தலைகீழ் நேசம்

11

அன்று இரவில்.. ஆனந்தனிடமிருந்து பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாய்ஸ் மெசேஜ் வந்தது. “ ஹாப்பி பர்த்டே கௌபாய். அண்ணா, நான் ஊருக்கு கிளம்பும் போது உங்களை அழைத்தேன்.. ஏனோ, உங்களுக்கு அழைப்பே செல்லவில்லை. நீங்களும், நான் இந்தியா வந்து சென்ற பிறகு, என்னிடம் பேசவில்லை. ஏன் எனக்கிட்ட நீங்க பேசவில்லை. எனக்கு உங்ககிட்ட பேசணும் போல இருக்கு.. கூப்பிடட்டுமா” என ஒரு குரல் வழி செய்தி வந்தது.

எப்போதும் போல.. காலை வொர்க்அவுட் முடித்து.. இன்றுதான் மனையாளோடு நேருக்கு நேராக அமர்ந்து.. காபி பருகி முடித்து. அவள் அந்த காபி கப்’புகளை கழுவி வைக்க.. இவன் உடன் நின்றுக் கொண்டிருந்தான். அப்போதுதான் போனில், ஆனந்தனின் செய்தியை பார்த்தவன். அப்படியே ஏதும் சொல்லாமல் தனதறைக்கு சென்றுவிட்டான்.

நேற்றிலிருந்து.. 80% முடிவுக்கு வந்திருந்தான். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ள வேண்டும்.. என் மனையாளை நான் ஏன் ஆராய வேண்டும்.. இவ்வளவு அருகில் இருந்து பார்த்திருக்கறேன்.. என்ன குறை அவளிடம். கடந்ததையே நான் ஏன் நினைத்திருக்க வேண்டும்.. அதன்போக்கில் வாழ்ந்திட வேண்டும்.. என முடிவெடுத்திருந்தான்.

இப்போது இந்த ஆனந்தினின் செய்தியை பார்த்ததும் மீண்டும்.. அவர்களின் பழைய கதைகள் எல்லாம் நினைவிற்கு வந்தது. முகமும் மனமும் இறுகி போகிற்று. என்னதான் நினைக்கிறேன் நான்.. என்னதான் வேண்டும் எனக்கு.. என அவனுக்கே குழப்பம்.

அலுவலகம் கிளம்பி சென்றான்.

இன்று இரவு, இந்த மாத பப் கோட்டாவினை வெற்றிகரமாக கொண்டாடினான் போல.. இன்னும் வீடு வரவில்லை பசுபதி.

நந்தித்தாவிற்கு, நேரம் ஆக ஆக.. புரிந்து போனது, கணவன் இன்று ட்ரிங்க் செய்ய சென்றிருப்பான் என. இந்த நாட்களில் கணவன் குறித்து வராத கண்ணீர் இன்று அவனுக்காக காத்திருந்ததில் துளிர்த்தது. 

உண்டாள்.. தானே வேண்டியதை எடுத்து போட்டுக் கொண்டு உண்டாள். கணவனுக்கு என ஏதும் மீதம் வைக்காமல் உண்டாள்.

நந்தித்தாவிற்கு மீண்டும் மீண்டும் அவளின் நேசமே அதிகமானது.. ‘இன்னும் என்ன செய்ய வேண்டும் நான்.. புரியவில்லை’ என எண்ணிக் கொண்டே உண்டாள். ‘காலையில்தான் புன்னகையோடு என்னோடு நின்று பேசிக் கொண்டிருந்தார்..’ என அழுகையாக வந்தது. முன்பு கொஞ்சம் தைரியமாக இருந்தவள், கணவனின் கண்களில் நேற்று காலையில் லேசான மாற்றத்தை பார்த்திருந்தவளுக்கு, இந்த தாமதம் பூஞ்சையான மனநிலையை கொண்டு வந்தது. 

உண்டு முடித்து  நந்தித்தா மேலே சென்றதும், பசுபதி வந்து சேர்ந்தான். 

பசுபதி அறைக்கு வந்ததும், விளக்கினை ஒளிர்ப்பித்தான். நந்தித்தா கலக்கத்தில்தானே உறங்க முற்பட்டுக் கொண்டிருந்தாள்.. அதனாலோ என்னமோ உடனே கண்விழித்தாள்.

பசுபதி “தூங்கிட்டியா..” என்றான் உடைகளை தளர்வாக்கிக் கொண்டே. எப்போதும் இவள் இருக்கும் போது, அவன் எந்த தனிப்பட்ட செய்கைகளையும் செய்யமாட்டான். இன்று நந்தித்தாவிற்கு பயமானது.. கணவனின் அன்பு வேண்டுமென்று எண்ணினாலும், ஒரேநாளில் வேண்டுமெனவோ.. புரிந்துக் கொள்ளபடாத வாழ்க்கையையோ அவள் வேண்டவில்லை. எனவே, விழிவிரித்து.. பார்த்தவள், சட்டென குனிந்துக் கொண்டும் “எ..ன்ன.. பண்றீங்க” என்றாள் லஜ்ஜையில்.

பசுபதி “என்ன..” என்றவன், அவளின் முகபாவம் பார்த்து.. ஓய்வறை உள்ளே ஓடினான்.

நந்தித்தாவிற்கு கோவம் போய் லேசான புன்னகை, அத்தோடு எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

பசுபதி குளித்து.. தளர்வான டி-ஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு.. வந்தான். “நந்தித்தா..” என அவள் இருக்கும் அறையை நோக்கி மெதுவான குரலில் அழைத்துக் கொண்டே வந்தான்.

நந்தித்தா ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்..

பசுபதி “இங்கேதான் இருக்கியா” என புன்னகையோடு கேட்டுக் கொண்டு அவளின் எதிரே அமர்ந்தான்.

பசுபதிக்கு,  இன்று முழுவதும் ஆனந்தனின் விஷயமே மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது. பாதி நேரம்.. சிறுவயதில் அவர்களுக்கு நடந்தது. பின் நானும்தான் அப்படி இருக்கிறேன்.. என ஓடியது. மீதி நேரம்.. எங்களுக்குள் சரி வருமா.. அவள் என்னை நெருக்குகிறாள்.. அவளின் அன்பு உண்மைதானா.. என்னை என் அன்னை.. திவி.. போல பாதியில் விட்டு போய்விடமாட்டாலே..’ என பல குழப்பம். எதையும் யாரிடமும் பகிர முடியவில்லை. 

திருமணமான நண்பன் ஒருவன் மனது சரியில்லை என அழைத்திருந்தான். அதனால், அவனோடு தவிர்க்க முடியாமல்.. இன்று பார் சென்றான், பசுபதி. அவனின் குடும்ப நெருக்கடியை சொல்லி அவன் புலம்ப.. பசுபதிக்கும் தன் குடும்பம் திருமணம் எனதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பியர் மட்டும் வாங்கி கையில் வைத்துக் கொண்டு எதையோ அசைபோட்டுக் கொண்டே, அமர்ந்திருந்தான்.

என்னமோ தோன்றியது. ஆனந்தனின் வாய்ஸ் மெசேஜ்ஜினை மீண்டும் கேட்டான். இப்போது பிளாக் செய்தான் அவனின் எண்ணினை. சற்று நேரம் நண்பனோடு இருந்தான். அவனை, அவன் வீட்டில் சேர்த்துவிட்டு, தான் வீடு வந்தான்.

இப்போது நந்தித்தா “நீங்க ட்ரிங்க் பண்ணலையா” என்றாள்.. எங்கோ பார்த்துக் கொண்டு, கணவன் முகம் பிரகாசமாக இருப்பதை பார்த்துவிட்டு

பசுபதி “அஹ..” என்றான், நேற்று சுருக்கி கொஞ்சம் அதட்டலாக.

நந்தித்தா “இல்ல.. கேட்டேன்” என்றாள், இறங்கிய குரலில்.

பசுபதி “நாம ரெண்டுபேரும் வெளியூர் எங்காவது போயிட்டு வரலாமா..” என்றான் தலையை கோதிக் கொண்டு.. தயக்கத்தோடு.. மனையாளின் விருப்பம் கேட்டான்.

நந்தித்தா, கணவனின் இந்த தயக்கத்தை முதல்முதலில் பார்க்கிறாள்.. அத்தனை நளினமாக.. பட்டும்படாத பார்வையோடு.. தன் விருப்பம் கேட்பது சந்தோஷத்தோடு சேர்ந்து அதிர்வையும் தர.. கணவனையே பார்த்திருந்தாள்.

பசுபதி சுதாரித்து அதட்டலாக “என்ன.. உனக்கு ஒகே வா” என்றான்.

நந்தித்தா “ம்..” என்றாள்.

பசுபதி “எங்க  போகலாம்.. நார்த் சைடு போகலாமா.. மணாலி போலாமா” என்றான், அடுக்கடுக்காக.

நந்தித்தா இமைக்காமல் தன்னவனையே பார்த்திருந்தாள்.

பசுபதி “என்ன.. அப்படி பார்க்கிற.. உனக்கு ஏதாவது ஆப்ஷன் இருக்கா” என்றான்.

நந்தித்தா பதிலே சொல்லவில்லை.

பசுபதி “சொல்லு ம்மா” என்றான், லேசாக சலித்துக் கொண்டு.

நந்தித்தா ஏதும் பேச தோன்றாமலே அமர்ந்திருந்தாள்.

பசுபதி ‘ச்சு..’ என சொல்லி தலையை கோதிக்கொண்டான்.

நந்தித்தா “எங்க கூட்டி போனாலும், எனக்கு ஒகே. எனக்கு உங்க கூட இருக்கணும்..” என்றாள்.. இதை சொல்லும் போது.. அப்படி ஒரு வெட்கம் அவளின் முகத்தில் குரலில்.. என.

பசுபதிக்கு, அந்த வெட்கத்தைதான் எதிர்பார்த்திருந்தான் போல.. எத்தனையோ குழப்பங்கள்.. பின்னி பின்னி தயக்கங்கள்.. ‘எங்களின் வாழ்க்கை.. சரியாக இருக்குமா நாங்கள் இறுதிவரை பணிப்போமா.. அவளின் அன்பு மாறிடாமல் இருக்குமா..’ என இன்னமும் குழப்பம்தான். ஆனாலும், இந்த வெட்கம்.. அவனின் முகத்தில் ஒரு கர்வ புன்னகையை கொடுத்தது.

பசுபதிக்கு கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.. ‘எனக்கு தெரியவேண்டும்.. அவளுக்கும் எனக்கும் செட் ஆகுமா என.. அதனால் இது ஒரு டேட்டிங்.. போல, நிச்சயமாக  ஒத்து போக வேண்டும்.. இவள் என்னோடு இறுதி வரை வர வேண்டும்..’ என எண்ணிக் கொண்டு.. அவளின் அருகே வந்து அவளின் கன்னம் தீண்டினான்.

நந்தித்தா இன்னமும் வெட்கம் கொண்டாள், பசுபதி “என்கூட இருந்தால் மட்டும் போதுமா.. ம்..” என்றான்.

மனையாள் அவனை நிமிர்ந்து பார்த்து “ம்..” என்றாள் கண் சிமிட்டி.

பசுபதி “நான் அமைதியா இருக்கேன்னு நினைக்காதே.. ரொம்ப சென்சிட்டிவ்.. உன்னை எனக்குள் எடுத்துக்க யோசிக்கிறேன்னு நினைக்காத, நிறைய அடி வாங்கியிருக்கோம் நீயும் நானும். உன்னை போல என்னால் சட்டென மாத்திக்க முடியலை.. நான் ஸ்லொவ் லேனர். இன்..னொரு.. பிரேக்அப்’பினை என்னால் தாங்க முடியாது.” என சொல்லி செல்ல எத்தனித்தான்.

நந்தித்தா கணவனின் கையினை பற்றினாள்.. “எனக்கு எந்த பயமும் இல்லை.. உங்கள் மேல். நீங்க ரொம்ப நல்லவர். கொஞ்சம் கொஞ்சம் ட்ராஜெடியா இருக்கீங்க.. பட் ஓகே. அதனால் மனசு மாறிடுச்சு.” என்றாள் தன்னிலை விளக்கமாக.

பசுபதிக்கு பெண்ணவளின் வார்த்தைகள் நிம்மதியை தந்தது.. அவள் பிடித்திருந்த கையை தான் பற்றி அவளை இழுத்து அனைத்துக் கொண்டான் “எனக்கு டயலாக் வராது டிராமா மேடம்..” என்றான்.

நந்தித்தா “இதென்ன டிராமா..” என அவனை கண்டிப்பது போல, அவன் கண்பார்த்து கேட்டாள்.

பசுபதி “அதெல்லாம் கேட்க்காத.. சரி எங்க போகலாம்” என சொல்லி இருவரும் நின்றனர்.

நந்தித்தா அமர்ந்துக் கொண்டே “நான் அப்போவே சொல்லிட்டேன்” என்றாள்.

பசுபதி போன் எடுத்து.. எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் “மால்தீவ் போகலாமா..” என்றான்.

நந்தித்தா “எதுவாக இருந்தாலும் எனக்கு ஒகே..” என்றாள்.

இருவரும் தாமதமாகத்தான் உறங்க சென்றனர்.

முன்போல.. ஒரே கட்டிலில் தனித்தனியே இல்லை.. சேர்ந்து உறங்கினர். நந்தித்தாவிற்கு.. அவனின் சலனமில்லா அணைப்பு, அவளை சலனப்படுத்தியது. எப்படிதான், இப்படி கட்டிட்டே தூங்குராரோ.. என முனகிக் கொண்டே அவனின் நெஞ்சில் நீண்ட நேரம் உறக்கமில்லாமல் கனவுகள் கண்டுக் கொண்டிருந்தாள்.

அடுத்த வாரம்.

இருவரும் மால்தீவ் கிளம்பினர். இனிதாக பெரியவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஐந்துநாட்கள் ட்ரிப். 

முதல்நாள்.. பசுபதி கொஞ்சம் திணறினான்.. எங்கே தொடங்குவது பேசுவதா.. காதலிப்பதா.. என. ஆனால், தனிமையான இரவும்.. கடல் காற்றும்.. வெள்ளி நிலவும் அவர்களை.. இயல்பாக சேர வைத்தது.

முதல் கூடல்.. பசுபதியின் குழப்பங்களுக்கு தீர்வனது. என்ன நடந்தது.. ஏது நடந்தது.. என அவனுக்கும் அனுமானமில்லை.. தொடங்கியது மட்டுமே நினைவில் இருக்க.. இருவரின் காதலும் கரைகடந்த நேரத்தில்தான்.. தங்களின் நிலை உணர்ந்து.. மீண்டும் முத்தமிட்டுக் கொண்டனர்.

பசுபதிக்கு, மனது நிலை கொண்டது.. ‘என்னை ஒருத்திடம் தொலைக்க முடியுமெனில் அது நீ மட்டும்தான்..’ என அவளின் நெற்றியில் முத்தமிட்டு உணர்ந்தவன் மனது நிர்மலமானது.

நந்திதாவிற்கு, அவனின் ஆராய்ச்சி பார்வை மாறியிருப்பதும், தன்னை எடுத்துக் கொண்டதும் ஒரு இனிய ஆரம்பமாக தோன்றியது.

விடியம் வரை.. கணவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு கதை பேசினாள் பெண். மனையாளின் பேச்சினை ரசித்துக் கொண்டிருந்தான். பசுபதி. 

மறுநாள் காலை ஒரு புதிய உதயமாக இருந்தது அவனுக்கு.. பசுபதியின் குழப்பமெல்லாம் எங்கோ கடல்கடந்து சென்றுவிட்டது போல.. எந்த குழப்பமும் இல்லை அவனிடம்.. “நந்தித்தா.. நந்து..” என இயல்பாக அழைக்க தொடங்கினான் மனையாளை.

காலையில் வெளியே சற்று சுற்றிவிட்டு வந்து மீண்டும் தங்களின் தேவையை தேடினர்… இந்தமுறை, பசுபதியின் தேடல் என்பது.. தன்னவளின் முகம் பார்த்து நடக்கும் சேவகன் நிலையிலேயே இருந்தது. அதிகாரம் கொண்டு, அவளை ஆட்கொள்ளவில்லை.. நுணுக்கமாக அவளின் மனதில் நுழையும் தீண்டலோடு.. சுவாசம் நுழையும் மென் காற்றான முத்தத்தோடு..  அவள் இடையில் படரும்.. மயில்மாணிக்கம் கொடியென.. அவளில் தன்னை தொலைத்தான். அவளின் எந்த சுணக்கமும்.. ம்கூம்.. என்ற  முனகலும் அவனை ஒரு நொடி சுதாரிக்க வைத்து.. மீண்டும் முத்தத்தால அவளை சமாதானபடுத்தி  தன் தேவை எடுத்துக் கொண்டு.. மெல்ல முன்னேறி.. அவளையும் தன்னில் தொலைவைத்து தானும் அவளில் கலந்தான்.

இருவருக்கும் பேசமுடியாத நிலையில் அன்றைய நாள் கடந்தது.

மூன்றாம் நாள் இன்று, காலையில் அவர்கள் எழுவதற்கு தாமதமானது. எனவே, இப்போதுதான் குளித்து வந்திருந்தனர்.

நந்தித்தாவிற்கு, கணவனை பார்த்தே முடிவாகவில்லை. அழகாக என்பதை விட.. நளினமாக இருந்தான்.. அவன் தண்ணீர் குடிப்பது கூட அழகாக இருந்தது.. சுட்டு விரல் கிளாசில் படாமல், மற்ற மூன்று விரலாலும் கிளாஸ் பற்றிக் கொண்டு.. உதட்டு நுனியில் அவன் பருகும்.. தண்ணீரும் தேநீரும் அத்தனை நளினம். அவனின் கண்கள் என்னை மட்டுமே பார்க்கிறது.. முன்போல.. எனக்கு ஆவேசம் வரவில்லை.. வெட்கம்தான் வருகிறது அவனின் பார்வையில். என யோசித்துக் கொண்டே மதியம் லஞ்சக்கு வந்திருந்தனர். 

பசுபதி “என்ன டா.. இன்னும் பார்க்கிற” என்றான் வெட்க குரலில்.

நந்தித்தா “க்கும்.. இல்ல, டேட்டிங் அப்படின்னு சொல்லித்தான் கூட்டி வந்தார்.. என் வீட்டுக்காரார்.” என்றாள் சின்ன குரலில்.

பசுபதி மனையாளின் கிண்டலில் அவளின் இடுப்பில் கிள்ளினான் “வாய் மட்டும் என்ன பண்ணாலும் அடங்கமாட்டேங்குது. இருக்கு டி.. உனக்கு” என்றான்.

நந்தித்தா “ம்.. ம்.. அப்போ பர்பாமன்ஸ் பத்தலை” என்றாள்.

இப்போது கணவன் நன்றாக அவளின் இடையில் கிள்ளினான்.. அவளோ “ஆ..” என துள்ளினாள்.

பின்னதான் அமைதியான குரலில் “எப்படி சமாளிக்க போறேனோ தெரியலை உன்னை.. சாப்பிடு, சீ ரைடு போகனும்.. சீக்கிரம்” என்றான்.

மாலையில் சுற்றிவிட்டு காட்டேஜ் வர.. இருளும் சூழ தொடங்கியது. மணல்வெளியில் இருவரும் அமர்ந்திருக்க.. நந்தித்தா “ஏங்க, அடிக்கடி ட்ரிங்க்ஸ் எடுக்காதீங்க” என்றாள்.

பசுபதி நல்லவிதமாகவே “அது இனி தேவைபடாதுன்னு நினைக்கிறேன்” என்றான்.

நந்தித்தா “நீங்க லவ் பண்ண பொண்ணு பேரு திவி யா” என்றாள் நேரடியாக.

பசுபதி அலட்டாமல் “ம்.. அம்மா சொன்னாங்களா” என்றான்.

நந்தித்தா ஒருநிமிடம் அமைதியானாள் பின் “இல்ல, நீங்கதான்.. அன்னிக்கெல்லாம்.. ட்ரிங்க்ஸ் எடுத்து வந்த நாளெல்லாம்.. வந்து.. அவ பேரையே சொல்லிட்டு இருந்தீங்க” என்றாள்.

நந்தித்தா சாய்ந்திருந்த கணவனின் தோள் இப்போது இறுகியது.

அதை உணராத நந்தித்தா “அவ்வளோ பிடிக்குமா.. உங்க.. ஸ்டோரி சொல்லுங்களேன்” என்றாள்.

பசுபதி நிமிர்ந்தான். அதில் அவளிடமிருந்து விலகினான்.. “என்ன.. ரிசர்ச் பண்றீயா என்னை..” என்றான், என்னமோ குரலிலும் உடல்மொழியிலும் ஒரு மாற்றம் வந்திருந்தது சட்டென.

நந்தித்தா “இல்ல பதிதேவ்.. நான் சும்மாதான் கேட்டேன். ஒரு க்யூரியாசிட்டில் கேட்டுட்டேன். வேண்டாம்.. எனக்கு” என சொல்லி, அவனின் முழ்ங்கையோடு.. தன் கைகளை கோர்த்துக் கொண்டவள்.. “என் பதிதேவ்தான் வேணும்” என்றாள்.

ஏனோ பசுபதியின் உடல்மொழி மாறுவதற்கு நீண்ட நேரமானது.

அந்த இரவு இருவருக்கும் ருசிக்கவில்லை. பசுபதி மனையாளை தேடவில்லை. நந்தித்தாவிற்கு, என்னவென நினைப்பது என தெரியவில்லை. அசதியில் உறங்கிவிட்டாள்.

மறுநாள் ப்ரோக்ராம்படி.. வெளியே சென்று வந்தனர். நந்தித்தாதான் பேசிக் கொண்டே இருந்தாள். பசுபதி மீண்டும் தனக்குள் சென்றுவிட்டான்.

மறுநாள் ஊருக்கு கிளம்பும் அன்று.. நந்தித்தா “சாரி, எதோ தெரியாமல் கேட்டுட்டேன், அதுக்கு இவ்வளோ பேசாமல் இருப்பீங்களா.. இனி நான் ஏதும் கேட்கமாட்டேன். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். ம்.. நீங்க, எப்போதும் போல பேசுங்களேன்” என்றாள்.. கெஞ்சலான குரலில்.

என்ன நினைத்தானோ பசுபதியும்.. நீண்ட பெருமூச்சு ஒன்றினை எடுத்து விட்டு “இல்ல, நான் மறக்கனும்ன்னு நினைப்பதை நீ கேட்டதால் கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன், சாரி. பழசை நினைக்க கூடாதுன்னு நினைக்கிறேன்..” என சொல்லி கண்களால் அவளை அழைத்து.. கைகளை விரித்தான்.

மனையாளும் அவனில் சேர்ந்துக் கொண்டாள்.

அதன்பின் அவர்களுக்கு நேரமில்லை. தங்களை நிறைய புகைப்படம் எடுத்துக் கொண்டு.. தங்களின் தனிமைக்கு விடைகொடுக்க முடியாமல் விடை கொடுத்து, கிளம்பினர்.

சென்னை வந்து சேர்ந்தனர்.

இருவருக்கும் இனிய நாட்கள் தொடங்கியது. நந்தித்தா இன்னும் அதிகமாக கணவனை கவனித்தாள். பசுபதியும் மனையாளை எந்த வகையிலும் ஏமாற்றமடைய விடாமல்.. பார்த்துக் கொண்டான். காலையில் காபி நேரம்.. இருவரும் சேர்ந்து பேப்பர் படிக்கவும்.. மனையாளுக்கு சின்ன சின்ன உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதிலும் அவளை லேசாக ஒட்டி உரசுவதிலும் தன்னை அவளுள் ஆழமாக விதைத்தான். 

காலை  உண்ணும் போது அவளுக்கு ஒரு வாய் ஊட்டினான்.. தன் ருசியை அவளுக்கும் பழக்கினான். மாலையில், நேரமாக வந்து.. என்னுடைய நேரம் உனக்குத்தான் அதிகம்.. என சொல்லாமல் சொல்லி அவளோடு இழைந்தான். 

தேவைக்கு என கையில் காசு கொடுத்தான். ‘உனக்கு என்ன கலர் பிடிக்குமோ.. ஒரு புடவை எடுத்துக்கோ நந்து.. நாளைக்கு நாம என் பிரென்ட் வீட்டு பங்க்ஷன் போகனும்’ என அவளை கொண்டாடினான். அன்பினை புழங்காதவனின் காதலை சொட்டு சொட்டாக.. சிலநேரம் அடைமழையாக உணர தொடங்கினாள் பெண்.