“ஏதோ பெர்சனல் மேட்டராம். பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க சார். நான் இப்போவே வர சொல்லட்டா?” என்றவன் ஆர்வமாக கேட்க, ‘இவன் ஒருத்தன்!’ என்று நெற்றில் தட்டி கொண்ட சத்யன்,
“சரி வர சொல்லு…!” என்று ஒப்பு கொண்டு தன் சேரில் சென்று அமர, சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு ஜீன்ஸ் மற்றும் க்ராப் டாப் அணிந்த மார்டன் யுவதி ஒருத்தி உள்ளே வருவது தெரிந்தது.
அவளை கேசுவலாக நிமிர்ந்து பார்த்த சத்யன், ஆள் யாரென்று தெரிந்ததும் முகம் மாறி போனான். அவள் தான் போன வாரம் பெண் பார்த்து விட்டு வந்து, நேற்று பிடிக்கவில்லை என்று கலட்டி விட்ட ராஜேஸ்வரி.
பெயர் தான் ஓல்ட் பேசன்… பெண்ணோ பயங்கர மார்டன். கண்ணிலே கால்குலேசன் செய்யும் பேர்வழி. முதல் தடவையே, “even though my name is ராஜேஸ்வரி, யூ ஜஸ்ட் கால் மீ ஜே!” என்று அவனுக்கே ஆர்டர் போட்டாள்.
அதிலே இவனுக்கு மூட் ஆப் ஆகி விட்டது. சத்யனுக்கு தைர்யமாக இருக்கும் பெண்களை பிடிக்காது என்று இல்லை. எனினும் பெண்ணிடம் ஒரு மென்மையும், பழக எளிமையான குணமும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்.
மிஸ். ராஜேஸ்வரியிடம் அது இரண்டும் மொத்தமாக மிஸ்ஸிங். ஒருவேளை அது இருந்து இருந்தாலும் அவன் நோ தான் சொல்லுவான். அது வேறு விஷயம்.
எப்படியோ அவன் நோ சொல்லுவதற்கு அவள் குணம் ஒரு நல்ல காரணமாக கிடைத்து விட்டது. இருந்தும் இப்பொழுது எதற்க்காக வந்து இருக்கிறாள் என்று புரியாமல், அவன் கேள்வியாக பார்க்க, “கேன் வீ டாக்?” என்றாள் நேராக.
சத்யன் பதில் சொல்லாமல் நேராக சேரை காட்ட, ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாமல் வந்து அமர்ந்தாள். “சொல்லுங்க மிஸ்… ராஜேஸ்வரி…!” என சத்யன் வேண்டும் என்றே அவள் பெயரை நீட்டி இழுத்து சொல்ல, அவள் முகத்தில் கடுப்பு நன்றாகவே தெரிந்தது.
“ஐ வான்ட் ஆன்சர். எதுக்காக எனக்கு நோ சொன்னீங்க?” என்றவள் புருவம் உயர்த்த, சத்யன் அவளை தலை சாய்த்து பார்த்தான். அவள் தைரியத்தை பாராட்டலாம். ஆனால் அந்த இடத்தில் சத்தியமாக மனதில் பதியவில்லை.
‘நீ எப்படி என்னை ரிஜெக்ட் பண்ணலாம்?’ என்ற திமிர் தான் வெளிப்படையாக தெரிந்தது. சத்யனும் மழுப்பாமல், “ஏன்னா உன்னை எனக்கு பிடிக்கல!” என்றிருந்தான்.
“அதான் ஏன்…?” அவளும் விடுவதாக இல்லை.
“பிடிச்சதுக்கு காரணம் கேட்டா சொல்லலாம். பட் பிடிக்கலைன்றதுக்கு பிடிக்கலன்ற காரணத்த தான் சொல்ல முடியும்!” என நக்கலாக இதழ் வளைக்க, அவனை ஒருநிமிடம் அசராமல் பார்த்தவள்,
“வெல்… யூ ரூயின்ட் மை பெஸ்ட் சான்ஸ்!” என எழுந்து திரும்பி நடக்க, சத்யன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் ராஜேஸ்வரி கிளம்பி விட்டதை பார்த்து தினேஷ் ஓடி வந்தான். “சார் சார்…. என்ன அந்த பொண்ணு ரொம்ப கடுப்பா போற மாதிரி தெரியுது? என்ன ஆச்சு. எதுக்கு உங்கள பார்க்க வந்தாங்க?” என்றவன் அவ்வளவு அக்கறையாக கேட்க, சத்யன் தன் சேரில் நன்றாக சாய்ந்து கொண்டு,
“ஒன்னு பண்ணுவோமா தினேஷ்?” என்று கேட்க, “என்ன சார் பண்ண போறோம்?” என்றான் தினேஷ் வேகமாய்.
“நீ என்ன பண்ணுற… இப்படியே என் பக்கத்துல ஒரு சேரை போட்டு உட்கார்ந்துக்கோ. நான் என்ன பண்ணுறேன்? யார்கிட்ட பேசுறேன்? எல்லாத்தையும் பார்த்துட்டு வெளிய போய் போரணி பேசு!” என்று கலாயித்து விட தினேஷ் பாவமாக பார்த்தான். சத்யன் தொடர்ந்து,
“நல்லவேள நீ பொண்ணா இல்ல. இல்லேன்னா என் பொண்டாட்டியோன்னு நானே சந்தேகமாகி இருப்பேன்!” என சிரிக்காமல் கூற, “இதுக்கு மேல அவமான பட முடியாது!” என தினேஷ் வெளியே ஓடி விட்டான்.
“சரியான கிழவி டைப்!” என்றவன் தினேஷை மேலும் கிண்டல் பண்ணி கொண்டிருந்த நேரத்தில் ஒரு கால் வந்தது. பல்லி என்ற பெயரோடு இருந்த நம்பரை பார்த்தவன், “சொல்லுங்க பல்லி… இன்னிக்கு எந்த ஏரியால சுத்திட்டு இருக்கீங்க?” என்றான் அட்டன்ட் பண்ணியவுடனே. இதனால் அந்த பக்கம் புருவம் சுருக்கிய க்ரிஸ்டி,
“எல்லா நாளும் உங்கள மாதிரி தெரு பொறுக்க முடியாது எஸ்.பி சார். எனக்கு பிள்ள குட்டிங்க இருக்கு!” என்று நினைவுபடுத்த,
“இது பெண்களுக்கு சப்போர்ட் பண்ணுற உலகமா இருக்கலாம். க்ரிஸ்டி… பட், என் சப்போர்ட் உன் வீட்டுகாரருக்கு தான். உன் கொடுமை எல்லை கடந்தா எஸ்பி ஆபிஸ்க்கு தாராளமா வந்து கம்ப்ளைன்ட் தரலாம்ன்னு சொல்லு…!”
அவன் லொள்ளில் கடுப்பான க்ரிஸ்டி, “அப்படியே டிவோர்ஸ் கூட வாங்கி கொடுத்துடேன்!” என்று எகிற, “மை ப்ளஸர்…!” என்று மேலும் சீண்டினான்.
“யப்பா… உன்கூட பேசி ஜெயிக்க முடியுமா? நான் சொல்ல வந்த விஷயத்த சொல்லிட்டு கிளம்புறேன். நெக்ஸ்ட் மந்த் நாலாந்தேதி நம்ம பேட்ச் பசங்க எல்லாம் ஒரு கெட்டுகெதர் மாதிரி ஹோட்டல் மயூரில மீட் பண்ணலாம்ன்னு சொல்றாங்க. நீ என்ன சொல்ற…?” என்று கேட்க, சத்யன் சலிப்பாக கேட்டான்.
“நான் என்ன சொல்ல…?”
“டேய்… நீ வரியா இல்லையான்னு கேட்குறேன். நீ வந்தா நானும் போவேன்….!” என்று க்ரிஸ்டி சொல்ல, சத்யன் யோசிக்காமல் கேட்டான்.
“அவன் வரானா…?”
“எவன்?” என்று க்ரிஸ்டி தெரிந்தே இழுக்க, சத்யன் செருமினான்.
“அவன் தான்…!”
“ஓ வம்சியா.. அவர இன்னும் நீங்க மறக்கலையா எஸ்பி சார்?” என்று க்ரிஸ்டி சிரிக்க, சத்யனின் முகம் இங்கே இறுகியது. மறக்க கூடிய மனிதனா… இல்லை மறக்கும்படி தான் அவர்கள் கடந்த காலம் இருந்ததா என்று பின்னால் வாய்ஸ் ஓவர் செல்ல,
“அப்படி எல்லாம் இல்ல… சும்மா தான் கேட்டேன். அவன் வந்தா நான் வர மாட்டேன்!” என சத்யன் சொல்ல, க்ரிஸ்டி கடுப்பாகி விட்டாள்.
“இதெல்லாம் ஓவர் சத்யன். எப்பையோ நடந்த பிரச்சனைய எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு சின்னபிள்ள தனமா பண்ணிட்டு இருக்காத. அன்ட் அவனும் பாவம் தான். மொத்த ட்ரீம்சயும் பேமிலி ப்ராப்ளம்ன்னால தொலைச்சிட்டு இப்போ ஆளே மாறி போயிட்டான். ஆனா நீ இப்பவும் பழைசை மனசுல வச்சுட்டு அவனை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்காத… உனக்கு எதிரி ஆகுறதுக்கு முன்னாடி அவன் தான் உன் உற்ற நண்பன். மறந்துடுச்சா?” என்று கேட்க, சத்யன் பெருமூச்சு விட்டான்.
“அதெல்லாம் பேசாத அவன் வந்தா நான் வரல!” என்றவன் அதிலே நிற்க, க்ரிஸ்டி பொறுமை பறந்தது.
“சாமி…. வம்சி வர வாய்ப்பு இல்லைன்னு கிஷோர் சொல்லிட்டு இருந்தான். அவனுக்கு இப்போ தான் ரீசண்ட்டா மேரேஜ் ஆச்சாம். சிவங்கை மாவட்டத்துல வொர்க் பண்ணுறதால அடிக்கடி சென்னை வர்றது இல்லையாம்!” என்று சொல்ல, சத்யன் உடனே, “அப்போ நான் வரேன்!” என்று ஒப்பு கொண்டான்.
“உன்னை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள மீனுக்கு பறக்க சொல்லி கொடுத்துடலாம் போல… சரி மறந்து தொலைச்சுறாத. உன்கூட பெண்டாட்டி மாதிரி தினேசுன்னு ஒரு கேரக்டர் சுத்துமே… அவன்கிட்ட சொல்லி நியாபகப்படுத்த சொல்லு…. நான் வைக்கிறேன்!” என்றவள் போனை வைக்க,
‘என்ன நம்மள மாதிரி தான் எல்லாம் நினைக்கிறாங்க போல… முதல்ல அந்த வெட்டு கிளிய கட் பண்ணி விடனும்!’ என்று சத்யன் நினைத்து கொண்டான்.
*****
“என்னங்க… இதெல்லாம் ரொம்ப ஓவர்… விட்டா புக்ஸ் கூட குடும்பம் நடத்த சொல்லுவீங்க போல… ப்ளீஸ்ங்க இன்னும் பத்து நிமிஷம் மட்டும் தூங்கிக்கிறேன்!” என்று அரை தூக்கத்தில் புலம்பிய மனைவியை தூக்கி விட்ட வம்சி,
“வாணிம்மா… மார்னிங் படிச்சா எல்லா கான்சப்ட்டும் சட்டுன்னு மனசுல பதிஞ்சிடும்டா. பத்து நாளைக்கு ரெகுலரா எந்திரி… அப்பறம் கஷ்டமா இருக்காது!” என்று ஈசியாக சொல்ல, ‘இதுக்கு நான் ஹவுஸ் வொய்ஃபாவே இருந்துப்பேன்!’ என்று மனதில் புலம்பிய பவானி, வெறுப்பாக சென்று முகம் கழுவி வந்து படிக்க அமர்ந்தாள்.
கடந்த சில நாட்களாகவே இந்த கூத்து தான் நடந்து கொண்டிருக்கிறது. பவானி டெட் எக்ஸாம் பாஸ் பண்ணிவிட வேண்டும் என்று அவளை விட வம்சி முனைப்பாக இருந்தான்.
“வாணிம்மா… காஃபி!” என்றவன் அவள் தூங்கி வழிய கூடாது என்று முன்னேற்பாடு கூட செய்து விட, பவானிக்கு ஐயோ என்றானது. “இவரு எனக்கு புருசனா இல்ல கோச்சிங் மாஸ்ட்டரா?” என்று ரத்த கண்ணீர் விட்டவள், வேறுவழியில்லாமல் படிக்க ஆரம்பிக்க, அவன் காலை டிபனை பார்த்து கொண்டான்.
அடிக்கடி வந்து என்ன படித்தாய் என்றவன் செக்கும் பண்ண, “எனக்கு இந்த வெர்சன் பீம பிடிக்கவே இல்ல!” என்று முகத்தை சுருக்கிய பவானி,
“சொல்லி கொடுக்குறத விட படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கே. வயசாகிடுச்சு போல!” என்று நினைத்து கொண்டாள்.
ஐந்து மணியில் இருந்து ஏழரை வரை படித்தவள், கிச்சனுக்கு சென்று “ஏங்க போர்சன்ல ரெண்டு டாபிக் கவர் பண்ணிட்டேன். நீங்க போய் கிளம்புங்க… நான் உங்களுக்கு மதியம் குக் பண்ணுறேன்!” என்று சொல்ல அவனோ திடீரென கேட்டான்.
“உனக்கு படிப்ப விட்டுட்டு பாதில எழுந்து வந்து சமைக்க கஷ்டமா இருக்கும்ல வாணி… நான் வேணா, உனக்கு எக்ஸாம் முடியுற வரைக்கும் வெளிய சாப்ட்டுக்கவா… ?”
அவன் கேள்வியில் மிகவும் கடுப்பாகி போனவள், “ம்ம்… வெளிய சாப்ட்டுக்கங்க… அப்பறம் வெளியவே தங்கிக்கங்க…. அப்பறம் உங்களுக்கு பெண்டாட்டின்னு ஒருத்தி இல்லவே இல்லைன்னு நினைச்சுக்கோங்க!” என்று புலம்ப ஆரம்பிக்க,
“வாணி…. என்கூட சண்டை போடுறியா?” என்று வம்சி அமியூஸ்மென்ட்டாக கேட்டான். அதில் தடுமாறிய வாணி, “சண்டையா… அச்சசோ அதெல்லாம் இல்ல… நான் சும்மா தான் சொன்னேன்!” என்று வேகமாய் மறுக்க, வம்சி சட்டென அவள் முகத்தை இருகைகளாலும் பற்றி கண்ணோடு கண் கலக்க விட, பவானி அப்படியே ஊமையாகி போனாள்.
“என்ன பேச்சையே காணோம்?” என்றவன் புருவம் உயர்த்த, “இப்படி பிடிச்சு இருந்தா எப்படி பேசுறதாம்?” என்று தனக்கே கேட்காத குரலில் மனதில் சொல்லி கொண்டாள் பவானி.
“நீ இப்படி உரிமையா சண்டை போடுறது ரொம்ப பிடிச்சு இருக்கு வாணி… இன்னொரு தடவை திட்டுறியா?” என்றவன் ஆசையாக வேறு கேட்க, “ஏதே திட்டுனேனா… அதெல்லாம் திட்டுலையே வராது மை லார்ட்!” என்று பவானி நினைத்து, மெதுவாய் அவனிடம் இருந்து விலக முயல, அவன் அதிரடியாக இழுத்து அணைத்து கொண்டு விட்டான்.
அதில் மேலும் சிலையாகி போனவள், கணவனின் அணைப்பில் கட்டுண்டு போக, அவனோ உச்சில் முத்தமிட்டு சிரித்தபடி, “என் சொக்க தங்கமே! சரியா சண்டை கூட போட தெரியலடி உனக்கு!” என்று முதல் முறையாக உரிமையாக டி போட்டு பேசி இருக்க, பவானிக்கு ஒருமாதிரி புல்லரித்து விட்டது.
“வாணிம்மா…!” என்று அன்பாக அழைத்த பொழுதெல்லாம் கிடைக்காத நெருக்கம் தற்பொழுது கிடைத்து விட்டதாய் தோன்ற, “என்னை என் வீட்டுகாரர் டி போட்டு கூப்பிட்டாரு!” என்று ஊரெல்லாம் போய் கத்த வேண்டும் போல அசுர வேகம் எழுந்தது.
“இன்னொரு தடவை சொல்லுறீங்களா…?” என்றவளும் வம்சியை வெட்கம் விட்டு கட்டி கொள்ள, அவன் இன்னும் சிரித்து, “என் சொக்க தங்கம் வாணிம்மா நீ!” என்று இன்னும் இறுக்கம் கொடுக்க, “அதில்லைங்க… இன்னொரு முறை டி போட்டு சொல்லுங்களேன்!” என்று பெண்ணவள் அவன் மார்பில் புதைந்து கொள்ள வம்சி கமுக்கமாய்,
“ஒருதடவை மட்டும் போதுமா…?” என்று கேட்க, “இல்ல இல்ல இனி அப்படியே கூப்பிடுங்க…!” என்று ஆணையிட்டாள் மனைவி.
“ஆகட்டும் மிஸ் பெண்டாட்டி!” என்று அவள் இடையில் அழுத்தம் கொடுத்தவன், “வாணி இங்க பாரேன்!” என்று அழைக்க, அவளும் நிமிர்ந்தாள். சரியாக அவள் சுதாரிக்கும் முன்பே, தீண்டியும் தீண்டாமலும் இதழ் முத்தம் கொடுத்து விட்டவன், மனைவியின் இதயம் நொடியில் ராக்கெட் வேகம் எடுப்பதை கண்டு, அவள் நெஞ்சு குழியிலும் அழுத்தமாய் முத்தமிட்டு அதிர விட, பவானிக்கு மயக்கமே வந்து விட்டது.
கணவனாகவே இருந்தாலும், முதல் முறை அந்தரகங்கம் பகிர படுவதில் அத்தனை கூச்சமும் நடுக்கமுமாய் இருக்க, நடுங்கிய கைகளை கெட்டியாக்க அவன் தோள்களை பற்றி கொண்டாள்.
“வாணி… யூ ஆர் மேகிங் மீ mad!” என்று கிறங்கிய குரலில் உரைத்தவன், அவள் கழுத்தில் இதழ் பதிக்க போன நேரம குக்கர் விசில் இருவரையும் ரியாலிட்டிக்கு கொண்டு வந்து விட, இப்போ என்ன ஆச்சு என்ற ரீதியில் கணவன் மனைவி இருவரும் முழித்தார்கள்.
“நா… நான் மதியத்துக்கு எடுத்து… இல்ல… மதியத்துக்கு சமைக்கிறேன்!” என்று பவானி நழுவ முயல, வம்சி அவள் கையை பற்றி இருந்தான். ‘ஐயோ இவருக்கு இன்னிக்கு என்ன ஆச்சு…?’ என்று பவானிக்கு முகம் சிவக்க, வம்சி அவள் முகம் நிமிர்த்தி,
“நான் போர்ஸ் பண்ணுறேனாடி?” என்று சற்றே கில்ட்டியாக கேட்க, பவானி இதுக்கு மேல முடியாதுடா சாமி என்று நினைத்து, கஷ்டபட்டு எக்கி நின்று, கணவன் கொடுத்தது போலவே பட்டு முத்தம் ஒன்றை அவன் இதழில் கொடுக்க, வெட்கப்படுவது ஆடவன் முறையாகி போனது.
“எனக்கு உங்க லவ் வேணும் வம்சி… அதே போல… எல்லாமும் வேணும்!” என்று பவானி தன் மனதை திறந்து காட்ட, வம்சி அகம் மலர்ந்து, மீண்டும் முத்தமிட முன்னேறிய நேரம், “இதோட உங்க மார்னிங் ரோமான்ச நிறுத்திட்டு போய் பொழப்ப பாருங்கடா!” என்று மறுபடியும் விசில் கத்தி கூச்சலிட்டது.