனை வந்தே தீரும். எவ்வளவு சொன்னாலும் கேட்பதேயில்லை.. ஒருமாதிரி இர்ரிட்டேட் ஆகுது. அதான் அவங்க அப்பாவை பார்த்து பேசலாம்ன்னு நினைக்கிறேன். உன்னோடு போகணும்ன்னு நினைக்கிறேன்” என்றான்.
மனையாள் “அதெல்லாம் வர முடியாது. எல்லாத்தையும் இழந்தது நான்தான், திரும்பவும் அங்கே வந்து யார் முகத்தை பார்க்கணும். நீங்களாச்சு, உங்க எக்ஸ் ஆச்சு.. என்னை விடுங்க” என்றாள்.
பசுபதி “அப்போ, எனக்கு ஏதாவது என்றால்.. உனக்கு ஒன்னுமில்லையா” என அவனே வாய் கொடுத்து மாட்டிக் கொண்டான்.
மனையாள் திரும்பி நேருக்கு நேராக கணவனை பார்த்தாள் “எனக்கு அப்படிதான் எதோ ஆகியிற்று.. அதுவும் உங்களால்தான் ஆகிற்று. உங்களுக்கு அப்படி ஒன்னும்.. எனக்கு வலித்த போது.. வலிக்கவில்லையே.. ஏன்? என்னை திரும்பி கூட பார்க்கவில்லையே” என்றாள், அதிகாரமாக கேட்டாள் மனையாள்.. அவளுக்கு மனதை உறுத்திக் கொண்டே இருகிறது. கணவனிடம் பேசவேண்டும் என எண்ணினாலும்.. அவனின் பாராமுகம் அவளை வதைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு வடிகாலாக அவன் மன்னிப்பினை கோரவில்லை. அதனாலோ என்னமோ ரணம் ஆழமாக சென்றுக் கொண்டே இருக்கிறது. இப்போது கணவன் கேட்க்கும் போது.. வார்த்தையில் வீரியம் வருகிறது பெண்ணுக்கு.
கணவன் புரிகிறது என தலையசைத்தான். எப்படி விளக்கினாலும் அது சமாளிப்புதானே. எனக்கு, அப்போது ஏதும் தோன்றவில்லை.. அவளின் கடந்தகாலம் பற்றி பேசிய.. எனக்கு, நான் பயந்தது போல நடந்ததுவிட்டது.. என புரிகிறது. பதிலில்லை இப்போது.
பசுபதி “நந்து.. சாரி நந்து சாரி எக்ஸ்ட்ரிம்லி சாரி.. எனக்கு அதை பேசவே ஒருமாதிரி ஆக்வ்வோட இருக்கு. நான் எப்படி அப்படி ரியாக்ட் செய்துன்னு நினைக்கும் போது.. என்னையே என்னால் மன்னிக்க முடியலை நந்து..” என பெண்ணவளை பார்த்து பேசாமல்.. தரையையும் வானத்தையும் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான்.
நந்தித்தா “ஹப்பா.. நல்லவரில்ல நீங்க.. எப்படி எல்லாம் பேசுறீங்க. என்ன.. டிராமா இது. என்னை சொல்லுவீங்களே.. டிராமான்னு.. என்னோட லவ் டிராமான்னு.. நான் பர்த்டே செலேபெரெட் செய்தா டிராமா.. இப்போது நீங்க சொல்றது எல்லாம் டிராமால்ல வராதில்ல.. உங்களுக்கு மட்டும்தான் பீலீ…ங்க்ஸ்..” என்றாள், அவனின் அலட்சியம்.. ம்.. அப்போது மனையாள் அப்படிதானே நினைத்தாள்.. அலட்சியம் தானே.. இப்போது வரை.
பசுபதி தலையை இரு கைய்களாலும் மாற்றி மாற்றி கோதிக் கொண்டான்.. எதிர்பேச்சு பேசமுடியவில்லை.. சாஷ்ட்டங்கமாக காலில் விழுந்து விடலாம்.. ‘எப்படியாவது மன்னிச்சிடு’ எனதான் எண்ணம். இந்த பேச்சுகளை கேட்க்க முடிவில்லை.. முன்பிருந்த மௌனம்.. என்னால், அவள் அவஸ்த்தைபடும் போது.. என் துக்கம்தான் பெரிது என நான் இருந்த நிலை.. அவளை பார்க்காதது.. பேசாதது.. எல்லாம் என் தவறுதானே. அதற்கான தண்டனையும் ஏற்கத்தானே வேண்டும் என நின்றான்.
நான் உன்னை கொண்டாடுவது போல நீயும் என்னை கொண்ட வேண்டும் என.. ஒரு கணவன் மனைவி உறவு எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி உறவு வரையறைக்கு அப்பார்ப்பட்டதுதானே. சிலரின் இயல்பு அதிகமாக தனது துணையை நாடுவது.. சிலரின் இயல்பு எதற்கும் துணையை சாராமல் இருப்பது. சிலரின் இயல்பு இருவரும் புரிதலோடு.. பேசிக் கொண்டும் உணர்ந்துக் கொண்டும் செயல்படுவது. வேவ்வேறு பரிணாமங்கள்.. உண்டு, இந்த உறவில். இங்கே ஓவ்வொரு கோணமாக பரிசீலக்கபடுகிறதே தவிர.. ஒத்துக் கொள்ளப்படவில்லை.
நந்தித்தா வார்த்தைகளையும் உணர்வுகளையும் கொட்டிவிட்டு.. இப்போது கணவனின் மௌனத்தில் திருப்தி கொண்டவள்.. எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
பசுபதி அமைதியாக மேலே வந்தான்.. மனையாள் வார்த்தையால் வதைத்திருக்கிறாள்.. அவளின் அன்பு டிராமாவாக தெரிந்தவனுக்கு.. இப்போது.. இந்த கோவம் உண்மையாக தெரிந்தது.. ம்.. உணர முடிந்தது. உணர்தலில்தான் ஒரு உறவினை தக்க வைக்க முடியும். புரிதலில்தான் ஒரு உறவினை சிக்கலில்லாமல் கொண்டு செல்ல முடியும்.
மதிய உணவு உண்டான்.. பெரியவர்களோடு. சற்று நேரம்.. பிரசன்னாவோடு பேசிக் கொண்டே இருந்தவன்.. ஹாலில் அப்படியே உறங்கிவிட்டான்.
ஐந்து மணிக்கு பெரியவர்கள் கிளம்பினர் ஊருக்கு. பசுபதி பிரசன்னாவினை தன்னோடு சென்னை கூட்டி செல்லுகிறேன் என்றுவிட்டான்.
அதனால், மூவரும் அமர்ந்து சற்றுநேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். பசுபதிக்கு டிவியில் மனது செல்லவில்லை.. போனோடு வெளியே செல்லுவதும் பேசுவதுமாக இருந்தான்.
பிரசன்னா, தன் வருங்கால மனைவிக்கு போனில் பேச எண்ணி.. போனோடு கீழே சென்றுவிட்டான்.
பசுபதி போன் பேசி முடித்துவிட்டு, உள்ளே வர.. மனையாள் மட்டும் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் சாமிக்கு முன்.
பசுபதி, வந்து சோபாவில் அமர்ந்தான்.
எதோ பெண்ணவள் முனுமுனுவென கைகூப்பி பேசி.. சாரி.. சொல்லிக் கொண்டிருந்தாள்.. என்னதான் சொல்லுவாள்.. கேட்ப்பாள்.. என கணவனின் மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்ணவள் கண் திறந்ததும்.. டிவியை பார்ப்பது போல அவனின் பார்வை மாறியது.
நந்தித்தா கிட்சேன் சென்றுவிட்டாள்.. போல, அவளை காணோம். சற்று நேரம் சென்று.. இரு கப்’களோடு வெளியே வந்தாள். டீபாய் மேல் ஒரு கப் காபி வைத்து விட்டு.. தனக்கென ஒன்றை எடுத்துக் கொண்டு.. பால்கனிக்கு சென்றுவிட்டாள்.
கணவன் தன்னிடம் ஏதும் சொல்லாமல் செல்லும் அவளையே விழிகளால் பின் தொடர்ந்தான்.. தானும் அந்த காபியோடு.. எழுந்து அவளின் அருகே வந்து நின்றுக் கொண்டான்.. “கிளைமேட் நல்லா இருக்குல்ல” என்றான்.
மனையாள் “ம்..” என்றாள் ஆமோதிப்பாக.
பசுபதி ஒரு சிப் காபி எடுத்துக் கொண்டு “நீ நம்ம வீட்டில் வைத்திருந்த பால்கனி செடியெல்லாம் வாடி போச்சு..” என்றான்.
நந்தித்தா ஏதும் பேசாமல் நின்றாள்.
பசுபதி “க்கும்.. நான் காலேஜ் படிக்கும் போது, திவ்யாவை பார்த்தேன். உண்மையை சொல்லனும்ன்னா.. என்னோட கிளாஸ்மெட்.. நல்லா படிக்கிற பெண்.. இயல்பாகவே இருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது போல.. வகுப்பில் அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.. இது காரணம்.. இப்படிதான் தொடங்கியது என பெரியதாக இல்லாமல்.. எங்களின் நட்பு தொடங்கியது.. அப்படியே, மூன்றாம் வருடம் காதல் என அறிவித்துக் கொண்டோம்.. படிப்பு முடியவும்.. அவளுக்கு திருமணம் பேசினார். அவள் வீட்டில் அவள் எங்களின் நிலையை சொல்லிவிட்டாள்.
அதன்பின் அவர்கள் எங்கள் வீட்டில் வந்து மிரட்டி.. என்னை அம்மா வரவழைத்து.. ‘இனி திவ்யாவிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன்’ என கையெழுத்து இடவைத்து.. வாங்கி சென்றனர்.
அத்தோடு அவள் எண்ணை மாற்றிவிட்டனர். நானும் டெல்லியில் இருந்தேன்.. அப்படி இப்படின்னு இந்த ட்ரிங்க்ஸ் பழக்கமும் ஒட்டிக் கொண்டுவிட்டது.. அப்படியே சென்னை வந்துட்டேன்.
எனக்கு தயக்கமா இருந்தது.. மேரேஜ் லைப்’பில் பிடிப்பு இருக்கவில்லை அப்போது. அத்தோட, உன்னை எனக்கு முன்பே தெரியும்.. நீ ஆனந்தனின் பிரென்ட். ஸ்கூல் டேய்ஸ்’சில்.. இருந்தே அப்படிதானே.. அதுவேற எனக்கு ஒருமாதிரி இருந்தது. என்கிட்டே இதுக்கு மேலே விளக்கம் சொல்ல தெரியவில்லை நந்து.” என படபடவென சொல்லிவிட்டான், பாரம் இறங்கியவன் போல.. அமைதியாக நின்றான்.
பசுபதிக்கு, வார்த்தையை கோர்க்க தெரியவில்லை போல.. தன்னுடைய இன்றைய நிலையை பற்றி சொல்லவில்லை அவன். ஏனோ அமைதியாகிவிட்டான்.
நந்தித்தா “இப்போ எதுக்கு இதெல்லாம். எனக்கு இதெல்லாம் இப்போ அவசியமான்னு தோணுது. எனக்கு உண்மையாகவே தெரியலை இப்போ நான் எப்படி ரியாக்ட் பண்ணும்ன்னு” என்றாள் ஏதும் பாதிப்பில்லா குரலில்.
பசுபதிக்கும் எப்படி இவளை நேர் செய்வதென தெரியவில்லை. மீண்டும் சென்று அமர்ந்துக் கொண்டான்.